Tag Archives: தேவர் திருமகன் – வைகோ உரை

தேவர் திருமகன் – வைகோ உரை -1

தேவர் புகழ் வாழ்க :எனவே, பதவிகள் புகழை நிலைநாட்டாது, நிலைக்கச் செய்யாது. உண்மையும், நேர்மையும், உழைப்பும், தன்னலமற்ற மக்கள் பணியும்தான் நிலைக்கும் என்பதற்கு எடுத்துக்காட்டான ஒரு தலைவர் தேவர் திருமகனார்!வரலாற்றுச் சிறப்புமிக்க மதுரை மாநகரில், தமிழர்களின் பண்பாட்டுத் தலைநகரில், ‘நெற்றிக்கண்ணைக் காட்டினாலும் குற்றம் குற்றமே’ என உரைக்க ஒரு புலவனால் இயலும்; திரிபுரம் எரித்த விரிசடைக்கடவுளையும் … Continue reading

Posted in முத்துராமலிங்க தேவர் | Tagged | 1 Comment

தேவர் திருமகன் – வைகோ உரை -2

எங்கள் வீட்டில் தேவர் : என் தந்தையார் காங்கிரஸ் இயக்கத்தில் இருந்தார்கள். அப்பொழுது தென்மாவட்டச் சுற்றுப்பயணத்தில் வந்த பசும்பொன் தேவர் திருமகனார் அவர்கள், என் கிராமத்துக்கு உள்ளே வருகிறபோது, இன்றைக்கு எப்படி வாலிபச் சிங்கங்கள் தேவர் திருமகன் புகழ் பாடுவதற்கு அடிவயிற்றில் இருந்து முழக்கம் எழுப்பி கர்ஜிக்கிறார்களோ, அதேபோல இளஞ்சிங்கங்கள், வாலிபர்கள், ‘தென்னாட்டுச் சிங்கம் வாழ்க, … Continue reading

Posted in முத்துராமலிங்க தேவர் | Tagged | Leave a comment

தேவர் திருமகன் – வைகோ உரை -3

சென்னையில் தேவர் : அப்படிப்பட்ட சூழலில், அந்த சிவில் வழக்குகளை நடத்துவதற்காகச் சென்னைக்குச் சென்றார். ‘அம்ஜத் பார்க்’ என்கிற பெயருள்ள மாளிகை. மயிலாப்பூரில், மூன்று ஏக்கர் சுற்றளவு உள்ள மாளிகை. அந்த மாளிகையின் சொந்தக்காரர் சீனிவாச அய்யங்கார். மிகப்பெரிய வழக்கறிஞர். அவரிடம் சென்றார் வாலிபராக இருந்த தேவர்.

Posted in முத்துராமலிங்க தேவர் | Tagged | Leave a comment

தேவர் திருமகன் – வைகோ உரை -4

நேதாஜி : 1938 இல் திரிபுரியில் காங்கிரஸ். இரண்டாவது தடவையாக நேதாஜி காங்கிரஸ் கட்சியின் தலைமைப் பதவிக்குப் போட்டி இடுகிறார். நேதாஜியை நாடு விரும்புகிறது. காந்தி அடிகள் விரும்பவில்லை, படேல் விரும்பவில்லை. இன்னும் பலபேர் சேர்ந்து சூழ்ச்சி செய்தார்கள். அவர்கள் சதி செய்தார்கள். பண்டித நேரு அப்பக்கமா? இப்பக்கமா? என்று கடைசிவரை தீர்மானிக்க முடியாமல் தடுமாறிக் … Continue reading

Posted in முத்துராமலிங்க தேவர் | Tagged | Leave a comment

தேவர் திருமகன் – வைகோ உரை -5

நீதிமன்றத்தில் தேவர் : நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டார். புதுக்கோட்டை நீதிமன்றம். அந்த நீதிமன்ற நிகழ்ச்சியைப்பற்றி அப்பொழுது அரசாங்க வழக்கறிஞராக இருந்த எத்திராஜ் சொல்கிறார். சென்னையில் எத்திராஜ் கல்லூரி, அவர் பெயரில்தான் இருக்கிறது. புகழ்பெற்ற வழக்கறிஞர் எத்திராஜ். அவருக்கு உதவி செய்தவர் பின்னாளில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்த கிருக்ஷ்ணசாமி ரெட்டியார். அவரும் அரசுத் தரப்பு வக்கீல்தான். தேவர் … Continue reading

Posted in முத்துராமலிங்க தேவர் | Tagged | 2 Comments