விஜய நகர விட்டலராய நாயக்கர் வெங்கலராஜ நாடார் ஆன கதை.

வரலாறு என்பது இட்டு கட்டுவது அன்று, இயந்து காட்டுவது அன்று, திரிப்பது அன்று, சரடுவிடுதல் அன்று உண்மையை வெளிப்படுத்துவது ஒன்றே வரலாறு ஆகும். அது நிலை மெய்யின் சான்றே  தமிழ் கருத்தின் பொருளின் படி கதை விடுதலும் திரித்தலும் இல்லாத ஒன்றை இருப்பது போன்றும் இருப்பதை வேறு விதமாக கட்டுகதை புரிவதும் வரலாறு ஆகாது. தமிழக வரலாற்றில் 18-ஆம் நூற்றாண்டுக்கு முன் வரலாற்றிலே இடம் பெறாத ஒரு கூட்டம் தன்னை மூவேந்தர் பரம்பரை என்றும் சத்திரியர் என்றும் கூறிக்கொண்டுள்ளனர்.

ஆனால் தமிழ்ச்சமூகத்தின் பல அடுக்குகளிலும் புறக்கணிக்கப்பட்ட இந்த அப்பாவி கூட்டத்தில் சில பொய்ப்புகழ் விரும்பிகளால் உருவாக்கப்பட்ட இன்றைய வரலாற்று பித்தலாட்டங்கள் சிலவற்றை முன்வைப்பதே இக்கட்டுரை. தானே தமிழனுக்கு மூதாதையனாக,தானே தமிழ் அரசு காவலனாக செயல்பட்டதாக ராஜா வேசமும் சூட வேண்டி போலி கதைகள் எழுத வரலாற்றின் உண்மையை மறைக்க வேண்டி கதை படைக்கும் பணபலம் கொண்ட சிலர் அடங்கிய இக்

குழுவின் கதையையும், இக்குழுவின் காசுக்காக போலியாக வரலாறு புனையும் கற்பனைக்கதாசிரியர்களையும் சற்று இங்கு கவனிப்போம்.

 

ஏதோ சில வருடங்களுக்கு முன் தாங்கள் பாண்டிய மரபினராகவும்,சேர மரபினராகவும் வாழ்ந்த காலத்தில் சோழர்கள் களப்பிரர் என்றும் அந்த களப்பிர சோழர்களான முக்குலத்தோர் தம் மீது படை எடுத்து வந்து தங்களை வீழ்த்தியதாகவும் இருந்தாலும் பிற்காலப்பாண்டியர்களாக மீண்ட தம் இனத்தவர்களை நாயக்கர்களின் துணை கொண்டு வீழ்த்தி தம் அரசையும் உரிமைகளையும் வீழ்த்தியதாக கடந்த2008 க்கு முன் வந்த வலை தளவரலாறுகளில் கதை விடுத்த ஏதோ சான்றார் என்று தனது பெயரை மாற்றிக் கூறிக்கொள்ளும் கூட்டத்தின் இன்றைய வரலாற்றின் கண்டுபிடிப்பு எப்படி என்றால் சேர சாண்றார்,சோழசான்றார்,பாண்டிய சான்றார்,பல்லவ சான்றார்,ஆய் சான்றார்,வேளிர் சான்றார்,சளுக்க சான்றார் என்று கதைகட்டி வரும் இவர்களின்  கதைகள் கூறும் வித்தை  கின்னஸ் சாதனையை மிஞ்சும். நிறைய வரலாற்று கற்பனை கண்டுபிடிப்பு கதைகள்  இவ்விதம் தொடர்கிறது. மேற்கொண்ட கதையை பின்னால் காண்போம்.

விஜயநகர அரசவம்சம் சாளுவ,துளுவ வம்சமா அல்லது சாணார வம்சமா?

தன்னை வீழ்த்தி தன் பாண்டிய சாம்ராஜ்யத்தை தோற்கடித்தாக கதை விடும் சாணார்கள் கயத்தார் பாண்டியனை வீழ்த்திய வெங்கல ராஜனை தன் மூதாதையராக கூறுகின்றனர். ஆனால் இந்த வெங்கல ராஜன் தெலுங்கு சோழரின் வழி வந்தவனாம். இந்த வெங்கல ராஜன் வாய்மொழிக் கதையாக இருந்த விஷயத்தை வரலாறாக மாற்றும் முயற்சியில் ஈடுபட்டிருக்கும் திரு.எஸ்.இராமச்சந்திர ஐயர்(அல்லது) நாடார் என கூறிக் கொள்ளும் நபரின் கற்பனை திரிபு வரலாற்று கதைகளில்  இங்கு சிலவற்றை பார்ப்போம்.<

சில கிராமத்தில் செல்லுமிடத்தின் வழியைக்கேட்டால் தலை சுற்றும்படி புரியாதபடி கிழக்க போய் தெக்க வலைஞ்சு மேற்க போய் வடக்க திரும்பி குழிக்குள்ள இறங்கி மரத்துல ஏறி முப்பதாவது மெச்சுவீட்டுக்கு வடகிழக்கு திசைதிரும்பினு” ஒருவர் வழி கூறினால் எப்படி இருக்குமோ அது தான் இவரின் வரலாறு லேசுபட்ட ஆளுக்கு புரியாது ஆனால் இந்திய வரலாற்றில் ஏன் உலகவரலாற்றிலுள்ள அனைத்து பெயருடனும் சம்ஸ்கிருதத்தையும் குழப்பி பூசிவிடுவார்.

இராஜ இராஜ சோழரின் வழி வந்த தெலுங்கு? சோழர்?வெங்கலராஜா கதை:

இதில் சில கவனிக்க தகுந்த வரிகள் மட்டும் வெங்கலராசன் வரலாற்றை முன்னிறுத்தி ஓர் ஆய்வு எஸ். இராமச்சந்திரன் வில்லுப்பாட்டுக் கதையும் கல்வெட்டுக் குறிப்புகளும் கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் என்ற ஊரைச் சேர்ந்த ஆறுமுகப் பெருமாள் நாடார் என்பவரால் “வலங்கை நூல் எனும் வெங்கலராசன் காவியம்” என்ற தலைப்பில் 1979ஆம் ஆண்டில் இவ்வில்லுப்பாட்டுக் கதை பதிப்பிக்கப்பட்டுள்ளது. கொல்லம் ஆண்டு 781 (கி.பி.1605)இல் இக்கதைப்பாடல் அகஸ்தீஸ்வரம் ஆறுமுகப் புலவர் என்பவரால் இயற்றப்பட்டது என்பதற்கான அகச்சான்று பாடலில் உள்ளது. வில்லுப்பாட்டின் முற்பகுதியில் “வலங்கை உய்யக் கொண்டார்கள்” என அழைக்கப்பட்ட சான்றோர் குல வீரர்கள் பற்றிய புராணக்கதைகளும் வரலாற்றுச் செய்திகளும் கால ஒழுங்கின்றிக் கலந்து எழுதப்பட்டுள்ளன.

அதன்பிறகு ஓரளவு வரலாற்றுச் சாயல் புலப்படத் தொடங்குகிறது. காந்தம ரிஷி மக்களாகிய வலங்கைத் தலைவர்கள் சோழநாட்டில் கோட்டை எனுமிடத்தில் ஆட்சி புரிந்து வருகின்றனர். சோழ அரசனுடன் ஏற்பட்ட பூசலில் எழுநூற்றுவர் எனப் பெயர் பெற்ற வலங்கைத் தலைவர்கள், கோட்டையிலிருந்து இடம் பெயர்ந்து செல்கின்றனர். வலங்கைத் தலைவர்களுள் ஒருவன் கண்டி ராஜ்யத்துக்குச் சென்று ஆட்சியமைக்கிறான்; ஒருவன் தொண்டை மண்டலத்தை ஆளத் தொடங்குகிறான்;மற்றொருவன் இலங்கை ராஜ்யத்தை ஆளத் தொடங்குகிறான்;இன்னொருவன் இலங்கையிலுள்ள இளம்பனைக்கா எனப்படும் இடத்துக்குச் சென்று கள்ளிறக்கும் தொழில் செய்து பெருஞ் செல்வனாகிறான்.
//////இளம்பனைக்காவிலிருந்த அவனது வம்சத்தைச் சேர்ந்த வீரசோழ நாடான் என்பவன் ரஸவாதம் கற்றுப் பொருள் சேர்த்து அதிகாரமும் செல்வாக்கும் பெறுகிறான். அவனுக்கு வெள்ளைக்காரனின் நட்பு கிட்டுகிறது. ////
////வீரசோழ நாடான், “சாணான் காசு” எனப்படும் பொற்காசு அடித்துப் புழக்கத்தில் விடுகிறான். தனது உருவத்தைக் காசில் பொறித்து வெளியிடுமாறு வெள்ளைக்காரன் கேட்கிறான். வீரசோழ நாடான் மறுத்ததால் வெள்ளைக்காரன் வீரசோழ நாடானைக் கொன்று விடுகிறான். வீரசோழ நாடானின் மகன் வெங்கலராசன், எஞ்சிய குடும்ப உறுப்பினர்களுடன் தப்பி உயிர் பிழைத்துக் கப்பலேறித் தென் தமிழகக் கடற்கரைக்கு வருகிறான்.

குலப் பெருமிதவுணர்வு, அதிகாரத்தை இழந்தாலும் அந்தஸ்தை இழக்க விரும்பாமை, பரிதாப மரணம் ஆகிய அவல நாடகங்களுக்குரிய கதைத்தன்மைகள் கொண்டிருந்ததால் இக்கதைப்பாடல் “வெங்கலராசன் காவியம்” என்ற பெயரில் சான்றோர் குலமக்களிடையே 17, 18, 19ஆம் நூற்றாண்டுகளிலும் 20ஆம் நூற்றாண்டின் இடைப்பகுதி வரையிலும் வில்லுப்பாட்டாகப் பாடப்பட்டு வந்தது. சாமிக்காட்டு விளையில் வெங்கலராசன் அரண்மனை இருந்த இடம் முதலிய தடயங்கள் உள்ளன. வெங்கலராசன் கூட்டம் என அழைத்துக் கொள்ளும் சான்றோர் குலப் பிரிவினர் அப்பகுதியில் உள்ளனர்.
//////////////நெல்லை மாவட்டம் நான்குநேரி வட்டம் திருக்குறுங்குடியில் நம்பியாற்றுப் படுகையில் அணிலீஸ்வரம் என்ற பெயருடனமைந்த சிவன் கோயில் உள்ளது. அக்கோயிலில் கி.பி. 1551ஆம் ஆண்டில் வெங்கலராசா சில திருப்பணிகளை மேற்கொண்டார் என்பதை உணர்த்தும் வகையில், “விரோதிகர வருஷம் மார்கழி மாசம் 3 தேதி ஸ்ரீமன் மகாமண்டலேசுரன் ராமராசா விட்டல தேவ மகாராசாவின் காரியத்துக்குக் கர்த்தரான வேலம் பாட்டி வெங்கள தேவ மகாராசா” என்ற வாசகம் கல்வெட்டாகப் பொறிக்கப்பட்டுள்ளது. ///////////////////
16ஆம் நூற்றாண்டைய தென்பாண்டி நாட்டுச் சூழலில் வெங்கலராசன் வரலாற்றின் பொருத்தப்பாடு:
. 1546ஆம் ஆண்டில் ராமராய விட்டலர் கன்னியாகுமரியை நோக்கிப் படையெடுத்து வந்த போது அவருடன் வந்த வடுகப் படைப் பிரிவொன்றுக்குத் தலைமை தாங்கியவன்1;வேலம்பாடு அல்லது வேலம்பாட்டி என்ற ஊரின் பெயரைக் குடும்பப் பெயராகக் கொண்டவன் என்பன போன்ற விவரங்கள் கல்வெட்டுகளால் தெரிய வருகின்றன. வேலம்பாட்டி என்ற ஊர் காளஹஸ்தி (காளத்தி)க்கு மேற்கே அமைந்துள்ளது. இவ்வூருக்கு அருகில் வெங்கலராஜா கண்டிகை என்ற ஊரும் உள்ளது. எனவே வெங்கலராசனின் ஊர், இந்த வேலம்பாட்டியே என்பது உறுதியாகிறது.

ஆனால் வில்லுப்பாட்டு, //////////////////////////////////////////////////// வெங்கலராசன் வீர சோழநாடான் மகன் என்றும் இலங்கையிலுள்ள இளம்பனைக்காவை ஆண்டவன் என்றும் வெள்ளைக்காரனால் துரத்தப்பட்டவன் என்றும் குறிப்பிடுகிறது.//////////////////////////////////////////////////////////
///////////////////////இதுவே முதன்மையான முரண்பாடாகும்.

ஆனால்,விஜயநகர அரசர்கள், கி.பி. 15ஆம் நூற்றாண்டின் இடைப்பகுதியிலிருந்து கி.பி. 16ஆம் நூற்றாண்டின் இடைப்பகுதி வரை, உறையூர் (திருச்சிராப்பள்ளி) முதலிய சோழநாட்டுப் பகுதிகளில் தெலுங்குச் சோழர் குலத்தைச் சேர்ந்தவர்களை மண்டலேஸ்வரர்களாக நியமித்திருந்தனர் என்பதையும் அவர்களுள் சிலரை இலங்கையில் தமது பிரதிநிதிகளாக நியமித்திருந்தனர் என்பதையும் நாம் அறிந்து கொண்டால் இம்முரண்பாடு வெறும் வெளித்தோற்றமே என்பது புலனாகும்.
////////////////////////////////////////////////////////////////////////// வெங்கலராசனின் முன்னோர்கள் சோழராட்சிக் காலத்தில் கோட்டை எனுமிடத்தில் ஆட்சி செய்தனர் என்ற புராணமும் வரலாறும் கலந்த வில்லுப்பாட்டுக் குறிப்புகூட ஆந்திர மாநிலத்திலுள்ள அமராவதிப் பிரதேசத்தைக் குறிக்கக்கூடும். “கோட்டை அரசர்கள்” என்றே அமராவதிச் சிற்றரச மரபினர் தெலுங்குதேச வரலாற்றாய்வாளர்களால் குறிப்பிடப்படுவர். “தீபாள திண்ணே” என்பது அமராவதி அமைந்துள்ள மலையைக் குறிக்கும். தெலுங்குச் சோழ அரச மரபினைச் சேர்ந்த விஜயநகர மண்டலேஸ்வரர்கள் சிலர் “அபிநவ தீபாளி வல்லப” எனக்குறிப்பிட்டுக் கொள்வதைத் தமிழ்க் கல்வெட்டுகளில் காணலாம்.

3 எனவே வெங்கலராசனின் முன்னோர், ///////////////////////////////////////////////////////////////////////////

இலங்கையின் சில பகுதிகளில் அதிகாரம் செலுத்திய தெலுங்குச் சோழர் குலத்தவர் என நாம் முடிவு செய்வது தவறாகாது. வெங்கல என்ற பெயர்கள் வெங்கல் (வெம்மையான மலை), அதாவது வேங்கடம் என்று பொருள்படக்கூடும். வெங்கல்ராவ் என்பது போன்ற ஆட்பெயர்கள் இன்று வரை ஆந்திர மாநிலத்தில் வழக்கிலுள்ளன. //////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////

இதோடு இந்த கதைப்புராணத்தை நிறுத்துவோம். உண்மை நிலையை முன் வைப்போம். அதிர்ச்சிக்குரிய உண்மை ஒன்று சான்றார் குல மூதாதையர் என இவர்கள் விளம்பரப்படுத்தும் அந்த வெங்கலராஜன் உண்மையில் கன்னட தளபதி. வெங்கலராசன் என்றவன் கன்னட நாட்டு தளபதி என தென் காசிப்பாண்டியரின் குறிப்புகள் மூலம் அறியப்படுகின்றது. இந்த வெங்கலராசன் என்னும் பெயர் விஜயநகர அரச வம்சத்தினரின் புனைப்பெயர்களில் ஒன்று இதைப்பற்றி நிறைய கல்வெட்டு கூறுகின்றது. வெங்கல ராஜன் என்னும் பெயர் திருப்பதி வெங்கடலாஜலபதி கடவுளின் பெயரே.

இந்த வெங்கல ராஜன் என்னும் மற்றோர் பெயருடன் விளங்கியது விஜயநகர அரசரின் உறவினரும் தளபதியுமான விட்டலராயர் அவர்கள். விசுவநாதனை தெற்கே மதுரைக்கு அனுப்பிய விஜநகர மன்னன் அவரை கண்காணிப்பதற்கு விட்டலரை மகாமண்டலேஸ்வராக தென்பகுதிக்கு அனுப்பினார். வந்த விட்டலர் விசுவநாதனை தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்து தமிழகத்தின் ஏக மண்டலேஸ்வரர் ஆனார்

விட்டலராயர் சோழர் ஆன கதை:

தெலுங்கு சோழர் தான் தான் எனக்கூறும் கூட்டத்தினர் இங்கு சிறு குறிப்புகளை கவனிக்கவும். இராஜராஜ சோழனை புகழ்பாடும் நாம் மற்றோரு மன்னனை பற்றி மறந்து விட்டோம். அவர்தான் சடையவர்ம சுந்தர பாண்டிய தேவர். தென்நாட்டில் காணப்பட்ட சளுக்கர்,இராஸ்டிரகூடர்,வேங்கியர்,இன்னும் தெலுங்கு,கன்னட,சேர,சோழ இன்னும் வேளிர் அரசுகள் என்ன ஆயினர் எப்படி அழிந்தனர் என்னும் வரலாறு மறைக்கப்பட்டது. சடையவர்ம சுந்தர பாண்டியனுக்கு தென்-இந்திய அரச குலங்களின் காலன் என்னும் பட்டமே கொடுக்கலாம் இத்தனை அரசுகளை உறுதெரியாமல் வாரிசு இல்லாமல் அழித்தது சுந்தர பாண்டிய தேவனே. இதனாலே இராஜராஜ சோழனை போல் நிறைய சிவாலயங்களை எழுப்பினார் சுந்தர பாண்டியன். இவரது காலத்தில் சேர பெருமாள்களின் அரசு முழுவதுமாக அழிக்கபட்டு பாண்டிய வம்சத்தை சார்ந்த ஒருவர் பெருமாளாக உட்காரவைக்கபட்டார் என இன்றைய கேரள வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். சோழ வம்சம் முழுவதுமாக அழிக்கப்பட்டது. இவர்களின் வம்சத்தில் எவரும் எஞ்சவில்லை. தெலுங்கு சோழனுக்கு பின் காடவர் குலத்தை சார்ந்த கோனேரி ராயன் ஒருவரே தன்னை சோழன் எனக்கூறிக்கொண்டு ஆண்டு வந்ததாக பல கல்வெட்டு கூறுகின்றது. விட்டலராயர் இந்த கோனேரி ராயனை கொன்று தன்னை விட்டலச் சோழன் என தன்னை கூறிக்கொண்டு தன் வாரிசுகளை விட்டலசோழரின் வம்சம் என சோழநாட்டின் பிரதிநிதியாக விசுவந்தாதருக்கும் திருச்சி பகுதி ஆளுனருக்கும் எதிராக கொண்டுவந்தார்

தென்காசிப் பாண்டிருடன் போர்:

விசுவநாதருக்கு பின் விட்டலராயர் தெண்காசிப்பாண்டிரான கயத்தாறு வெட்டும் பெருமாள் பாண்டியனுடன் போர் தொடுத்து அவனை வீழ்த்தி வள்ளியூருக்கு விரட்டினான் என கல்வெட்டு கூறுகிறது. இப்படி பாண்டினுடன் போர் தொடுத்த விட்டலராயர் தான் வெங்கலராஜன் என ஒரு கல்வெட்டு கூறுகின்றது. இன்றைக்கும் தெண்காசி கயத்தார் பகுதிகளில் கானப்படும் கன்னடியன் கால்வாய்,கன்னடியன் சத்திரம்,கன்னடியன் விளக்கு என பல பெயர்களில் காணப்படுகிறது. இந்த கன்னடியன் தான் வெங்கலராஜனான விட்டலரின் பெயரே ஆகும்.

விட்டலராயரான வெங்கலராஜன் தெலுங்கு சோழரா?

திரு. எஸ்.இராமசந்திரன் விட்டலராயர் வேறு வெங்கலராஜன் வேறு எனக் கூறி வெங்கலராஜனை சோழன் என கூறி அவன் தன் பரம்பரை என கூறுகிறார். முதலில் விஜயநகர வேந்தன் தெலுங்கு சோழனா? அவன் தெலுங்கு சோழர் வம்சம் என கூறுவதற்கு என்ன ஆதாரம் இருக்கிறது?. வெங்கலராஜனும் விஜயநகர் ராயரின் பரம்பரையே என ஏதுக்கள் பல உள்ளன.  தெலுங்கை சார்ந்த இருக்கும் நபரை தெலுங்கு சோழர் என கதை கட்டுவது காசியில் திரிபவனெல்லாம் சன்னியாசி என கதை கட்டுவதற்கு சமமாகும். எனவே விட்டலர்,கிருஷ்ணதேவராயர்,வெங்கலராவை தெலுங்கு சோழர் என கூறுவது அர்த்தம் பொருத்தமற்றது. வெங்கலராஜன் விட்டலர் அல்ல என்று தடாலடியாக மறுத்தாலும் அவர் விஜயநகர வம்சத்தை சார்ந்தவர் என்பதற்கு நிறைய ஆதாரம் உள்ளது. ஆகவே அவரை தெலுங்கு சோழர் என்பது பொய்யாய் போகின்றது.

விட்டலராயரின் வீழ்ச்சி:

விட்டலராயர் சோழ மற்றும் பாண்டிய மண்டலத்தின் ஏக மண்டலேஸ்வரராக இருந்த பின்னர். பிற்க்கால நாயக்க அரசர் மற்றும் மராட்டிய அரசர்களால் வீழ்த்த பட்டு ஆட்சி அதிகாரத்தில் இருந்து நீக்கப்பட்டார். இதில் விட்டல சோழர் பரம்பரை என கூறிக்கொள்ளும் பரம்பரையினர் இன்னும் இருந்து வருகின்றனர். அவர்கள் தன்னை சோழர் என இன்று கூறிவருகின்றனர். தெண்காசியின் அருகில் இருந்த இன்னோர் கன்னட அரசு பாண்டிய மன்னரின் தளபதியான சிங்கம்பட்டி ஜமீனால் வீழ்த்தபட்டு அப்பகுதியில் இருந்து அகற்றப்பட்டனர். இதற்கு சிங்கம்பட்டி ஜமீனின் வரலாறே சான்று. இதன் பின் விட்டலராயரின் பரம்பரை அஸ்தமானது.

வெங்கலராஜன் நாயக்கரா? அல்லது நாடாரா?

இதற்கு விடைதேடினால் மிகவும் வேடிக்கையாக தான் இருக்கும். தன்னை பாண்டியர் பரம்பரை எனக்கூறிக்கொள்ளும் நாடார்கள் பாண்டியனை வீழ்த்திய கன்னட வடுக மன்னனை தன் பரம்பரையினன் என கூறுவது நகைப்பிற்குரியது. உண்மையில் இவர்கள் வெங்கலராஜனால் பாண்டியனை வீழ்த்த ஈழத்தில் இருந்து தருவிக்கப்பட்ட ஈழவர் வகுப்பான நளவர் என்னும் ஆதி சங்க இலக்கியத்தில் கூறும் பனை தென்னை தொழில் செய்யும் நுளையர் வகுப்பாளரே தவிர இவர்கள் வெங்கலராஜன் பரம்பரையாக இல்லை. தெலுங்கு நாயக்கர் வகுப்பார் தங்களது ஆதி தளபதி ஒருவனை இப்படி நாடாராக வரலாறு திரிப்பதை அறியாமல் இருக்கின்றனர். இப்படி வெங்கலராவ் அல்லது விட்டலராவ் என்ற பெயரை கொண்டவர் இன்று நாடார் என்றால் விஜநகரத்தை ஆண்ட கிருஷ்ணதேவராயர் வலங்கை உய்யகொண்ட சத்திரிய நாடாரா? என நாயக்கர்கள் தான் விடை கூறமுடியும்.

பாண்டியனை வீழ்த்திய கன்னட தளபதி வெங்கலராஜனுக்கு உதவியாக வந்த  ஈழவ நுளையர்கள் பாண்டியனா?

சாணார் என்பது நட்டாச்சி செய்த நாடார்களாம் ஆனால் 14-ஆம் நூற்றாண்டு சங்கரங்கோவில் பராக்கிறம பாண்டிய தேவர் கல்வெட்டில் நாடார் என குறிப்பிடாது சாணார் எனவே குறிப்பிடுகின்றது. இதில் சாணாருக்கும் பறையருக்குமான சண்டையில் பாண்டியர் அழித்த தீர்ப்பை பற்றிய கல்வெட்டு. எஸ்.இராமசந்திரன்,பிரவாகன் இவர்கள் கூறட்டுமே எங்கே பாண்டிய நாடார் என உள்ளது.

 

வெண்கலராஜனை எதிர்த்து பாண்டியரின் படைவீரர்களாக கொண்டையங்கோட்டை மறவர்களே போரிட்டுள்ளனர்.இதில் ஆயிரக்கணக்கான மறவர்கள் இறந்துள்ளனர்.இதில் வடுக படைகளின் குதிரையை குத்தி மாண்ட 10 மறவர்களுக்கு வெட்டும் பெருமாள் பாண்டியன் நடுகல் எடுத்துள்ளான்.இது இன்று பாளையம்கோட்டை அருங்காட்சியகத்தில் உள்ளது.இந்த நடுகல்லில் தெளிவாக இவ்வூர் கொண்டையன்கோட்டை  மறவர் என 10 தளபதிகளின் பெயர்களும் குறிப்பிட பட்டுள்ளது “வடுக குதிரையை வெட்டிய இவ்வூர் கொண்டையங்கோட்டை மறவன்  ஆறு புலித்தேவன் பட்டான் என ஒரு கல்வெட்டு வரி” சுட்டுகிறது. எனவே பாண்டியன் யார் பாண்டியப்படை வீரர்கள் யார் என்பது பல வரலாற்று ஆய்வாளர்  அறிந்ததுவே.

இன்று தன்னை பாண்டியன் என தம்பட்டம் அடித்து தென்காசிக் கோயிலை கும்பாபிசேகம் செய்து தங்களை பாண்டிய வாரிசு எனப் பிழையாகக் கூறிக்கொண்டும் பாண்டியனை வீழ்த்திய வடுக மன்னனின் வம்சமும் தான் தான் எனவும் பலவேசம் போடுவதில் புரியும் எவ்வகையில் உண்மைத்தன்மை கொண்டது இவர்களின் வரலாறு என்று பாருங்கள். இதற்கு காலமே பதில் சொல்ல வேண்டும்.

This entry was posted in வரலாறு and tagged . Bookmark the permalink.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *