செம்பி நாட்டு மறக்குல பென்கள் தீப்பாய்ந்த வரலாறு

வன்னி நாட்டை அரசு புரிந்த வனிதையர்(மறவர் குல நாச்சியார்) – பேராசிரியர் க. கணபதிப்பிள்ளை

http://thevar-mukkulator.blogspot.in/2015/02/blog-post.html

          (தாய்வழி சமூகத்தில் செம்பி நாட்டு மறக்குல  பென்கள் தீப்பாய்ந்த வரலாறு)

யாழ்ப்பாணத்தில் நடைமுறையிலிருந்துவரும் வழிபாடுகளுள் நாய்ச்சிமார் வழிபாடுமொன்று. அங்கு பலப்பல ஊர்களிலும் நாய்ச்சிமார் கோயில் உண்டு. அக்கோயில்களில் மங்கலமான நாட்களில் மக்கள் பொங்கல் பொங்கியும் விளக்கு வைத்தும் வழிபாடாற்றுவார்கள். இவ்வழிபாடு யாழ்ப்பாணத்திற்கு எந்தக்காலம் வந்தது என்பது ஆராயத்தக்கது. அதனோடு நாய்ச்சிமார் என்ற கடவுள் வைதிக சைவ சமயத்தில் இல்லை. ஆகவே, இது தமிழ் மக்களுக்குள் வைதிக சமயத்திற்குப் புறம்பே எழுந்த வழிபாடாகும்.

 

எனவே, இவ்வழிபாட்டுமுறையை ஆராயுமுன்னர் நாய்ச்சிமார் என்னும் சொல்லைச் சிறிது ஆராய்வோம். நாச்சி என்னும் பெயர்ச் சொல்லுக்கு மார் என்னும் உயர்திணைப் பன்மை விகுதியைச் சேர்த்து வந்ததே நாய்ச்சிமார் என்னும் சொல்லாகும். நாச்சி என்னும் சொல்லை எடுத்துக்கொள்வோம். நாச்சி என்னும் சொல் எட்டாவது நூற்றாண்டுவரையில் தமிழ் மக்கள் வழக்கிலிருந்தது. பெரியாழ்வாருடைய மகள் ஆண்டாளைச் சூடிக்கொடுத்த நாச்சியார் என்று அழைத்தல் இதற்கு எடுத்துக்காட்டாகும்.

 

நாச்சி என்னும் சொல் “நீ” என்னும் சங்கத (சமஸ்கிருதம்) வினையடியாகப் பிறந்த உயர்திணைப் பெயர். “நீ” என்பதற்கு வழிகாட்டுதல் என்பது பொருள். எனவே, நாச்சி என்பதற்கு வழிகாட்டுபவள் அல்லது தலைவி என்பது பொருள். நாச்சி என்பதற்கு ஆண்பால் நாயன்.(1) ஆனால், இலங்கை வன்னி நாட்டிலே வன்னியர் ஆதிக்கஞ் செறிந்திருந்தபோது, வன்னியர் குடும்பத்தைச் சேர்ந்த பெண்களை நாச்சிமார் என அழைத்தல் மரபுபோலத் தோன்றுகின்றது.

 

வன்னிநாட்டிற் கண்டெடுக்கப்பட்ட பழைய ஏட்டுப் பிரதியொன்றில் பின்வரும் வரலாறு

காணப்படுகின்றது:-

 

“அறுபது வன்னியமார் இந்தியாவிலிருந்து இலங்கைக்கு வந்து ‘அரசு’ புரிந்துகொண்டிருந்தனர். அவர்கள் இங்கு வரும்போது தம்முடைய மனைவிமாரை மதுரையில் விட்டுவிட்டு வந்தனர். அக்காலத்திலே வட இலங்கையின் பல பாகங்களைப் பறங்கிக்காரர் கைப்பற்றத் தொடங்கினர். அப்பொழுது அந்த வன்னியமார் அறுபது பேரும் பறங்கிக்காரரோடு போர் புரிந்தனர். அவருள் 54 பேர் போரில் மாண்டனர்.” (மேல் வரும் பகுதி நேரடியாக ஏட்டுப் பிரதியிலிருந்து எடுக்கப்பட்டதாகும்). “ஆனால், அக்கூட்டத்தில் ஐவர் பறங்கிக்காரரோடு பெரும் போர் நிகழ்த்தி தாம் இருக்கும் வன்னி நாட்டைக் கைப்பற்ற விடாது அவரை முறியடித்து, முள்ளியவளை முனையாக அந்த நாடுகளையும் அரசு பண்ணினர். ஒருவன் கண்டி இராசனுக்குத் திசை (திசாவா) (2) யாகப் போய்விட்டான். அதன்பின்னர் எஞ்சிய ஐந்து வன்னியமார்கள் மதுராபுரிக்குப் போய்த் தமது மனைவிமாரை இட்டு வரும்படிஓடமேறிச் சென்றனர். அவர் போகும்போது அவர் போன ஓடம் கடலில் ஆழ்ந்துவிட்டது. அதனால், அவர் மாண்டனர்.”

 

 

நீண்ட நெடிய ஆய்விக்கு பின்னே நாம் கூறுவது இது தான். வன்னியர் என்பது பட்டமோ சாதியோ அல்லது அரசரால் வழங்கும் விருதோ கிடையாது. இது ஒரு காடு சூழ்ந்த  பகுதியை குறிக்கும் காரண பெயராகும். எடுத்துகாட்டாக கொங்கு என எடுத்து கொள்வோம். கொங்கு மண்டலத்தில் உள்ள அனைத்து சாதியினருக்கும் கொங்கு என பெயர் இருக்கும். சோழிய என எடுத்து கொள்வோம் அது சோழநாட்டில் வாழும் சகல் பிரிவினருக்கும் ஏன் இசுலாமியருக்கும் மறாட்டியருக்கும் உள்ள பகுதி பேராகும். கொங்கு,சோழிய,பாண்டிய,நாஞ்சில்,கேரள,தொண்டை என்பது போல தான் வன்னி என்னும்  பகுதியை குறிக்கும் பெயர். அதே போலத்தான் வன்னியர் என்பது தொண்டை மண்டலத்தில் உள்ள அனைத்து சாதியினரையும்  குறிக்கும்.

 

தொண்டை மண்டலத்தை கச்சி வன நாடு (அ) வன்னிய நாடு என கூறுவர். இதில் குடியிருக்கும் இறைவனை கச்சி வனராசர் இறைவியை கச்சி வனத்தில் தவமிருக்கும் காமாச்சி என கூறுவர். காமாட்சி கோவில் தொண்டை மண்டல உட்பட எல்லா இடங்களிலும் காடுகளில் தான் அமைந்திருக்கும். காமாட்சியை வனக்காமாட்சி,வனப்பேச்சி அல்லது வன்னிய பேச்சி என கூறுவர். எனவே தொண்டை மண்டலத்தை பொருத்தவரை வன்னியராஜன் மற்றும் வன்னிய பேச்சி என்பது தொண்டை மண்டலத்தை ஆளும் ஏகாம்பரேஸ்வரர்-காமாட்சி அம்மனையே குறிக்கும். 

 

எனவே தொண்டை மண்டலம் மட்டுமல்ல காடுகள் எங்கல்லாம் உள்ளதோ அந்த பகுதியில் வாழும் அனைவருக்கும் உள்ள காரண பெயரே வன்னியர் (அ) காடுவாழ்னர்.

“இது இவ்வாறிருக்க அந்த வன்னியமார் அறுபது பேருடைய பெண்சாதிமார் மதுரையிலே இருக்கும்போது ஒரு நாள் அந்த நாட்டரசன் அவர்களிருக்கும் தெருவீதியிலே குதிரை மீதேறி, பெண்கள் இருக்கும் தெரு என்றும் கவனம் பாராது தன் குதிரையை ஓட்டி வந்தான். அவ்வாறு அவன் வந்தபடியினால் அவர், ‘இனிமேல் நாங்கள் இங்கிருந்தால் எங்களுடைய மானம் கெட்டுப் போகும். எங்கள் முதலாளிமார் இலங்கை நாட்டிற்குப் போய் இராசாக்களாக இருப்பதால் நாங்களும் அவ்விடம் போக வேண்டும்’ என எண்ணினர். தமது பயணத்திற்கு வேண்டிய ஆயத்தங்களைச் செய்துகொண்டு தங்கள் பணியாட்களுடன் ஓடமேறி வட இலங்கைக்கு வந்தார்கள். பின்னர் வன்னிய நாட்டுக்கு வரும்போது வன்னியமார் இறந்த சேதிகொண்டு தூதன் பின்வருமாறு சொல்லுவான்: “எங்கள் முதலாளிமார்கள் 60 பேரிலே 54 பேர் பறங்கிக்காரருடன் பொருதுபட்டுப் போனார்கள். ஒருவர் கண்டியில் இராசாவுக்குத் திசையாக நிற்கின்றார். மற்ற 5 பேரும் பறங்கிக்காரரையும் வென்று வன்னியை ஐந்து பற்றாகப் பிரித்து அரசு பண்ணினார்கள். அப்படி அரசு பண்ணிவிட்டு அந்தந்தப் பற்றுக்கு அந்தந்த வேளாளரை முதன்மையாக்கிப் போட்டு முள்ளியவளையிலே இளஞ்சிங்க மாப்பாணனை(இளஞ்சிங்க வீரன் என்னும் மறவன்) [சேதுபதி செப்பு பட்டயத்திலே அவரின் பட்டங்களாக இளஞ்சிங்கம்,தளசிங்கம்,சொரி முத்து வன்னியன் என அவரது விருதுகள் வருகின்றது] முதன்மையாக்கிப் போட்டு மதுரைக்கு வந்தார். அதன் பின்பு அவர் கதை யாதொன்றுந் தெரியாது” என்றனர்.

 

“இவ்வாறு தூதன் சொல்ல அது கேட்டு முன்னமே இறந்த 54 வன்னியமார்களுடைய பெண்சாதிமார்களும் தெல்லிச்சி வாய்க்காலிலே (3) தீயிலே வீழ்ந்து மரணமடைந்து போனார்கள். அப்போது அவர்களுக்கு நாச்சிமார் என்று பெயராயிற்று. அவர்களுக்குக் குதிரை விட்டுவந்த சேவகரும்(மறவர்களின் குதிரை சேவகரான பள்ளர்) அறுபது பேரும் வீரக் குடும்பன்(குதிரை சேவகர் தலைவர்) முதல் ஆரிய குடும்பன் முதலாகத் தீயில் விழுந்துவிட்டார்கள். அன்றுமுதல் அவர்களுக்கு (மறவர் பென்கள் குடும்ப மக்களை தன் அண்ணன் என அழைப்பது வழக்கம்)அண்ணமாரென்னும்பெயராயிற்று. ஒரு வன்னிச்சிமாரும் வன்னி ஐந்து பற்றிலுமிருந்து அரசு புரிந்தார்கள் அதன் காரணத்தால் பெண்களுக்கு வன்னிமை என்றும் ஆண் பிள்ளைகளுக்கு ‘ஐதாந்தி’ என்றும் பெயராயிற்று.”

செம்பி நாட்டு மறக்குலநாச்சியர் கிளை எழுவர் வரலாறு

முக்குகர் வன்னிமை

 

சீர்தங்கு வில்லவரும் பணிக்கனாரும் சிறந்த சட்டிலான்தனஞ்சயன்றான்

கார்தங்கு மாளவன் சங்குபயத்தன கச்சிலாகுடி முற்குகரினமேழேகான்

வார்தங்குகுகன் வாளரசகண்டன் வளர்மாசுகரத்தவன் போர்வீர கண்டன்

பார்தங்கு தண்டவாணமுண்டன் பழமைசெறி


மறவர் குடி:

சங்குபத்தன் குடி, கோப்பிகுடி,கச்சிலாகுடி,சட்டிகுடி,மாளவண்குடி,முண்டன் குடி,முரண்டன் குடி.

 

மறவரில் முண்டன் குடி,முரண்டங்குடி,கச்சிலாங்குடி,மாளவன் குடி சட்டிகுடி,சங்குபயத்தங்குடி இருக்கும் முற்குகரில் முண்ட வன்னியன் முறண்ட வன்னியன், கிளைகாத்தவன்னியன் என மறவரின் தலைவர்கள் இருப்பார்கள்.

மறவரில் இருப்பது பெருங்குடி வீரர்கள்முற்குகரில் இருப்பது தலைவன், அரையன்,பெருமாண்,அரசன் என  முற்குக வன்னிமைகள் மறவரே.

 

செம்பி நாட்டு மறவர்கள் கிளைகள்


1.மரிக்கார் கிளை = சங்கு பயத்தன் குடி(சோழ பாண்டியன்)

2.பிச்சையன் கிளை = சட்டி குடி(சோழ  கங்கன்)

3.தொண்டமான் கிளை = கச்சிலான் குடி(சோழ வல்லபன்)

4.கட்ரா கிளை = முண்டன் குடி(சோழ கேரளன்)

5.கற்பகத்தார் கிளை = மாளவன் குடி(சோழ கன்னங்குச்சிராயர்)(மாளவம்=குஜராத்)

6.சீற்றமன்(ஸ்ரீ ராமன்) கிளை = முறண்டன் குடி(சோழ அயோத்திராஜன்) 

7.தனிச்சன் கிளை = தனஞ்சயன்[கோப்பி] குடி(சோழ கனகராஜன்)

 

இவ்வன்னிநாட்டு வரலாறு ஒருபுறமிருக்க யாழ்ப்பாணத்தில் நாச்சிமார் வழிபாடிருக்கும் சில பகுதிகளில் வழங்கும் வரலாற்றை இங்கு தருவாம். அது பின்வருமாறு:

 

ஆறு வன்னிமைப் பெண்கள் வன்னி நாட்டிலிருந்து ஆட்சி புரிந்து வந்தனர். பறங்கிக்காரர் வட இலங்கையின் ஒரு பகுதியை கைப்பற்றிய பின்னர் வன்னியையும் கைப்பற்ற முயன்றனர். ஒவ்வொரு முறையும் அவர் முயற்சி பலிக்காமல் போரில் தோல்வியுற்று வன்னிநாட்டினின்றும் திரும்பவேண்டியவரானார். ஏதோ ஒரு வகையாகத் தாம் வெற்றி பெறவேண்டுமெனப் பெரும் ஊக்கத்துடன் தமது படையை அணிவகுத்துப் பின்னரும் சென்றனர்.

 

அங்கு போய் வன்னிநாட்டுப் படைகளுடன் பெரும் போராற்றினர். இம்முறை வன்னிநாட்டவர் படை சிறிது தளர்வுற்றனர். அதைக் கண்ட அந்த நாட்டினை ஆளும் வன்னிமைப் பெண்கள் அறுவரும் அவரது பணிப்பெண் ஒருத்தியும் ஆண்களைப்போல், அம்பு, வில்லு, வாள், சதங்கை முதலிய படைதாங்கித் தமது சேனையை நடாத்திப் பறங்கியர் முன்னர் வந்தனர். இருபடையினர்க்கிடையிலும் இதுகாறும் நடந்த போர்களைக் காட்டிலும் பெரியதோர் போர் மூண்டது. இப்பெண்கள் பறங்கியர் படை எதிரில் நின்று மிகுந்த வீரத்தோடு போர் செய்தனர். அதனால், பறங்கியர் முதுகுகாட்டி ஓடவேண்டிய நிலையும் வந்தது. எனினும் ஏதோ சூழ்ச்சியால் பறங்கியர் தலைவன் போரை வென்றனன். அதனால், வன்னிப்படையினர் மனமுடைந்தனர். அப்பெண்கள் ஏழுபேரும் பறங்கியரின் கைகளில் அகப்பட்டால் மானபங்கம் அடைய நேரிடும் என உள்ளம் பதைத்தனர். மானமிழந்து வாழ்வதைக் காட்டிலும் உயிர் நீத்தலே சாலச்சிறப்புடைத்து என உறுதி கொண்டனர். உடனே அப்பெண்கள் எழுவரும் நஞ்சுண்டிறந்தனர். அதைக்கண்ட வன்னிநாட்டவர் அவரைத் தெய்வமாக்கினர். கற்பினிற் சிறந்து விளங்கிய கண்ணகியைக் கடவுளாக்கி வழிபடும் தமிழ் மக்களாகிய வன்னிநாட்டவரிடை வீரத்திற் சிறந்து திகழ்ந்த இவ்வெழுபெண்களையும் வழிபடும் வழக்கம் எளிதிற் பரவியது, நாளடைவில் இவ்வழிபாடு வன்னிநாட்டில் மட்டுமின்றி ஏனைய இடங்களுக்கும் பரவியது. யாழ்ப்பாணத்திலே வடமராட்சி கிழக்குப் பகுதியைச் சேர்ந்த நாகர்கோயில் என்னும் ஊரிலும் பருத்தித்துறை, சாளம்பை(4) வட்டாரத்திலும், காங்கேசன்துறை வன்னியனார் வளவிலும் அராலியிலும் யாழ்ப்பாணம் நாச்சிமார் கோயிலடியிலும் இவ்வழிபாடு இன்றும் நடைபெறுகிறது.நாடு(மட்டகளப்பு)

 

நாடதிகம் புவிதனிலே புகழிலங்கை

நன்னாட்டின் பெருமைதனை நாடிக்கூற

தேடரியதிருச்சபைக்கு முன்னேவந்து வரிசைமுட்டி

தீண்டமுன்னுன் பேரூருஞ் சிறந்தநாடும்

மாடமுயர் மண்டபமும் மரபும் நீங்கள்

வந்தவரலாறு முற்றும் வழுத்துவீராய்

ஏடலரும் வரிசைமுட்டி எடுப்பீரல்லாலிச்

சபையை விட்டகன்றே குவீரே.

சபையோரே மானிலத்திலதிகம் நாடுசங்கை

பெறுமெண்ணாட்டுள்ராமனோடு

எவையோரில் மறவர்குலத் தேழுமாதரிலங்கை

செல்ல மணமகனுஞ்சிறைகள் சூழ

அவையமென வெங்கள் குலத்தைந்துகுடி

யனைவருக்கும் பூசகரா யழைத்துமட்டச்

சுவைகளப்பில் குடியேற்றி யாவருக்கும்

குருக்களெனத் தோன்றும் நானே.

நன்றி:மட்டகளப்பு மான்மியம்

அமரசேனன் கலிபிறந்து மூவாயிரத்து நானூற்றறுபத்தாறாம் வருஷம் அரசுபுரியும் போது தனது உடன்பிறந்தாருக்கு இலங்கை பலதிக்கிலும் வதுவை செய்து வைத்து அரசு புரிந்து வருங்காலம் இராமநாட்டு மறவர்குலத்து இராசவம்சத்தைச்சார்ந்த ஏழுபெண்கள் தங்கள் தங்கள் மணமகனுடனும், சிறைதளங்களுடனும் வவனியர்குலத்துக் குருகக் குடும்பம் ஐந்தும் சேர்ந்து மட்டக்களப்பின் பரிசுத்தங்களை அறியும் படியும், வைதூலிய சமயத்தை மாற்றி அரிநமோ என்னும்நாமத்தைப் போதித்து வைக்கவேண்டுமென்றும் கம்பர் இயற்றிய இதிகாசப்பிரதியை எடுத்து இராமநாடுவிட்டுச் சேதுதனில் ஸ்னானம் செய்து இராமேஸ்வர தெரிசனைகண்டு ஒரு ஓடத்தில் ஏறி மண்ணால் இறங்கி திருக்கேதீஸ்வரம், கோணேஸ்வரம் தெரிசனைகண்டு கொட்;டியன் புரத்தில் வந்து மட்டக்களப்பில் அமரசேன அரசனைக்கண்டு தங்கள் வரலாற்றைக் கூறி,வன்னிச்சிமாரென விருதுபெற்று கலைவஞ்சி ஓர் ஊரிலும், மங்கி அம்மை ஒரு ஊரிலும், இராசம்மை ஒரு ஊரிலும், வீரமுத்து ஒரு ஊரிலும், பாலம்மை ஒரு ஊரிலும், தங்கள் தங்கள் மணமகனுடனிருந்து வந்த சிறைகளைக் கொண்டு கமத்தொழில் செய்து வாழ்ந்தனர்.

 

 

 

 

மறவர் இனத்தில் செம்பி நாட்டு பெண்கள் மறுமனம் செய்வதில்லை என்றும். சதி என்னும் உடன்கட்டை ஏறும் பழக்கம் கொண்டவர்கள் என்பதும் வெள்ளையரின் ஆவனமே.

சேதுபதிகள் மகள் நீலகேசியை மணந்த வெடியரசன் விஷ்னுபுத்திரன்:

சேதுபதிகளுக்கும் நெடுந்தீவு நயினாத்தீவு முற்குக தேசத்தலைவர் விஷ்னுபுத்திர வெடியரசருக்கும் இடையே மண உறவுகள் இருந்துள்ளது. சேதுபதி மகளை மணந்த வெடியரசன் கதை பற்றிய கோட்டை கொத்தலங்கள் நெடுந்தீவில் காணலாம்.

 

 

சேதுபதி மகராஜவின் வழியில் வந்த குளக்கோட்டன்:

குளக்கோட்டன் என்னும் மகாராஜன் சேதுபதி ராசர் பரம்பரையில் வந்தவன் என வெடியரசன் கதை கூறுகிறது.

 

 

இப்படி வந்த முற்குகர் மறவரே இவர்களே வன்னிபங்களை ஆண்ட வன்னியர்கள்:இக்கோயில்களில் நடக்கும் வழிபாட்டு முறைகளை எடுத்துக் கொள்வோம். பொதுவாக ஏனைய கோயில்களில் நடக்கும் வழிபாடு போலவே இங்கும் வழிபாடு நடக்கும். ஆனால், இக்கோயில்களில் ஒரு தனிச்சிறப்பான வழிபாட்டு முறையுண்டு. எடுத்துக்காட்டாக, பருத்தித்துறைச் சாளம்பை வட்டாரத்து நாச்சிமார் கோயிலில் பறைமுழங்கும்போது விட்டுவிட்டு, வேறு வேறு தாளத்துடன் ஏழு முறை முழங்குதல் மரபு. இது பண்டை நாள் தொட்டு வந்த வழக்கம் என்பர். தைப்பொங்கல், சித்திரைப் புத்தாண்டு முதலிய பெருநாட்களில் அங்கு மக்கள் போய்ப் பொங்குவர்.

 

காங்கேயன் துறை வன்னியனார் வளவுக் கோயிலிலும் உள்ள வழிபாட்டு முறையும் கவனிக்கத்தக்கது. இங்கும், தைப்பொங்கல் முதலிய பெருநாட்களில் மக்கள் பொங்கிப் படைப்பர். இதைவிட ஆண்டுக் கொருமுறை அங்குச் சிறப்பான வழிபாடொன்று நடைபெறும். அவ்வழிபாட்டுநாளன்று பருவமாகாத பெண்களுள்ள ஏழு வீட்டிலிருந்து ஏழு தாம்பாளம் நிறையப் பொருட்கள் வைத்து தூய வெண்சீலையினால் மூடி அவ்வீடுகளிலுள்ள ஏழு பருவமாகாத சிறுமிகள் அக்கோயிலுக்கு எடுத்துச் செல்வர். இத்தாம்பாளங்களுக்குள்ளே மிளகு, இஞ்சி, மஞ்சள், எள்ளு, சீரகம், பனங்கட்டி, செங்கல்லு, குன்றிமணி ஆகியவற்றைச் சேர்த்து இடித்த பாகு, அம்பு, வில்லு, சதங்கை ஆகிய பொருட்களை வைப்பர். இத்தாம்பாளங்களைக் கோயிலுக்குக் கொண்டு சென்றதும் அங்கு நிற்கும் கோயில் மரங்களுக்குக் கீழ் ஒவ்வொன்றாக வைப்பர். ஆறு மரங்களும் கிட்டக்கிட்ட உள்ளன. ஆனால், ஏழாவது மரம் அவற்றிற்குச் சிறிது தூரத்தேயுள்ளது. கிட்டக்கிட்ட உள்ள ஆறு மரங்களுக்கும் கீழ் ஒவ்வொன்றாக வைக்கப்படும் ஆறு தாம்பாளங்களும் ஆறு கன்னிமைப் பெண்களுக்கும் தூரத்தேயுள்ள மரத்தின் கீழ் வைக்கப்படும் ஒரு தாம்பாளம் பணிப்பெண்ணுக்கும் ஆகும். அம்பு, வில்லு அவர் போர் செய்ததையும், குன்றிமணி செங்கல்லு அவர் நஞ்சுண்டிறந்ததையும் குறிக்கும்.

 

மறவரின் ஏழு கிளைகளும் பென்னை சார்ந்தது:

Sketch of the Dynasties of South India, t Numismata Orient. Ancient Coins and Measures of Ceylon. Among the Sembanattus (or Sembanadus), the following septs or khilais have been recorded : Marikka. Piccha. Tondaman. Sitrama. Thanicha. Karuputhra. Katra. (15) Edgard Thurstan, K.Rangachari: Castes and Tribes of South India, vol.V, 1909, Govt.Press, Madras, 

தாம் கொண்டுசென்ற தாம்பாளங்களை வைத்த பின்னர் ஏழு சிறுமியரும் ஏழு வளந்துப்பானையை(5) அடுப்பிலேற்றுவர். இதன் பின்னரேயே அங்கு வழிபாடாற்ற வந்திருக்கும் ஏனைய மக்கள் பொங்கல் செய்யத் தொடங்குவர். பொங்கி முடித்த பின்னர் யாவரும் தாம் பொங்கிய பானைகளிலிருந்து பொங்கற் சோற்றை எடுத்து ஏழு மரத்தின் கீழும் வாழையிலையிற் படைப்பர். வயதில் முதிர்ந்த ஒருவர் இளநீர் உடைத்துச் சாம்பிராணி, கற்ப+ரம் கொளுத்துவர். யாவரும் கும்பிட்டு வழிபட்ட பின்னர் இச்சிறுமியர் எழுவரும் தாம் கொண்டு வந்த தட்டங்களைக் கையில் ஏந்தி நிற்பர். அப்பொழுது அங்கே பொங்கியுள்ளோர் ஒவ்வொருவரும் தமது பானைகளிலிருந்து சிறிது சிறிது சோற்றை எடுத்து அத் தாம்பாளங்களிற் போடுவர். அதன் பின்னர் அச்சிறுமியர் அக்கோயிலுக்குப்பக்கத்தேயுள்ள கேணிக்குள் ஏழு குண்டுக்குள் தாம் கொண்டு வந்த தாம்பாளத்திலுள்ள பொருட்களைக் கொட்டுவர். இத்துடன் வழிபாடு முடிவடையும். தீராத வருத்தமுள்ளோர் யாரும் அங்கிருப்பின் அவருக்கு அச்சிறுமியர் பொங்கிய பானைகளிலிருந்து பொங்கற் சோற்றை எடுத்துக் கொடுப்பர். இது அவர் நோய்க்கு மருந்தாகும் என்பது இவர் நம்பிக்கை.

 

செம்பி நாட்டு மறவரின் ஏழு கிளை நாச்சியார்கள்:

 

இங்கு முதலாவதாகக் கூறிய வன்னிநாட்டு வரலாற்றிற்கும் இரண்டாவதாகக் கூறிய யாழ்ப்பாண வரலாற்றிற்கும் சிறிது வேறுபாடிருப்பதைக் காணலாம். வன்னிநாட்டுக் கதையில் வன்னிமைப் பெண்கள் ஐவர் தமது கணவன்மார் இருந்து ஆட்சிசெய்த இடத்திலிருந்து ஆட்சிபுரிந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், காங்கேயன்துறை வரலாற்றுப்படி ஆறு வன்னிமைப் பெண்களும் அவரின் பணிப்பெண் ஒருத்தியும் பறங்கிக்காரருடன் போராற்றித் தோல்வியடைந்த பின்னர் நஞ்சுண்டு மாண்டனர் எனத் தெரியக்கிடக்கின்றது. அன்றியும் பருத்தித்துறைக் கோயில் வரலாற்றின்படி நாச்சியர் எழுவர் என்பது வெளிப்படை அன்றியும் வன்னிநாட்டு வரலாற்றின்படி பாண்டி நாட்டிலிருந்து வன்னிமைப் பெண்கள் வந்தனர். அவருள் 54 பேர்கள் தமது கணவன்மார் போரில் மாண்டதைக் கேட்டுத் தீயில் வீழ்ந்திறந்தனர். ஒரு வன்னிமைப் பெண் தனது திசாவைக் கணவரிடம் சென்றார். மற்ற ஐவரும் வன்னியில் ஆட்சி புரிந்து வநதனர். ஆனால், காங்கேயன்துறைக் கோயில் வழிபாட்டு வரலாற்று முறைப்படி ஆறு வன்னிமைப் பெண்கள் ஆண்டதாகவும் அவ்வாறு பெண்களும் அவருடைய பணிப்பெண் ஒருத்தியும் பறங்கியருடன் போர் புரிந்து தோல்வியடைந்தமையால் நஞ்சுண்டிறந்ததாகவும் தெரியவருகின்றது. இக்காரணம் பற்றியே காங்கேயன்துறை விழாவில் எடுக்கும் ஏழு தாம்பாளத்தில் வில்லு, அம்பு, சதங்கை ஆகியவற்றை வைப்பர். அவர்கள் நஞ்சுண்டிறந்ததகை; குறிப்பதற்காகச் செங்கல்லையும் குன்றிமணியையும் பாகிற் சேர்த்துக்கொள்வர்.

 

Recent gender-oriented critique of the LTTE fails to take note of the fact that the Moothinmullai Mother is a leitmotif in the structuring and representation of the Tamil nationalist project. Hence in the BBC documentary on the Tigers – Suicide Killers – the Black Tiger Miller’s mother is presented to the TV crew as a woman who feels proud of her son’s heroic martyrdom in the suicide attack on the Nelliady, Sri Lankan army camp in 1987. The LTTE here is reproducing a fundamental structure of representing Tamilian identity. C.S.Lakshmi has examined the role of the concept of the heroic mother in the militant Dravidian movement and its strategy of mobilising women. She, however, fails to take note of the politics of Aiyangar and Bharathy and the impact of the Russo-Japanese war on them in the genesis of this concept. C.S.Lakshmi; Mother, Mother-community and Mother-politics in Tamil Nadu. Economic and Political Weekly, October 1990. Aiyangar notes that the earliest Tamil grammar – the Tholkappiyam – defines and names the poetic theme of the mother who comits suicide on hearing her son’s lack of valour in the battle field. (‘These mothers belonged to Maravar clans’, he says. The Maravar are matrilineal.) He says that the warriors brought forth by these mothers made Tamil Nadu glorious in the Sangam era, in which “one does not hear of north Indian kings invading Tamil Nadu, but only the victories of Tamil kings who fought the northerners. This was so because of the greatness of Tamil martial might.” He concludes that the decline of the Tamils was the results of the decline of what he calls Thamil Veeram (Tamil martial prowess).

(## சதி என்னும் உடன்கட்டை ஏறுதல் பழக்கம் செம்பி நாட்டு மறவரிடம் மட்டுமே உண்டு- “தென் இந்தி சாதிகளும் குலங்களும்-

எட்கர் தர்ஸ்டன்)

[*# கிழவன் சேதுபதி இறந்தவுடன் 47 பென்கள் தீப்பாய்ந்தனர் என்றும். ரிபல் முத்துராமலிங்க சேதுபதி காலம் வரை தீப்பாய்தல் செம்பி நாட்டு மறவரிடம் இருந்துள்ளது பின்பு ஆங்கிலேயரால் மறுக்கப்பட்டது]

 

போரில் இறந்த வீரரை வழிபடும் வழக்கம் பண்டைக் காலம் தொடக்கம் தமிழ் மக்களிடையே நிலவி வருகின்றது. இப்பண்டைய முறையைப் பின்பற்றியே எழுந்தது நாய்ச்சிமார் வழிபாடு. ஒவ்வோரிடமும் இவ்வழிபாடு மரங்களுக்குக் கீழேயே நடைபெறுகின்றது. வடமராட்சி கிழக்கிலுள்ள நாகர்கோயிலில் தாழை மரத்தினடியிலும் பருத்தித்துறையில் சாளம்பை மரத்தினடியிலும் காங்கேயன்துறையில் வேம்பு, அரசு முதலிய மரத்தினடியிலும் அராலியில் ஆலமரத்தினடியிலும் இவ்வழிபாடு நடைபெறும். இவ்வழிபாட்டு முறையும் மொகஞ்சதாரோக் காலம் தொடக்கம் திராவிடருக்குள்ளிருந்து வந்த மரவழிபாட்டு முறையாகுமெனக் கூறலாம்.

 

பண்டைத் திராவிட வழிபாட்டு முறை இங்ஙனமிருக்க, வைதிக சமயக் கூட்டத்தார் இக்கோயில்களை எல்லாம் மாற்றி மரவழிபாடிருந்த இடங்களிற் கட்டடங்களை எழுப்பி அதற்குள்ளே உருவச்சிலைகளைத் திணித்து, இல்லாத பத்ததி முறைகளையெல்லாம் கொண்டுவந்து சேர்த்தனர். அதுமட்டுமன்றிப் பார்ப்பனரைக்கொண்டு இல்லாத முறைகளைச் சங்கதத்தில் சுலோகங்களாக ஆற்றி இக் கோயில்களில் ப+சைகள், விழாக்கள் நடத்திவருகின்றனர். இவர் செய்கை, பண்டைக்காலத் தமிழர் வழக்குக்கும் அவர் வழிபாட்டு முறைக்கும் மாறானது.

 

நாச்சிமார் வழிபாட்டின் வரலாற்றையும், அவ்வழிபாட்டு முறையையும் ஓராற்றான் எடுத்துரைத்தனம். இதன் உண்மை முழுவதும் சரியாகக் கிடைக்கவில்லை. வன்னிநாட்டிலும் யாழ்ப்பாணத்து வேறு பகுதிகளிலும் இவ்வழிபாடு நடைமுறையிலிருத்தல் கூடும். அவற்றைத் திரட்டமுடியாமலிருக்கிறது. அவற்றைத் திரட்டிச் சரித்திர முறைப்படி ஆராய்தல் அறிஞர் கடன்.

 

நிலைப்பாட்டின் அடிக்குறிப்புகள்:

1: நாய்ச்சி,தாய், ஞாய், நாய், ஆய் ஆகியவை பழந்தமிழில் சமசொற்கள். எனவே நாய்ச்சி என்ற சொல் சங்கத மொழி அடியாகப் பிறந்தது அல்ல, தாய் என்ற பொருள்கொண்ட தமிழ்ச்சொல். தாய்வழி மரபு இருந்த காலத்தில் இச்சொல்லின் ஆண்பால் நாயன் ஆக இருந்தது என்ற கருத்தும் உண்டு. தாய்வழி மரபைக் கடைப்பிடிக்கும் சேர நாட்டு மலையாள தேசத்தர் என்ற குலப்பெயர் இவ்வாறாகவே வந்ததென்பர். பேராசிரியர் சங்கதம் என்று குறிப்பிட்டிருப்பது சமஸ்கிருத மொழி. தமிழ்மரபில், சமஸ்கிருதம், பிராகிருதம் ஆகிய மொழிகளை முறையே சங்கதம் என்றும் பாகதம் என்றும் எழுதுவதுண்டு.

 

2: திசை, திசாவ, திசாவை: ஈழத்தில் சிங்கள மரபிலும் தமிழ் மரபிலும் ஒரு திசையை ஆள்பவர் என்ற பொருள் கொண்டது.

 

3: தெல்லிச்சி வாய்க்கால்: சிவிகை தூக்குபவர்கள் குடியிருப்பை (தெல்லி) சேர்ந்த ஒரு பெண்ணின் பெயரால் வந்த வாய்க்கால். இன்று தெல்லி வாய்க்கால் என்று அழைக்கப்படுகிறது.

 

4: சாளம்பை: ஈழத்துக் காடுகளில் பரவலாகக் காணப்படும் ஒரு மரவகை. சிங்களத்தில் ஸல் அல்லது ஹல் என்று அழைக்கப்படுவது (Vateria acuminata or Vateria indica).

 

5: வளந்துப்பானை: ஒருவகைப் பானை.


Reference:

http://thevar-mukkulator.blogspot.in/2015/02/blog-post.htmlhttp://www.addthis.com/bookmark.php?v=250&pub=penniyam

Share
This entry was posted in சேதுபதிகள், மறவர் and tagged . Bookmark the permalink.

3 Responses to செம்பி நாட்டு மறக்குல பென்கள் தீப்பாய்ந்த வரலாறு

 1. kathiravetpillai kathiramalai says:

  நான் பிறந்தவூர் வியாபாரிமூலை. எனது தந்தை வழியினா் எமது ஊர் நாச்சிமார் கோயிலில் பரம்பரையாக வெள்ளிக்கிழமைகளில் விளக்கேற்றிவந்தனர். கிளுவமரத்தடியில் கற்கள்பதிக்கப்பட்ட இடத்தில் படையல்கள் படைக்கப்படும்.மேலே வெள்ளைகட்டப்படும். தற்சமயம் கட்டிடமாகி சைவக்குருக்கள் பூசை செய்கிறாா். எனது நண்பர் ஒருவர் புவனேஸ்வரி அம்மன் நாச்சிமார் கோயிலெனக் குறிப்பிட்டார். சித்திரா பௌர்ணமியில் பொங்கல் நடைபெறும். எனவே சிறு கட்டுரையொன்று எழுதுவதற்கு ஏற்றதகவல்களை பெற்றுக்கொண்டேன்.பேராசிரியர் அவாகளுக்கு மனமார்ந்த நன்றிகள்.
  தங்கள் அனுமதியைஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

  • எங்களுக்கு தீப்பாஞ்ச நாச்சியார், தீப்பாய்ந்த அம்மன் என நம் கற்புக்கரசிகளை வழிபடும் பழக்கம் கமுதி முதுகளத்தூர்,இராமநாதபுரம் பகுதியில் உள்ளது நன்பரே. இலங்கையில் இருந்த எங்களது மறக்குல மாதரின் ஈழநாட்டின் தடத்தை நெடுநாளாக மறந்து விட்டோம். இதைப்பற்றி இன்னும் எனக்கு தெரிந்தால் பதிவிடுகின்றேன்.தங்கள் இடுகைக்கு நன்றி. தங்களது ஆய்வு தொடர வாழ்த்துக்கள்.மகிழ்ச்சி

  • தங்கள் பருத்தித்துறையை சார்ந்த வியாபாரிமூலை பூர்வீகமாக கொண்டவராகையால் இந்த கட்டுரையை இன்னும் ஆழமாக எழுதலாம். அப்படி எழுதினால் எனக்கு அனுப்புங்கள் நான் தங்களது பெயரில் வெளியிடுகின்றேன்.

   நன்றி -செம்பியன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *