மானமறவன் மயிலப்பன் சேர்வை

மாவீரன் மயிலப்பன் சேர்வைகாரர் (இறப்பு: 1802, ஆகஸ்ட் 6) இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றில் ஆங்கில ஆக்கிரமிப்பாளர்களது ஏகாதிபத்திய கொள்ளைக்கு எதிராக மக்களைத் திரட்டிப் போராடிய முதல் தளபதி.

வரலாறு :

தமிழக வரலாற்றில் இராமநாதபுர சேதுபதி மன்னர்களுக்குத்
தனியாக பல சிறப்புக்கள் உள்ளன. நாட்டு விடுதலைப் போரில் ரெபல் முத்துராமலிங்க சேதுபதி மன்னரது (1762 – 1809) பங்கு மிக சிறப்பான இடத்தைப் பெற்றது. அவரது நல்லாட்சி மேலும் தொடர முடியாதபடி மன்னரை 1795, பெப்ரவரி 8 இல் ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனி பதவி நீக்கம் செய்தது. தங்களது சூழ்ச்சியினால் மன்னரைக் கைது செய்து திருச்சிக் கோட்டையில் அடைத்துவிட்டு சேதுபதியின் நாட்டை கும்பெனியார்
ஏற்றனர்.

கும்பெனியார் குடிமக்களிடம் கெடுபிடி வசூல் செய்தும் சுரண்டியும் மக்களின் வெறுப்பைச் சம்பாதித்துக் கொண்டனர். மன்னரில்லாது மயங்கிய குடிகளுக்கு வழிகாட்ட முன் வந்தார் ஓர் இளைஞர். இவர் சேதுபதி
சீமையின் தென்பகுதியான ஆப்பனூர் நாட்டைச் சேர்ந்த சித்திரங்குடி என்ற கிராமத்தைப் பிறப்பிடமாகக் கொண்டவர்.


பூர்வீகம் :


இவர் ஆப்பநாடு கொண்டையம் கோட்டை மறவராவர்.அந்த காலத்தில்
அரன்மனை சேவகத்தில் உள்ளவர்களுக்கும் தளபதிகளுக்கும் சேர்வை பட்டம் உண்டு.(எ-டு) மருது பாண்டியர் தந்தையின் பெயர் உடையார் தேவர் இவர் சேதுபதியின் சேவையில் சேர்ந்ததால் உடையார் சேர்வை எனற மொக்கபழனியப்ப சேர்வை என்று மாறியது அது போல தான்
மயிலப்பன் சேர்வையின் தந்தை தேவர் பட்டம் உடையவர். சேதுபதி மன்னரது சேவையில் சிறப்பாக விளங்கியதால் மன்னர் இவருக்கு ஒரு படைப் பிரிவின் தலைவராக்கினார். இதனால் இவரை மக்கள் அன்புடன் “சித்திரங்குடி மயிலப்பன் சேர்வைகாரர்” அழைத்தனர். சேர்வை
என்பது ஜாதி பெயரல்ல பட்டமே.சேர்வை என்ற பட்டம் தரித்திருந்த மயிலப்பன் மறவர் குலத்தை சார்ந்தவரே

1795 முதல் 1802 வரை பல இடங்களில் ஆங்கிலேயர்க்கு
எதிராகக் கிளர்ச்சிகளில் சேர்வைகாரர் ஈடுபட்டார். [[[1799]], ஏப்ரல் 24 ஆம் நாள் முதுகளத்தூரில் உள்ள கும்பெனியாரின் கச்சேரியைத் (court) தாக்கியது, அபிராமத்தில் உள்ள கச்சேரியைத் தாக்கியும் கைத்தறிக் கிட்டங்கியைத் தாக்கி துணிகளை சூறையிட்டதும் கமுதியில் உள்ள கச்சேரியை நிர்மூலமாக்கியும் பெரிய நெற்களஞ்சியங்களைக் கொள்ளையிட்டதும் ஆகிய போராளி செயல்கள் மயிலப்பன் சேர்வைகாரரின் தலைமையில் தான். இப்போராளிச் செயல்களால் முதுகளத்தூர், கமுதி சீமை மக்கள் புதிய தென்புடன் குபெனியாரைத் துரத்திவிட்டு மீண்டும் ரெபெல் முத்துராமலிங்க சேதுபதி மன்னரது ஆட்சியை ஏற்படுத்திவிடலாம் என நம்பினர்.
தொடர்ந்து 42 நாட்கள் இத்தகையப் போராட்டங்களால் முதுகளத்தூர், கமுதிச் சீமைகள் கும்பெனி நிர்வாகத்திலிருந்து தனித்து நின்றன. இப்போராட்டத்தில் தீவிர பங்கு கொண்ட சிங்கன் செட்டி, ஷேக்
இப்ராகிம் சாகிபு போன்ற சேர்வைகாரரின் தோழர்கள் கொல்லப்பட்டனர். அப்போது ஆங்கிலப் படைகளை வழி நடத்தியவர்கள் கலக்டர் லூஷிங்க்டன் மற்றும் கர்னல் மார்டின்ஸ் ஆவர்.போராட்டத்தை அடக்கிய கும்பெனியார் மயிலப்பன் சேர்வைகாரரைத் தவிர மற்றப் போராளிகளுக்குப் பொது மன்னிப்பு வழங்கினர். வேறு வழியின்றி சேர்வைகாரர்
மாறுவேடத்தில் சோழ நாடு சென்றார். எட்டு மாதங்கள் கழித்து சேது நாட்டிற்குத் திரும்பினார்.

அதன் பின் சிவகங்கை சீமையின் மருதிருவரின் வேண்டுகோளின்படி மருதிருவர் அணியில் சேர்ந்து பாடுபட்டதுடன் பாஞ்சாலம் குறிச்சிப் பாளையக்காரர், காடல்குடி, நாகலாபுரம், குளத்தூர் ஆகிய பாளையக்காரர்களது ஆங்கிலேயர் எதிர்ப்புப் போராட்டங்க்ளுக்கு ஆதரவாக சேர்வைகாரர் செயல் பட்டது வரலாற்றுச் சிறப்பாகும்.
மயிலப்பன் சேர்வைகாரின் நடவடிக்கைகளையும், அவர் மருதிருவர் அணியில் தீவிரமாக ஈடுபட்டதையும் நன்கு அறிந்திருந்த கலக்டர் லூஷிங்க்டன் சேர்வைகாரரை தம்மிடம் ஒப்படைக்கும்படி மருதிருவர்க்குத் தாக்கீது அனுப்பினார். மருதிருவர் கலக்டரின் உத்திரவை ஒரு பொருட்டாக மதிக்கவில்லை

தூக்கிலிடப்படல் :

ஆங்கிலக் கும்பெனியர்க்கு எதிரான மருதிருவரின் இறுதிப்
போராட்ட நாள் 1801, அக்டோபர் 2. இதில் தோல்வியுற்றதன் காரணமாக 1801, அக்டோபர் 24 இல் திருப்புத்தூரில் மருதிருவர் தூக்கு மேடையில் வீர மரணமடைந்தனர். மருதிருவரின் இம்முடிவிற்குப் பின்னர் மயிலப்பன் சேர்வைகாரர் தன்னந்தனியே முதுகளத்தூர், கமுதி பகுதிகளில் தலைமறைவு வாழ்க்கையை மேற்கொண்டார். ஒரு நாள் கொடியவன் ஒருவன் கம்பெனியாரின் தூண்டுதலின் பேரில் பொருளாசை காரணமாக சேர்வைகாரரின் மறைவிடத்தைக் காட்டிக்கொடுத்தான். மூன்று மாத கால கடுமையான சிறை வாழ்க்கையை மேற்கொண்ட மயிலப்பன்
சேர்வைகாரர் 1802, ஆகஸ்ட் 6 ஆம் நாளன்று அபிராமத்தில் கம்பெனியாரால்
தூக்கிலப்பட்டார்.

This entry was posted in மறவர் and tagged , , , . Bookmark the permalink.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *