Daily Archives: 27/07/2013

சோழர்கால கல்வெட்டில் எச்சரிக்கை.

திருவண்ணாமலை அருகே கண்டெடுக்கப்பட்ட சோழர்கால கல்வெட்டில் எச்சரிக்கை. ஆயிரம் ஆண்டு பழமையான சோழர் கால கல்வெட்டுகள் மற்றும் நடுகல், திருவண்ணாமலை அருகே கண்டெடுக்கப்பட்டுள்ளன. அதில், “ஏரியை அழிப்பவர்கள் நரகத்துக்கு போவார்கள்” என எச்சரிக்கப்பட்டுள்ளது. பெரியகோளாப்பாடி, சின்னகோளாப்பாடி, வாசுதேவன்பட்டு, படி அக்ரகாரம், ஓரந்தவாடி, நரசிங்கநல்லூர், சொ.நாச்சிப்பட்டு, கீழ்சிறுபாக்கம் கிராமங்களில் நடந்த ஆய்வில் சுவையான வரலாற்று பின்னணி கொண்ட … Continue reading

Posted in சோழன் | Tagged | Leave a comment

3,000 ஆண்டிற்கு முந்தைய முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிப்பு!

தூத்துக்குடி அருகே, பாண்டிய மன்னர் காலத்தில் துறைமுக பட்டணமாக திகழ்ந்த கொற்கை கிராமத்தில், 3,000 ஆண்டிற்கு முந்தைய முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. தூத்துக்குடி மாவட்டத்தில், காயல்பட்டணம், வீரபாண்டியபட்டணம், குலசேகரன்பட்டணம், கொற்கை உள்ளிட்ட கிராமங்கள், துறைமுக பட்டணமாக திகழ்ந்தன. இவற்றிக்கு, தலைமையிடமாக கொற்கை இருந்தது. இங்கிருந்து கடல் வழியாக கப்பல், படகுகளில், இலங்கை உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு முத்து, … Continue reading

Posted in பாண்டியன் | Tagged | 1 Comment

கொடுமணல்-ஒரு தொல் நகரம்

கொடு மணல்: திருப்பூர்,ஈரோடு மாவட்டங்களின் எல்லை பகுதிக்கு அருகில் உள்ள கொடுமணல் கிராமம் ஒரு தொல் பழங்கால தகவல் சுரங்க கொத்து.இந்த தொல் நகரத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழ்வுகள்,ஆராய்ச்சிகள்,அதன் அடிப்படையிலான கருது கோள்கள்,முடிவுகள் நமக்கு ஒரு உவப்பான மேலும் தகவல்பூர்வமான பழந்தமிழர் நாகரீகம் பற்றிய சித்திரத்தை அளிக்கின்றன.இந்த தொல் நகரம் நமக்கு சொல்லும் செய்திகளையும்,அது வரலாற்றின் … Continue reading

Posted in வரலாறு | Tagged | Leave a comment

பாண்டிநாட்டுத் துறைமுகம்

பாண்டியர் துறைமுகங்கள் சங்ககாலம் தொட்டே முத்துக்குளித்தலுக்கும் முத்து வணிகத்திற்கும் பெயர் பெற்றிருந்தது. அவற்றில் கொற்கை துறைமுகத்தின் முத்து வணிகச்சிறப்பை தாலமி, பெரிப்ளூசு, பிளைனி போன்ற வேற்று நாட்டவர் குறிப்புகளைக் கொண்டு அறியலாம். இடையே களப்பிரர் படையெடுப்பால் இருண்ட காலத்தைத் தழுவிய பாண்டியர்களின் கடல் வணிகம் முற்கால மற்றும் பிற்காலப் பாண்டியர்களின் ஆட்சியின் போது உச்சநிலை அடைந்தது. … Continue reading

Posted in பாண்டியன் | Tagged | Leave a comment