Category Archives: சோழன்

குளித்தலை அருகே ராஜராஜசோழன் கால கோவில் கல்வெட்டுகள் கண்டெடுப்பு

கரூர்: குளித்தலை அருகே மேட்டு மருதூரில் உள்ள ஆறாஅமுதீஸ்வரர் கோவில் என்றழைக்கப்படும் சிவன் கோவில், முதலாம் ராஜராஜன் ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட கோவிலாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குளித்தலை அருகே மருதூர் காவிரி தென்கரையில் பழமையான சிவன் கோயில் உள்ளது. சோழ மன்னன் முதலாம் ராஜராஜன் (கி.பி. 985-1014)ல் கட்டப்பட்டது. தொல்லியல் துறையின் கல்வெட்டு முனைப்பு திட்டத்தில் கரூர் … Continue reading

Posted in சோழன் | Tagged , , , | Leave a comment

யார் இந்த சோழர்கள் ?

  சோழர் காலம் : தென் இந்திய வரலாற்றின் உயர்விற்கு சோழ அரசர்கள் பெரும் பங்களிப்பு செய்துள்ளனர். முற்கால சோழர்கள் சங்ககாலத்தில் ஆட்சிபுரிந்தனர். சங்க கால சோழ அரசர்களில் தலைச்சிறந்த அரசர் கரிகாலன் ஆவார். வெகு காலத்திற்குப் பிறகு பல்லவர்கள் ஆட்சி வீழ்ச்சியுற்ற போது சோழ அரசு மறுபடியும் தலைதூக்க ஆரம்பித்தது. விஜயாலயன் எனும் சோழ … Continue reading

Posted in சோழன் | Tagged , , , | Leave a comment

சோழர் படை

கடற்படை, உள்நாட்டின் படை ஆகிய அனைத்திற்கும் அரசரே தலைவர் ஆவார். இப்படை பல பிரிவுகளாக அமைந்து ஒவ்வொரு பிரிவும் தனிப்பெயரால் அழைக்கப்பட்டது. இவை ஒன்றுபட்ட அமைப்பாகவே இயங்கின. தங்கள் பெயராலேயே கோயில்கள் அமைக்கவும் அவற்றிற்குத் தானங்கள் கொடுக்கவும் இப்பிரிவுகளுக்கு உரிமை இருந்தது. தனிப்பட்ட படை வீரர்களும் இவ்வாறு தானம் செய்தவர்களின் பெயர்களும் அவரைச் சார்ந்த படைப்பிரிவின் … Continue reading

Posted in சோழன் | Tagged , | Leave a comment

தஞ்சை அருகே கோயிலில் முதலாம் ராஜராஜ சோழன் கல்வெட்டு கண்டுபிடிப்பு

தஞ்சை: தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளியை அடுத்த அடஞ்சூரில் உள்ள அனந்தீஸ்வரர் கோயிலில் கல்வெட்டு ஆர்வலர்கள் மன்னை ராஜகோபால சாமி அரசு கலைக்கல்லூரி தமிழ்த்துறை உதவி பேராசிரியர் முனைவர் கண்ணதாசன், பொந்தியாகுளம் பள்ளி தலைமை ஆசிரியர் தில்லை கோவிந்தராஜன், புலவர் ஜெயராமன், அருணாச்சலம் ஆகியோர் ஆய்வு செய்தனர். கோயில் கர்ப்பக்கிரக கதவின் இடது மற்றும் வலது புற … Continue reading

Posted in கல்வெட்டு, சோழன் | Tagged , , | Leave a comment

சோழர்களின் ”அங்கோர் வாட்”

   சோழர்களின் ”அங்கோர் வாட்” வடகம்போடியாவில் அமைந்துள்ள சிம்ரெப்ஐ விமானத்தில் சென்றடையலாம்.  சிம்ரெப்பில் ஒரு சர்வதேச விமான நிலையம் உள்ளது. ஆனால் பாங்காக்கிலிருந்து  தற்சமயம் நன்று சீரமைக்கப்பட்ட சாலைவழி அங்கே செல்வது ஒரு தனி அனுபவம்.  வறியவர்கள் மிகுந்த சிற்றூரான சிம் ரெப்புக்கு என்ன அத்தனை முக்கியத்துவம்?  அங்கிருந்து சில மைல்கள் தள்ளித்தான் முன்னொரு காலத்தில், … Continue reading

Posted in சோழன் | Tagged , | 2 Comments

சோழரும் சாதியமும்

சோழர்கள் சாதிய அடுக்கமைவையும் அமைப்பையும் ஏற்று, அதற்கு கட்டுப்பட்டு ஆட்சிபுரிந்தார்கள். இவர்கள் காலத்துக்கு முன்னரேயே தீட்டுக் கோட்பாடு தமிழ்ச் சமூகத்தில் வழங்கியதானாலும், இதை அமுல்படுத்துவதில் சோழரின் பங்கும் குறிப்பிடத்தக்கது. “முதலாம் இராசராசனுடைய கல்வெட்டொன்று ‘தீண்டாச்சேரி’ என ஒரு ஊர்ப் பகுதியைச் சுட்டுகிறது என்றும், பாகூரில் உள்ள திருமூலநாதர் திருக்கோவில் கல்வெட்டொன்று (முதலாம் இராசராசன் காலத்தைச் சேர்ந்தது … Continue reading

Posted in சோழன் | Tagged | Leave a comment

சோழரின் கீழ் தென்னகம்

இந்திய வரலாற்றைச் சமூகப் பொருளியல் பின்னணியில் பகுத்தறிந்து ஆய்வு செய்யும் முதன்மையானவர்களில் பேராசிரியர் எ.சுப்பராயலுவும் ஒருவர். தென்னிந்திய வரலாற்றை ரசனைப் பூர்வமான கலைக்கோட்பாடு, சமயப் பின்னணியில் கணிக் காமல் சமூகப் பின்னணியின் காரணியான பொருளி யலை அறிவதில் தலைப்பாடாக உழைக்கிறவர். வெவ்வேறு வரலாற்று அறிஞர் குழுக்களிடையே ஓர் இணைப்புப் பாலமாக இயங்கிவருகிறவர். எம்.ஜி.எஸ்.நாராயணன், கேசவன்வேலுதட், ராஜன் … Continue reading

Posted in சோழன் | Tagged , | Leave a comment

ஆதித்த கரிகாலச் சோழன் கொலை

பரசுராமன் சூளுரையும் ஆதித்த கரிகாலன் கொலையும் சோழப் பேரரசன் முதலாம் இராசராசன் கி.பி.985இல் முடிபுனைந்திருக்கிறான். முடி புனைந்து சில ஆண்டுகளுக்குள்ளாகவே சேர நாட்டிலிருந்த காந்தளூர்ச் சாலையைத் தாக்கி வெற்றி பெற்றிருக்கிறான் என்பது அவனது மெய்க்கீர்த்தியால் நமக்குத் தெரிய வருகிறது. அவன் அவ்வாறு விரைந்து காந்தளூர்ச் சாலையைத் தாக்குவதற்குக் காரணம் என்னவாக இருக்கும் என்பதே இக்கட்டுரையின் நோக்கமாகும். … Continue reading

Posted in சோழன் | Tagged | Leave a comment

சோழர்களின் பொருளாதாரப் போர்கள் :

ஆசியக் கண்டத்திலுள்ள இந்தியா, சீனா, இந்தோனேசியா, மலோசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகள் தான் தற்பொழுது உலகில் வேகமாக வளர்ச்சிப் பெற்று வரும் பொருளாதார நாடுகள். வரும் ஆண்டுகளில் ஆசிய நாடுகளின் பொருளாதாரம் பெரும் வளர்ச்சி அடையும் என்று பொருளாதார வல்லுனர்கள் கருதுகிறார்கள். இந்தியா, சீனா போன்ற நாடுகள் இன்னும் 20 முதல் 30 ஆண்டுகளில் பொருளாதார … Continue reading

Posted in சோழன் | Tagged | 1 Comment

ராஜராஜ சோழன் சமாதி!

சோழ மாமன்னர்களில் மங்காத கீர்த்தி கொண்டவன் ராஜராஜ சோழன். சிறந்த சிவபக்தனான இவன், சோழ நாடு முழுவதையும் அளந்து கணக்கிட்டு, தற்போதைய நில அளவை முறைக்கு முன்னோடியாக இருந்தவன். தமிழ் வேதமாகிய தேவாரத்தை, தில்லைவாழ் அந்தணரி டமிருந்து மீட்டு உலகுக்கு அளித்தவன். இத்தனைக்கும் மேலாய் இன்றளவும் முற்கால தமிழக கட்டடக் கலைக்கு சான்றாக நிற்கும் தஞ்சைப் … Continue reading

Posted in சோழன் | Tagged | 2 Comments