Daily Archives: 10/12/2010

பாண்டியனுக்கு பின்னால் தேவர் என்று போட முடியுமா..?

பாண்டியன் என்ற பெயருக்கு பின்னால் தேவர் என்று போடலாமா? வேண்டாமா? என்ற சந்தேகம் பல நாட்கள் நிலவி வந்தாலும், திருவாரூர் மாவட்டத்திற்கு உட்பட்ட  ஒரு பிரசித்தி பெற்ற சிவாலயத்தில் உள்ள  கல்வெட்டின் ஆதாரத்தின்படி “பாண்டியன் தேவர்” என்று அப்போதிலிருந்தே பயன்படுத்தி வந்துள்ளனர் என்பது தெளிவாகிறது.அந்த கல்வெட்டில் “ஸ்ரீ சுந்தர பாண்டிய தேவருக்கு யாண்டு” என்ற மெய் … Continue reading

Posted in பாண்டியன் | Tagged , | 1 Comment

செப்பேடுகள் – கோவிராஜகேசரிவர்மன் ஆன விஜயராஜேந்திரதேவர் (முதலாம் இராஜாதிராஜன்)

20-5-2010 அன்று தமிழகத்தில், நாகப்பட்டினம் மாவட்டம், மயிலாடுதுறை வட்டத்தில்-மயிலாடுதுறையிலிருந்து ஆனதாண்டவபுரம் சாலையில் இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் திருஇந்தளூர் எனும் ஊர் அமைந்துள்ளது. அந்த ஊரின் உட்கிராமமாக கழுக்காணி முட்டம் என்ற பகுதி உள்ளது. கழுக்காணி முட்டத்தில்- பிற்காலச் சோழர் காலத்தில் கட்டப்பட்ட – கைலாசநாதர் கோயில் உள்ளது.

Posted in சோழன் | Tagged | Leave a comment

மூவேந்தர் யார் ?

சடையவர்மன் அதிவீரராம பாண்டியன் கி.பி. 1564 முதல் 1604 வரை பாண்டிய நாட்டினை ஆட்சி செய்த மன்னனாவான். நெல்வேலி மாறனின் முதலாம் மகனாவான்.அழகன் சீவலவேள் என்ற பெயரினைப்பெற்ற இவன் தனது தந்தையில் நினைவாக தென்காசியில் குலசேகரமுடையார் ஆலயம் அமைத்து விண்ணகரம் ஒன்றினையும் அமைத்தான். சிவனிடன் பக்தியுடைய இம்மன்னன் சிறந்த புலவனும் ஆவான். தமிழில் மிகுந்த பற்றுடன் … Continue reading

Posted in மூவேந்தர் | Tagged , , , , | 3 Comments

புதிய சோழர் செப்பேடுகள் கண்டுபிடிப்பு

புதிய  சோழர் செப்பேடுகள் கண்டுபிடிப்பு பிற்காலச் சோழர்களின் சரித்திரம் அடங்கிய பழங்கால செப்பேடுகள் மயிலாடுதுறையை ஒட்டிய கிராமம் ஒன்றிலிருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில், நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறை வட்டத்தில், மயிலாடுதுறையிலிருந்து ஆனதாண்டவபுரம் சாலையில் இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் பிற்காலச் சோழர் காலத்தில் கட்டப்பட்ட கைலாசநாதர் கோயில் உள்ளது.

Posted in சோழன் | Tagged | Leave a comment

சோழர் வரலாற்றின் தொன்மை சொல்லும் கல்வெட்டுக்கள்

கந்தளாய், திருகோணமலையில் இருந்து கண்டி செல்லும் பாதையில் நாற்பது கிலோமீற்றரில் அமைந்திருக்கும் ஊர். இலங்கையின் மிகப்பெரிய விவசாய நிலங்களைக் கொண்ட பிரதேசங்களில் ஒன்றாகக் கந்தளாயும் கருதப்படுகிறது. பண்டைய நாட்களில் கந்தளாயில் ‘சதுர்வேதி மங்கலம்’ என்றழைக்கப்பட்ட பிரதேசம் இருந்தது. இங்கு நான்கு வேதங்களையும் கற்றுணர்ந்த அந்தணர்கள் வாழ்ந்து வந்திருக்கிறார்கள். இவர்களுக்கு இப்பிரதேசம் வரியில்லாமல் வழங்கப்பட்டிருக்கிறது. இங்கிருந்த குடியேற்றம் … Continue reading

Posted in சோழன் | Tagged | Leave a comment

தேவரின் நாடாளுமன்ற முழக்கம்

1957ல் நடந்த ஸ்ரீவில்லிபுத்தூர் நாடாளுமன்றத் தேர்தலில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் வெற்றி. அதன்பின் முதுகுளத்தூர் சட்டப்பேரவை இடைத் தேர்தல். இமானுவேல் கொலை. கீழத்தூவல் படுகொலை. 1957 ஜனவரி 28 நள்ளிரவு கைது. தொடர் சிறை வாழ்க்கை. 1959 ஜனவரி 7ல் விடுதலை. அதன்பின் தமிழகம் முழுவதும் தொடர் முழக்கம். அதனால் நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டும் இரண்டாண்டு … Continue reading

Posted in முத்துராமலிங்க தேவர் | Tagged | Leave a comment

திரையில் தேவர் திருமகன் வரலாறு!

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர். தமிழகத்தின் மாபெரும் அரசியல்-சமூக சக்தி. மறைந்து பல ஆண்டுகள் ஆனாலும் இன்றும் முக்குலத்து சமுதாய மக்களின் இதயங்களில் சிம்மாசனம் இட்டு அமர்ந்திருப்பவர். பல அரசியல் கட்சிகள் இன்றும் இவர் பெயரைச் சொல்லித் தான் அரசியிலில் தப்பி பிழைத்துக் கொண்டிருக்கின்றன. தென் மாவட்ட முக்குலத்தோர் மக்கள் தங்கள் கடவுளாகவே போற்றும் தலைவர். சுதந்திரப் … Continue reading

Posted in முத்துராமலிங்க தேவர் | Tagged | 1 Comment

மாமன்னன் ராஜராஜ சோழன்

– அண்ணாமலை சுகுமாரன் புதுச்சேரி சொல்லச்சொல்ல அலுக்காத சில சங்கதிகளில் இராஜராஜனின் வரலாறு பற்றிய குறிப்புகளும் முக்கியமான ஒன்றாகவே இருக்கிறது.இன்றோ அந்த மாமன்னனின் 1025 வது சதய திருநாள் கொண்டாடி மகிழ்ந்து கொண்டிருக்கிறோம். வேறு எந்த மன்னனின் பிறந்த நாளாவது உலகில் ஆயிரம் ஆண்டுகள் கடந்தும் கொண்டாடப்படுகிறதா ? என்பது மிகப்பெரிய ஒரு அதிசயமான கேள்விதான்.அதுவும் இந்த மாமன்னனின் பிறந்தநாள் … Continue reading

Posted in சோழன் | Tagged , | Leave a comment