Monthly Archives: December 2012

மாமன்னர்கள் மருது பாண்டியரின் உண்மை வரலாறு

  மருது பாண்டியர்கள்.இன்றைய விருதுநகர் மாவட்டம் நரிக்குடிக்கு அருகில் உள்ள முக்குளம் என்ற கிராமத்தில் வாழ்ந்த உடையார்த் தேவர் என்ற மொக்க பழநியப்பன் என்பவருக்கும் அவரது மனைவி ஆனந்தாயி என்ற பொன்னாத்தாள் என்பவருக்கும் மகனாக 1748ல் மகனாகப் பிறந்தவர் பெரியமருது பாண்டியர். ஐந்து ஆண்டுகள் கழிந்து 1753ல் சிறிய மருது பாண்டியர் பிறந்தார். பெரிய மருது … Continue reading

Posted in மருது பாண்டியர்கள் | Tagged | Leave a comment

பொன்னியின் செல்வன் -24

பொன்னியின் செல்வன்பாகம் -1 அத்தியாயம் 24 காக்கையும் குயிலும் இரவெல்லாம் கட்டையைப் போல் கிடந்து தூங்கிவிட்டுக் காலையில் சூரியன் உதித்த பிறகே வந்தியத்தேவன் துயிலெழுந்தான். விழித்துக் கொண்ட பிறகும் எழுந்திருக்க மனம் வராமல் படுத்திருந்தான். மேலக்காற்று விர்ரென்று வீச, மரஞ்செடிகளின் கிளைகளும் இலைகளும் ஒன்றோடொன்று உராய்ந்து ‘சோ’ என்ற சத்தத்தை உண்டாக்கிக் கொண்டிருந்தன. அந்தச் சுருதிக்கிணங்க, … Continue reading

Posted in பொன்னியின் செல்வன் | Tagged , , | Leave a comment

பொன்னியின் செல்வன்-23

பொன்னியின் செல்வன்பாகம் -1 அத்தியாயம் 23 அமுதனின் அன்னை வேளக்கார வீரர் படை பெரிய கடைவீதியின் வழியாகப் போயிற்று. படையின் கடைசியில் சென்ற சில வீரர்கள் கடைத்தெருவில் சில திருவிளையாடல்களைப் புரிந்தார்கள். ஒருவன் ஒரு பட்சணக் கடையில் புகுந்து ஒரு கூடை நிறைய அதிரசத்தை எடுத்துக் கொண்டு வந்து மற்ற வீரர்களுக்கு விநியோகித்தான்.பிறகு வெறும் கூடையைக் … Continue reading

Posted in பொன்னியின் செல்வன் | Tagged , , | Leave a comment

பொன்னியின் செல்வன் -22

பொன்னியின் செல்வன்பாகம் -1 அத்தியாயம் 22 வேளக்காரப் படை முதலில், பல்லக்கின் வெளிப்புறத்திரை – பனை மரச் சின்னம் உடைய துணித் திரை – விலகியது. பின்னர் உள்ளிருந்த பட்டுத் திரையும் நகரத் தொடங்கியது. முன்னொரு தடவை வல்லவரையன் பார்த்தது போன்ற பொன் வண்ணக் கையும் தெரிந்தது. வந்தியத்தேவன் இனி, தான் குதிரை மேலிருப்பது தகாது … Continue reading

Posted in பொன்னியின் செல்வன் | Tagged , , | Leave a comment

பொன்னியின் செல்வன்-21

பொன்னியின் செல்வன்பாகம் -1 அத்தியாயம் 21 திரை சலசலத்தது! ஒரே சமயத்தில் ஒருவனுக்குள்ளே இரண்டு மனங்கள் இயங்க முடியுமா? முடியும் என்று அன்றைக்கு வந்தியத்தேவனுடைய அனுபவத்திலிருந்து தெரிய வந்தது. சோழ வள நாட்டிற்குள்ளேயே வளம் மிகுந்த பிரதேசத்தின் வழியாக அவன் போய்க் கொண்டிருந்தான். நதிகளில் புதுப்புனல் பொங்கிப் பெருகிக் கொண்டிருந்த காலம். கணவாய்கள், மதகுகள், மடைகளின் … Continue reading

Posted in பொன்னியின் செல்வன் | Tagged , , | Leave a comment

ராமநாதபுரம் சேதுபதி மாமன்னர்களின் கொடைகள் :

1) குமாரமுத்து விசய ரகுநாத சேதுபதி, பிற மதத்தினரையும் மதித்து 1734ல் ராமநாதபுரம் ஈசா பள்ளிவாசலுக்கு ‘கிழவனேரி ‘ எனும் ஊரைத் தானம் செய்தார். 2) 1742ல் முத்துக்குமார விசய ரகுநாத சேதுபதி ஏர்வாடி பள்ளிவாசலுக்கும், ராமேஸ்வரத்தில் உள்ள ஆபில்,காபில் தர்காவுக்கும் நிலக்கொடைகள் அளித்துள்ளார். 3) கடைசி சேதுபதியான முத்துராமலிங்கம், முத்துப்பேட்டை கிறிஸ்தவ தேவாலயத்திற்கு 1781ல் … Continue reading

Posted in சேதுபதிகள் | Tagged , | Leave a comment

தேவர்கள்:

தேவர்கள்: இவ்வினத்தில்மூன்று உட்பிரிவுகள் உள்ளன. கள்ளர், மறவர்,அகமுடையார். இப்பெயர் வர காரணம் பற்றி எட்கர் தார்ஸ்டன் கருத்துப்படி ஒரு காலத்தில் கௌதமரிஷி என்பவர் தன்னுடைய மனைவியை தனியாக விட்டுவிட்டு வெளிய சென்றுவிட்டார். அப்போது இந்திரன் வீட்டினுள் நுழைந்து கௌதம முனிவருடைய மனைவியின் அழகில் மயங்கி அவளோடு உறவு கொண்டதால் மூன்று குழந்தைகள் பிறந்தன. முனிவர் திரும்பி … Continue reading

Posted in தேவர்கள் | Tagged , , | 1 Comment

பொன்னியின் செல்வன்-20

பொன்னியின் செல்வன்பாகம் -1 அத்தியாயம் 20 “முதற் பகைவன்!” தக்க சமயத்தில் ஆந்தை செய்த உதவியை ஆழ்வார்க்கடியான் மனத்திற்குள் பெரிதும் பாராட்டினான். ஏனெனில், காட்டின் மத்தியில் கூடியிருந்த சதிகாரர்கள், சிறகடித்துக் கொண்டு உறுமிய ஆந்தையைப் பார்த்து அதனால் ஏற்பட்ட சத்தந்தான் என்று எண்ணிக் கொண்டார்கள். “அடே! இந்தக் கோட்டான் நம்மைப் பயப்படுத்திவிட்டது! வெட்டுடா அதை!” என்றான் … Continue reading

Posted in பொன்னியின் செல்வன் | Tagged , , | Leave a comment

பொன்னியின் செல்வன்-19

பொன்னியின் செல்வன்பாகம் -1 அத்தியாயம்-19 ரணகள அரண்யம் பழந்தமிழ்நாட்டில் போர்க்களத்தில் உயிர்துறந்த மகாவீரர்களின் ஞாபகமாக வீரக் கல் நட்டுக் கோயில் எடுப்பது மரபு. வெறும் கல் மட்டும் ஞாபகார்த்தமாக நாட்டியிருந்தால் ‘நடுகற் கோயில்’ என்று வழங்குவார்கள். அத்துடன் ஏதேனும் ஒரு தெய்வத்தின் சிலையையும் ஸ்தாபித்து ஆலயமாக எழுப்பியிருந்தால் அது ‘பள்ளிப்படை’ என்று வழங்கப்படும். குடந்தை நகருக்கு … Continue reading

Posted in பொன்னியின் செல்வன் | Tagged , , | Leave a comment

பொன்னியின் செல்வன் -18

பொன்னியின் செல்வன்பாகம் -1 அத்தியாயம் -18 இடும்பன்காரி கொள்ளிடத்துப் பரிசில் துறையில் ஆழ்வார்க்கடியான்நம்பி என்னும் திருமலையப்பனை விட்டு விட்டு வந்துவிட்டோம். அந்த வீர வைஷ்ணவரை இப்போது கொஞ்சம் கவனிக்கலாம். வந்தியத்தேவன் குதிரை ஏறிக் குடந்தை நகர் நோக்கிச் சென்றதும், திருமலை அவன் போன திசையைப் பார்த்துக் கொண்டே தனக்குள் சொல்லிக் கொண்டான்.

Posted in பொன்னியின் செல்வன் | Tagged , , | Leave a comment