Daily Archives: 26/01/2013

உடுமலை அருகே 800 ஆண்டு பழமையான கல்வெட்டு!

  உடுமலை அமராவதி அணை அருகே கல்லாபுரம் பகுதியில் கிடைத்த சுமார் 800 ஆண்டு பழமையான கல்வெட்டு மூலம் பல்வேறு தகவல்கள் தெரிய வந்துள்ளன. கல்லாபுரத்தில் உள்ள வீதியொன்றில் கேட்பாரற்றுக் கிடந்த இந்தக் கல்வெட்டு குறித்து இந்த ஊரைச் சேர்ந்த ஜான்சன், கல்வெட்டு ஆராய்ச்சியாளர் சுந்தரத்துக்குத்  தகவல் கொடுத்தார். சுந்தரத்தின் மூலம் கிடைத்த கல்வெட்டு தகவல்கள்: … Continue reading

Posted in கல்வெட்டு, சோழன் | Tagged , , | Leave a comment

முதலாம் ராசாதிராசன் கல்வெட்டு கண்டுபிடிப்பு!

அடஞ்சூர் அனந்தீஸ்வரர் கோவில், கர்ப்பக்கிரக கதவு அருகில், கருங்கல்லில், முதலாம் ராஜேந்திர சோழனின் மூத்த மகன், முதலாம் ராசாதிராசன் செதுக்கிய அரிய கல்வெட்டை, தஞ்சை ஆய்வாளர்கள் கண்டுபிடித்தனர். தஞ்சையிலிருந்து, 35 கி.மீ. தூரத்தில், திருக்காட்டுப்பள்ளி அருகே அடஞ்சூர் கிராமம் உள்ளது. இங்குள்ள, அனந்தீஸ்வரர் கோவிலில், முதலாம் ராஜேந்திர சோழனின், மூத்த மகனான ராசாதிராசனின் கல்வெட்டு, கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. … Continue reading

Posted in கல்வெட்டு, சோழன் | Tagged , | Leave a comment

சோழமன்னர்கள் வரலாறு கூறும் கல்வெட்டு

புதுக்கோட்டை: புதுக்கோட்டை அருகே கண்டெடுக்கப்பட்டுள்ள கல்வெட்டுகள் மூலம் தெய்வ வழிபாட்டிலும், கோவில்கள் மீதும் சோழமன்னர்கள் கொண்டிருந்த ஈடுபாட்டை பறைசாற்றுகிறது. தமிழகத்தில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க மாவட்டங்களில் ஒன்று புதுக்கோட்டை. இங்குள்ள குடவறை கோவில்கள், சமணர் படுக்கைகள், மூவர் கோவில்கள் போன்றவை இதற்கு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது. தொல்பொருள் ஆய்வுத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோவில்கள் மற்றும் அதை சுற்றியுள்ள … Continue reading

Posted in கல்வெட்டு, சோழன் | Tagged , , | Leave a comment