மறவர் ஜமீன்கள்

மறவர்குலத்தவர்களின் வாள்வலிக்குந் தோள்வலிக்கும், வயமிகுந்த ஆள்வலிக்கும் எட்டாத தேசத்து அட்டதிசை மன்னரும் பட்டாங்கில் அஞ்சிப்பயந்தனர். ஆடிநாடித் திறைவரிசை கெஞ்சிக் கொடுத்தனர். ஈழத்திலும் ஏறாத இமயத்திலும் களங்குதித்துச் செங்குருதிக்
குளம்மிதித்து வீராண்மையோடுப் பேராண்மையாற்றி வெற்றிக்கொடி நாட்டினர். இவர்கள் சிந்திய செங்குருதிச் செஞ்சேற்றால், புறமுதுகு காட்டா எலும்புப்போறையால், பாடாந்தரையாய்க் கிடந்த இடங்கள் யாவும், கன்றுங் கறவையும் மேயவும், கன்னலுஞ் செந்நெலுஞ் சாயவும், கங்கையும் வாவியும் பாயவும் வழி வகுத்தன.

சொல்கதைகளின்படி ராமநாதபுரம் பகுதியில் வாழ்ந்த மறவர்கள், பகவான்
‚ராமர் இலங்கையின் மீது படையெடுத்து வந்தபோது அவருக்குப் பேருதவிகள் செய்தனர். அதன் காரணமாக அவர்கள் ‘தேவர்கள்’ என்ற சிறப்புப் பெயர் பெற்றனர். எத்தனையோ காலமாக ‘சேதுசமுத்திரம்’ எனப்படும் (ராமேஸ்வரம் பகுதி) கடல்வழிப் பாதையின் பாதுகாவலராக
ராமநாதபுரம் மன்னரே இருந்து வந்தார். அதன் காரணமாகவே ‘சேதுபதி’ மன்னர் என்ற பெயரும் பெற்றார்.

மேற்கண்ட இரு தகவல்களும் நமக்குச் சொல்வது என்னவெனில் ராமநாதபுரம் பகுதியே ஆதியில் மறவர்கள் குடியிருந்த பகுதி. அங்கிருந்து புலம் பெயர்ந்தே இவர்கள் அருகிலிருந்த திருநெல்வேலிச்சீமை போன்ற பிற பகுதிகளுக்குச் சென்றிருக்க வேண்டும் என்பதே. மறவர்கள் எந்தப் பிரதேசத்தில் வாழ்ந்தாலும் தங்கள் தலைவர் எனும் மரியாதையை
மன்னர் சேதுபதிக்கே அளித்து வந்தனர் என்பதை ‘மறப்பாட்டு’ சொல்கிறது. சண்டையிடும் இனமாக மறவர் பற்றிய முதல் குறிப்புகளைக் ‘குல வம்சம்’ தருகிறது. பன்னிரண்டாம் நூற்றாண்டின் பாண்டியர்களோடு மரபு உரிமை பற்றிய தகராறில் கொண்டையம்கோட்டை மறவர்கள்
பங்கேற்றது பற்றியும் ‘குலவம்சம்’ பேசுகிறது. சேதுபதி மன்னரின் தலைமையின் கீழ் இருந்த மறவர்கள், மதுரை பாண்டிய மன்னனைச் சார்ந்தே இருந்ததாகவும் கூறப்படுகிறது.


இராமநாதபுரம் மாவட்டம் பதினெட்டாம் நூற்றாண்டில்
மறவர்சீமை என அறியப்பட்டிருந்தது. வடக்கே வெள்ளாற்றின் கரையிலிருந்த அறந்தாங்கியிலிருந்து தெற்கே சாயல்குடி வரையிலுமான கிழக்குக் கடற்கரைப் பகுதி முழுமையும் மறவர் சீமையாகும். மேற்கே அது மதுரை வரை நாயக்கரின் ராட்சியம் நீண்டிருந்தது. தஞ்சை மராட்டிய அரசும், புதுக்கோட்டை கள்ளர் பிரதேசமும் வடக்கே சூழ்ந்திருக்க, மேற்கிலும் தெற்கிலும் மதுரை நாயக்கர் அரசு பரவியிருக்க கிழக்கே ஆங்காங்கு போர்ச்சுகீசிய மற்றும் டச்சுக் குடியேற்றங்கள் தென்பட்டன.

நெல்லைச் சீமையில் களக்காடு முதல் மேற்குத்தொடர்ச்சி மலையின் அடியைத் தொட்டு நின்ற இராƒபாளையம் வரை மறவர்கள் பரவியிருந்தார்கள். பெரும்பாலான மறவர் பாளையங்கள் இப் பகுதியிலேயே உருவாக்கப்பட்டன. ஜெ.எச்.நெல்சன்,எச்.ஆர்.பேட் .
உதாரணமாக பாளையப்பட்டுகக்ளை விவரிக்கும் பேட் அவற்றில் எது எந்த சாதி என்றும் சாதிக்குள் எந்த உபசாதி என்றும் சொல்கிறார். நெல்லைப்பகுதி பாளையப்பட்டுக்கள் பெரும்பாலும் கொண்டையங்கோட்டை மறவர்கள்.புதுக்கோட்டை குமாரகிரி பாளையம் போன்றவை
கற்குரிச்சி மறவர்கள். கொல்லம்கொண்டான்,கங்கைகொண்டான் மற்றும் சேத்துர் முதலிய மூன்று பாளயம்கள் வனங்காமுடி பண்டார மறவர். சிவகிரி போன்ற நான்கு பாளையப்பட்டுக்கள் வன்னியர் பட்டம் கொண்ட வன்னிகொத்து மறவர்கள் இவர்க்ள் வன்னியர்(பள்ளி) அல்ல என்ற
துல்லியமான தகவலைக்கூட பேட் தருகிறார்.

மறவர் ஜமீன்கள் (திருநெல்வேலி)
———————————————-
1. சிவகிரி-சங்கிலி வீர பாண்டிய வன்னியனார்
2. சேத்துர்-ராஜ ராம சேவுக பாண்டிய தேவர்
3. சிங்கம்பட்டி-நல்லகுட்டி தீர்த்தபதி
4. கொல்லம்கொண்டன்-வீரபுலி வாண்டாய தேவர்
5. கங்கைகொண்டன்-சிவதுரை சோழக தேவர்
6. சுரண்டை- வெள்ளைதுரை பாண்டிய தேவர்
7. ஊர்க்காடு- சேது ராம தலைவனார்
8. தெங்காஞ்சி- சீவல மாறன்
9. வடகரை- சின்னஞ்சா தலைவனார்
10. திருக்கரங்குடி- சிவ ராம தலைவனர்
11. ஊற்றுமலை- ஹிருதலய மருதப்ப பாண்டியன்
12. குமாரகிரி- குமார பாண்டிய தலைவனார்
13. நெற்கட்டன் செவ்வல்- வரகுன ராம சிந்தமனி பூலி துரை பாண்டியன்
14. தலைவன் கோட்டை- இரட்டைகுடை இந்த்ர தலைவனர்(அ)                               ராம சாமி பாண்டியன்
15. கொடிகுளம்- முருக்கனட்டு மூவரயன் (அ) மூவரய கண்டன்
16. கடம்பூர்- சீனி வள்ளால சொக்க தலைவனார்(அ) பூலோக பாண்டியன்
17. மனியச்சி- தடிய தலைவனார் பொன் பாண்டியன்
18. குற்றாலம்- குற்றால தேவன்
19. புதுகோட்டை(திருனெல்வெலி)- சுட்டால தேவன்
20. குருக்கள்பட்டி- நம்பி பாண்டிய தலைவனார்
21. அழகபுரி- சின்னதம்பி வன்னியனார்
22. எழயிரம்பன்னை- இரட்டைகுடை வன்னியனார்
23. தெண்கரை- அருகு தலைவனார்
24. நடுவகுரிச்சி- வல்லப பாண்டிய தேவர்
—————————————————-
மறவர் சமஸ்தனங்கள்

*******************************
1. ராமநாதபுரம்- சேதுபதி(சேது செம்பியன்)
2. சிவகங்கை- கௌரி வல்லப உடையார் தேவர்(கவுரியர்)
———————————

மறவர் ஜமீன்கள்(ராமநதபுரம்)
————————————————
1. பாலவனத்தம்- பாண்டி துரை தேவர்
2. பாளையம்பட்டி – தசரத சின்ன தேவர்
3. படமாத்துர்-வேங்கை உடையன தேவர்
4. கட்டனூர்- தினுகாட்டுதேவர்
5. அரளிகோட்டை- நல்லன தேவர்
6. செவேரக்கோட்டை – கட்டனதத் தேவர்
7. கார்குடி- பெரிய உடையன தேவர்
8. செம்பனூர்- ராஜ தேவர்
9. கோவனூர்- பூலோக தேவர்
10. ஒரியுர்- உறையூர் தேவர்
11. புகலூர்- செம்பிய தேவர்
12. கமுதி கோட்டை – உக்கிர பாண்டிய தேவர்
13. சாயல்குடி- சிவஞான பாண்டியன்
14. ஆப்பனூர்- சிரை மீட்ட ஆதி அரசு தேவர்

This entry was posted in மறவர் and tagged , . Bookmark the permalink.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *