மறக்குலமன்னன் அழகுமுத்து சோழகோன்சேர்வை

கோயில் = கோ+இல்; கோ – அரசு , இல் – இல்லம். அதுபோல, கோன் என்பது அரசன் என்ற பதத்தை குறிக்கும் சொல். வரப் புயர நீர் உயரும்!

நீர் உயர நெல் உயரும்!

நெல் உயர கோன் உயரும்!

கோன் உயரக் குடி உயரும்! – அவ்வையார்.

 

இந்த வாழ்த்துப் பாடலில் “கோன்” என்ற சொல், அரசன், மன்னன் என்ற பொருளைக் கொண்டதாகும்! அவ்வையார் ஒரு மன்னனை வரப்புயர வாழ்க என்று வாழ்த்தினார். அதன் விரிந்த பொருளை பாடிக்காட்டினார். அது தான் மேற்கண்ட பாடல்.இந்தப் பாடலில் இடம் பெற்ற கோன் என்ற சொல்லை வைத்துக் கொண்டு எங்கள் சமுதாயத்தை தான் அவ்வையார் கோனார் என்று குறிப்பிட்டுள்ளார் என்று எவரும் கூறிடார்! வாதிடார்!

 

தோற்றம்:

அழகுமுத்து சேர்வை (அ) அழகுமுத்து கோன் சேர்வை என்று அழைக்கபடும் மறவர் குலத்து மானிக்கத்தை இன்று கோனாராக மாற்றி வரலாற்று திரிபுபடுத்திவரும் நபர்களுக்கு மேலும் உறுதிப்பட நிருபனம் கூறும் வரலாறு இது.

 

அழகுமுத்துவின் மூதாதயராக சுமார் 11-ஆம் நூற்றாண்டு காலகட்டத்தில் சோழமண்டல தளபதி உத்தம சோழகோன்  மிலாடுடையார் என  கூறுகின்றனர். சோழனின் தளபதிகளான இவர்கள் குற்றாலத்திற்கு அருகே குடியமர்ந்தனர். இதன் பின்பே கட்டாலங்குளம் மற்றும் ஊற்றுமலை பாளயப்பகுதியில சென்று பாளயம் அமைத்து ஆண்டு வந்தனர். இதில் ஊற்றுமலை பாளயக்கரர் பெயர் மருதப்ப தேவர்.அழகுமுத்துவின் மூதாதயர்கள் பாண்டியர்களின் கீழ் சிற்றரசர்களாகவும் பின்பு திருமலை நாயக்கர் காலகட்டத்தில் இவர் கட்டாலங்குளம் திசை காவலர்களானார்கள். பின்பு எட்டயபுரத்தை ஆண்டு வந்த எட்டப்ப நாயக்கருக்கு தளபதிகளாக பனியாற்றியமைக்காக இவர்களுக்கு சேர்வைக்காரர் பட்டம் அளித்து கௌரவப்படுத்தினர்.

 

குலம்:

இவர் கொண்டயம் கோட்டை மறவராவார்.ஊற்றுமலை ஜமீனான மருதப்ப தேவரும் கொண்டயம் கோட்டை மறவர் இனத்தவர் தான். பொதுவாக கொண்டயம்கோட்டை மறவர்களான் தலைவனார் வம்சத்தவரும் மேற்கு தொடர்ச்சி மலைகளில் பாளயம் அமைத்தவர்களும் இதர மறவர் தலைவர்களும் சைவர்கள்(ஆதாவது சிவனை வழிபடுபவர்கள்).ஆனால் இவர்கள் வைனவர்கள் ஆதாவது பெருமாளை வனங்குபவர்கள்.இவர்கள் தம்மை கோபால வம்சம் கிருஷ்ன கோத்திரம் என்று கூறுவர்.திருநீறை நாமம் போல இட்டுக்கொள்வர்.பொதுவாக பிராமனர்களிடமே இந்த கோத்திரம் இருக்கும் மற்றவர்கள் கூறிகொள்வார்களே தவர அதன் விளக்கம் சரியாக யாருக்கு தெரியாது.வட தமிழகத்தை பொறுத்தவரை பிராமனரை தவிர மற்ற இனத்தவர்களான வன்னியர்,செங்குந்தர்,ஆசாரி,கன்னார்,வன்னனார்,பறையர் போன்றவர்களிடம் கூட கோத்திரம் உண்டு இவர்கள் பூனூல் வேறு அனிவார்கள் ஆனால் இது பிராமனர்களுக்கு எதிராக கிளம்பிய சமாச்சாரம் அது பிராமனர்களால் ஏற்றுகொள்ளபடாதது.

 

 

ஆணால் தெற்கு பகுதியல் சிவகோத்திரம் மற்றும் பெருமாள் கோத்திரம் (அ) கிருஷ்ன கோத்திரம் என்று கூறுவர். ஆனால் அது பொருள் இருக்காது பெயருக்கு கூறிகொள்வர்.

ஊற்றுமலை மன்னரின் குல தெய்வம் நவநீத கிருஷ்னன்.அதனாலே தம்மை ஹிருதாலய நவநீத கிருஷ்ன மருதப்பதேவர் என்று பட்டம் புனைந்துள்ளார் இவர் கோபால வம்ச கிருஷ்ன கோத்திரம் தான். இந்த கோயிலை உ.வே சாமிநாத ஐயர் தம் புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார். இவரின் உறவினரே கட்டாலங்குளத்து அழகு முத்து சேர்வை (அ) அழகு முத்து சோழகோன் சேர்வை ஆகும்.தம் மூதாதயரின் பட்டமான உத்தமசோழகோன் எனற பட்டமே மருவி அழகு முத்து கோன் என்று மட்டும் பிற்காலத்தில் நிலைத்தது.

ஆங்கிலேயரின் ஆதிக்கத்தின் கீழ் பின்னாளில் வந்த கட்டாலங்குளம் ஆளுகை ஆங்கிலேயர்கள் அழகுமுத்துவின் வாரிசுகளிடம் இந்நிலத்தை ஜப்தி செய்து அவர்களால் கட்டமுடியாத வரியின் காரனமாக இந்த பூமியை ஏலம் விட்டனர். அப்போது உறவினர் என்ற முறையில் இந்த பகுதியை ஏலம் எடுத்த ஊற்றுமலை ஜமீந்தார் நவநீத கிருஷ்ன மருதப்பதேவர் சுதந்திரத்திற்கு முன்பு அழகுமுத்துவின வாரிசுகளிடமே வழங்கினார்.அழகுமுத்து கோன் சேர்வை என்ற பெயரில் வரும் கோன் என்ற பட்டம் சோழகோன் என்ற பட்டத்தை குறிக்கும்.

சோழக்கோன் என்ற பட்டம் தான் கோன் என்ற பெயரே தவிர இது கோனார் என்றும் கோங்கிமார்கள் என்ற இடையர் குலமான யாதவர்களை குறிக்காது.இதை யாதவ குல பெருமக்களும் அறிந்து கொள்ளவேண்டும். இன்னும் சொல்லப்போனால் இவர் வாழ்ந்த கட்டாலங்குளத்தில் இன்று கூட ஒரு கோனார் வீடு கூட கிடையாது என்பதை அறியவேண்டும்.

malaiyaman

தாய் மண்ணின் உரிமைக்காகவும் சுதந்திரத்திற்காகவும் போராடிய முக்குலத்து மாவீரன் அழகுமுத்துக்கோனை நேருக்கு நேர் சந்திக்க பயந்த கும்பினியப்படை, அவனது கைகளிலும் கால்களிலும் விலங்குகளைப் பூட்டி, பீரங்கிக்கு முன்னால் நிறுத்தியது. அவனைப் போலவே கைகளில் பூட்டப்பட்ட விலங்குகளோடு அவனது ஆறு துணைத் தளபதிகளும் 248 வீரர்களும் நிறுத்தப்பட்டார்கள்.

 

எங்களை எதிர்ப்போர்க்கு இதுதான் கதி என்று கும்பினிப்படை எக்காளமிட்டபடி அவர்களை சுற்றிச்சுற்றி வந்தது. `ம்’ என்றால் பீரங்கிகள் முழங்கும். வீரன் அழகு முத்துக்கோனும் அவனது வீரர்களும் உடல் சிதறிப் போவார்கள். அதைப் பொறுக்கமாட்டாமல்தான் அன்றைய நடுக்காட்டுச் சீமை பாளம்பாளமாய் வெடித்து சுட்டு எரித்துக்கொண்டிருந்தது.

 

“மன்னிப்புக் கேட்டால் இக்கணமே விடுதலை; வரி கொடுக்க சம்மதித்தால் உயிர் மிஞ்சும்” என்று கும்பினிப்படை எவ்வளவோ எடுத்துச் சொல்லியும், “தாய் நாட்டின் மானத்துக்காக மரணத்தை முத்தமிடவும் நாங்கள் தயார்  என்ற வீரன் அழகுமுத்துக் கோனின் கர்ஜனையைக் கேட்டு கும்பினிப்படை அதிர்ந்தது. ஆத்திரம் கொண்டது.இருநூற்று நாற்பத்தெட்டு வீரர்களின் தோள்கள் வெட்டிச் சாய்க்கப்பட்டன. நிறுத்தி வைக்கப்பட்ட ஏழு பீரங்கிகளின் வாயில் இடப்பக்கம் மூன்று தளபதிகளையும் வலப்பக்கம் மூன்று தளபதிகளையும் நடுவில் வீரன் அழகுமுத்துக்கோனையும் நிறுத்தினார்கள்.

 

பீரங்கிகள் வெடித்துச் சிதறின. வீர மைந்தர்களின் ரத்தத்தால் நனைந்தது நடுக்காட்டுச் சீமை.இந்தியாவின் விடுதலைக்காக தன் இன்னுயிரை முதல் காணிக்கையாக்கி இந்திய விடுதலை வரலாற்றின் பக்கத்தில் இடம்பிடித்துக் கொண்டார் வீரன் அழகுமுத்துக்கோன்.தாய்மண்ணை அடிமைப்படுத்த நினைத்த ஆதிக்க சக்திகளுக்கு எதிராக சுதந்திர முழக்கமிட்ட மற்றுமொரு வீரனைத்  தேவர் சமூகம் தந்தது என்பது மறுக்கவும், மறைக்கவும் முடியாத வரலாறு.

 

மற்றவர் பெருமையை அபகரித்து, போலி பெருமை தேடும் அளவுக்கு எங்கள்(முக்குலத்தோர்) சமூகம் இல்லை. ஏனெனில் எங்களுக்குள்ள வரலாற்றுப் பெருமைகள் வேறு எவருக்கும் இல்லை என்பது உலகறிந்த உண்மை. அதற்காக எங்கள் பெருமைகளில் ஒன்று திருடப்பட்டால் நமக்குத்தான் வேறு பல பெருமைகள் உள்ளனவே, இது ஒன்று போனால் போகட்டும் என்று விட்டு விட முடியாது. கூடாது. விட்டு விடுவது அல்லது விட்டுக் கொடுப்பது எங்களுக்குப் பெருமை தாராது. எங்கள் புகழ் அனைத்தையும் பேணிக்காக்கும் கடமையும், உரிமையும் எங்களுக்கு உண்டு.

வீரன் அழகுமுத்து சேர்வைக்காரனை அவனது வீரம், ஆளுமைத் திறன் எண்ணி “சோழகோன்” அதாவது மன்னன் என்ற அடைமொழி கூட்டி அழகுமுத்துக் கோன் என்று வழங்கினர். அழகுமுத்து பிறப்பால் (மறவர்) பட்டம் சோழக்கோன் சேர்வை வீரன் அழகுமுத்து சேர்வையின் வாரிசுகள் சிலர் ,கட்டாலங்குளத்தில் தற்போதும் வாழ்கிறார்கள். சிலர், பிழைப்பு-தொழில் நாடி வேறு ஊர்களுக்கு சென்று வாழ்கின்றனர்.பத்திரங்கள் நடைமுறைக்கு வராத காலத்தில், தாள் உருவாகாத நிலையில் பத்திரங்களை செப்புத் தகடுகளில் எழுதிக் கொடுப்பது வழக்கமாக இருந்துள்ளது. வரலாற்றுக் குறிப்புகளை கற்களில் பொரித்து வைத்தனர். சிலைகள் வடிவில் செதுக்கி வைத்தனர்.செப்புத் தகடுகளில் எழுதித் தரப்பட்டவை பட்டயம் என வழங்கப்படுகிறது.

 

வீரன் அழகுமுத்து சேர்வைக்காரனுக்கு, காசி கோத்திரம் விஸ்வநாத நாயக்கரவர்கள் புத்திரன் பெரிய வீரப்ப நாயக்கன் அவர்கள் கிருஷ்ணா கோத்திரம் கோபால வம்சம் அழகுமுத்து சேர்வைக்காரன் புத்திரன் அழகுமுத்து சேர்வைக்காரனுக்கு எழுதிக் கொடுத்த செப்புப் பட்டயத்தின் ஒரு பகுதி நகல் இங்கே அப்படியே தரப்பட்டுள்ளது.மேற்கண்ட செப்புப்பட்டயத்தில் எழுதப்பட்டிருப்பதவாது:

இன்னான் கொல்கைக் குட்பட்ட நிலமும் மாத்தானம்பட்டி கிழக்கு மால் வைப்பாற்று எல்கைக்கு மேற்கு, தேற்குமால் குளத்தூர் எல்கைக்கு வடக்கு மேற்கு மால் செங்கப்படை எல்கைக்கு கிழக்கு, வடக்குமால் மந்திக்குலம் எல்கைக்கும் பெருமாள் கோவிலுக்கும் தெற்கு, இந்த நான்கு எல்கைக் குள்பட்ட நிலமும், இதில் கட்டாலங்குளம் சோழபுரம் வாலனம்பட்டி மாக்காலம்பட்டி ஆகக் கிராமம் நாளும் தனக்கு அமரமாகவும் தீத்தான்பட்டி குருவி நத்தம் கிராமம் இரண்டும் அழகப்பன் சேர்வைக்காரன் பாட்டாத்தார்க்கு தந்த மானியமாகவும் விட்டுக் குடுத்த படியினாலே ஆகக் கிராமம் ஆறு மதில்சேர்ந்த பட்டியும் இதிலுள்ள நஞ்சை புஞ்சை நிகி நிட்சேபமும் சிவதரு பாசானம் அச்சானிய ஆகாமியம் சித்த சாத்தியம் களெங்கிர அட்ட யோகா தேசாக்காரியங்களும் உன்னுடைய புத்திர பவுதிய பாரம்பரியமாக நயந்திரார்க்கு மாகக் தனாதி வினியவிக்கிரம யோக்கியமாகவும் ஆண்டனுபவித்துக் கொண்டு சுகமயிருக்கவும் இந்தப் படிக்குக் காசிப கோத்திரம் விசுவநாத நாயக்கரவர்கள் புத்திரன் கிருஷ்ணப்ப நாயக்கரவர்கள் புத்திரன் பெரிய வீரப்ப நாயக்கரவர்கள் கிருஷ்டினக் கோத்திரம் கோபால வம்சம் அழகுமுத்து சேர்வைக்காரனுக்கு எழுதிக் கொடுத்த பட்டையம் உ.மீனாட்சியம்மாள் துணை.

 

இதிலுருந்து அழகுமுத்து சேர்வைக்காரன் மகன் அழகுமுத்து சேர்வைக்காரன் என்பது விளங்கும். அதாவது, அழகுமுத்து செர்வைக்காரனின் தந்தையார் பெயரும் அழகுமுத்து சேர்வைக்காரன் என்பது தெரிகிறது. வீரன் அழகுமுத்து சேர்வைக்காரன் என்பதில் மட்டுமல்ல அவனது தந்தையின் பெயரில் கோனார் என்ற சாதிச் சொல் இடம் பெறவில்லை என்பதை சற்று ஊன்றிக் கவனித்தால் புரியும்.

 

சேர்வைக்காரன் என்ற சொல், சேர்வை பட்டத்தை குறிக்கும் அதாவது அரன்மனை சேவகம் மற்றும் தளபதி வேலை பார்த்த சேவகர்களுக்கு இந்த பட்டம் பிரபலமானவரைக் குறிக்கும் சொல்லாகும்.

 

மேற்கண்ட பட்டயத்தில் இடம்பெற்றுள்ள கோபால வம்சம், கிருஷ்ண கோத்திரம் என்ற சொற்களைப் பற்றிக்கொண்டு தான், வீரன் அழகுமுத்து சேர்வையை கோனார் என்று கூறி சாதிசாயம் பூசி சிலை எடுத்தார்கள், விழா நடத்தினார்கள்.கோபால வம்சம் என்பது பிராமணர்களின் ஒரு பிரிவினரையும், வேறு மேல்சாதியரில் சில பிரிவுகளையும் குறிப்பிடும் சொல்லாக உள்ளது. கோபாலன் என்ற பெருமாளை-நாராயணனை தலைமுறை தலைமுறையாக வழிபாடும் சமூகத்தின் சில பிரிவினர் கோபாலவம்சமாகத் தங்களை கூறி வருவது எல்லோரும் அறிந்ததே. கிருஷ்ண கோத்திரம் என்பது, கிருஷ்ணனாகிய கோபாலனை குல தெய்வமாக நீண்ட காலமாக வழிபடுவோரை குறிக்கும் சொல்லாக உள்ளது. இவ்வாறு வழிபடுவோர் விபூதியை நெற்றியின் மேல் நோக்கி நாமம் போல் பூசுகிறார்கள்.

 

தூத்துக்குடி மாவட்டத்தின் பல பகுதிகளில் உள்ள மறவர். சமூகத்தினர் நாராயணனை குல தெய்வமாக வழிபடுகின்றனர். இவர்கள் எல்லாம் தங்களை “கிருஷ்ணகோத்திரம்” என்று கூறிகிறார்கள்.

பொதுவில் தனது சாதிக்குக் ஒரு அடையாளம் தேவையென விரும்புவது, ஆசைப்படுவது சாதியத்தை வளர்த்து அதன் மூலம் சுயலாபவேட்டையில் ஈடுபடுவோரின் செயலாக மாறியது ஏன்? ஓட்டுக்காகப் பூசப்படும் போலிப் பூச்சுக்களும், பொய் விளம்பரங்களும் அடிப்படையை தகர்க்க முடியுமா? நீருக்குள் விடும் காற்று வெளியே வந்து தானே தீரும்! இந்த சுதந்திரப் போருக்கு முதல் முழக்கமிட்ட மான மறவன் – மாவீரன் மன்னன் பூலித்தேவனுக்கு நெற்கட்டான் செவ்வல், வாசுதேவ நல்லூர், ராஜபாளையம் ஆகிய 3 இடங்களில் கோட்டைகள் இருந்தன! அவனது படை வரிசைகள் பல. அவற்றுக்குத் தளபதிகள் பலர். அவர்களுள் ஒருவன் ஒண்டி வீரன். இவன் பகடை சமுதாயத்தைச் சேர்ந்தவன்!

 

துப்புரவுத் தொழிலார்கள் தங்கள் குலத்தின் அடையாளமாக ஒண்டி வீரனை எண்ணிப் போற்றி புகழ்வதில் பொருள் உண்டு! நியாயம் உள்ளது. வீரபாண்டிய கட்டபொம்மனின் தலைமகனாக தலைமைத் தளபதியாக விளங்கி, போர்க்களத்தில் வெள்ளையரின் துப்பாக்கி குண்டுக்கு மார்புகாட்டி மடிந்த மாவீரன் பகதூர் வெள்ளையத்தேவன். அவனுக்கு அடுத்த நிலையில் இருந்த தளபதிகளில் வீரன் சுந்தரலிங்கம் ஒருவன். அவன் தாழ்த்தப்பட்ட சமூத்தின் அடையாள புருஷனாக போற்றப்படுவதில் பொருள் உண்டு. நியாயம் உள்ளது.

 

ஆனால் மன்னர் பாஸ்கர சேதுபதியையோ, வீரமங்கை வேலுநாச்சியாரையோ, மாமன்னர் பூலித்தேவனையோ, கட்டாலங்குளம் அழகுமுத்து சேர்வைக்காரனையோ தேவர் குலத்தில் இருந்து, ஆம் வீரமறவர் குலத்தில் இருந்து பிரித்துக் கொண்டு போய் யாரும் சொந்தம் கொண்டாட நினைப்பது அல்லது சொந்தங் கொண்டாடுவது வரலாற்றை பிழை படுத்துவதாக அமையாதா? அன்றைய கால கட்டத்தில் ஆளும் பொறுப்பில் பரவலாக தேவர்களும் இருந்ததற்கு, மனித லட்சன ஆராய்ச்சி அறிஞர்கள் செய்து வைத்த கபடமற்ற ஏற்பாடே காரணம்.இன்ன லட்சணம் உடையவன் இன்ன தொழிலையே செய்வதற்கு ஏற்றவன் என ஆய்ந்தறிந்து தொழில் ரீதியில் சாதி பிரிவு ஏற்படுத்தப்பட்ட போது, மறவர் குலம் என்ற பாண்டியர் குலம் ஆட்சிப் பொறுப்புக்கு – காவல் பொறுப்புக்கு தேர்வு செய்யப்பட்டது. அதன் படியே ஆட்சி அமைப்புகள், காவல் அமைப்புகள் உருவாயின.

 

மறவர் குலத்தில் 38 பிரிவுகள் உள்ளன. அவற்றில் ஒன்று தான் கொண்டயம்கோட்டை.இதில் கொண்டயம்கோட்டை மறவரில் சேர்வை பட்டம் உடையவர் தான் கட்டாலங்குளம் ஜமீன் அழகுமுத்து சேர்வைக்காரன் என்பதை உறுதிப்படுத்த எத்தனையோ சான்றுகள் உள்ளன. அவற்றில் ஒன்று நாயக்க மன்னர் அழகுமுத்து சேர்வைக்காரனுக்கு பட்டியம் எழுதிக் கொடுத்ததைக் குறிப்பிடும் பழங்கால கல்வெட்டு ஒன்று. இது பாண்டிய மன்னர் வைத்த கல்வெட்டாகும். இந்தக் கல்வெட்டிலும் சேர்வை என்று தான் குறிப்பிடப்பட்டுள்ளது என்பதும் சரியான சான்று.

 

 

 

 

இதோ அந்தக் கல்வெட்டு.

 

 

வீரன் அழகுமுத்து ‘சேர்வை’ (கொண்டயம்கோட்டை மறவர்) குலத்தவன் என்பதற்கு மேலே கண்ட பட்டய நகலும், கல்வெட்டு நகலும் வரலாற்று ஆவணங்கள்-அடிப்படை ஆதாரங்கள் அல்லவே? இன்னமுள்ள ஆதாரங்களை அடுத்து பார்ப்போம்.

. பிற்காலத்தில் இந்தப் பகுதி ஊத்துமலை மன்னரின் ஆளுகைக்கு வந்தது. ஊத்துமலை மன்னரும் கொண்டையம் கோட்டை மறவர் குல மாணிக்கமே என்பது உலகறிந்த உண்மை. ஆங்கிலேயரின் ஆதிக்கத்தின் கீழ் பின்னாளில் வந்த கட்டாலங்குளம் ஆளுகை ஆங்கிலேயர்கள் அழகுமுத்துவின் வாரிசுகளிடம் இந்நிலத்தை ஜப்தி செய்து அவர்களால் கட்டமுடியாத வரியின் காரனமாக இந்த பூமியை ஏலம் விட்டனர். அப்போது உறவினர் என்ற முறையில் இந்த பகுதியை ஏலம் எடுத்த ஊற்றுமலை ஜமீந்தார் சுதந்திரத்திற்கு முன்பு அழகுமுத்துவின வாரிசுகளிடமே வழங்கினார்.அழகுமுத்து கோன் சேர்வை என்ற பெயரில் வரும் கோன் என்ற பட்டம் சோழகோன் என்ற பட்டத்தை குறிக்கும்.

 

பரம்பரை ரத்தம் உடம்பிலே முறுக்கேறி 

ஓடும் அறம் காத்த சமுதாயமே!

ஆன்மிகம் வளர – நிலைக்க ஆலயங்கள்

பல அமைத்த அரசகுலத் தோன்றல்களே!

வரிப்புலிகளை கண்டு தறிகெட்டு ஓடிய பூனைகள்

தங்கள் உடலிலே சூடு போட்டுக் கொள்வதாலேயே

பூனைகள் புலிகள் என்று எவரும் கருதிடார்!

 

ஆனால் தேவைப்படும் நேரத்தில் கூட பாயாமல் பதுங்கும் குணம் கொண்டோரின் பிறவியிலேயே சந்தேகம் வரும்! ஆகவே சந்தேகத்திற்கு என்றும் இடமளிக்காமல் உள்ளத்துள் உத்வேகம் கொண்ட முத்தமிழ் வளர்த்த முக்குலத்துச் சிங்கங்களே – முக்குலம் எனில் கள்ளர், மறவர், அகமுடையார் என மூன்று பிரிவுகளைக் கொண்ட நாம்!

 

நமது மூதாதையராம் சேர,சோழ,பாண்டிய மன்னர்களின் நீதி வலுவா ஆட்சியில், இந்த முக்குலத்தின் ஏக பிரதிநிதிகளாக, முக்குலத்தின் ஒப்பற்ற வீரமும் விவேகமும் கூடிய ஏந்தல்களாக இருந்தனர். மூன்று பிரிவுகளும் சமநிலை உடைய ஆட்சிப்பிரிவுகள். இந்த வரலாற்று உண்மையை நெஞ்சில் பதிய வைப்போம். யாவருக்கும் புரிய வைப்போம்.இந்திய விடுதலைப் போரில் முதல் பலியானவர்கள் நாம்! ஆங்கில ஏகாதிபத்தியதிற்கு பேராபத்தை விளைவித்தவர்கள் நாம்! ஆட்சியை இழந்தோம்! உறவினர்களை பலி கொடுத்தோம்! உடமைகளை இழந்தோம்! ஆனால் தூக்குக் கையிற்றை முத்தமிட்ட போதும் மானத்தை இழக்காமல், மரணத்தை அணைத்தோம். இந்த வரலாறுகளை நினைவு கூர்ந்து நெஞ்சில் சூடேற்றிக் கொள்வோம்.

 

வெள்ளை ஏகாதிபத்திய ஏஜென்ட் கமாண்ட்டெண்ட் கான்சாகிப் பீரங்கிப் படைக்கு தன்னையும், தனது படை வீரகளையும் இந்த மண்ணின் விடுதலைக்காக பலி கொடுத்தவர் கட்டாலங்குளம் மன்னன் மாவீரன் மானமறவன் அழகுமுத்து சேர்வைக்காரன். அந்த மாவீரனின் நேரடி வழித் தோன்றல்களான லெஷ்மிராஜவிடம் இருந்து பல்வேறு தகவல்கள், வீரன் அழகுமுத்து சேர்வைக்காரர் பற்றி கிடைத்தது.

 

அழகுமுத்து சேர்வைக்காரனின் தந்தை அழகுமுத்து சேர்வைக்காரர் கட்டாலங்குளம் பகுதியை அரசாலும் உரிமையை, மதுரையை ஆண்ட மன்னர் கிருஷ்ணப்ப நாயக்கர் குமாரர் பெரிய வீரப்ப நாயக்கர் அவர்களிடம் ஒரு செப்பேட்டின் மூலம் பட்டயம் பெற்று அரசாண்டார். அந்தப் பட்டயத்தில் அழகுமுத்து சேர்வைக்காரன் புத்திரன் அழகுமுத்து சேர்வைக்காரன் எனக் குறிப்பிடப் பட்டுள்ளதை அறிந்தோம்.அழகுமுத்து சேர்வைக்காரன் கான்சாகிப்பை எதிர்த்து பெத்தநாயக்கனூர் கோட்டையில் போரிட்டதாகக் கிடைத்திருக்கும் ஆதார நூல் வம்சமணி தீபிகை. இது எட்டையாபுரம் சமஸ்தானத்தில் வேலை செய்த சுவாமி தீட்சிதர் என்பவரால் எழுதப் பட்டது. அதில் அழகுமுத்து சேர்வைக்காரன் மற்றும் 5 படைத்தளபதிகளும் பீரங்கி வாயில் வைத்து சுடப்பட்டதாக குறிப்பிடப் பட்டுள்ளது.

 

எட்டயாபுரம் “ஃபாஸ்ட் அண்ட் பிரசண்ட்” என்ற ஆங்கில நூலை டபிள்யு. இ. கணபதிப்பிள்ளை என்பவர் எழுதியுள்ளார். அதிலும் வம்சமணி தீபிகையில் கூறியுள்ளபடியே சொல்லப்பட்டுள்ளது. இந்த நூல் தான் தற்பொழுது அழகுமுத்து சேர்வைக்காரர் கான்சாகிப்பை எதிர்த்து போர் புரிந்தார் என்று சான்று காட்டுவதற்கு சிறந்த அடிப்படை நூலாக தமிழ்நாடு ஆவணக் காப்பகத்தில் உள்ளது. அந்த நூலில் அரசர் கொடுத்த பட்டயம் பற்றியும் தகவல் உள்ளது. அதிலும் அழகுமுத்து சேர்வைக்காரன் என்று தான் உள்ளது.

 

1932 ம் ஆண்டு அழகுமுத்து சேர்வைக்காரரின் வாரிசுதாரர்கள், அவர்களின் கார்டியன் பாக்கியத்தாய் அம்மாள் மூலம் தனது ஜாமீன் சொத்துக்களைப் பாகவிஸ்தி மூலம் பெறுகிறார்கள். சொத்தைப் பெற்றவர்கள் விபரம் கீழ்க்கண்டபடி குறிப்பிடப்பட்டுள்ளது.

 

1) அழகுமுத்து என்ற துரைச்சாமி சேர்வைக்காரர் இந்து ராயர்.

2) சின்னச்சாமி என்ற குமாரெட்டு சேர்வைக்காரர்

3) இவர்கள் இருவரின் மூத்த மகன்களுக்கு தனது இரண்டு மகள்களை பெண் கொடுத்த அப்பாவு அய்யா சேர்வைக்காரர் என்றே உள்ளது.

 

அவர் பத்திரத்தில் சாட்சியாகவும் ஜாமீன் மேனேஜராகவும் வருகிறார்.அந்த இரண்டு வாரிசுகள் தான் அழகுமுத்து சேர்வைக்காரரின் நேரடி வாரிசுகள், தற்போதும் வாழ்கிறார்கள்.

 

மதுரை, தூத்துக்குடி, திருநெல்வேலி, சிவகங்கை, இராமநாதபுரம் ஆட்சித் தலைவர்களுக்கும் ஆதரங்களோடு பலரால் ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டது. மேலும் ஜமீன் ஒழிப்பின் போது இந்திய அரசால் (எஸ்டேட் அபாலிசன் ஆக்ட் படி) நஷ்ட ஈடு பெற்றவர்களின் சான்று ஆவணம் இன்றும் தமிழ்நாடு அரசு செட்டில்மென்ட் டிபார்ட்மெண்டில் உள்ளது. அதில்

1) அழகுமுத்து என்ற துரைச்சாமி

சேர்வைக்காரனின் புத்திரர்

காசிச்சாமி சேர்வைக்காரர் (சிவத்தசாமி அவர்களின் தந்தை)

2) சின்னச்சாமி என்ற குமாரெட்டு சேர்வைக்காரர் மற்றும் அவர்களின் புதல்வர்கள்:-

 

அ ) சின்னச்சாமி என்ற குமாரெட்டு சேர்வைக்காரர்

ஆ) சுந்தரராஜ சேர்வைக்காரர் வாரிசுதாரர் லக்ஷ்மிராஜா

இ) துரைராஜா சேர்வைக்காரர்

ஈ) பால்துரை சேர்வைக்காரர்

உ) செல்லச்சாமி சேர்வைக்காரர் என்றே உள்ளது.

 

இது 1955 க்குப் பின்னர் உள்ள ஆவணமாகும்.

இந்த உண்மையை நாட்டு மக்கள் அனைவருக்கும், குறிப்பாக தேவர் குல மக்களுக்கும், கோனார் குல மக்களுக்கும் தெரியப்படுத்துகின்ற நோக்கத்தில் எழுதப்பட்டது.

 

கட்டாலங்குளத்திற்கான வருவாய்த்துறை ஆவணங்கள், ஊராட்சி ஆவணங்கள், வாக்களர் பட்டியல் இவற்றைப் பார்வையிட்டால், இப்பொழுது கூட ஒரு கோனார் வீடு கூட அங்கு இல்லை என்பதை அறியலாம்.

தற்போது, கட்டாலங்குளம் ஊராட்சித் தலைவராக இருப்பவர் திரு. இரா.கருப்பசாமி பாண்டியன் அவர்கள் என்பது குறிப்படத் தக்கது.

ஆகவே காயங்களை நியாயப்படுத்தக் கூடாது. நியாயங்களை காயப்படுத்தவும் கூடாது. வரலாற்றினைப் பேணுவோம்! மாவீரன் அழகுமுத்து சேர்வையைப் போற்றுவோரை போற்றுவோம். பொதுவில் தியாகிகள் அனைவரையும் போற்றுவோம்.அவர்களது வரலாற்றை நமது வாரிசுகளுக்கு பாடம் சொல்லுவோம்.

 

“சீறி வந்த புலியதனை முறத்தினாலே சிங்காரத் தமிழ் மறத்தி துரத்தினாளே”

 

இது நமது அன்னையின் பெருமை. இந்தப் பெருமையை காப்போம்.

இச்சிறுநூல் யாரையும் எள்ளளவும் மனநோகச் செய்யாது. யார் மீதும் நமக்கு வெறுப்போ, காழ்ப்போ இல்லை.

 

சமுதாய நல்லிணக்கம் பேணுவோம், நமது சரித்திரத்தை காப்போம்.

வாழ்க தமிழ்! வெல்க வீரத்தமிழர்!

 

 

சிறப்பு நன்றி : வரலாற்று உண்மைகளை உலகிற்கு அறிய தந்த சேவாரத்னா நெல்லை திரு. மா. சேதுராமபாண்டியன் அய்யா அவர்களுக்கும்,இந்த பெரிய பதிவை எங்களுக்கு வழங்கிய உறவினர் திரு. தனியன் அவர்களுக்கும் எங்களது நன்றிகளை காணிக்கையாக்குகிறோம்.

This entry was posted in அழகு முத்துக்கோன் சேர்வை and tagged , , . Bookmark the permalink.

12 Responses to மறக்குலமன்னன் அழகுமுத்து சோழகோன்சேர்வை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *