ஊர்க்காடு ஜமீன்

        (நெல்லில் முத்து வேய்ந்த சிவனைந்த பெருமாள் சேதுராயர்)

ஊர்க்காடு ஜமீன் அம்பசமுத்திரம் அருகில் உள்ள ஊர்க்காடு ராஜா என்றாலே திக்கெட்டிலும் பெயர் பெற்றது.18 ஊர்களையும் தன் கட்டுக்குள் வைத்து ஆட்சி செய்து வந்தனர்.

தற்போது இந்த ஜமீன் வரலாறு வரிசைப்படி எதுவும் தெரியவில்லை ஆனால் அந்த ஊரை சென்று பார்த்தால் அனைத்து இடங்களிலும் ஜமீன் விட்டுச் சென்ற எச்சங்கள் உள்ளன.

இங்கு ஒரு காலத்தில் ஊரை சுற்றி ஐந்து பகுதியிலும் தாமிரபரணி ஓடி இருக்கிறது அதற்கான சுவடுகள் உள்ளன

வரலாற்று சுவடுகளையும் ஆன்மீக தகவல்களையும் இப்பகுதி மக்கள் மணிக்காக பேசிய வரலாறுகள் நிறைய இருக்கின்றன.

oorkaadu3

ஊர்க்காட்டில் இருந்த பட்டத்து அரன்மனை, கோவில் அரண்மனை, பூஜை அரன்மனை உள்ளிட்ட 5 அரண்மனைகள் இருந்துள்ளன. இதில் கோவில் அரண்மனை மட்டும் தற்போது இருந்துள்ளது. மற்ற அரண்மனைகள் எல்லாம் தரைமட்டமாகி விட்டன.

 

சுமார் 20 வருடங்களுக்கு முன் இந்த அரண்மனைகளைக் கட்டிடங்களை இடித்து எண்னெற்ற மரசாமாண்களை எடுத்து சென்றனர். அதன்பின் ஒன்றிரண்டு இடத்தில் கூட அரண்மனை இருந்தது காணாமல் போய்விட்டது. இதற்கிடையில் கோவில் அரண்மனை மட்டும் கோவில் மட்டும் கோவில் முன்பு கம்பீரமாக அழகுடன் இருக்கிறது. இந்த அரண்மனையில் ஒரு சேதுராயர் வசித்து வருகிறார்.இந்த அரன்மனை பூமனி என்னும் திரைப்படத்தி படமாக்கப்பட்டது. இந்த ஊர்க்காடு ஜமீனில் இருப்பவர் நெல்லில் முத்துவேய்ந்த சேதுராயர் என்று பெயர் பெற்றவர். இவர்கள் மறவர் இனத்தில் “கொத்து தாலி மறவர்” பிரிவை சார்ந்தவர்கள். இந்த பெயர் வரக்காரனம் இவர்கள் சங்க காலத்தில் கூறப்படும் மலையமான் மன்னர்களின் பெயர்கள் சேதுராயர் என சில கல்வெட்டுகளில் வருகின்றது.

 

வீரமே துணையாக` என்று தொடங்கும் மெய்க்கீர்த்தியை உடைய இராஜகேசரி வர்மன் திருபுவனச் சக்கரவர்த்தி குலோத்துங்க சோழ தேவரின் 46 ஆவது ஆட்சியாண்டில் கீழையூர் மலையமான் நானூற்றுவன் மலையமானாகிய இராஜேந்திரசோழ சேதுராயன், இத்திருக்கோயிலில் தட்சிணாமூர்த்தியை எழுந்தருளுவித்து, அத் தேவர்க்கு நித்திய வழிபாட்டிற்கும் விளக்கினுக்கும் வீரசோழனல்லூர் நிலங்களின் வரிகளைக் கொடுத்துள்ளான்.வரலாற்று சுவடுகளையும் ஆன்மீக தகவல்களையும் இப்பகுதி மக்கள் மணிக்காக பேசிய வரலாறுகள் நிறைய இருக்கின்றன.

ஊர்க்காட்டில் இருந்த பட்டத்து அரன்மனை, கோவில் அரண்மனை, பூஜை அரன்மனை உள்ளிட்ட 5 அரண்மனைகள் இருந்துள்ளன. இதில் கோவில் அரண்மனை மட்டும் தற்போது இருந்துள்ளது. மற்ற அரண்மனைகள் எல்லாம் தரைமட்டமாகி விட்டன.

சுமார் 20 வருடங்களுக்கு முன் இந்த அரண்மனைகளைக் கட்டிடங்களை இடித்து எண்னெற்ற மரசாமாண்களை எடுத்து சென்றனர். அதன்பின் ஒன்றிரண்டு இடத்தில் கூட அரண்மனை இருந்தது காணாமல் போய்விட்டது. இதற்கிடையில் கோவில் அரண்மனை மட்டும் கோவில் மட்டும் கோவில் முன்பு கம்பீரமாக அழகுடன் இருக்கிறது. இந்த அரண்மனையில் ஒரு சேதுராயர் வசித்து வருகிறார்.இந்த அரன்மனை பூமனி என்னும் திரைப்படத்தில் படமாக்கப்பட்டது. இந்த ஊர்க்காடு ஜமீனில் இருப்பவர் நெல்லில் முத்துவேய்ந்த சேதுராயர் என்று பெயர் பெற்றவர். இவர்கள் மறவர் இனத்தில் “கொத்து தாலி மறவர்” பிரிவை சார்ந்தவர்கள். 

“நெல்லில் முத்துவேய்ந்த” என்னும் பெயர் இப்பகுதியின் செழிப்பு தாமிரபரனிக் கரையில் அமைந்த ஜமீன் என்பதால் மூன்று போக வளங்கொழித்தால் இப்பெயர் பெற்றனர் இவர்கள் ஊர்க்காடு ஜமீனை ஆண்டுவந்தவரில் மீனாட்சி சுந்தர விநாயக பெருமாள் என்றழைக்கபட்ட ஜமீந்தான் கடைசி அரசர். அவருக்கு பின் எல்.கே.ரானி அரசாட்சிக்கு வந்துள்ளார். இறுதி காலத்தில் இந்த ரானி சென்னை அபிராமபுரத்தில் வாழ்ந்துள்ளார். வடபழனி முருகன் கோயிலுக்கு தந்து சொத்தை எல்லம் எழுதி வைத்துள்ளனர்.

நெல்லில் முத்துவேய்ந்த சேதுராயரைப் பற்றி சிறப்பான ஒரு வரலாறு இன்ரளவும் இந்த ஊரில் பேசப்பட்டு வருகிறது. ஊர்க்காடு சிவன் கோவிலைக் கட்டியவரே நெல்லில் முத்துவேய்ந்த சேதுராயர் தான். இதன் காலம் சரியாக தெரியவில்லை இந்த கோயிலின் உள்ளே நுழைந்தவுடன் நந்தியும் கொடிமரமும் உள்ளது. அதன் அருகே இடதுபுற கல்தூங்களில் பிரம்மாண்டமான ராஜ சிலை ஒன்று உள்ளது. இவர்தான் நெல்லில் முத்துவேய்ந்த சேதுராயர். இந்த ராஜ கும்பிட்டபடி இருப்பார். ஆனால் அவரது கை உடைக்கப்பட்டு கானப்படுகின்றது. ஆனால் அந்த சிலை கான அம்சமாக இருக்கிரது அநியாயமாய் ஒரு கலை நயம் கொண்ட சிலையை உடைத்துவிட்டார்களே என வருந்துபடி அந்த பிரம்மாண்டமான சிலைக்கு பின் ஒரு ஆச்சர்யமான கர்ணபரம்பரை கதை உள்ளது.

நெல்லில் முத்துவேய்ந்த சேதுராயர் வயதான காலத்தில் மிகவும் நோயுற்றார். இதனால் ரொம்ப நாட்களாக படுத்த படுக்கையாக இருந்தார் . இனி அவரை யாரும் காப்பற்ற முடியாது என மருத்துவர்கள் கூறிவிட்டதால் தன் உறவினர்கள் அவரை வந்து பார்ட்து சென்றனர். ஆனாலும் இவரது உயிர் போகவில்லை. உயிர் ஊசலாடிக்கொண்டே இருந்துள்ளது. ஏதோ நிறைவேறாத ஆசை இருக்கும் என நினைத்தனர்.எவ்வளவு கம்பீரமாக வாழ்ந்தவர் பல கோவில்களை கட்டியவர் ஏன் அவரது உயிர் சாந்தியுடன் அனையாமல் இப்படி ஊசலாடுகிறது என என்னி ஒரு ஜோதிடரை வரவழைத்து ஜோசியம் பார்த்தனர். ஜோதிடர் ஒரு காரனம் கூறினார். சேதுராயர் கட்டிய கோடிலிங்கேஸ்வரர் கோவிலில் சிவனை வணங்குவது போல் சிற்பம் உள்ளதனால் தான் இவரது உயிர் இன்னும் நீங்காமல் ஊசலாடுகிறது என்றும் அந்த வணங்கும் கையை உடைத்தால் உடனே உயிர் போக வாய்ப்பு உண்டு என ஆருடம் கூறினார்.

அதன்பின்பு ஒரு ஆசாரியை வரவழைத்து அந்த கையை உடைத்தனர் உடனே ராஜாவின் உயிர் பிரிந்தது.

அந்த அளவிற்க்கு கோட்டிலிங்கேஸ்வரர் காக்கும் தெய்வம். சிலைவடிவில் இருந்த ராஜாவின் உயிரை காத்த வள்ளல் ஈசன். இதனாலே அந்த ஊர் மக்கள் தங்கள் குழந்தைகளுக்கு,கோட்டியப்பர்,கோட்டீஸ்வரர் என்று பெயர் வைத்து அழகு பார்த்தனர்.

ஊர்க்காட்டில் நிறையசத்திரங்களை கட்டிப்போட்டிருக்கிறார்கள் இந்த ஜமீண்தார்கள்.இந்த சத்திரங்களுக்கு எந்த வெள்ள பாதிப்பும் ஏற்படாமல் இருந்துள்ளாது..இந்த மக்களுக்கு இந்த சத்திரங்கள் நன்றாக பயன்பட்டு வந்தது.

http://www.dinakaran.com/Aanmeegam_Detail.asp?Nid=10041&cat=3

2015-09-19@ 10:22:10
நம்ம ஊரு சாமிகள் : ஊர்க்காடு, அம்பாசமுத்திரம்
திருக்கோட்டியப்பர் அடையாளம் காட்டிய ஊர்க்காட்டு சுடலைநெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்திலிருந்து சேரன்மகா தேவிக்கு செல்லும் வழியில்  அமைந்துள்ள நீர்வளமும், நிலவளமும் கொண்ட பகுதி ஊர்க்காடு. இங்கு சேதிராயர் குல ஜமீன்தார்கள் ஆண்டு வந்தனர். இவர்கள் ஊர்க்காடு ஜமீன்  என்று அழைக்கப்பட்டனர். தொண்டை நாட்டிற்கும், சோழநாட்டிற்கும் இடைப்பட்ட பிரதேசத்தை நடுநாடு (சேதிநாடு) என்று அழைத்தனர். நடுநாட்டை  ஆண்ட அரசகுலத்தினரை, சேதிராயர் என்றனர். சேதி என்பது நாட்டின் பெயர்; அரையர் என்பது அரசர். ஊர்க்காடு அருகேயுள்ள 18 ஊர்களையும் தன்  கட்டுக்குள் வைத்து ஊர்க்காடு ஜமீன் ஆட்சி செய்து வந்தார். ஊர்க்காடு சிவன்கோயிலைக் கட்டியவர் நெல்லில் முத்துவேய்ந்த சேதுராயர் என்பார்கள். கோயிலின் மூலவர் சிவன். திருக்கோட்டியப்பர் என்று நாமம்.
இந்த ஊர்க்காடு முந்தைய காலத்தில் பூவை மாநகர் என்று அழைக்கப்பட்டது. ஊரைச்சுற்றி வயல்களும் காடுகளும் நிரம்ப இருந்ததனால் ஊர்க்காடு  என்றானது. கேரளத்தில் மாபெரும் மந்திரவாதியாக திகழ்ந்த மாகாளி பெரும்புலையன், சுடலைமாடனுக்கு வேண்டிய பலிகளை கொடுத்தார். அவரும்  புலையன் கேட்டதற்கிணங்க ஒண்ணே முக்கால் நாழிகைக்குள் சிமிழுக்குள் அடைபடுவேன் என்று வாக்குறுதி கொடுத்தார். அதன்படி சிமிழுக்குள்  அடைபட்டார். சுடலைமாடன் அடைபட்ட சிமிழை ஆழ குழிதோண்டி மண்ணில் புதைத்துவிட்டான் பெரும்புலையன். சிலநாள் கழித்து மழை வந்து  வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. அப்போது குழியிலிருந்து வெளியே வந்த சிமிழ் அந்த வெள்ளத்தில் அடித்து வரப்பட்டு, தாமிரபரணி ஆற்றில் மிதந்து  வந்தது.
ஊர்க்காடு பகுதியில் பலா, களியல் உள்ளிட்ட மூன்று மரங்கள் ஒருங்கே நின்ற தாமிரபரணி ஆற்றின் வடகரையில் அந்த சிமிழ் ஒதுங்கியது.  ஊர்க்காடு ஜமீனைச் சேர்ந்த சிற்றரசர்களான சிவனணைந்த பெருமாள் சேதுராயரும், கோட்டிலிங்க சேதுராயரும் தாமிரபரணி ஆற்றில் நீராடிக்  கொண்டிருந்தனர். அப்போது அழகுடன் வடிவமைக்கப்பட்ட பிரம்பும், உருவத்தில் பெரியதாய் அதிக மணம் கொண்ட எலுமிச்சங்கனியும் ஆற்றில்  மிதந்து வந்தன. அவர்கள் பிரம்பையும், எலுமிச்சங்கனியையும் எடுத்துக்கொண்டு அரண்மனைக்கு வந்தனர். பூஜை அறையில் கொண்டு வைத்தனர். சில வாரங்களுக்குப் பிறகு ஊர்க்காட்டில் ஆடு, மாடுகள் ஒன்றன் பின் ஒன்றாக மடிந்தன.
மக்கள் நோயோடும், மழை, தண்ணீர் இல்லாத வறுமையோடும் அவதிப்பட்டனர். அவர்கள் ஜமீனிடம் வந்து முறையிட்டனர். உடனே கோட்டிலிங்க  சேதுராயரும், சிவனணைந்த பெருமாள் சேதுராயரும் தங்கள் குல தெய்வமான சிவகாமி அம்பாள் உடனுறை திருக்கோட்டியப்பர் கோயிலுக்கு வந்தனர்.  சந்நதி முன்னே கண்ணீர் விட்டு மன்றாடினர். ‘ஊரில் நடக்கும் குழப்பத்துக்கு காரணம் என்ன என்பதை காட்டு என் அய்யனே, தீ வினைகள்  அகலணும். தீமைகள் விலகணும். நன்மைகள் வந்து சேரணும் திருக்கோட்டியப்பனே அருளணும்’ என்று முறையிட்டு, பிறகு அரண்மனை நோக்கி வந்தனர். வரும் வழியெங்கும் ‘மன்னா இங்கே பாருங்கள். எங்களுக்கு கண்கண்ட தெய்வம் நீங்கள்தானே! என்ன பாவம் செய்தோம்?
ஏன் இந்த நோய், நொடியுடனான வாழ்க்கை!’ என்று குடிமக்கள் அழுது புலம்புவதைக்கண்டு ஜமீன்தார்கள் வேதனைப்பட்டனர். ‘திருக்கோட்டியப்பன்  பார்த்துக்குவான்’ என்று அவர் நாமத்தை கூறி சமாதானப்படுத்தினர். அரண்மனையில் வந்தமர்ந்த சில வினாடிகளில் அரண்மனை வாயிலில் பண்டாரம்  ஒருவர் வந்து, ‘மன்னா, கலங்காதே, வந்த வினைக்கு காரணம் என்ன என்பதை சேரன்மகா தேவியில் குறி சொல்லும் குறமகள் பார்வதியை அழைத்து  வந்து கேள்,’ என்று கூறிச் சென்றார். இவர்கள் எந்த மாலையை திருக்கோட்டியப்பருக்கு படைத்து பூஜித்தார்களோ, அந்த மாலை வாயிலில் கிடந்ததை  கண்டனர். வந்து சென்றது திருக்கோட்டியப்பர் என்பதை உணர்ந்தனர். பேரானந்தம் கொண்ட ஜமீன்தார்கள் பார்வதியை தேடி சேரன்மகாதேவி  சென்றனர்.
குறமகள் பார்வதியை அழைத்து வந்து கேட்டனர். அவர், ‘மன்னாதி மன்னர்களே, பிரம்பும், கனியும் எடுத்த இடத்தின் வடபுறம் மும்மர இடுக்கில்  ஒதுங்கியிருக்குது ஒரு சிமிழி, அதை வடதிசை நோக்கி நின்று உடைத்துவிடு, உண்மை தெரியும். நன்மை வந்து சேரும்,’ என்றாள். குறி சொன்ன  பார்வதிக்கு பொன்னும், பொருளும் கொடுத்து அனுப்பிய ஜமீன்தார்கள், வேகமாக பிரம்பும், கனியும் எடுத்த தாமிரபரணி ஆற்றங்கரைக்கு வந்து  சேர்ந்தனர். அந்தி நேரம், பொழுது சாய்ந்து கொண்டிருந்தது. அது ஆடி மாத கடைசி வெள்ளிக்கிழமை. அவள் கூறிய மும்மர இடுக்கில் தங்க நிறத்தில்  சிமிழ் ஒன்று கரை ஒதுங்கியிருந்ததை கண்டனர். அதை இரு கரங்கள் சேர்த்து எடுத்து வடதிசை நோக்கி நின்று உடைத்தனர்.
புகை மூட்டம் வெளிப்பட்டது. சற்று நேரத்திற்கு பின் தோன்றிய ஒளியின் ஊடே கேரள மரபு கொண்டையிட்டு, கறுப்பு நிறத்தில் மணிகள் கோர்த்து  கட்டிய கச்சையோடு, வலது கரத்தில் வீச்சருவாவும், இடது கரத்தில் கதாயுதமும் தாங்கிய வண்ணம் சுடலைமாடன் காட்சி கொடுத்தார். ‘எனக்கு ஒரு  நிலையம் அமைத்து வணங்கி வாருங்கள். நோயும் மாறும், வறுமையும் தீரும். எல்லா வளங்களோடு குடி மக்களை வாழவைப்பேன். உங்களுக்கு  துணை நிற்பேன். நாளை நடப்பதை இன்றே நினைவூட்டுவேன். அச்சம் வேண்டாம், கோட்டியப்பன் மைந்தன் நான்,’ என்று கூறிவிட்டு அவ்விடம்  விட்டு மறைந்தார்.அதன் பின்னர் சுடலைமாடனுக்கு ஜமீன்தார்கள் கோயில் எழுப்பி கொடை விழா எடுத்து வழிபட்டு வந்தனர்.
அவர்களை தொடர்ந்து அவர்களது வாரிசு மற்றும் வம்சா வழியினர் கோயிலை புதுப்பித்து வழிபாடு செய்து வருகின்றனர். சுடலைமாடனும் தன்னை  அடிபணிந்து வணங்கி வரும் அடியவர்களுக்கு அருள்புரிந்து காத்து வருகிறார். ஊர்க்காடு சுடலைமாடன் கோயிலில் வெற்றி விநாயகர், சிகைவாகினர்   நாமத்தில் முருகன், அங்காளபரமேஸ்வரி, பேச்சியம்மன், பிரம்மராக்கு சக்தி, முண்டன், மாஇசக்கி ஆகிய தெய்வங்கள் நிலையம் கொண்டுள்ளன.  மூலவராக சுடலைமாடன் வீற்றிருந்தாலும், முதல் பூஜை வெற்றி விநாயகருக்குதான், அடுத்தது முருகனுக்கு, மூன்றாவதாக அங்காளபரமேஸ்வரிக்கும்  அடுத்த பூஜை பேச்சியம்மனுக்கும் நடக்கிறது. அதன் பின்னரே சுடலைமாடனுக்கு பூஜை. கோயிலில் ஆண்டு தோறும் ஆடி மாதம் கடைசி  வெள்ளிக்கிழமை 3 நாள் கொடை விழா சிறப்பாக நடைபெறுகிறது.
– சு.இளம்கலைமாறன்
படங்கள்: முத்தாலங்குறிச்சி காமராசு

ஊர்க்காடு பிரசித்தி பெற்ற சிலம்பு வரிசை:

ஊர்க்காட்டின் மிக பிரசித்தி பெற்றது அவர்களின் சிலம்பு வரிசை!பிற ஜமீந்தார்கள் பலரும் கூட தங்கள் பகுதியில் ஆட்டங்காட்டும் கொள்ளையர்களை அடக்க இவர்களிடன் உதவி கேட்பது உண்டு. இவர்கள் உதவி செய்ய செல்வார்களே ஒழிய யாரிடமும் எந்த காரனத்துக்கும் சிலம்பு வரிசைகளை சொல்லித் தரமாட்டார்கள்.

ஊர்க்காடு ஜமீனில் மிகவும் விசேஷமானது இந்த சிலம்பு அரிசைதான். ஊர்க்காட்டில் சிலம்பு வகையில் வஸ்தாரி சுப்புத்தேவர் வரிசை,வஸ்தாரி அய்யங்கார் வரிசை என இரு வரிசைகள் உண்டு.

சுப்புத் தேவர் வரிசை என்றால் மாட்டு வண்டி நடுவில் இருக்கும் போர் போல ஒரு கம்பை எடுத்து சுழற்றுவார்கள். அது எழும்பும் ஒருவித இரைச்சல் விளையாடுபவரை கதி கலங்க செய்யும். பக்கத்தில் சுமார் 20 அடி தூரத்தில் இருந்து யாரும் கத்தி,கல் ,கம்பு கொண்டு எறிந்தாலும் இவர்களைத் தாக்காமல் எறிந்தவர்கள் மீதே திரும்பி சென்று விழுந்து விடும். எனவே இந்த விளையாட்ட்டில் எதிராளிகள் தாக்கு பிடிக்க முடியாது. அது மட்டுமில்லாமல் இந்த விளையாட்டைப் பார்ப்பவர்கள் எதிராளிகளை விரட்ட்டியடிக்கபடுவதைக் கண்டு அவர்களும் மற்ற ஜமீந்தார்களும் இக்கலையை கற்று கொள்ள துடிப்பார்கள்.

அய்யங்கார் வரிசை என்றால் உயிரை கொல்லும் வரிசை சிலம்பு கற்றவர்கள் எதிராளியை சாகடிக்க விரும்பினால் மர்மான முறையில் ஒரு இடத்தில் கம்பால் தட்டி விட்டால் போதும்…6 மாதத்திற்குள் எதிராளிக்கு மரணம் நிச்சயம். அவர்களை எந்த நரம்பியல் வைத்தியர்,வர்ம வைத்தியர்களிடம் காட்டினாலும் காப்பாற்றமுடியாது.இந்த இரண்டு விளையாட்டு வரிசைக்களையும் ஊர்க்காடு இளைஞர்களுக்கு மட்டுமே கற்று தருவர்.

அதன் பின்பு சிலம்பாட்டக்காரர்கள் சத்திய பிரமாணம் எடுப்பார்கள். அதில் ” என் உடலை விட்டு தலை போனாலும்,உயிர் போனாலும் 5 அரண்மனை ஜமீன் ஆனையாக ஜமீந்தார் மீது ஆனையாக நாங்கள் கற்ற இந்த கலையை ஊர்க்காடு மண்ணின் மைந்தர்களை தவிர பிற சொல்லி தருவதில்லை என பிரமானம் எடுத்து கொள்வார்கள்”. எனவே மற்ற ஜமீனை சார்ந்தவர்களால் இந்த கலையை கற்க இயலாது.


வாழ்ந்த ராஜாவும்,நெஞ்சை நெகிழ வைக்கும் வரலாறும்:

ஊர்க்காட்டு ஜமீனுக்கு மன்னராக வாழ்ந்த பூஜாதுரை என்ற  சிவனனைந்த சேதுராய பெருமாள் ராஜா பிரசத்தி பெற்றவர். இவர்காலத்தில் இக்கோயிலுக்கு மிக அதிகமான நிலங்கலை தானமாக கொடுத்துள்ளார். கவிஞர்களுக்கு பரிசுகளும் வழிப்போக்கர்களுக்கு நிறைய சத்திரங்களும் அமைத்துள்ளார்.

சமஸ்தாணங்கள் பிரிந்த போது பால்துரை சேதுராயர் என்னும் மன்னன் ஆண்டு வந்துள்ளார். இவர் சேதுராயர் வம்சத்தில் 12-வது தலைமுறையில் வந்தவர் எண்கின்றனர்.  சிவனனைந்த சேதுராய பெருமாள் ராஜா என்பவர் ஆண்டு வந்தபோது அவரின் ராணியாக அன்னபூரனி நாச்சியார் வாழ்ந்துள்ளார். அவர்களுக்கு வள்ளி நாச்சியார்,வடிவுக்கரசி நாச்சியார் என இரு மகள்களுடன் செழிப்பாக வாழ்ந்துவந்தார்.ராஜாவுக்கு ஆண் வாரிசு கிடையாது. இவர்களது உறவுக்காரர்கள்தான் பிள்ளைக்குளம் சமீந்தார்.தனது பெண்களில் ஒருவரை பிள்ளைகுளம் சமீந்தருக்கும் இராமநாதபுரம் சேது வாரிசுகளில் ஒருவருக்கும் திருமனம் செய்து வைதார். இப்படி ஊர்க்காடு ஜமீனுக்கு பல சம்ஸ்தானங்களுடன் தொடர்பு உண்டு.

ஊர்க்காடு ஜமீந்தாரோடு வந்த தெய்வங்கள்:

ஊர்க்காடு அரண்மனைக்கு 14 கண்ணார் வயல்காடுகள் உண்டு. கண்ணார் என்றால் குறு வாய்க்கால். அரண்மனைஸ் சாப்பட்டு வகைக்கு 30 ஏக்கர் கொண்ட மூட்டி கண்ணாரில் உள்ள வயற்காட்டில் விளையும் நெல்லை பயன்படுத்தி விருந்து படைக்க வேண்டும்

ஊர்க்காடு ஜமீனை சார்ந்த பல நிலங்கள் வடபழனி முருகன் கோவிலுக்கு லிங்க காந்திமதி நாச்சியார் எழுதி வைத்தார். எஞ்சிய நிலங்களை அரசு எடுத்து கொண்டது.ஆயினும்,குறிப்பிட்ட வரியை செலுத்திக் கொண்டு ஊருக்குள் பொதுமக்கல் விளைநிலங்களை மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

ஜமீன் மிகுந்த தெய்வ பக்தி மிகுந்தவர் தான் கட்டிய கோட்ட்டீஸ்வரர் கோவிலுக்கு நிறை நகைகள் தந்தவர். இது இன்று அரசு அறநிலையத்துறை கட்டுப்பட்டில் உள்ளது.

இதனுடன் நிறை சாமிகளை ஊருக்கு கொண்டுவந்த பெருமை இந்த ஜமீனுக்கு உண்டு. இராமநாதபுரம் குத்துக்கல் வலசை சாமி தன் 18 குதிரை பரிவாரங்களுடன் இவ்வூருக்குள் குடிபுகுந்து கோவில் கொண்ட தெய்வம்.

ஊர்க்காடு சுடலை மாடன் சீவலப்பேரி சுடலையை போல் இப்பகுதியில் பிரசித்தம்.ஊர்க்காடு ஜமீனுக்கும்,சுடலைக்கும் கூட ஒரு சம்பந்தம் உண்டு. சுடலை ஆண்டவர் முதன் முதலில் தாமிரபரணி ஆற்றங்கரையில் அவதாரம் எடுத்து,ஊர்க்காடு ஜமீந்தார் மூலமாக தான் என்றும் கர்ணபரம்பரைக் கதைகள் கூறுகிறது. தாமிரபரனி ஆற்றில்தான் சுடலை கோயில் அதிகமாக உள்ளது. குறிப்பாக”உய்காட்டு சுடலை,பொழிக்கரை சுடலை,சீவலப்பேரி சுடலை,ஆழிகுடி மாரடிச்சான் சுடலை,ஆறுமுகமங்கல சுடலை,ஊர்க்காடு சுடலை” உள்பட்ட பல கோயில்கள் உள்ளது. இந்த ஆற்றங்கரை வழியாகத்தான் மலையாளத்தில் இருந்து பெரும்புலையனை சுடலை சம்காரம் செய்துவிட்டு வந்துள்ளார். பின்பு ஊர்க்காடு அருகே தாமிரபரணிய் ஆற்றில் ஒரு நாள் சிமினி ஒன்று ஊர்க்காடு அருகே ஒதுங்கியது. அப்போது ஊர்க்காடு ஜமீனாக இருந்த கோட்டிலிங்க சேதுராயர்,சிவனனைந்த சேதுராயர் இருவரும் தங்க நிறத்தில் இருந்த சிமினியை பார்த்து கையில் எடுத்தனர். அப்போது சிமினி வெடித்து சுடலை தோன்றினார்.”நான் சுடலைமாடன் என்னை இவ்விடத்தில் நிலையம் போட்டு வண்ங்கு!” என்று கூறிவிட்டார். அதிலிருந்து சுடலைக்கு நிலையம் போட்டு வணங்க ஆரம்பித்தனர் ஜமீண்தார்கள். இங்குள்ள சுடலை வித்தியாசமாக கேரள கொண்டை போட்டு இருப்பார்.
இதுபோல பல தெய்வங்களை ஊர்க்காட்டில் வைத்து வணங்கினர் சேதுராயர்கள். தற்போது இவர்கள் இல்லாவிட்டலும் அந்த மக்கள் வணங்கிவருகிறார்கள்.

இப்படி பல செல்வாக்குடன் வாழ்ந்த ஊர்க்காடு ஜாமீனின் கடைசியாக லிங்க காந்திமதி நாச்சியார் ஆண்டுள்ளர். அவர் வார்சு இல்லாமல் இறந்து தன் சொத்துக்கள் அனைத்தையும் வடபழனி முருகனுக்கு எழுதி வைத்து மேலுலகம் சென்றார்.இந்த ஜமீண்களின் சிலர் ஊர்க்காட்டிலும் சிலர் நெல்லையிலும் வசித்து வருகின்றனர்.

நன்றி:விகடன் பிரசுரம்
முத்தாலங்குடி நிருபர்

This entry was posted in ஊற்றுமலை ஜமீன், தேவர் and tagged . Bookmark the permalink.

One Response to ஊர்க்காடு ஜமீன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *