Daily Archives: 30/01/2011

ஊற்றுமலை ஜமீன் வரலாறு

எழுதியவர்:உ.வே.சாமிநாதய்யர் ஊற்றுமலையென்பது திருநெல்வேலி ஜில்லாவில் இருந்து வரும் ஒரு பழைய ஜமீன். அதில் ஜமீன்தார்களாக இருந்தவர்கள் வீரத்திலும் கல்வியிலும் சிறந்தவர்கள். வடகரையென்னும் சொக்கம்பட்டியில் பெரியசாமிச் சின்னணைஞ்சாத் தேவர் தலைமை வகித்து வந்த காலத்தில் ஊற்றுமலையில் இருந்த ஜமீன்தார் தென்மலையென்னும் சிவகிரியிலிருந்து ஜமீன்தாருக்கு உதவி புரிந்து வந்தனர். வடகரையாருக்கு நண்பராகிய சேற்றூர் ஜமீன்தாருக்குப் பல இடையூறுகளை விளைவித்தனர் … Continue reading

Posted in ஊற்றுமலை ஜமீன் | Tagged | Leave a comment

ஜமீன் சிங்கம்பட்டி-2

திருநெல்வேலிப் பகுதியில் தவறு செய்தவர்களைப் பார்த்து “முதுகுத் தோலை உரிச்சிப் போடுவேன் படுவா’ என்பார்கள். முதுகுத் தோலை உரிக்க முடியுமா என்ன? இன்றைக்கு “சும்மாக்காச்சும்’ இப்படி வெத்து மிரட்டல் விட்டாலும் தவறு செய்தவரின் முதுகுத் தோலை நிஜமாகவே உரிக்கும் தண்டனையும் ஒரு காலத்தில் வழக்கத்தில் இருந்திருக்கிறது என்றால் நம்புவீர்களா? திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சிங்கம்பட்டி ஜமீனில்தான் … Continue reading

Posted in சிங்கம்பட்டி ஜமீன் | Tagged | 3 Comments

வீரத்திலகம் வேலுநாச்சியார் (1780-1789)

இராமநாதபுரம் மன்னர் (1749-62) செல்லமுத்து சேதுபதி, சிவகங்கைக்கு அருகிலுள்ள ‘சக்கந்தி” என்னும் ஊரைச் சேர்ந்த முத்தாத்தாள் நாச்சியார் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு ஓர் அழகிய பெண் குழந்தை பிறந்தது. அவர்கள் அக்குழந்தைக்கு வேலு நாச்சியார் எனப் பெயரிட்டார்கள். செல்லமுத்து சேதுபதி தனது மகள் வேலு நாச்சியாரைக் கல்வி – கேள்விகளில் சிறந்தவராக வளர்த்து … Continue reading

Posted in வேலு நாச்சியார் | Tagged | Leave a comment

கொல்லியும் – அறப்பள்ளியும் வரலாறு

நாமக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள கொல்லிமலையில் அறப்பள்ளி ஈச்வரம் உள்ளது. கொல்லிமலை கடல் மட்டத்தில் இருந்து 4500 அடி உயரத்தில் உள்ளது. சேலம், நாமக்கல் நகரங்களிலிருந்து பேருந்துகள் உண்டு. மலையின் மேற்குப்பக்கம் அமைந்துள்ள காரவள்ளியிலிருந்து 45 கி.மீ. தொலைவில் அறப்பள்ளி அமைந்துள்ளது.

Posted in வரலாறு | Tagged | Leave a comment

ஸ்ரீவில்லிபுத்தூர் – வரலாறு

ஸ்ரீவில்லிபுத்தூர், வில்லி என்ற மன்னன் ஆண்டதால் வில்லிபுத்தூர் என்றும், ஆண்டாள் பிறந்த ஊராதலால், ‘ஸ்ரீ’ என்னும் திருநாமத்தோடு ஸ்ரீவில்லிபுத்தூர் என்றும் அழைக்கப்படுவதாக, பள்ளி நாட்களில் படித்திருக்கிறேன். ஆனால் எனக்குத் தெரியாத விஷயங்களை சமீபத்தில் நாளிதழில் படித்தேன். மதுரையைக் கைப்பற்றிய கான்சாகிப் என்ற மருதநாயகம், ஆங்கிலேயருக்கு வரி கொடுக்க மறுத்த ‘நெற்கட்டுச் செவ்வல்’ பாளையக்காரர் பூலித்தேவரை வெல்ல, … Continue reading

Posted in வரலாறு | Tagged | Leave a comment