Daily Archives: 02/06/2011

ஊழல் செய்த மருமகனின் தலையை துண்டித்த மன்னர்

ராமநாதபுரம் : ஊழல் செய்த தனது மருமகனின் தலையை வெட்டி நல்லாட்சிக்கு 16 ம் நூற்றாண்டில் வித்திட்டவராக திகழ்கிறார் மன்னர் விஜயரகுநாத சேதுபதி.தமிழகத்து மூவேந்தர்களுக்கு பின் 13ம் நூற்றாண்டு இறுதியிலிருந்து சுதந்திர காலம் வரை தமிழ், இறையாண்மை, தர்மங்களை பண்பாடு மாறாமல் பாதுகாத்து வந்தவர்கள் சேதுபதி மன்னர்கள்.

Posted in சேதுபதிகள் | Tagged | Leave a comment

அழிந்து வரும் மன்னர் காலத்து அரண்மனைகள்

ராமேஸ்வரம் : ராமநாதபுரம் மாவட்டத்தில் மன்னர் காலத்தில் உருவாக்கப்பட்ட அரண்மனைகள் பல இன்று அழிந்து வருவதால் இதனை காக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். விஜயநகரப்பேரரசு காலத்திலும்,மதுரை நாயக்கர் ஆட்சியிலும் மன்னார் வளைகுடா கடல் பகுதியில் முத்துக்குளித்தல் சிறப்பாக நடந்தது. 1502 ல் போர்த்துக்கீசியர்கள் வருகைக்குப்பின் கிழக்கு கடற்கரையில் இஸ்லாமியர்கள் வசமிருந்த முத்துகுளித்தல் மற்றும் கடல் … Continue reading

Posted in சேதுபதிகள் | Tagged | 1 Comment

நெஞ்சம் மறப்பதில்லை: பாரம்பரியம் காக்கும் ஜமீன்

உயர்ந்து நிற்கும் மதில்கள், உள்ளுக்குள் அரசு அலுவலகங்கள், காரை பெயர்ந்த நிலையிலும், காலம் கடந்தும், சரித்திரத்தை தனக்குள் தக்கவைத்துக்கொண்ட பாரம்பரிய கட்டடங்கள். நவீனம் புகுந்த நிலையிலும், தன்னுள் பழைமையை பறைசாற்றத் துடிக்கும் பெரிய அறைகள் என கம்பீரம் குறையாமல் காட்சியளிக்கிறது ராமநாதபுரம் ஜமீன் அரண்மனை. தென் தமிழகத்தில் பிரிக்கப்படாத பழைய ராமநாதபுரம் மாவட்டத்தின் பெரும் பகுதியை … Continue reading

Posted in சேதுபதிகள் | Tagged , | Leave a comment