வரலாற்று நோக்கில் மறவர் சீமை இராமநாதபுரம்

வரலாற்று நோக்கில் இராமநாதபுரம் மாவட்டம் [தமிழகக் குறுநில வேந்தர்களை முன்வைத்து]
Posted by | May 1, 2017 | வரலாறு
சே. முனியசாமி

முனைவர்பட்ட ஆய்வாளர்

இந்திய மொழிகள் மற்றும்ஒப்பிலக்கியப் பள்ளி

தமிழ்ப் பல்கலைக்கழகம்

தஞ்சாவூர்

பாண்டிய நாட்டுத்தொன்மை

https://www.inamtamil.com/varalaṟṟu-nokkil-iramanatapuram-mavaṭṭam-tamiḻakak-ku…

தமிழகத்தின் ‘தென்புலம்’ என விளங்கிய ஆட்சிப் பகுதி ‘பாண்டியமண்டலம்’ என அழைக்கப்பெறுகிறது. பாண்டிய மண்டலத்தைப்பன்னெடுங்காலம் ஆண்டபாண்டியர்கள், படைப்புக்காலந்தொட்டு மேம்பட்டு வரும்தொல்குடியினர் என வரலாறுபுலப்படுத்துகின்றது. இதனைப்பின்வரும் கருத்து விளக்கும்.

வடமொழியாளர் ஆதிகாவியமெனக்கூறும் வால்மீகி இராமாயணத்திலும்கி.மு.நான்காம் நூற்றாண்டில் வாழ்ந்தகாத்யாயனர் நூலிலும் பாணினிவியாகரணத்திற்கு வரைந்த வாத்திகம்என்ற உரையிலும் இலங்கையின்வரலாறு கூறும் பண்டைய நூலானமகாவம்சத்திலும் அசோகப்பெருவேந்தனின் கல்வெட்டிலும்மெக்சுத்தனீசின் குறிப்புகளிலும்காணப்பெறும் பாண்டியர் குறித்தசெய்திகள் அவர்தம் தொன்மையைமெய்ப்பிக்கும் (தமிழ்நாட்டு வரலாறுபல்லவர் – பாண்டியர் காலம், 1990:401).

திருவாசகத்தில் மாணிக்கவாசகர்பாண்டிய நாட்டைப் ‘பாண்டிய நாடேபழம் பதி’ எனக் கூறுகின்றார். இப்பாண்டிய நாட்டில் தமிழ்மொழிசெழித்து வளரப் பலர்பங்காற்றியுள்ளனர். அதனால்‘செந்தமிழ் நாடு’ என்றும்அழைக்கப்பட்டது.

பாண்டிய நாட்டின் எல்லை

பாண்டிய நாட்டின் நிலப்பரப்பானதுகிழக்கிலும் தெற்கிலும் கடல்பரப்புஎல்லையாகவும் மேற்கு எல்லையில்மேற்குத்தொடர்ச்சி மலையும்வடமேற்கில் கொங்குநாடும்வடகிழக்கில் புதுக்கோட்டையும்வடக்கில் வெண்ணாறு வரையும்பரவியிருந்தது. அதனால் பாண்டிமண்டலம் எனப்படுவது இன்றையமதுரை, இராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், திண்டுக்கல், திருநெல்வேலி, புதுக்கோட்டை ஆகியமாவட்டங்களின் வெள்ளாற்றுத்தென்பகுதியினையும் ஏறக்குறையக்கொண்டிருந்தது என அறியமுடிகிறது.

பாண்டியரின் ஆட்சிப் பரப்பு

மன்னர்கள் தம் ஆற்றல் வலிமையால்படையெடுத்துத் தமக்குச் சொந்தமானபெயர்களை நாட்டி ஆட்சிசெய்துள்ளனர். முற்காலப் பாண்டியர்காலத்திற்கு முன்பே பாண்டிய நாடுஎனவும் அதன்பின்பு சோழர் காலம்முதல் ‘இராசராச வளநாடு’, ‘இராசராசமண்டலம்’, ‘இராசராசப் பாண்டி நாடு’ எனவும் பெயர் பெற்ற போதிலும்‘பாண்டிய நாடு’ என அழைத்துவந்தனர். இரண்டாம் இராசசிம்மன்முதலானோர் காலத்தில் சோழமண்டலம், தொண்டை மண்டலம், பாண்டிய மண்டலம் போன்றவைபாண்டியர் ஆட்சிக்குட்பட்ட பகுதிகளாய்விளங்கின. காலப்போக்கில்மன்னர்களின் படையெடுப்பு, வெற்றி, தோல்வி ஆகிய காரணங்களினால்முற்றிலும் மாற்றப்பட்டது. பலர்அரசாட்சி செய்தனர். தற்போது பாரதம்முழுதும் மக்களாட்சி முறைநிலவுகிறது. இருப்பினும் இம்முறைக்குமுந்தைய நிலை சேதுபதிமன்னர்களால் ஆட்சிசெய்யப்பட்டுள்ளது. இது‘மன்னராட்சியின் இறுதிநிலையாகும்.

இராமநாதபுரம் மாவட்டம்

தமிழ்நாட்டின் தென்மாவட்டங்களில்இராமநாதபுரம் மாவட்டம் மிகப்பெரியமாவட்டமாகும். இது இந்தியதீபகற்பத்தின் கிழக்குக்கடற்கரையோரத்தில் கிழக்கேபாக்ஜலசந்தியும் மேற்கே மன்னார்வளைகுடாவும் சூழ அமைந்துள்ளது. இம்மாவட்டத்தின் கடற்கரை ஓரம் 290 கி.மீ.ஆகும். இத்தகைய எல்லைகளைத்தாங்கி நிற்கும் இம்மாவட்டமானதுதமிழ்நாட்டில் வரலாற்றுச் சிறப்புமிக்கமாவட்டமாகும். பல்வேறு புலவர்பெருமக்கள் வாழ்ந்த மாவட்டமாகவும்தமிழ்மொழியும் இலக்கியங்களும்வளமையடைவதற்குமாட்சிமையடைந்த மாவட்டமாகவும்திகழ்ந்துள்ளது. காலப்போக்கில்(வரலாற்றுப் போக்கில்) தன்னைஇணைத்துக் கொள்ளாததால்மனிதகுல உணர்வு, சாதி போன்றகாரணங்களினால் பின்தள்ளப்பட்டுப்‘பின்தங்கிய’, ‘வறட்சி மாவட்டம்’, ‘கலவரபூமி’, ‘சாதிச்சண்டைகளின்பிறப்பிடம்’, ‘வானம் பார்த்த பூமி’ எனும்பெயர்களைத் தற்போது தாங்கிக்கொண்டிருக்கிறது. ஏறக்குறைய 113 ஆண்டுகளுக்கு முன்பு இம்மாவட்டம்பேரும் புகழும் அடைந்துவிளங்கியதற்குச் சான்றுகள் பலஉள்ளன. அயலக வாணிபம், இலக்கியம், மொழி வளர்ச்சி, கொடைத்தன்மை, வீரம், போர்முறை, ஆட்சி புரியும் தன்மை போன்ற பலதனித்தன்மைகளில் விளங்கியதைவரலாற்றுத் தரவுகள் மூலம்அறியமுடிகின்றது. தற்போதையஇராமநாதபுரம் மாவட்டத்தைச் ‘சேதுநாடு’ என அழைப்பர். சேரநாட்டின்வரலாற்றையும் சேதுபதிமன்னர்களைப் பற்றியும்முற்காலத்தில் சேரமறவர், சோழமறவர், பாண்டிய மறவர் எனமூவேந்தர்களின் வெற்றித்தொழில்களுக்கும் குறுநிலவேந்தராய்ப் போர்த்துணைவராய்விளங்கியுள்ளார்கள் என்பதைஇலக்கியச் சான்றுகள் பகர்கின்றன. அதுமட்டுமில்லாது சேதுநாட்டில் தமிழ்மொழியும் மொழிப்புலவர்களும்செழித்தோங்கி வளர முக்கியமன்னர்களாகச் சேதுநாட்டு மன்னர்கள்திகழ்ந்துள்ளனர். அவற்றைச்சுட்டிக்காட்டுவதாக இக்கட்டுரைஅமைகின்றது (இக்கட்டுரையில்இராமநாதபுரம் என்றசொல்லாடலுக்குப் பதிலாகச் சேதுநாடுஎனப் பயன்படுத்தப்படுகிறது).

சேதுநாடு

இராமநாதபுரம் மாவட்டத்திற்குப் பலபெயர்கள் உண்டு. சேதுநாடு, புண்ணிய நாடு, சிரிம்பினிநாடு, செம்பிநாடு, செம்பிநாட்டு மறவர், செவ்விருக்கை நாடு, கீழச்செம்பியநாடு, ராசேந்திர மங்கலைநாடு, மங்களநாடு, மறவர் நாடு, பசும்பொன் மாவட்டம், முகவைமாவட்டம் எனப் பல பெயர்கள்உள்ளன.

அயல்நாடுகளில் சேதுநாடு எனும்பெயர் சுட்டப்பெறாமல் பிறிதொருபெயரில் அறிமுகமாகியிருந்தது. பண்டைய எகிப்தியப் பயணி ஒருவர்(Cosmos Indico Plensis 530-550 AD) தமிழ்நாட்டில் ‘மாறல்லோ’ பகுதியில்இருந்து சங்கு நிறையஏற்றுமதியானதாகக்குறிப்பிட்டுள்ளார்.

“யூல் என்ற அறிஞர் ‘மாறல்லோ’ என்பது மறவர்நாடு (அதாவது சேதுநாடு) என்பதன் மரூஉ எனச் “சீனமும்அதற்கான வழியும்” எனத் தமது நூலில்குறிப்பிட்டுள்ளார். கிறித்துவ நற்பணிமன்றத்தைச் சேர்ந்த ஏசுசபைப்பாதிரியார்கள் தங்கள்தலைமையிடத்திற்கு ஆண்டுதோறும்அனுப்பிய ஆண்டறிக்கைக்கடிதங்களில் இப்பகுதியில்பணியாற்றிய இடம், தேதி பற்றிக்குறிப்பிடும்போது இடம் என்பதில்‘மறவா’ (MARAVA) என்றேஎழுதியுள்ளனர்.” (மனோகரன்.மீ., கிழவன் சேதுபதி, ப.23)

ஆறுகளும் தீவுகளும்

சேதுநாட்டில் வைகையாற்றுடன்ரகுநாதக் காவேரி என்ற குண்டாறு, நாராயணக் காவேரி, கிருதமால், கோட்டக்கரை, விருசலை, பாம்பாறு, தேனாறு, மணிமுத்தாறு, வெள்ளாறுமுதலிய சிற்றாறுகளும் ஓடுகின்றன. இந்நாடு பத்துக்கும் மேற்பட்டஆறுகளையும் பதினைந்திற்கும்மேற்பட்ட தீவுகளையும் கொண்டதாகவிளங்கியுள்ளது. இதனை

“இராமேசுவரம், குந்துக்கல், பள்ளிவாசல், முயல்தீவு, பூமறிச்சான், முள்ளித்தீவு, மணலித்தீவு, வாலித்தீவு, ஆப்பத்தீவு, நல்ல தண்ணீர்த்தீவு, உப்புத்தண்ணீர்த்தீவு, குருசடைத் தீவுஉள்ளிட்ட 16 தீவுகளையும் கொண்டதுசேதுநாடு” (மனோகரன்.மீ., கிழவன்சேதுபதி, ப.23)

எனவரும் கருத்துவழி அறியலாம்.

பாண்டியர் சோழர் விஜயநகரமன்னர்களுக்குப் பிறகு சேதுபதிவம்சம் சடைக்கத்தேவர் (1604-21.) ஆட்சியிலிருந்து தொடங்குவதாகவரலாறு தெரிவிக்கின்றது. சோழர்கள், சமணர்கள் ஆகியோர் வாழ்ந்ததற்கானவரலாற்றுச் செய்திகள், கல்வெட்டு, காசுகள், ஊர்ப்பெயர்கள் மூலம்கிடைக்கின்றன. இராமநாதபுரம்மாவட்டம் முழுமையும் பாண்டியநாட்டின் பகுதியாக விளங்கியபொழுதிலும் ஏறக்குறைய முன்னூறுஆண்டுகள் சோழப் பேரரசின் ஆட்சிக்குஅடங்கிய நாடாகக் கி.பி.919 முதல்இருந்து வந்துள்ளது. ஆகச் சோழ, பாண்டியர்களின் ஆட்சிக்கு அடங்கியநாடாக இருந்தாலும் ‘சேதுநாடு,’ சங்ககாலம் முதல் புகழ்பெற்றுவிளங்கியது என்பதற்குச் சான்றுகள்கிடைக்கப்பெறுகின்றன.

“எளிய மக்கள் தங்களது அயராதஉழைப்பினாலும் தன்னலமற்றதொண்டினாலும் பணிவினாலும்படிப்படியாகப் படைவீரர், படைத்தலைவர் என உயர்ந்துஇறுதியில் குறுநிலப் பகுதிகளின்மன்னர்களாகவும் ஆக முடியும்என்பதை மெய்ப்பித்துக் காட்டியவர்கள்மறவர் சீமையினர். தமிழகச் சிற்றரசர்மரபினர்களில் இவர்கள் மிகவும்குறிப்பிடத்தக்கவர்கள். வேளிர், மலையமான்கள், அதியமான்கள், தொண்டைமான்கள், முத்தரையர், இருக்குவேளிர், வானாதிராயர்கள்எனத் தமிழகம் பல சிற்றரசுமன்னர்களைக் கண்டுள்ளது. இந்தியவரலாற்றில் போர்வழியிலன்றிஆன்மிக நெறியில் நின்று இந்தியாமுழுவதிலும் புகழ்படைத்த மரபினர்சேதுபதி மரபினர்” (கமால்.எம்.எஸ்., சேதுபதி மன்னர் வரலாறு, 2003:IV அணிந்துரை).

எனக் கோ.விசயவேணு கோபால்கூறுகின்றார்.

“இவர் தொன்றுதொட்டேதமக்கியல்பாயுள்ள வீரச்செயலாலும்வில்–வாள் முதலாய படைத்தொழில்வலியாலுமே தம்முயிர் வாழ்தலிற்சிறந்த தமிழ்நாட்டு மறவர்குடியினராவர்”(இராகவையங்கார்.இரா., தமிழகக்குறுநில வேந்தர்கள், 1994:110).

சேதுநாடானது மூவேந்தர்க்குப் பின்தமிழகத்தில் அந்நியர் ஆட்சி ஏற்படும்வரை சுதந்திரமாக ஆட்சிபுரிந்த ஒரேநாடு என்பது சிறப்பிற்குரியதாகும்.

சேதுபதிகள் சோழன் மறவரே

ஆன்நிரைகளைக் கவர்ந்து செல்லல்வெட்சி ஆகும். அதனை மீட்டுச்செல்வது கரந்தை என்பர். படைத்தொழில் வலிமையுடையமறவர்களே இதில் ஈடுபடுவர். இம்மறவர்களுள் சிறந்தவர்தமிழ்நாட்டு மறவர் குடியினர் ஆவார். வெட்சி மறவரை ஆறலைப்பார், கள்வர்எனவும் கரந்தை மறவரை வயவர், மீளியர் எனவும் அழைப்பர். இதனைக்குறிப்பிடும் பதிவு வருமாறு:

“இவர் தொன்றுதொட்டேதமக்கியல்பாயுள்ள வீரச் செயலானும்வில்–வாள் முதலாய படைத்தொழில்வலிமையாலுமே தம்முயிர் வாழ்தலிற்சிறந்த தமிழ்நாட்டு மறவர்குடியினராவர். “வில்லேர் வாழ்க்கைவிழுத்தொடை மறவர்” என்றார்அகநானூற்றினும் (35) இம்மறவரையேவில்லேருழவர், வாளுழவர், மழவர், வீரர் முதலிய பல பெயர்களாற் கூறுவர்முன்னோர். இவர் நிரைகவர்ந்துஆறலைத்துக் குறைகொள்ளுங்கொடுந்தொழிலாற் றம்முயிரோம்பும்வெட்சி மறவர் எனவும் அவ்வெட்சிமறவரை முனையிற் சிதற வீழ்த்துஅவராற் கவரப்பட்ட நிரைகளை மீட்டுஆறலையர் மற்காத்துப் பிறருயிரோம்புமுகத்தாற் றம்முயிர் வாழுங் கரந்தைமறவர் எனவும் இரு திறத்தினராவர். இதனை “ஆகுபெயர்த்துத் தருதலும்”(பொ.புறத்.5) என்னுந்தொல்காப்பியத்துநச்சினார்க்கினியருரையானும்“தனிமணியிரட்டுந் தாளுடைக் கடிகை, நுழைநுதிநெடுவேற் குறும்படைமழவர், முனையாகத் தந்து முரம்பின்வீழ்த்த வில்லேர் வாழ்க்கைவிழுத்தொடை மறவர்” (35) என்னும்அகநானூற்றுரையானும்அறிந்துகொள்க” எனச் சுட்டுகிறார்.

வெட்சி மறவரை ஆறலைப்பார், கள்வர்எனவும் கரந்தை மறவரை வயவர், மீளியர் எனும் பெயர்களில் அழைப்பர். இவ்விரு மறவர்களைச் “சேதுபதிகள்தீதெலாங்கழுவுஞ் சேதுநீராடப் போதுவார்யாவரையும் ஆறலை கள்வர்முதலியோராற் சிறிதும் இடர்ப்படாமற்காத்து அவர்கட்கு வேண்டுவனஉதவுதலே தமக்குறு தொழிலாகக்கொண்ட சிறப்பாற்றம்பெருவலியானே பிறருயிரோம்புங்கரந்தை மறவரேயாவர்” எனக்குறிப்பிடுகின்றார்.

இம்மறவர் வாழ்ந்த பழையவூரைக்கரந்தை எனவும் இவரைக் கரந்தையர்எனவும் இவர் தலைவனைக்கரந்தையர்கோன் எனவும் பிற்காலக்கவிகள் வழங்கி வந்தனர். சான்றாக

“அற்பனை மேவுங் கரந்தையர்கோன்ரகுநாதன்மணி” 62)”

“பாரைப் புரந்த ரகுநாதன் வெற்பிற்பகலில்விண்சேர்” (63)

“பழியுந் தவிர்த்த ரகுநாத சேதுபதிவரையீர்” (64)

“மல்லார் கரந்தை ரகுநாதன் றேவைவரையின் மணிக்” (67)

“சூரியன் வீரையர் கோன் ரகுநாதன்கரும்பிலின்று” (68)

“மைவாய்த்த வேற்படை யான்ரகுநாதன் மணவையன்னீர்” (72)

“நாவுக் கிசையும் பெரும்புக ழான்ரகுநாதன் வரைக் (74)

“காரும் பொருவுகை யான்ரகு நாதன்கரந்தையன்னீர் (75)

“கார்த்தலந் தோயுங் கொடிமதில்சூழுங் கரந்தையர்கோன் (76)

என ஒருதுறைக்கோவையிலுள்ளபாடல்கள் சுட்டுகின்றன.

இவ்வகை மறவரே தமிழ்நாட்டுமூவேந்தருக்கும் சிறந்தபெரும்படையும் படைத்தலைவருமாய்விளங்கியவர்கள் ஆவர்.

இவ்வீரரே இம்மூவேந்தரையும் தமதுஅரிய பெரிய வெற்றித் தொழில்களால்இன்புறச் செய்து அவர்களின்ஆட்சியில் செங்கோல் தலைநிமிர்ந்துநிற்கக் குறுநில வேந்தர்களாய்த்திகழ்ந்து போர்புரிவதற்குத்துணைபுரிந்தனர். “இவர் இம்மூன்றுதமிழ்வேந்தர்க்கும் உரியராதல் பற்றிமுற்காலத்தே சேரன் மறவர், பாண்டியன் மறவர், சோழன் மறவர்என மூன்று பகுதியினராகவழங்கப்பட்டனர்” (தமிழக்கக் குறுநிலவேந்தர்கள், ப.III).

சோழன் மறவரை நன்னன், ஏறை, அத்தி, கங்கன், கட்டி (அகம்.44) எனவும்பாண்டியன் மறவரைகோடைப்பொருநன் பண்ணி (அகம்.13) எனவும் சேரன் மறவரைப் பழையன், பண்ணன் (அகம்.44, 326, புறம்.183) எனவும் அழைக்கப்படுகின்றனர்.

சேதுநாட்டுப் படைவீரர் குறுநிலமன்னராயிருந்தனர் என்பதற்குத்

“தானே சேறலுந் தன்னொடு சிவணிய

சேறலும் வேந்தன் மேற்றே (தொல்.பொருள்.அகத்.28)

எனும் சூத்திரத்தின் உரையில்நச்சினார்க்கினியர் “சொற்றச் சோழர்கொங்கர்ப்பணிஇயர், வெண்கோட்டியானைப்போர்க்கிழவோன், பழையன்மேல்வாய்த்தன்ன” என வரும்நற்றிணையை எடுத்துரைத்து இதுகுறுநில மன்னர் போல்வார் சென்றமைதோன்றக் கூறியது எனச் சுட்டுகிறார். மேற்சுட்டிய பழையன் (அகம்.44) என்பவன் சோழன்படைத்தலைவனான குறுநில மன்னன்என்பது இங்கே குறிப்பிடத்தக்கதாகும்.

சேதுபதி – பெயர்க்காரணம்

சேது என்றால் பாலம் எனவும் பதிஎன்றால் தலைவன் எனவும்பொருள்படும். இராமர் இலங்கைக்குச்செல்வதற்காக அமைத்த பாலத்தில்பாதுகாவலராக இராமரால்நியமிக்கப்பட்டவர்களாகக்கருதப்பட்டவர்கள் ‘சேதுபதிகள்’ எனஅழைக்கப்பட்டனர். இக்காரணங்கள்சமய அடிப்படையில் தோன்றியவை. ஆயின் ‘சேதுபதி’ என்பதற்குவரலாற்றுச் சான்றுகளின்அடிப்படையில் விளக்கம் காண்பதுசிறந்தது.

சேதுபதியும் சோழ மறவனும்

சேதுநாடு செம்பிநாடு, (பிள்ளைஅந்தாதி) ராசேந்திர மங்களநாடு, மங்கலநாடு (இராமய்யன்ராமம்மானை), எனக்குறிப்பிடப்பட்டுள்ளன. செம்பிநாடன்(60, 82) செம்பியர்கோன் (203), செம்பிநாட்டிறை (208), செம்பியர்தோன்றல் (218) என ஒருதுறைக்கோவை ரகுநாத சேதுபதியைக்கூறுகின்றது. இப்பெயர்களுள்செம்பியன்’ எனும் பெயரானதுசோழர்க்குரிய பெயராகும். சோழர்க்குரிய பெயர் எங்ஙனம்சேதுமறவருக்குவழங்கப்பட்டதென்பதற்குப் பலசான்றுகள் உள்ளன. இச்சேதுபதிகள்சோழன் மறவராவர். இது பற்றியேஇவரைச் செம்பிநாட்டு மறவர் எனவழங்குவர். செம்பியன்–சோழன்–பாண்டிய நாடு பாண்டிநாடுஆனதுபோலச் செம்பியன் நாடுசெம்பிநாடு என ஆகியதெனஇராகவையங்கார் குறிப்பிடுகின்றார். அக்குறிப்பு வருமாறு:

சோழர் தொடர்பின் சுவடுகள் மறவர்மண்ணில் தென்படக் காரணம் என்ன? இராசராசசோழன் கி.பி.1059இல்இலங்கைமீது படைஎடுத்தபோதுசென்ற பாதையில் பாதுகாப்பிற்காகஒருபடை நிறுத்தினான் எனவும்அப்படையின் தலைவனின்வழிவந்தோனே பின்னால் சேதுபதிஎனுஞ் சிறப்பினைப் பெற்றவன்.’ (மனோகரன்.மீ., கிழவன் சேதுபதி, 2012, ப.29)

இலங்கையும் பாண்டி மண்டலமும்

அதன் பின்னர்’12 ஆம் நூற்றாண்டில்இரண்டாம் இராசாதிராசசோழன்(கி.பி.1163-1178) காலத்தில் மதுரைஅரசுக்காக வாரிசுரிமைப்போர்தொடங்கியது. குலசேகரபாண்டியனுக்குச் சோழனும்பராக்கிரம பாண்டியனுக்குஇலங்கைப் பராக்கிரமபாகுவும்ஆதரவு தந்தனர். பராக்கிரமபாண்டியன் கொல்லப்பட்டதறிந்துஇலங்கைப் படை இராமேசுவரம்முதலிய ஊர்களைக்கைப்பற்றியது; பராக்கிரமபாண்டியன் மகன்வீரபாண்டியனை அரியணையில்அமர்த்தியது. ஆனால் கி.பி.1167இல்சோழர் படை குலசேகரபா்ணடியனுக்கு ஆதரவாகப்படையெடுத்து வந்து, மதுரையைக்கைப்பற்றி அவனிடம் அளித்தது. இந்தப் போர்கள் நிகழ்ந்த காலம்கி.பி.1167-லிருந்து 1175க்குள் ஆகும்(மனோகரன்.மீ., கிழவன் சேதுபதி, 2012, ப.29). இந்தக்காலக்கட்டத்தில்‘இலங்கைபராக்கிரமபாகு கி.பி.1173இல்இராமேசுவரம் கோவிலின்கருவறையைக் கட்டுவித்தான். இச்செய்தி இலங்கையில் தும்பலாஎனுமிடத்தில் உள்ள கல்வெட்டால்புலப்படுகிறது (மனோகரன்.மீ., கிழவன் சேதுபதி, 2012, ப.29).

மகாவம்சம் எனும் நூலின் மூலம்இலங்கைக்கும் தென்தமிழகத்திற்கும்உள்ள தொடர்பு மிகப் பழமையானதுஎன அறியமுடிகின்றது. ஏனெனில்இந்நூலின் காலம் கி.பி.459-477 ஆகும்.

இந்நாட்டிலிருந்து அங்கே குடியேறியஅரசன் விஜயா தனக்குப் ‘பட்டத்தரசிஇருந்தால்தான்’ முடிசூடிக் கொள்வேன்’ என்று நிபந்தனை விதிக்கஅமைச்சர்கள் பெண் தேடிப்புறப்பட்டனர். தென் இந்தியாவில்மதுரையை ஆண்டு கொண்டிருந்தபாண்டு(டி) மன்னனின் மகளை மணம்முடிக்க இசைவு பெற்றனர். பாண்டியன்மகள் தூதுவர் ஆக 800 பேர் உள்ளிட்டபரிவாரங்கள் கலங்களில்இலங்கைக்குப் பயணமாயினர். பாண்டியனின் செல்வி முதல்ஈழவேந்தனின் பட்டத்தரசி ஆனாள். கி.பி.944இல் முதற்பராந்தகச் சோழன்காலத்தில் இலங்கை மீது தொடங்கியசோழர் ஆதிக்கம் சில ஆண்டுகள்தொடர்ந்தும் சில ஆண்டுகள்விட்டுவிட்டும் 15 ஆம் நூற்றாண்டுவரை நீடித்தது.’ (மனோகரன்.மீ., கிழவன் சேதுபதி, 2012, ப.29)

இலங்கை நாட்டின் மீது சோழர்களின்ஆதிக்கம் ஏறக்குறைய 5 நூற்றாண்டுகள் வரை நீடித்திருந்தது. அதன் பின்னர்ச் சோழர்களது வலிமைகுறைந்தபோது அவர்களின் ஆதிக்கம்இலங்கைமீது விடப்பட்ட பின்சேதுபதிகளின் கவனம் இலங்கைமீதுதிசைதிரும்பியிருக்கலாம் எனவரலாற்று ஆய்வாளர்கள்குறிப்பிடுகின்றனர். கடல் அருகில்இலங்கை அமைந்திருப்பதால்மேற்கூறிய கருத்துச் சாத்தியமெனக்கருதலாம். இதற்குச் சான்றாகச்சென்னை மாநிலப் படைவீரர்வரலாற்றில் இன்றைய மறவரின்முன்னோர் இலங்கையின்பெரும்வாரியான நிலங்களைத்தனதாட்சிக்கீழ் வைத்திருந்தார்கள்எனக் குறிப்பிடுகிறது.

பாண்டிய நாட்டில் சோழ மறவர்குடியேறுதல்

கி.பி.1064இல் குலோத்துங்கச் சோழன்பாண்டிய நாட்டை ஆட்சி செய்தவீரபாண்டி என்பவரின்மீதுபோர்தொடுத்துப் பாண்டிநாட்டைத்தன்வசத்திற்குள் கொண்டு வந்த தன்தம்பியாகிய கங்கை கொண்டான்சோழர்களுக்குச் சுந்தர பாண்டியன்என்னும் பெயர் சூட்டி அப்பாண்டிநாட்டை ஆளும் அரசுரிமைகொடுத்தான். இதனால் பாண்டியநாட்டின் மீது போர் செய்யப் பெரும்உதவியாய் அமைந்த சோழன்மறவர்கள் பலர் இப்பாண்டி நாட்டிற்குக்குடியேறினார்கள். இச்சான்றைக்கால்டுவெல் திருநெல்வேலி வரலாறுஎனும் நூலில் இராகவையங்கார்எடுத்துக்காட்டியுள்ளார். அக்குறிப்புவருமாறு:

“குலோத்துங்க சோழனுக்குப் பின்னேசோணாடு பல வேற்றரசரால்படையெடுக்கப்பட்டுப் பிறர்பிறர்ஆட்சிக்குள்ளாகி அரசுரிமைமாறுபட்டதனானே, இம்மறவர் தம்படைத்தலைமை இழந்து தந்நாட்டேவேற்றரசர்கள்கீழ் ஒடுக்கதலினும்வேற்றுநாட்டிற் குடியேறி வாழ்தல்சிறந்ததாமென்று கருதிச் சோணாடுவிட்டுக் கடலோரமாகப் போந்து சேதுதிரித்துக்காடுகெடுத்து நாடாக்கித்தம்மரசு நிலையிட்டுஆட்சிபுரிந்தனராவரெனக்கொள்ளினுமமையும். இவர்ஆட்சியுட்படுத்த நாட்டிற்கும் இவர்பயின்ற செம்பநாட்டின் பெயரேபெயராக இட்டு வழங்கினர் போலும். இவர்களது சாசனங்களிற்பெரும்பாலும் “குலோத்துங்கசோழநல்லூர்க்கீழ்பால்விரையாதகண்டனிலிருக்கும் வங்கிகாதிபர்” என்னும் ஒரு விசேடனம்காணப்படுதலால் இவர்சோணாடுவிட்டு ஈண்டுப் போந்துகண்டதலைமைநகர் குலோத்துங்கசோழநல்லூர் என்பதாகுமெனஊகிக்கத்தக்கது.”(இராகவையங்கார்.இரா., தமிழகக்குறுநில வேந்தர்கள், 1994, ப.113)

மேற்சுட்டிய ‘கண்டன்’ என்பதுகுலோத்துங்க சோழனின் பெயராகும். அதனைத் தமிழ்நாவலர் சரிதத்தில்ஒட்டக்கூத்தர்

தொழுகின்ற மன்னர் சொரிந்திட்டசெம்பொன்றுணத் திணவன்

டுழுகின்ற தார்க்கண்ட னேறியஞான்று”

எனப் பாடியுள்ளதன்வழிக்காணமுடிகிறது. கண்டன் என்றபெயராலே கண்டனூர் முதலாகப் பலஊர்கள் இச்சேதுநாட்டில்வழங்கப்படுகின்றன. முந்தையஇராமநாதபுரம் மாவட்டம் எனக்கருதப்படும் சிவகங்கையில்கண்டனூர் எனும் ஊர் காரைக்குடிக்குவடகிழக்கில் பத்துக் கி.மீ.தொலைவில்உள்ளமை குறிப்பிடத்தக்கது. அப்பெயர்வழங்கப்பட்டமைக்கான காரணத்தைப்பழ.அண்ணாமலை குறிப்பிட்டுச்செல்கிறார்.

“பொன்னி ஆறு பாயும் சோழநாட்டைபுகார் நகரைத் தலைநகராகக்கொண்டு ‘கண்டன்’ என்னும் சோழன்ஆண்டு வந்தான். அவன்பெருவியாதியால் பீடிக்கப்பட்டு மனம்நொந்திருந்த வேளையில் அந்நாட்டுஅறவோர்கள் கூறிய ஆலோசனைப்படிதல யாத்திரை மேற்கொண்டான். அப்போது படையுடன் வீர வனத்தில்வந்து தங்கியிருந்தபோது, வேடுவன்அம்மன்னனைக் கண்டு தான்கண்டெடுத்த சிவலிங்கம் பற்றியும்அதன் பெருமை பற்றியும் கூறினான். மன்னன் அச்சிலையைக் காண்போம்என்று சொல்லி எழுந்ததும் காலில்இருந்த குட்டம் நீங்கிற்று. கைகுவித்துத் தொழுததும் கைக்குட்டம்நீங்கிற்று. சிவலிங்கத்தை மனதால்வணங்கியதுமே அவன் உடம்பில்இருந்த குட்டம் நீங்கிற்று. சோழன்கண்டன் ஊர் உண்டாக்கியதால் இது“கண்டனூர்” எனப் பெயர் பெற்றது(செட்டிநாட்டு ஊரும் பேரும், அண்ணாமலை.பழ., 1986, பக்.38, 39).

காரைக்குடி அருகில் உள்ளசாக்கோட்டை என வழங்கப்படும்வீரவனத்தில் வீரமரத்தின்அடியிலிருந்து கண்டெடுத்ததால்வீரவன நாதர் எனப் பெயர் பெற்றது. ‘அதற்குத் திருமுடித் தழும்பர்’ எனும்பெயரும் உண்டு. இச்செய்தியானது“வீரவனப் புராணத்தில் சோழன்முக்தியடைந்த படலம் மகாவித்வான்மீனாட்சிசுந்தரம் பிள்ளையால்எழுதப்பட்டது. அதனை,

அன்னவெம் கானம், முற்ற

அழித்துமா நகர்உண் டாக்கிப்

பன்னமும் குடிகள் ஏற்றிப்

பல்வளங் களும் பொருந்தித்

தன்னமும் குறைவுறாத

தன்பெயர் விளங்கும் ஆற்றாய்

கல்நவில் தடம்பு யத்தான்

கண்டனர் எனும்பேர் இட்டான்”

என வரும் 22ஆம் பாடல் விளக்குகிறது

திருப்பத்தூருக்கு வடமேற்கில் 6கி.மீ. தொலைவில் ‘கண்டவராயன்பட்டி’ எனும் ஊர் உள்ளது. இவ்வூரில் உள்ளபழ.கிரு.ஊருணியின் கரையில் உள்ளகல்வெட்டு ஒன்றில் “வராயன்” என்றவீரவம்சத்திற்கு அரசன் ஒருவரால்செப்புப்பட்டயம் கொடுக்கப்பட்டுள்ளசெய்தி தெரிகிறது. வராயன் என்றவீரன் ஒருவனை அரசன் ஒருவன்இங்குக் கண்டதாலேயே இவ்வூருக்குக்“கண்டவராயன்பட்டி” எனப் பெயர்வந்ததாகக் கூறுகின்றனர்”(செட்டிநாட்டு ஊரும் பேரும், அண்ணாமலை.பழ., 1986, பக்.38, 39).

அதனைப் போன்றேதிருப்பத்தூருக்குத் தெற்கே 15 கி.மீ. தொலைவில் கண்டரமாணிக்கம் எனும்ஊர் உள்ளது. இவ்வூரில் நகரத்தார்கள்குடியேறி ஊருக்குத் தேவையானதண்ணீருக்காக ஊருணிவெட்டும்போது அம்மன் சிலைஒன்றைக் கண்டனர். பின்னர் அம்மன்சிலைக்கு “மாணிக்கவல்லி அம்மன்”எனப் பெயரிட்டு மாணிக்கத்தைக்கண்டதால் கண்டமாணிக்கம் எனஆகியது. காலப்போக்கில்கண்டரமாணிக்கம் எனத் தற்போதுஅழைக்கப்படுகிறது.

திருவாரூர் மாவட்டம் குடவாசல்அருகில் கண்டிரமாணிக்கம் எனும் ஊர்தற்போது உள்ளது. சோழர்கள்இப்பகுதியினை ஆட்சி செய்ததால்இப்பெயர் வந்தது என யாவரும்அறிந்ததே. தற்போதையஇராமநாதபுரம் மாவட்டத்தின்சத்திரக்குடியிலிருந்து வளநாட்டுக்குச்செல்லும் வழியில் கண்டரமாணிக்கம்எனும் ஊர் உள்ளமையும்குறிப்பிடத்தக்கது.

சேதுபதிகளின் தலைநகராகவிளங்கிய முகவைக்கு ஒரு காததூரத்தில் வையைக் கரையில் கங்கைகொண்டான் எனும் பெயரில் ஓர்உள்ளது என்பதையும் சேதுநாட்டுவீரபாண்டி, விக்கிரமாண்டி, வீரசோழன், சோழபுரம் எனும் பெயரில்சில ஊர்கள் உள்ளன. பரமக்குடிஅருகில் விக்கிரபாண்டிபுரமும்முதுகுளத்தூர் அருகில் வீரசோழன்எனும் பெயரில் சோழர்களதுபெயரினைத் தாங்கி நிற்கின்றதுஎனலாம். கண்டநாடு, கொண்டநாடு, கொடாதான் என்னும் பெயர்பெற்றுக்குலோத்துங்க சேதுபதி என்னும்பெயரால் விளங்கின. குலோத்துங்கச்சோழன் சாசனங்களில் “அகளங்கன்”என்ற சொல் உள்ளது. இச்சொல்லிற்குஅமிர்தகவிராயர் அபயரகுநாதசேதுபதி (208) செம்பியன், அநபாயன்ரகுநாதன் (242) புனற்செம்பியான், சென்னிக்குஞ் சென்னி என்னும்இரகுநாதன் (219) எனக்குறிப்பிடுகின்றார்.

சோழன் மறவர்க்குப் பண்ணன்என்னும் பெயர் உண்டு. காவிரிவடகரையில் உள்ள அவன் ஊராகியசிறுகுடியின் பெயர் வழக்கும் இவர்குடியேறிய நாட்டில் தற்போதும்காணலாகின்றது. விரையாதகண்டனென்பது சேதுநாட்டுஇராஜசிங்க மங்களம் (Rsமங்கலம்) பகுதியிலுள்ளது. இப்பகுதியில்பண்ணக்கோட்டை, சிறுகுடி எனவழங்கும் ஊர்கள் தற்போதும் உள்ளன.

சோழகுலத்தினரைத்தொண்டியோர்’எனவும் அழைப்பர். சான்றாக ‘வங்க வீட்டித்துத்தொண்டியோர்’ – (சிலம்பு.ஊர்காண்) “தொண்டியந்துறை காவலோன்” எனும்ஒரு பட்டம் வழங்கப்பட்டுள்ளது.

இராமநாதபுரம் மாவட்டம் முழுமையும்பாண்டிய நாட்டின் பகுதியாகவிளங்கிய பொழுதிலும் ஏறக்குறையமுந்நூறு ஆண்டுகள் சோழப் பேரரசின்ஆட்சிக்கு அடங்கிய நாடாகக் கி.பி.919 முதல் இருந்து வந்ததை வரலாறுவர்ணித்துள்ளது (எல்.எம்.கமால், இராமநாதபுரம் மாவட்டம், ப.8). இக்காலக்கட்டத்தில் இராமநாதபுரம்மாவட்டத்தின் வடபகுதி ராஜராஜப்பாண்டியநாடு ராஜேந்திரசோழவளநாடு எனவும் தென்பகுதிசெம்பிநாடு எனவும்வழங்கப்பட்டுள்ளது. இதனைஉறுதிப்படுத்தும் வாயிலாகஅருப்புக்கோட்டைப் பள்ளிமடம்கல்வெட்டில் நிர்வாகத்தைச் சோழஇளவல்கள் “சோழ பாண்டியர்” என்றபட்டத்தைச் சுமந்து இயங்கி வந்தனர். இவர்களிடம் சிறப்பு மிக்கவர்கள்சோழகங்கதேவன், சோழகங்கன்”ஆவார் என வெளிப்படுகிறது. ராஜராஜசோழனது கல்வெட்டுகள்எதிர்கோட்டையிலும் (கி.பி.1007) திருச்சுழியிலும் (கி.பி.997) திருப்பத்தூரிலும் (கி.பி.1013) உள்ளன.

“சோழப் பேரரசின் பெருமைக்குரியஇன்னொரு பேரனான மூன்றாம்குலோத்துங்க சோழ தேவனது 35-வதுஆட்சி ஆண்டுக் கல்வெட்டுபிரான்மலையிலும் 22, 40, 48, 49வதுஆட்சியாண்டுக் கல்வெட்டுகள்குன்றக்குடியிலும் 44வதுஆட்சியாண்டுக் கல்வெட்டுபெருங்கருணையிலும் 48-வதுஆட்சியாண்டுக் கல்வெட்டுகோவிலாங்குளத்திலும்கிடைத்துள்ளன. இராமநாதபுரம்மாவட்டம் பெரிய பட்டினம் கிராமத்தில்நிகழ்த்திய அகழ்வுகளில் “ராஜராஜசோழன்”, “சுங்கம் தவிர்த்த சோழன்”ஆகியவர்களது செப்புக்காசுகள்கிடைத்துள்ளன. இவை இந்தமாவட்டத்தில் சோழர்களது வலுவானஆட்சி நடைபெற்றதற்கு வரலாற்றுச்சான்றுகளாக உள்ளன. கி.பி.1218க்குள்குலோத்துங்க சோழனது வீழ்ச்சி, பாண்டியர்களது இரண்டாவதுபேரரசின் எழுச்சியைக் காட்டியது. பாண்டியநாடு பழம் பெருமையைஎய்தியதுடன் பாண்டிய நாட்டின்எல்லைகள் வடக்கே சோழநாட்டையும்மேற்கே வேளு நாட்டையும்உள்ளடக்கியதாக விரிந்தன.”(எஸ்.எம்.கமால், நா.முகம்மது செரீபு, இராமநாதபுரம் மாவட்டம் வரலாற்றுக்குறிப்புகள், 1984, ப.9)

சோழர்கால ஆட்சியில் எழுந்தஊர்கள்

சேதுநாட்டில் பல இடங்களில் / பலஊர்களில் சோழர்கள் பெயர்கள்இன்றும் வழக்கில் இருந்துவருகின்றன. அதனைப் பின்வரும்பட்டியல் உணர்த்தும்.

வ.எண் ஊர்ப் பெயர்கள் வட்டம்
1. சோழவந்தான் சிவகங்கை
2. சோழந்தூர் திருவாடனை
3. சோழபுரம் இராஜபாளையம், சிவகங்கை
4. சோழன்குளம் மானாமதுரை, இராமேஸ்வரம்
5. சோழமுடி சிவகங்கை
6. சோழக்கோட்டை சிவகங்கை
7. சோழப்பெரியான் திருவாடனை
8. சோழியக்குடி திருவாடனை
9. சோழகன்பட்டி திருப்பத்தூர்

சோழர்கள் வெற்றிபெற்ற பெயர்கள்தாங்கிய ஊர்ப்பெயர்கள் குறித்தபட்டியல் வருமாறு:

வ.எண் ஊர் வட்டம்
1. கங்கை கொண்டான் பரமக்குடி
2. கிடாரம் கொண்டான் இராமநாதபுரம்
3. வீரசோழன் அருப்புக்கோட்டை
4. கோதண்டராமன் பட்டனம் முதுகுளத்தூர்
5. செம்பியக்குடி பரமக்குடி, முதுகுளத்தூர், திருவாடனை

மேற்கண்ட பட்டியல்களை நோக்குகையில் சேதுநாட்டில் சோழர்களது ஆட்சி நிலைபெற்று இருந்ததையும் இவர்கள் இட்டுச் சென்ற பெயர்கள் சான்றுகளாகக் காணக் கிடைக்கின்றமையையும் அறியமுடிகின்றது.

பெயருக்குமுன் ‘முத்து’ என்ற சொல்லைப் புகுத்தல்

குலோத்துங்க சேதுபதியின் மகன் சமரகோலாகல சேதுபதி வீரத்தின் அடையாளமாக இவர் சோழர்களிடம் மன்னர் வளைகுடா கடலில் முத்துக்குளிக்கும் உரிமையைத் தனது வீரத்திற்குப் பரிசாகப் பெற்றார். இப்பரிசு பெற்றதின் விளைவாகத் தமது கடல் வளமுடையதாக மேம்படுத்திச் சிறந்து விளங்கினார். இவ்வாறு சிறந்து விளங்கியமையால் தம் பெயருக்கு முன் ‘முத்து’ என்னும் சொல்லினை இணைத்துக் கொண்டார். ஆக முத்து எனும் சொல் இவ்வாறே இணைக்கபட்டதென அறியமுடிகிறது.

முத்து விஜயரகுநாதன் என்பது இவருக்குச் சிறந்த (அரசர் முதலியோர் பெறும் பட்டவரிசை) பெயராகும். இவரது சாசனங்களிற் ‘சொரிமுத்து வன்னியன்’ என ஓர் விருதாகாவளி காணப்படுவதும் இவரது கடற்படுமுத்தின் பெருக்கத்தினையே குறிப்பதாகும்.

வணங்காத தெவ்வைப் பெருமால் சொரிமுத்து வன்னியன்

னணங்காரு மார்பன் ரகுநாதன்

என ஒருதுறைக் கோவையில் வருதல் காண்க.

வன்னியர்

இன்றைய தமிழகத்தில் வன்னியர் என்பது ஒரு சாதியின் பெயராக அழைக்கப்படுகிறது. ஆனால் “வன்னியர்” என்பதும் அரசர் படைத்தலைவர்க்கு வழங்கப்பட்ட பெயர் (த.கு.வே., ப.120). இதனைக்

கருமுகிற் கணிநிறத் தழற்கட் பிறையெயிற்

றரிதரு குட்டி யாயபன் னிரண்டினைச்

செங்கோன் முளையிட் டருணீர் தேக்கிக்

கொலைகள வென்னும் படர்களை கோலித்

தருமப் பெரும்பயி ருலகுபெற விளைக்கு

நாற்படை வன்னிராக்கிய பெருமாமன்

எனும் அடிகளின் மூலம் அறியலாம்.

பெயருக்குப் பின் தேவர் எனும் சொல் உருவாதல்

சேதுநாட்டு மறவர் “தேவர்” எனச் சிறப்புப்பெயர் புனைதலும் அச்சோழர்பாற் பயின்றமையைக் குறிக்கின்றது. குலோத்துங்கச்சோழத்தேவன், திரிபுவனத் தேவன், ராஜராஜசோழத்தேவன், ராஜேந்திர சோழத்தேவன் எனச் சோழர் சாசனங்களில் வழங்கப்படுகின்றன.

திரிபுவனதேவன் என்பது வெண்பாமாலை உரையினும் கண்டது. தேவருருவாய் நின்று உலகங்காத்தலின் அரசனைத் தேவன் என்பர் என உணர்க. இவையெல்லாம் இம்மறவர்க்கும் சோழர்க்கும் உள்ள பண்டைய உறவினை வலியுறுத்துவனவாம்.’ (இராகவையங்கார்.இரா., தமிழகக் குறுநில வேந்தர்கள், 1994, ப.120).

புறப்பொருள் வெண்பாமாலை இயற்றிய ஐயனாரிதனார் “மூவர் விழுப்புகழ் முல்லைத் தார்ச் செம்பியன்” (பாடாண் படலம், 34) எனும் அடியினைக் கூறியுள்ளார். இம்மறவர் புனைகின்ற முல்லை மாலை சோழர்க்குரிதாகுமென மேற்கூறிய பாடல் மூலம் அறியலாம். அதுபோல் அரசர்க்குப் போர்ப்பூ எனவும் தார்ப்பூ எனவும் இரண்டு உண்டு. அதனைப் ‘படையுங் கொடியும்’ (மரபியல்.81) என்பதன் மூலம் விளக்கப்பெறலாம்.

வளரி

வளரி, வளைதடி என்ற பெயரால் தமிழகத்தில் வழங்கப்பட்ட ஆயுதமே பூமராங் என்பதாகும். பூமாராங் எனும் ஆயுதமானது கையால் வீசியெறியக்கூடிய வகையில் வளைந்த வடிவத்துடன் காணப்படும். இவ்வளரியானது ஏறக்குறைய பிறை வடிவமாக இருக்கும். ஒரு முனை மிகவும் கனமாகவும் மறுமுனை கூர்மையாகவும் இருக்கும். இதனை மரம், இரும்பு, யானைத்தந்தம் போன்றவற்றால் செய்து பயன்படுத்தி வந்துள்ளனர். மரத்தால் செய்த வளரி வேட்டையாடுதலுக்கும் இரும்பால் செய்த வளரிப் போர் புரிவதற்கும் பயன்படுத்தப்பட்டுள்ளன.

கையாளும் முறை

நன்கு பயிற்சி பெற்றவர்கள் இதன் கனமற்ற நுனியைக் கையில் பிடித்துக் கொண்டு தோளுக்கு மேலே பலமுறை வேகமாகச் சுழற்றி விரைவாக இலக்கினை நோக்கி எறிந்திட அது இலக்கினைத் தாக்கிவிட்டு எறிந்தவரிடமே திரும்பவும் வந்து சேரும். இதனை வீசி எறிபவர் மிகுந்த கவனத்துடனும் நுட்பத்துடனும் எறிந்து எதிரியைத் தாக்க வேண்டும். எதிரியைத் தாக்கிவிட்டு வீசி எறிந்தவரிடமே வந்து சேரக்கூடிய அற்புதமான ஆயுதம் இதுவாகும். திரும்ப வரும்பொழுது கவனமாகக் கையில் பிடித்துக் கொள்ள வேண்டும். இல்லையெனில் வீசியெறிந்தவரைத் தாக்கும் வாய்ப்பு உள்ளது.” (தமிழாய்வுக் கட்டுரைகள் (தொகுதி I) ப.31).

இலக்கியங்களில் வளரி

மகாபாரதப் போரில் கிருஷ்ணன் பயன்படுத்திய சுதர்சனச் சக்கரம் தமிழர்களிடையே வழங்கி வந்த வளரி என்னும் ஆயுதமாகும் (மணிமாறன், தமிழ் ஆய்வுக் கட்டுரைகள் தொகுதி I, 2016, ப.31).

இது சுதர்சனம் என்னும் சக்கராயுதம் குறித்துச் சங்க நூலான கலித்தொகை சுட்டுகிறது. இது திருமாலின் ஆயுதமாகக் கூறப்பட்டுள்ளது.

மல்லரைமறம் சாய்த்த மலர்த்தண்தார் அகலத்தோன்

ஒல்லாதார் உடன்றுஓட உருத்துஉடன் எறிதலின்

கொல்யானை அணிநுதல் அழுந்திய ஆழிபோல்

கல்சேர்பு ஞாயிறு கதிர்வாங்கி மறைதலின் (134:1-4)

எனும் அடிகள் மூலம் அறியமுடிகிறது.

களித்த வீரர் விரட்ட நேமி

கண்டு வீசு தண்டிடைக்

குளித்த போழ்து கைப்பிடித்த

கூர்மழுக்கள் ஒக்குமே (கலிங்கத்துப்பரணி:418)

எனும் அடிகளானவை போரில் மகிழ்ச்சி கொண்ட வீரர்கள் சக்கரப்படையை விடுத்தனர். எதிர்த்துப் போர் புரியும் மற்ற வீரர்கள் அவற்றின்மேல் தண்டாயுதத்தை மோத அடித்தனர். தண்டாயுதத்தில் பதிந்த சக்கரப்படை கூர்மையான மழுவாயுதம் போன்று இருந்ததாகக் கலிங்கத்துப்பரணி வளரி பற்றிக் குறிப்பிடுகின்றது.

எரிகோல் அஞ்சா அரவின் அன்ன (புறம்.89-5)

எனும் அடியில் உள்ள எரிகோல் என்பது இங்கே வளரியைச் சுட்டுகின்றது. இவ்வளரியானது வேட்டைக் கருவியாகவும் பிறரைத் தாக்கும் கருவியாகவும் சங்க காலத்தில் பயன்படுத்தி வந்துள்ளனர் என்பதை மேற்கூறிய பாடலடி மூலம் அறிய முடிகிறது.

மாலை வெண்காழ் காவலர் வீச

நறும்பூம் புறவின் ஒடுங்குமுயல் இரியும் (ஐங்குறு.421:1-2)

எனும் ஐங்குறுநூற்று (விரவுபத்து) அடிகளில் வெண்காழென்றது மாலைக்காலத்து முயலெறியும் தடியை என்னும் வளரியாகிய வளைதடியாகும். இவ்வடியில் ‘காவலர்’ எனும் சொல்லினை ஆராய்ந்து நோக்குகையில் காவலர் என்பார் ஊர்க்காவலை மேற்கொண்டவராவார். இம்மக்கள் ஊர்க்காவலராக இருந்த வழக்கம் ஆங்கிலேயர் இங்கு ஆட்சி செய்ய வருவதற்கு முன்னர் வரை தென்தமிழகத்தில் தொன்றுதொட்டு இருந்து வந்ததைத் தர்ஸ்டன் எனும் ஆய்வறிஞர் குறிப்பிட்டுள்ளதாக மணிமாறன் (தமிழ் ஆய்வுக் கட்டுரைகள், தொகுதி – IV), பக்.37-38) குறிப்பிடுகின்றார்.

வளரி என்பது குறுங்கோல் வளைதடி என்பதைக்

குறுங்கோ லெறிந்த நெடுஞ்செவிக் குறுமுயல் (புறம்.339:4)

எனும் அடி குறிப்பிடுகின்றது.

நைடதம் எனும் நூலில் வளரியைக் ‘குணில்’ எனக் குறிப்பிடுகின்றது. இதனைக்

கொடுங் குணில் பொருத வெற்றிப்

போர்ப்பறை குளிற வெம்போர்க்

கடுந்திறல் வயவர் வில்நாண்

புடைப்பொலி கடலின் ஆர்ப்பது’ (நைடதம்.729)

எனும் அடிகளில் காணமுடிகின்றது. குணில் என்பதற்கு வளைந்த குறுந்தடியால் ஆக்கப்பெற்ற வெற்றியைக் கொடுக்கின்ற போர் முரசு ஒலிக்க என்பதாகும் என்றும் போர்க்களத்தில் நிறைய பேர் இறக்கும்படிச் செய்யும் போர்ப்பறையை அப்பதனால் குணில் என்னாது கொடுங்குணில் என்றார் எனவும் தமிழ் ஆய்வுக்கட்டுரைகள் (தொகுதி I) எனும் நூலில் மணிமாறன் குறிப்பிடுகின்றார்.

இராசராச சேதுபதி ஒருதுறைக் கோவையில் வளரி பற்றிய செய்தி குறிப்பிட்டுள்ளது. அதனை

வரகிலையின் பொலுங் கோட்டின் வளரி வரைந்துலகை

முரசிலை யாக்கிய சீராச ராசன் முகில் வரையீர் (160)

எனும் அடிகள் மூலம் காணமுடிகிறது

சேதுபதியும் வளரியும்

“இதனை ஆளுதலிலிவர் மிகக் கைதேர்ந்தவராவர். கருதிய குறியினைத் தப்பாமலெறிதலும் எறிந்த வளரியை மீண்டும் தங்கைக்கு எய்துவித்தலும் இவர்க்கே சிறந்த பெருஞ்செயல்களாயிருந்தன என்ப” (தமிழக குறுநிலவேந்தர், ப.121)

எனத் தளசிங்க மாலையில் சேதுபதிகள் முற்காலத்து எட்டன் எனப் பெயர் கொண்ட ஒருவனோடு போர் புரிந்து அவன் தலையையே தம் வீரக்கழலில் அணிந்து கொண்டனர் எனும் செய்தியைக் கூறுகின்றது. இதனைச்

சிலையா மெழுத்துஞ் சகாயமுங் கீர்த்தியுஞ் செந்தமிழு

நிலையாகு மன்னச்சொல் வார்த்தையு மென்றைக்கு நிற்குங் கண்டாய்

கலையாருங் கானில்வன் கல்லைப்பொன் னாக்கிய காலிலெட்டன்

றலையார் விசய ரகுநாத சேது தளசிங்கமே

எனும் அடிகள் பாடிய மிதிலைப்பட்டிச் சிற்றம்பலக் கவிராயர் மூலம் அறியமுடிகின்றது.

“சேதுபதிகளது வடிவமைத்த பண்டைக் கல்லுருவங்களிலெல்லாம் இடையிற் சுற்றிய வீரக்கச்சையில், இவ்வளரியே செருகப்பட்டுள்ளது. இன்றைக்கும் காணலாம். இதுவே இவர்க்குரிய பேரடையாளமாவது. இவரது வீரக்கழல் சேமத்தலை எனப் பெயர் சிறக்கும். இது தம்மால் வெல்லப்பட்ட பகைவனது தலையே தமக்குச் சிறந்த தாளணியாக்கிக் கொண்டு விளங்கியமை குறிப்பதாகும்” (இராகவையங்கார்.இரா., தமிழகக் குறுநில வேந்தர்கள், 1994, ப.121)

தற்காலத்தில்

பாண்டி நாட்டினர் ஆங்கிலேயருக்கு எதிரான போரில் வளரியைப் பயன்படுத்தியதாக எட்கர் தர்ஸ்டன் பதிவு செய்துள்ளார். “மருதுபாண்டியர்கள் கி.பி.1780 ஆம் ஆண்டில் நவாப் படைகளையும் கி.பி.1801இல் ஆங்கிலேயப் படைகளையும் எதிர்த்துப் போரிட்டபோது வளரியைப் பயன்படுத்திய குறிப்பு காணப்பெறுகின்றது. இவ்வளரியைக் கண்டு ஆங்கிலேயர்கள் மிகவும் அஞ்சினார்கள் என்றும் இதனாலேயே போர் முடிந்ததும் கர்னல் அக்னியு சிவகங்கைப் பகுதியில் பத்தாயிரம் வளரிகளைக் கைப்பற்றியதாகவும் சென்னைப்படை வரலாறு தெரிவிக்கின்றது (தமிழக ஆய்வுக் கட்டுரைகள், தொகுதி I), ப.40). ஆங்கிலேயத் தளபதி கர்னல் வெல்த் என்பவர் (1795இல்) சிவகங்கையை ஆட்சி செய்த சின்னமருதுவிடம் வளரி வீசும் பயிற்சியினைக் கற்றுக்கொண்டதாகக் குறிப்பிட்டுள்ளார். அதேபோல் பெரிய மருது, ஆங்கிலேயரை எதிர்த்து நின்று வளரியைக் கையாளுவதில் திறம்படைத்தவராகத் திகழ்ந்துள்ளார் எனும் செய்தியை அறியமுடிகிறது. ஆங்கிலப் படைகள் தன்னைச் சுற்றிய நிலையில் வளரியை எடுத்துப் போர் செய்ய முயலும்போது பக்கவாத நோயின் விளைவால் மருதுவால் வளரியைப் பயன்படுத்த முடியவில்லை. அச்சூழலில் ஆங்கிலேயத் தளபதியைப் பார்த்து

மன்னவனே யிற்றென்முன் வந்ததுபோல்

ஒருமாதத் துக்குமுன் வந்தாயானால்

என்னைப் பிடிக்க உன்னால் ஆகாது

மேலும் வளரியால் தலைதுணித் திடுவேன்

எனும் அடிகளைப் பாடுகின்றார்.

“மருது சகோதரர்கள் காலம் வரையில் வளரி என்ற ஆயுதத்தைப் பாண்டிய நாட்டில் முக்குலத்தோர் எனப்படும் மக்களிடையே பழக்கத்தில் இருந்து வந்துள்ளது என்பதை Stone Age in India, எனது இராணுவ நினைவுகள் எனும் இரண்டு நூல்களை மேற்கோளாகக் கொண்டு ச.அருணாச்சலம் எழுதியுள்ளார்” (தமிழக ஆய்வுக் கட்டுரைகள், தொகுதி I, ப.36)

என மணிமாறன் குறிப்பிடுகின்றார்.

வளரிக்குத் தடை

இருபதாம் நூற்றாண்டு வரை வளரி பயன்படுத்தியுள்ளனர் என்பதைக் கீழ்க்காணும் விளக்கத்தின் மூலம் அறிய முடிகின்றது. கி.பி.1915 இல் மதுரை மாவட்டத்தில் கொண்டு வரப்பெற்ற குற்றச்சட்டத்தை எதிர்த்துப் பிறமலைக் கள்ளர் சமுதாயம் கி.பி.1921-இல் கிளர்ந்தெழ உசிலம்பட்டி வட்டம் பெருங்காம நல்லூரில் பெருங்கிளர்ச்சி வெடித்தது. அப்போது நடந்த துப்பாக்கிச் சூட்டில் பலர் இறந்தனர். இக்கிளர்ச்சியின்போது இம்மக்கள் பயன்படுத்திய ஆயுதங்களில் வளரியும் ஒன்றாகும். இதன் காரணமாக இவ்வாயுதத்தைப் பயன்படுத்த ஆங்கில அரசு தடை விதித்தது.வீடுகளில் வளரி வைத்திருந்தால் அவர்களைக் குற்றவியல் தண்டனைக்கு உட்படுத்தினர். எனவே இதனை வழிபாட்டிற்குரிய பொருள்களுள் ஒன்றாகக் கோயில்களில் வைத்துப் பாதுகாத்தனர் (தமிழ் ஆய்வுக் கட்டுரைகள் தொகுதி I, மணிமாறன், 2016, ப.41).

வளரி பிரசாதமும் குலமரபின் ஆயுதமும்

முற்காலத்தில் போர்புரியும் வீரர்கள் தம் கொண்டையில் வளரியைச் சொருகி வைத்திருப்பர். போர் மூளும்போது கொண்டையிலிருந்து உருவி வளரியின் மூலம் எதிரிகளைப் போரிட்டு வீழ்த்துவர். இத்தகுச் சிறப்புமிகு வளரியினைத் தற்போதும் சில முக்குலத்து இன மக்களின் பழைய குடும்பங்களில் காணலாம்.பூசைக்குரிய பொருளாக வளரியைப் பயன்படுத்துகின்றனர். வளைதடியை அனுப்பிப் பெண்ணைக் கொண்டு வரும் வழக்கமும் இவர்களிடையே இருந்துள்ளது என்றும் திருமணத்திற்கு முன் வளைதடியை இருவீட்டாரும் மாற்றிக் கொள்வதும் உண்டு. இதனாலேயே மறவர் கொடுப்பது வளரிப் பிரசாதம் என்ற பழமொழி ஏற்பட்டதென மணிமாறன் குறிப்பிடுகின்றார்.“விஜய சேதுபதி (கி.பி.1710-1725) தனது மகள் அகிலாண்டேஸ்வரியைச் சிவகங்கைக்கு மணமுடித்து அனுப்பி வைத்தபோது சீர்களில் ஒன்றாகத் தம் குலமரபு ஆயுதமான வளரியையும் அனுப்பி வைத்ததாகக் கல்வெட்டு இதழில் குறிப்பிடப்பட்டுள்ளது (தமிழக ஆய்வுக் கட்டுரைகள், தொகுதி II, ப.43).

இப்படிப்பட்ட வளரியைப் பூமராங் எனும் பெயரில் ஆஸ்திரேலியப் பழங்குடி மக்களான அபோர்ஜினியர்கள் பயன்படுத்தி வருவதாகச் செய்திகள் கூறுகின்றன. ஆனால் அதற்கு முன்பாகவே தமிழனால் கண்டறியப்பட்டது என்பதே நிதர்சன உண்மையாகும். திருநெல்வேலி மாவட்டம் ஆதிச்சநல்லூரில் அகழ்வாய்வின் மூலம் இரண்டு மண்டை ஓடுகள் கண்டெடுக்கப்பட்டன. அவ்விரண்டு மண்டை ஓடுகளை ஆராய்ந்த அறிஞர்கள் திராவிடரும் அபோர்ஜினியரும் சேர்ந்து வாழ்ந்துள்ளனர் என்ற முடிவினைக் கருதியுள்ளனர். மேலும் இங்குக் கண்டெடுத்த மண்டை ஓடுகளில் ஒன்று திராவிடருக்கும் மற்றொன்று ஆஸ்திரேலியப் பழங்குடிகளின் முன்னோருக்கும் உரியது என ஜி.எலியட் ஸ்மித் கூறியுள்ளார்.

இவ்வாறு சிறப்புமிக்க ஆயுதமான வளரி தற்போதும் பாதுகாப்பாகவும் கண்காட்சியாகவும் வைத்துப் பராமரிக்கப்பட்டு வருகின்றது. இராமநாதபுரம் ராமவிலாசத்தில் தொல்லறிவியல் துறையினரால் பாதுகாக்கப்பட்டு வருகின்றது. புதுக்கோட்டை திருக்கோகர்ணத்தில் உள்ள அருங்காட்சியகத்திலும் இவ்வளரி பாதுகாக்கப்பட்டு வருகின்றது.

சோழரால் பிரிக்கப்பட்ட நாடுகள்

முந்தைய காலச் சேதுநாடு என்பதுஇராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை போன்றவையே. இம்மூன்று சமஸ்தானங்களும்ஒருங்கே இணைந்தாகும் கிழவன்சேதிபதி காலத்துப் புதுக்கோட்டைகி.பி.1673-1708 பவானி சங்க சேதுபதிகாலத்துச் சிவகங்கை கி.பி.1724-1728 ஆகிய ஆண்டுகளில் நாட்டிற்குச்சேதுபதிகளே தனித்தலைவராய்ச்செங்கோல் செலுத்தினார்கள் எனவரலாறு சுடடுகின்றது.

“சோழரால் நாடாட்சி பிரித்தளிக்கப்பட்டதிரையரெல்லாம் தொண்டைமான்கள்எனப் பெயர் கொண்டாற் போலஇச்சேதுபதிகளால் நாடாட்சிபிரித்தளிக்கப்பட்டவராகியபுதுக்கோட்டையுடையாரும்தொண்டைமான் என்னும்பட்டத்தினைப் புனைந்துவிளங்குதலுங் கண்டு கொள்க. பண்டைக் காலத்துச் சேதுநாடு என்பனஇராமநாதபரம், சிவகங்கை, புதுக்கோட்டை இம்மூன்றும்ஸமஸ்தானங்களும் ஒருங்குசேர்ந்ததாகும்”(இராகவையங்கார்.இரா., தமிழகக்குறுநில வேந்தர்கள், 1994, ப.122).

சேதுபதிகளே வடநாட்டில் உள்ளர்களை அழைத்துப் புண்ணியஸ்தலமாகக் கருதப்படும்இராமேஸ்வரம் கோவில் கடவுளுக்குவருவழித் தொண்டராய் சிறக்கச்செய்தனர். ‘ராமநாதசுவாமி ஸகாயம்’ என்பதே பண்டைக்காலச்சேதுபதிகளின் கையொப்பமாகும்.

சூரியர் போற்றுமிராமேசர் தாளிணைக்கன்புவைத்த

சூரியன் வீரையர் கோன்ரகு நாதன்’

எனவும் அமிர்தகவிராயர் அடிகளின்மூலம் விளங்கப்பெறலாமெனராகவையங்கார் சுட்டுகின்றார். மேலும்சான்றுக்கு வலுசேர்க்கும் வகையில்இவர்களின் சாசனங்களில் ‘ஆரியர்மானங்காத்தான்’ என ஒரு விருதுவழங்குவதும் இவர் ஆரியரைப்போற்றி வந்தமையைக் குறிக்கின்றது.

சோழர்களில் தலைநகராக்கிய ஊர்கள்

சேதுபதிகள் இராமநாதபுரத்தைத்தமக்குரிய தலைநகரமாக மாற்றிக்கொள்வதற்கு முன் சோழர்கள்சேதுநாட்டின் பல ஊர்களைத்தமதாக்கிக் கொண்டனர். அவ்வாறுதலைநகராக்கிய ஊர்களின்பெயர்களைக் கீழே காணலாம்.

வ.எண் ஊர்ப்பெயர் சான்று
1. குலோத்துங்கசோழன்நல்லூர் கல்வெட்டு
2. விரையாதகண்டன் கல்வெட்டு
3. செம்பி ஒருதுறைக்கோவை
4. கரந்தை ஒருதுறைக்கோவை
5. வீரை ஒருதுறைக்கோவை
6. தேவை(இராமேஸ்வரம்) ஒருதுறைக்கோவை
7. மணவை ஒருதுறைக்கோவை
8. மழவை ஒருதுறைக்கோவை
9. புகலூர் ஒருதுறைக்கோவை
சோழர்களால் சுட்டப்பட்ட ஊர்ப்பெயர்களில் அரசாண்ட பழைய சேதுபதிகளின் பெயர்கள் முறையே வரிசையாகத் தற்போது கிடைக்கவில்லை. இருப்பினும் “சேதுபதிகள் வரலாறு குறித்துள்ள பழைய கையெழுத்துப் பிரதி யொன்றாற் சில பெயர்கள் அறியலாவன. அப்பெயர்கள் வருமாறு:

ஆதிரகுநாத சேதுபதி
ஜயதுங்கரகுநாத சேதுபதி
அதிவீரரகுநாத சேதுபதி
வரகுணரகுநாத சேதுபதி
குலோத்துங்க சேதுபதி
சமரகோலாகல சேதுபதி
மார்த்தாண்ட பைரவ சேதுபதி
சுந்தரபாண்டிய சேதுபதி
காங்கேயரகுநாத சேதுபதி
விஜயமுத்துராமலிங்க சேதுபதி
இவர்கள் சேதுநாட்டிலுள்ள சில பழைய கோவில்களைக் கட்டுவித்தனர் எனவும் அவற்றிற்குச் சில கிராமங்கள் அளித்தனர்” (தமிழகக் குறுநில வேந்தர்கள், ப.123). ஆனால் இதற்கான முழுமையான சான்றுகள் கிடைக்கப்பெறவில்லை. இவருக்குப் பின் நாடாண்ட இருபத்து மூன்று சேதுபதிகளின் (1604-1903) வரலாறு கிடைத்துள்ளது. Mr.Nelson’s Madura country மகா ஸ்ரீஸ்ரீ.பி.ராஜாராமராகவன் Ramnad manual, Mr.Sewell துரையவர்களுடைய List of Autiquities madras vol-II ஆகியோரின் நூல்களில் மேற்கூறிய இருபத்து மூன்று சேதுபதி மன்னர்களின் ஆண்டுகள் குறிப்புடன் (ஏறக்குறைய 3 நூற்றாண்டுகள்) கொடுத்துள்ளனர்.

இலக்கியங்களில் சேதுவும் சேதுநாடும் குறித்த பதிவுகள்

தமிழரின் பண்பாட்டுக் களஞ்சியமெனப் போற்றப்படும் சங்க இலக்கியம் பல புலவர் பெருமக்களால் பாடப்பட்டுள்ளன. ஒருங்கிணைந்த இராமநாதபுரம் மாவட்டம் எனும் முறையில் சங்க இலக்கியத்தில் சேதுநாட்டைப் பற்றிப் பாடிய புலவர்கள் கணிசமாக உள்ளனர். சேதுநாட்டையோ அம்மன்னனையோ பாடிய புலவர்களின் பாடல்களை ஆராய்ந்து அவை இருவகையில் பிரிக்கப்பட்டுள்ளன. 1.சேதுநாட்டில் பிறந்த புலவர்கள் 2.சேதுநாட்டில் பிறவாது பிற ஊர்களில் பிறந்து சேதுநாட்டு மன்னர்களைப் பாடிய புலவர்கள் எனும் முறையில் கையாளப்பட்டுள்ளது. சங்க காலப் புலவர்களாவோர்: பிசிராந்தையார், அள்ளூர் நன்முல்லையார், வெள்ளைக்குடி நாகனார், நல்லாந்தையார், ஒக்கூர் மாசாத்தியார், ஒக்கூர் மாசாத்தனார், பாரி, ஐயூர் மூலங்கிழார், உக்கிரப் பெருவழுதி (மன்னன்), உறையூர் ஏணிச்சேரி முடமோசியார், கோவூர் கிழார், கணியன் பூங்குன்றனார், வெண்ணிக்குத்தியார், மருதன் இளநாகனார், மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார், காரிக் கண்ணனார், கோணாட்டு எறிச்சிலுர்மாடலன், ஆவூர் மூலங்கிழார், வடம வண்ணக்கன் பேரிசாத்தனார், கதையங் கண்ணனார், மருங்கூர்கிழார், பெருங்கண்ணன், மருங்கூர்ப்பட்டினத்து சேந்தங்குமரனார், மருங்கூர்பாகைச் சாத்தம் பூதனார், மருதன் இளநாகனார், நல்லாந்தையர், கோவூர்க்கிழார், மிளைக் கந்தன், முப்பேர் நாகனார், மோசி கண்ணத்தனார், வேம்பற்றூர்க் கண்ணன் கூத்தன், வேம்பற்றூர் குமாரனார்.

சங்க இலக்கியத்திற்குப் பின் வந்த இலக்கியங்களில்

இளங்கோவடிகள் (சிலப்பதிகாரம் (காடுகாண்காதையில்)) புல்லங்காடன், பரிப்பெருமாள், படிக்காசுப்புலவர், பொன்னங்கால் அமிர்தகவிராயர், கம்பர், பரிமேலழகர், மாணிக்கவாசகர், மணவாள முனிவர், பொன்னங்கால் அமிர்தகவிராயர், மிதிலைப்பட்டி சிற்றம்பலக்கவிராயர், ஒட்டக்கூத்தார் போன்ற புலவர் பெருமக்கள் சேதுநாட்டில் பிறந்தவர்களாயும் சேதுநாட்டில் பிறவாது பாடிப் பரிசில் பெற்றவர்களாயும் திகழ்கின்றனர். இது மட்டுமில்லாது பல இலக்கியங்களும் பல புலவர்கள் இந்நாட்டினைப் பற்றியும் இந்நாட்டு மன்னரைப் பற்றியும் பாடியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இதுவரையிலான செய்திகள்வழிச் சேதுநாடு, சேதுபதி பற்றிய புரிதலுக்கான குறிப்புகள் பின்வருமாறு:

சேதுவையும் இமயத்தையும் இருபேரெல்லையாகக் கொண்டு இப்பரதகண்டம் வடநாடு/தென்னாடு என இரண்டாகப் பகுத்து நிற்கின்றது. இதனைக் கம்பர் உறுதிப்படுத்துகிறார் எனும் செய்தி நமக்குக் கிடைக்கின்றது.
சேர சோழர் படைப்புக் காலந்தொட்டே மேம்பட்டு வருதலுடைய பழைய தமிழ்க்குடியினராவர் என்ற செய்தி பரிமேலழகரின் உரை மூலம் அறிய முடிகிறது.
பாண்டியர் தலைமைக்குள்ளாய இச்சேதுநாடு சோழர், பாண்டியரை வென்று பாண்டிய நாட்டில் பெரும்பகுதியைத் தம் நாடாக்கிக் கொண்ட காலந் தொடங்கிச் செம்பி நாடாய், இந்நாட்டு மறவர், சோழன் மறவராய காரணத்தால் செம்பிநாட்டு மறவர் எனப் பெயர் பெற்று விளங்கியுள்ளனர்.
“வங்க வீட்டத்துத் தொண்டியோ” சேதுநாட்டுத் தொண்டி பற்றிச் சிலப்பதிகார ஊர்காண் காதை சிறப்பிக்கிறது.
மாறல்லோ’ என்பது மறவர்நாடு என்பதன் மருஉ என ‘யூல்’ என்ற அறிஞர் (530-550 AD) சேது நாட்டைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளார்.
பத்திற்கும் மேற்பட்ட ஆறுகளும் பதினைந்திற்கும் முற்பட்ட தீவுகளைக் கொண்டதாகத் திகழ்ந்துள்ளது சேதுநாடு.
மூவேந்தர்களுக்கும் போர் மறவராய்த் திகழ்ந்துள்ளனர்.
சேதுநாட்டில் சோழர் ஆட்சிபுரிந்தமைக்குப் பல சான்றுகள் கிட்டியுள்ளன.
வளரி எனும் ஆயுதத்தைக் கையாளுவதில் திறம்மிக்கவர் சேதுநாட்டினர் என்பதை அறியமுடிகிறது.
வடநாட்டில் உள்ள ஆரியர்களை அழைத்துப் புண்ணியத்தலமான இராமேஸ்வரத்திற்கு வருகை புரியத் துணைபுரிந்தவர்கள் சேதுபதிகளே.
புலவர்களை ஆதரித்துப் பரிசில் கொடுத்துச் சிறப்பு செய்தவர்கள் இச்சேதுபதிகளே.

மேற்சுட்டிய செய்திகள் இராகவையங்காரின் தமிழகக் குறுநில வேந்தர்கள் எனும் நூலின் மூலம் அறியமுடிகிறது.

மதுரையிலும் கொற்கையிலும் இருந்து நீண்ட காலங்களாக ஆட்சி ஆண்ட பாண்டியர்களது அதிகார வரம்பிற்குள்ளும் இவர்களைத் தொடர்ந்து சோழர்கள், இசுலாமியர், நாயக்கர், சேதுபதி மன்னர்கள் இராமநாதபுரத்தினை ஆட்சி செய்துள்ளனர். அக்காலத்தில் இப்பகுதி நாடு, வளநாடு, கூற்றம் எனப் பல்வேறு பிரிவுகளாக நிர்வாகத்தின் பொருட்டுப் பிரிக்கப்பட்டிருந்தது.

வேம்புக்குடி நாடு – சாத்தூர் வட்டம்

வேம்பு நாடு, பருத்திக்குடி – அருப்புக்கோட்டை வட்டம்

வடதலைச் செம்பிநாடு – முதுகுளத்தூர் வட்டம்

கீழ்ச் செம்பிநாடு, செவ்விருக்கை நாடு – இராமநாதபுரம் வட்டம்

பொலியூர் நாடு – கமுதி வட்டம்

கைக்கை நாடு – பரமக்குடி வட்டம்

ராஜராஜப்பாண்டி நாடு – மானாமதுரை வட்டம்

தென்னாலைநாடு நாடு, களவழிநாடு – தேவகோட்டை வட்டம்

கானப்பேர் நாடு – சிவகங்கை வட்டம்

திருப்பாடாவூர் நாடு – திருப்பத்தூர் வட்டம்

இடையா நாடு, தழையூர் நாடு – திருவாடானை வட்டம்

இந்த நாடுகள் மதுரோதைய வளநாடு, மதுராந்தக வளநாடு, கேரள சிங்க வளநாடு, அதளையூர் வளநாடு, திருபுவன முழுதுடையார் வளநாடு, வரகுணவளநாடு, ஜெயமாணிக்க வளநாடு என்பன போன்ற பிரிவுகளும் அடங்கும். இவற்றினிடையே பகானூர் கூற்றம், துகவூர் கூற்றம், முத்தூர் கூற்றம், மிழலைக் கூற்றம் போன்ற உட்பிரிவுகளும் இருந்தமை தெரிய வருகின்றன. இவையனைத்தும் பாண்டியர்கள், சோழர்கள் பிற்காலப் பாண்டியர் ஆகிய பேரரசுகளின் கால நிலையாகும். (இராமநாதபுரம் மாவட்டம், வரலாற்றுக் குறிப்பு, ப.2)

நாயக்க மன்னர்களின் ஆட்சியின்போது சேதுநாடு பெரிதும் மாற்றம் பெற்றது. அவர்கள் தங்களது பூர்வீக நாடான வடுகர் மாநிலத்தில் அக்காலக் கட்டத்தில் நடைமுறையில் இருந்த அமர நாயக்க முறையான யானைக்காரர் முறை நிர்வாகத்தைப் பாண்டிய நாட்டில் புகுத்திக் கடைப்பிடித்தனர். இதன் விளைவாய்த் தென்பாண்டிச் சீமை எழுபத்தியிரண்டு (72), பாளையப்பட்டுகளாகப் பிரிக்கப்பட்டுப் பெரும் நிலக்கிழார்கள், குறிப்பிடப்பட்ட எல்லைக்குட்பட்ட பாளையப் பகுதிகளின் தலைவர்களாக நியமனம் செய்யப்பட்டனர் என்பதை அறியமுடிகிறது.

சேதுநாட்டில் சமண, பௌத்த அடையாளங்கள்

சேதுநாட்டில் சமணர்கள் கமுதி, அருப்புக்கோட்டை, திருச்சுழி ஆகிய பகுதிகளில் வாழ்ந்துள்ளனர். எட்டாம் நூற்றாண்டைய ‘பள்ளிமடம்’ கல்வெட்டு இந்த உண்மையை உணர்த்துகிறது. அனல் வாதத்திலும் புனல் வாதத்திலும் சம்பந்தரிடம் தோல்வியுற்ற சமணர்கள் மதுரைக்குப் பிறகு அடுத்த புகலிடமாக இப்பகுதியில் குடியேறியிருக்க வேண்டும். அவர்களுக்குப் பாண்டியன் மாறஞ்சடையன் தக்க உதவிகளை வழங்கினான் (இராமநாதபுரம் மாவட்டம் வரலாற்றுக் குறிப்புகள், ப.12)

கோவிலாங்குளத்தில் உள்ள இன்னொரு கல்வெட்டிலிருந்து இப்பகுதி சமணத்துறவிகளும் மகாவீரதீனிகளும் விரும்பி வாழ்ந்த பகுதியாக விளங்கியது தெரிகிறது. இதனைப் போன்று இம்மாவட்டத்தின் வடகிழக்குப் பகுதியும் அருக சமயத்திற்கு ஆதரவு தந்ததாகத் தெரிகிறது. இளையான்குடி, ஆனந்தூர், அமைந்தகுடி, திருக்காளக்குடி, பிரான்மலை, கீழப்பனையூர் ஆகிய சிற்றூர்களில் காட்சியளிக்கும் சமணத் துறவிகளது கற்திருமேனிகள் இந்த உண்மையை உறுதிப்படுத்துகின்றன. சீ(சை)னமங்கலம், சாத்தப்பள்ளி, சாத்தனூர், சாத்தன்குளம், சாத்தமங்கலம், அச்சன்குளம், அச்சன்குடி, அறப்போது, நாகணி, நாகனேந்தல், விளக்கனேந்தல், குணங்குடி, குணபதிமங்கலம் ஆகிய ஊர்களும் சமணர்களது குடியேற்றங்கள் என்பதில் ஐயமில்லை (இராமநாதபுரம் மாவட்டம் வரலாற்றுக் குறிப்புகள், பக்.12-13).

இது மட்டுமின்றிப் பௌத்த சிலைகள் இம்மாவட்டத்தில் கண்டறியப்பட்டுள்ளன. மகாவீரர் சிலை கிடாரம் அருகில் இருந்துள்ளது எனக் கூறுகின்றனர். இளையான்குடி, சாலைக்கிராமம் ஆகிய ஊர்களில் இன்றும் பௌத்த சிலைகள் காணலாகின்றன.

அகழாய்வில் சேதுநாடு

தற்போது அழகன்குளம் (மருங்கூர்பட்டினம்) எனும் ஊரில் தொல்லியல் துறையினர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இவ்வாய்வின் மூலம் சேதுநாட்டின் பண்டைய சமூகம், வாணிபம், மக்கள் நிலை ஆகியவற்றை அறியலாம். தற்போது சிவகங்கை மாவட்டம் எல்லை மதுரை நகரிலிருந்து அண்மைத் தொலைவில் கீழடி எனும் ஊர் உள்ளது. இந்தியத் தொல்லியல் துறையின் 6 ஆம் அகழாய்வுப் பிரிவினர் முதல்கட்ட அகழாய்வைத் தொடர்ந்து இரண்டாம் கட்ட அகழாய்வில் ஈடுபட்டு வருகின்றனர். தொல்கால அடையாளப் பதிவுகளை வெளிக்கொணரும் முகமாக ஐயாயிரத்திற்கும் முற்பட்ட சுடுமண், கிணற்று உறைகள், குழாய்கள், வடிகால்கள், வாய்க்கால்கள், மூடிய நிலையிலான சாக்கடை வழிப்பாதைகள், குளியலறை, கழிவுக் குழிகள், சிற்றறைகள், தாழிகள், மண்பாண்டங்கள், இரும்பு உலைக் குழிகள், அணிமணிகள், காசுகள், கருவிகள், தடயங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

வைகை ஆறு உற்பத்தியாகும் வருசநாட்டு மலையிலிருந்து முடிவுறும் இராமநாதபுரம் வரையிலும் ஆற்றின் இரு புறங்களிலும் 280-க்கும் மேற்பட்ட தொல்லியல் இடங்கள் கண்டறியப்பட்டு உள்ளன. இவற்றுள் பழங்கால வாழிடத் தொல்லியல் நிலப்பரப்பாகக் கீழடி அடையாளப்படுத்தப்பட்டு இருக்கிறது[1].

மேற்சுட்டிய 280 இடங்களில் சேதுநாடும் இடம்பெறுகிறது. கீழடி போல் சேதுநாட்டின் பெரும்பான்மையான பகுதிகளில் அகழாய்வு மேற்கொண்டால் தொல்தமிழர்களின் வாழ்க்கை முறையினை அறிவதோடு மட்டுமின்றிச் சேதுநாட்டின் பழமையின் அடிச்சுவடுகளையும் அறியலாம்.

துணைநூற்பட்டியல்

அண்ணாமலை பழ., செட்டிநாடு ஊரும் பேரும், 1986, மணிவாசகர் பதிப்பகம், சிதம்பரம்.
அமிர்தகவிராயர், ஒருதுறைக்கோவை, 1977, பழனியப்பா பிரதர்ஸ், சென்னை.
இராகவையங்கார் ரா., தமிழகக் குறுநில வேந்தர்கள், 1994, பாரதி பதிப்பகம், சென்னை.
உ.வே.சா., ஐங்குறுநூறு பழைய உரை, 1957.
கமால் எஸ்.எம்., சேதுபதி மன்னர் வரலாறு, 2003.
கமால் எஸ்.எம்., முகம்மது செரீபு.நா., இராமநாதபுரம் மாவட்ட வரலாற்றுக் குறிப்புகள், 1984, பாரதி அச்சகம், மானாமதுரை.
கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள், (பிற குறிப்புகள் இல்லை)
புலனத்தகவல்.
தமிழ்நாட்டு வரலாற்றுக் குழு, தமிழ்நாட்டு வரலாறு (பல்லவர்-பாண்டியர் காலம்), 1990, தமிழ்நாடு அரசு வெளியீடு, சென்னை.

மணிமாறன், தமிழ் ஆய்வுக் கட்டுரைகள், தொகுதி I, 2016, சரசுவதி மகால் நூலகம், தஞ்சை.
மனோகரன் மீ., கிழவன் சேதுபதி, 2012, அகரம் பதிப்பகம், தஞ்சாவூர்.
[1] கீழடி : மடைச்சி வாழ்ந்த தொல்நிலத்தில் எம் காலடித்தடங்கள், ஏர் மகாராசன் – புலனத்தகவல்

சே. முனியசாமி

முனைவர்பட்ட ஆய்வாளர்

இந்திய மொழிகள் மற்றும்ஒப்பிலக்கியப் பள்ளி

தமிழ்ப் பல்கலைக்கழகம்

தஞ்சாவூர்

மனோகரன் மீ., கிழவன் சேதுபதி, 2012, அகரம் பதிப்பகம், தஞ்சாவூர்.
[1] கீழடி : மடைச்சி வாழ்ந்த தொல்நிலத்தில் எம் காலடித்தடங்கள், ஏர் மகாராசன் – புலனத்தகவல்

சே. முனியசாமி

முனைவர்பட்ட ஆய்வாளர்

இந்திய மொழிகள் மற்றும்ஒப்பிலக்கியப் பள்ளி

தமிழ்ப் பல்கலைக்கழகம்

தஞ்சாவூர்

Share
This entry was posted in வரலாறு. Bookmark the permalink.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *