Category Archives: சொக்கம்பட்டி ஜமீன்

கருணாலய வலங்கைப்புலிப் பாண்டியன் கல்வெட்டு

வடகரையாதிக்கமாகிய சொக்கம்பட்டி அரசின் கடைசி அரசருள் ஒருவரான ஸ்ரீராஜமான்யஸ்ரீ கருணாலய வலங்கைப்புலி பாண்டியன் அவர்கள் பற்றிய செய்திகளும் வரலாற்றுச் சான்றுகளும் மிகவும் குறைவாக இதுவரை கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில் இம்மன்னரைக் குறிப்பிடும் கல்வெட்டு ஒன்று, சில மாதங்களுக்கு முன்பாக நாங்கள் தென்காசிப் பாண்டியர் பற்றிய தேடுதல்களில் ஈடுபட்டிருந்த பொழுது, சொக்கம்பட்டி கருப்பாநதிக்கரை அருகிலுள்ள பெரியநாதன் கோயில் என … Continue reading

Posted in சொக்கம்பட்டி ஜமீன் | Leave a comment

சின்னனேந்திர “நளச்சக்கரவர்த்தி” பாண்டியன் செப்பேடு

~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~ வாசக நண்பர்கள் மற்றும் உறவினர்கள் அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்! பாண்டிய வம்சத்தவர் யார் என்பதை உரைக்கும் வண்ணம் இந்த செப்பேட்டில் தகவல்கள் அடங்கியுள்ளன. இந்த செப்பேட்டின் காலம் சாலிவாகன சகாப்தம் 1171 -என குறிக்கப்பட்டுள்ளது அதன்படி ஆங்கில ஆண்டு 1246 ஆகும். கொல்லம் ஆண்டு 421 என்று கணித்தாலும் சரியாக பொருந்திவருகிறது. ஆயினும் செப்பேடு காட்டும் செய்தியில் “ஸ்ரீபெருமாள் அழகம் இருந்தகாலம்” என வருவதால் இதனை 16ம் நூற்றாண்டாகவே கணிக்க இயலுகிறது. செப்பேடு தமிழிலும் கிரந்தத்திலும் அமைந்துள்ளது. பராக்கிரம பாண்டியன் பெயருக்கு முன்னுள்ள வாக்கியங்கள் முழுவதும் கிரந்தத்தில் உள்ளன. செப்பேடு ~•~•~•~•~ உ சொக்கலிங்கம் துணை அகோர சிவந்த பாதமூருடைய ஆதினம் வடகரை ஆதிக்க சின்னனேந்திரன் அவர்களால் எழுதிய நளச்சக்கரவர்த்தி அம்பொன்னாட்டு தேவர் வம்ச பாரம்பரை தாம்பிர சாசன நகல் பாலர்ய நளச்சக்கரவர்த்தி தேவர் குல கோத்திரம் அம்பொன்னாட்டு டைய மகா ள ஸ்ரீ வடகரை ஆதிக்கம் முடி மன்னன் சின்னனேந்திரன் ராஜாதிராஜன் ராஜகெ ம்பீரன் ராஜ போஜனன் வீரடதகடதட மகுட கோலாகல நாய விதுரன அஷ்டதிக்கு மனோட் சங்கரன் பாண்டிய மண்டல பிரதிஷ்டா வனாச்சியார் இந்திரன் முடிமேல் இனைவழைஎறிந்தோன் ஆரம் தரித்த சௌந்திரஷ்வரர் பூதத்தை பணி கொண்ட புகழ் வீர கேரளன் மேகத்தை திரை கொண்டு வீர நாகற்தை கண்ணு வாங்கும் பெருமாள் கண்டநாடு கொண்ட நாடு ஆப்பநாடு கொண்டநாடு கொடாத புண்டரீக வதனன கனக சபை அச்சுத சபை சித்திர சபை தாம்பிர சபை மாரதின சபை சிர்ச்சபை ராஜ சபை நர்த்த சபை தேவ சபைக்குடைய வனாயும் அம்பொன்னாடு ஆப்பநாடு செம்பொன்நாடு கிழுவை நாடு பொதுநாடு வன்னிவள நாடு ஈசாங்கு நாடு முதலான நாட்டில் முதன்மை பெற்றவனாம் சண்டப் பிரசண்டன் தண்டுவர் முண்டன் ஷிவ தயாபரன் நித்ய கல்யாண நிபுணன் திரிபுவன சக்கரவர்திகளில் கோனேரிமை கொண்டவன் வாரி வடிவம்பல மகா மேருவின் செண்டு கயலும் தரித்த தெய்வப் பெருமாள் பொற்கை துருகின் தாக மகுட நிகழ்த்தி மகுடந் தரித்த மகராஜன் தென் பொதிகை மேருவின் குறுமுனி ஏவி வருட் புனல் தன்னை மின்னும் சென்றதினால் வழிவிட்டருளிய கொற்கை வேந்தன் ஆரம்பூண்ட வேப்பந்தார் மார்பன் மகாராஜ ராஜாமார்த்தாண்டன் மணிமகுடந் தரித்தோன் முன் வைத்த காலை பின் வாங்காப் புகழ் வீரன் க்ஷத்ரியர்களில் முதன்மை பெற்றோன் அம்புக்கோட்டை கொண்டையங்கோட்டை செம்புக்கோட்டை அணிற்கோட்டை வாள் கோட்டை முதலான கோட்டைக்குக்கோட்டைக்கு முதன்மை பெற்றோன் அம்பனேர் கலனை முக்குழணி மங்கலம் அரும்படியுத்தம் புரிந்தோன் ஆகையால் அம்ப நறியார் என்று பெயரும் பெற்றோன் எட்டு கிளையும் எட்டுக்கொத்தும் உடையோன் தேவர் குல வம்சமாகிய பாண்டி நாட்டுக்கு பதி தீர்த்தயாருரை ன் சு வா மி தெரிய வந்தது கண்டு எங்கள் குலகுருவாகிய காஞ்சிபுரம் பிரம அகோர சிவந்த பாதமூருடைய தேசிகரவர்கள் தென்காசி விஸ்வநாதர் சன்னதியில் சன்னதி மடத்ததிபதியார் வந்திருப்பது தெரிந்து குரு சன்னி தானத்தில் வந்து தெரிசனை செய்தது தெரிந்து திரு நோக்கம் பார்த்து திருவாய் மலர்ந்து அருமை மொழி கூறி தீட்க்ஷய் செய்து திருநீர் ஆசீர்வாதம் பெற்று வாழ்ந்து கொண்டிருக்கும் காலத்தில் ஸ்ரீ பெருமாள் அழகம் இருந்த காலம் சாலி வாகன சகாப்தம் 1171 ன் மேல் கொல்லம் ஆண்டு 421 புத்திர புவன மகேந்திர: மூலப் பிரதீப மதுர மாகேந்திர மோந்த மங்கல மிரபலாதீப நாரங்க கேரள தாமோதர வந்த்ர சோழ சிந்து ய ட் ஷ்கல நாயக சாயஞ்சய கேரள பௌம மகா ள ஸ்ரீ காசி பராக்கிரம பாண்டிய ராஜா அவர்கள் முன்னிலையில் விஸ்வேஸ்சுர சன்னதியில் எழுதிய தாம்பிர சாசனம் திருவாலவாய் ஸ்வாமி ஆடி வீதியில் சப்தாபரண மண்டபமும் கோவிச்சடையில் சொக்கலிங்கம் பிரதிஷ்டையும் நம்மால் செய்து அதற்கு அருகே நிலமும் சன்னதி மடம் ஸ்வாமி சொக்கலிங்கம் பூஜைக்கு ஊர் மேல் அழகியான் மூன்று கோட்டை விரைப்பாடும் தர்ம சாசுவதமாக ஏற்படுத்தி எங்கள் வம்சத்தார் பரம்பரை குரு சன்னிதானத்திற்கு வருஷ காணிக்கை தலைக்கட்டு 1க்கு பணம் இரண்டும் பெண்ணுக்கு பணம் இரண்டும் தீட்க்ஷைக்கு பணம் பத்தும் சுப முதலான காரியத்திற்கு பணம் பத்தும் அவர்களில் வரம்பு தப்பினவர்களுக்கு வாங்கும் கடமையும் கல்யாணத்திக்கு வெற்றிலை 100ம் பாக்கு 20 இருபதும் கொடுத்து வேண்டுமென்கிற பணிவிடைகள் செய்து வருவோமாகவும் இந்த உடை பண்ணினவர்கள் காசிக்கரையில் காராம்பசுவை மாதா பிதா சிசு கொலை செய்த தோஷத்தில் போவோமாகவும் இதை விடுத்து செய்கிறவர்கள் அஷ்ட ஐஸ்வர்யமும் பெற்று புத்திர சம்பத்தும் பெற்று தங்கள் குலம் உள்ளளவும் பேர் பெற்று வாழ்ந்து கொண்டிருப்பார்களாகவும் காசி முதல் கன்னியாகுமரி வரை இந்தப்படிக்கு ஒப்பம் -வடகரை சின்னனேந்திரன் ஒப்பம் – காசி பராக்கிரம பாண்டிய ராஜா ஒப்பம் -ராமசந்திரமகாராஜா அகோர சிவந்த பாதமுடைய வம்ச பரம்பரையில் உதித்த ஸ்ரீ மகா ள குரு சுவாமி அவர்கள் ….ந்திரன் வம்ச பாரம்பரையில் உதித்த … Continue reading

Posted in சொக்கம்பட்டி ஜமீன் | Leave a comment

திரிகூடபதி குற்றால சிவனனைந்த தேவர்கள் சரித்திரம்

உ திரிகூடபதி துனை திருநெல்வேலி ஜில்லாவிலுள்ள வடகரை என்ற சொக்கம்பட்டி பாளையபட்டு சரித்திரம் பலவித்துவான்கள் இயற்றிய பதினான்கு பிரபதங்கள் இவை சேத்தூர் சமஸ்தான வித்துவான்கள் மு.ரா.அருணாசலகவிராயர்களாலும் முரா.கந்தசாமிகவிராயர்களாலும் பரிசோதிக்கபட்டு டிப்ட்டிக் கலெக்டர் ஸ்ரீமான் திரிகூடராஜகோபால செம்புலி சின்னைஞ்சாத் தேவர்கள் என்ற பி.சி.சின்னனைஞ்சா பாண்டியரவர்களாலும். தாசில்தார்  பி.வி சின்னனைஞ்சா பாண்டியரவர்களவர்களாலும் அச்சியற்றபட்டன.

Posted in சொக்கம்பட்டி ஜமீன், தேவர்கள், மறவர் | Tagged , | 1 Comment

வடகரை ஆதிக்கம் – சொக்கம்பட்டி ஜமீன்

இந்நாளில் சொக்கம்பட்டி ஜமீன் என்று அழைக்கபட்டது அன்றைய வடகரை பாளையம் ஆகும்.இது நெல்லை சீமையில்ல் அமைந்துள்ள பாளையமாகும். இவர்கள் மூதாதயர்கள் பெரிய குலசேகர பாண்டிய மன்னன் தெண்காசி நகரத்தினை ஆண்டு வரும்போது செம்பி(சோழ)நாட்டை துறந்து வந்தவர்கள். இவர்கள் பாண்டிய அரசனைக் கண்டு தன் வீரத்தால் மகிழச் செய்து ‘செம்புலி’ என்ற பட்டமும் பெற்று செம்புலி சின்னனைஞ்சாத்தேவர் … Continue reading

Posted in சொக்கம்பட்டி ஜமீன், மறவர் | Tagged , | 1 Comment

சொக்கம்பட்டி ஜமீன்

மந்திரியின் தந்திரம் :  எழுதியவர்:உ.வே.சாமிநாதய்யர் தட்டச்சு செய்து அளித்தவர்: திருமதி.கீதா சாம்பசிவம் பழைய காலத்தில் தமிழ்நாட்டில் சிறந்த நிலையில் இருந்த ஜமீன்களுள் சொக்கம்பட்டி யென்பது ஒன்று. வடகரையாதிக்கமென்றும் அந்த ஜமீன் வழங்கப் படும். அங்கே இருந்த ஜமீன்தார்களுள் சின்னணைஞ்சாத் தேவர் என்பவர் புலவர் பாடும் புகழுடையவராக வாழ்ந்து வந்தார். அவரால் திருக்குற்றாலம், பாபநாச, திருமலை முதலிய … Continue reading

Posted in சொக்கம்பட்டி ஜமீன் | Tagged | 1 Comment