பழம்பெரும் மொழி

யாமறிந்த மொழிகளிலே
தமிழ்மொழிபோல்
இனிதாவதெங்கும் காணோம்…யென்று கூறியவர்
சுப்ரமணிய பாரதியார்…

இந்திய
பழம்பெரும் மொழிகளில்
தனிப்புலமை பெற்றிருந்தவரே இப்படி கூறியிருக்கிறார் என்றால்

நம்
மதுரத் தமிழ்மொழியின் அருமைதனை உனராதவரும் உணரட்டும்…

பூமியில்
மனிதனாலே
மொழிகள் தோன்றின..

அவ்வாறு தோன்றின இந்திய
பழம்பெரும் மொழிகளில்
இன்று

நான்கு வேதங்களையும்
மனிதரில்
நான்கு வர்ண சாதிகளின் நிலைப்பாடுகளை
மட்டும் உள்ளடக்கிய
சமஸ்கிருதம்
மொழி மட்டுமே
மிகச்சிறந்ததாக

இந்திய
வடபுலத்தின் பின்புலம்வந்த
சில சுயநலவாதிகளால் முன்னிலை படுத்தப்படும் சமஸ்கிருத மொழியைவிட

எங்கள்
மதுரத்தமிழ் மொழியின் சிறப்பையும்
அதன்
பழமையின் காலம் ஏதுவேயெனவும் அறிந்திடுவீர்…

நான்கு வேதங்களையும்
நான்கு
மனிதசாதி வர்ணங்களையும் புகழ்விளக்கி கூறும் சமஸ்கிருத மொழியைவிட

எங்கள் மதுரத்தமிழ் தென்னவ தேவர்களின்
சங்கத்தமிழ் கூறும் மிகமுக்கியமான விடயங்கள் இவை…

ஆதியில்
ஜவகைநிலங்களில்
அதில் வாழ்ந்த மனிதர்களின் வாழ்க்கை
முறைகளையும்
அவர்களின்
நிலைப்பாடுகள் அத்தனையும்
மிகத் தெளிவாகவும்
தந்து

இந்து சமயத்தின்
வாழிபாடு முறைகளை
ஆதியில் கண்டு

கல்லையும் மரத்தையும்
மலையையும் கடலையும் சூரியனையும்
கடவுளாக பாவித்து
ஆதி இறைவன் சிவனே
தன் முதல் தமிழ்சங்கத்தில் பங்குகொண்டான் என்றொரு சிறப்பையும்கொண்ட எங்கள் தமிழ்மொழியே

உலக மொழிகளில் அத்தனையும் விட
மிகச்சிறந்தது…

உலகில்
பழம்பெரும்மொழிகள் அனைத்தும்
போர்க்குடி தலைவனை தெய்வமாக கொண்டே
தேவனாக பாவித்து
புராணங்களை படைத்திருந்திருக்கும் நிலையில்

கல்தோன்றி மண்தோன்றா காலத்தே
வாளோடு முன்தோன்றிய
எங்கள்
மதுரத் தமிழ் மறவர்களையும்
மழுவர்களையும்
போர்ப்படை வீரர்களாக அழைத்துக்கொண்டு
வட இமயத்தின்
இமாசலத்தின் மீதும் போர்செய்த
மழுவம் ஏந்திய ஆதிஇறைவன் சிவனின் மீது பக்திகொண்ட
மறத் தமிழருக்கு
தாய்
தமிழ்மொழியை
சிறப்பிக்கவே
ஆதிபகவன் சிவனின்
ஆணைக்கேற்ப்ப
அகத்தியனும் தென்பொதிகை வந்தான்
தென் மதுர பாண்டியர்களுக்கும் குருவானார்…

ஆதி இறைவன்
மகாதேவர் சிவனுக்கே போர்த்தொண்டுபுரிந்த
எங்கள் தமிழ்தேவர்களின்
மதுரத் தமிழ்மொழியின்
சிறப்பும்
அதன் தொன்மையையும்

இறைவன் அவதாரத்தை மட்டும் புகழும்
எபிரேயம்
கிரேக்கம்
போன்ற
மொழியினை
கொண்டாடுவோர் களால்
எங்கள் தமிழ்மொழியின்
சிறப்பையும்
அதன் தொன்மையையும்
உனர்ந்திடமுடியாது…

This entry was posted in வரலாறு and tagged . Bookmark the permalink.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *