Monthly Archives: November 2010

தேவர் திருமகன் – வைகோ உரை -1

தேவர் புகழ் வாழ்க :எனவே, பதவிகள் புகழை நிலைநாட்டாது, நிலைக்கச் செய்யாது. உண்மையும், நேர்மையும், உழைப்பும், தன்னலமற்ற மக்கள் பணியும்தான் நிலைக்கும் என்பதற்கு எடுத்துக்காட்டான ஒரு தலைவர் தேவர் திருமகனார்!வரலாற்றுச் சிறப்புமிக்க மதுரை மாநகரில், தமிழர்களின் பண்பாட்டுத் தலைநகரில், ‘நெற்றிக்கண்ணைக் காட்டினாலும் குற்றம் குற்றமே’ என உரைக்க ஒரு புலவனால் இயலும்; திரிபுரம் எரித்த விரிசடைக்கடவுளையும் … Continue reading

Posted in முத்துராமலிங்க தேவர் | Tagged | 1 Comment

தேவர் திருமகன் – வைகோ உரை -2

எங்கள் வீட்டில் தேவர் : என் தந்தையார் காங்கிரஸ் இயக்கத்தில் இருந்தார்கள். அப்பொழுது தென்மாவட்டச் சுற்றுப்பயணத்தில் வந்த பசும்பொன் தேவர் திருமகனார் அவர்கள், என் கிராமத்துக்கு உள்ளே வருகிறபோது, இன்றைக்கு எப்படி வாலிபச் சிங்கங்கள் தேவர் திருமகன் புகழ் பாடுவதற்கு அடிவயிற்றில் இருந்து முழக்கம் எழுப்பி கர்ஜிக்கிறார்களோ, அதேபோல இளஞ்சிங்கங்கள், வாலிபர்கள், ‘தென்னாட்டுச் சிங்கம் வாழ்க, … Continue reading

Posted in முத்துராமலிங்க தேவர் | Tagged | Leave a comment

தேவர் திருமகன் – வைகோ உரை -3

சென்னையில் தேவர் : அப்படிப்பட்ட சூழலில், அந்த சிவில் வழக்குகளை நடத்துவதற்காகச் சென்னைக்குச் சென்றார். ‘அம்ஜத் பார்க்’ என்கிற பெயருள்ள மாளிகை. மயிலாப்பூரில், மூன்று ஏக்கர் சுற்றளவு உள்ள மாளிகை. அந்த மாளிகையின் சொந்தக்காரர் சீனிவாச அய்யங்கார். மிகப்பெரிய வழக்கறிஞர். அவரிடம் சென்றார் வாலிபராக இருந்த தேவர்.

Posted in முத்துராமலிங்க தேவர் | Tagged | Leave a comment

தேவர் திருமகன் – வைகோ உரை -4

நேதாஜி : 1938 இல் திரிபுரியில் காங்கிரஸ். இரண்டாவது தடவையாக நேதாஜி காங்கிரஸ் கட்சியின் தலைமைப் பதவிக்குப் போட்டி இடுகிறார். நேதாஜியை நாடு விரும்புகிறது. காந்தி அடிகள் விரும்பவில்லை, படேல் விரும்பவில்லை. இன்னும் பலபேர் சேர்ந்து சூழ்ச்சி செய்தார்கள். அவர்கள் சதி செய்தார்கள். பண்டித நேரு அப்பக்கமா? இப்பக்கமா? என்று கடைசிவரை தீர்மானிக்க முடியாமல் தடுமாறிக் … Continue reading

Posted in முத்துராமலிங்க தேவர் | Tagged | Leave a comment

தேவர் திருமகன் – வைகோ உரை -5

நீதிமன்றத்தில் தேவர் : நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டார். புதுக்கோட்டை நீதிமன்றம். அந்த நீதிமன்ற நிகழ்ச்சியைப்பற்றி அப்பொழுது அரசாங்க வழக்கறிஞராக இருந்த எத்திராஜ் சொல்கிறார். சென்னையில் எத்திராஜ் கல்லூரி, அவர் பெயரில்தான் இருக்கிறது. புகழ்பெற்ற வழக்கறிஞர் எத்திராஜ். அவருக்கு உதவி செய்தவர் பின்னாளில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்த கிருக்ஷ்ணசாமி ரெட்டியார். அவரும் அரசுத் தரப்பு வக்கீல்தான். தேவர் … Continue reading

Posted in முத்துராமலிங்க தேவர் | Tagged | 2 Comments

தொ.மு.பாஸ்கரத் தொண்டைமான்.

நெல்லை மாவட்டம் தமிழுக்கு அளித்திருக்கும் கொடைகள் ஏராளம் ஏராளம். பல தமிழறிஞர்கள் நெல்லைத் தரணியில் தோன்றி மொழிப் பணியாற்றி இருக்கின்றனர். அந்த வரிசையில் 1904ஆம் ஆண்டு ஜூலை மாதம் 22ஆம் தேதி நெல்லையில், தொண்டைமான் முத்தையா – முத்தம்மாள் தம்பதியருக்கு மகனாகப் பிறந்தவர் தொ.மு.பாஸ்கரத் தொண்டைமான். . .

Posted in தொண்டைமான் | Tagged | Leave a comment

வெள்ளைச்சாமித் தேவர் என்ற மதுரகவி பாஸ்கரதாஸ்

ச.முருகபூபதி தொகுத்த “மதுரகவி பாஸ்கர தாஸின் நாட்குறிப்புகள்” தாத்தா தாஸின் நாட்குறிப்புகளை அவரது பேரன் முருகபூபதி பல ஆண்டுகள் தேடித் தேடி அவற்றைக் கோர்த்து அற்புதமாய் இந்நூலை நமக்குத் தந்துள்ளார். இந்த நாட்குறிப்பு 1.1.1917 லிருந்து துவங்குகிறது. 92 ஆண்டுகளுக்கு முன்பிருந்த தமிழக மக்களையும், அவர்களது கலைவாழ்வையும் முழுமையாக 20.9.1951 வரை 34 ஆண்டுகள் பதிவு … Continue reading

Posted in மதுரகவி பாஸ்கரதாஸ் | Tagged | Leave a comment

தென்னாடு

சேதுபதி மறைந்த பின் சேதுபதி மருமகன் இராசசூரியத்தேவன் சேதுபதியானார். இவருக்குப் பின்னால் இவர்களுக்கு வாரிசுகள் இல்லாமல் போகவே இவருடைய இரண்டாவது மனைவியின் மகன், ரெகுநாத தேவனை மறவர்குள மக்கள் கி.பி.1674ம் ஆண்டு பட்டம் சூட்டி வைத்தார்கள். கிழவன் சேதுபதி என்ற பெயரில், இவர் சேதுநாட்டை ஆண்டு பெரும் பேரும் புகழோடு 39 ஆண்டுகள் ஆட்சி ஆண்டு … Continue reading

Posted in சேதுபதிகள் | Tagged , | Leave a comment

மன்னர் முத்துவடுகநாதத் தேவர்

சிவகங்கைச் சீமையின் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் தேர்ந்த வீரமும், பண்பும், சிறந்த பக்கியும் , மக்கள் நலம் பேணும் குணமும் கொண்டு நாட்டை ஆண்டு வந்தார். அவரது ஆட்சிக் காலத்தில் நாட்டில் பஞ்சமின்றி, பயமின்றி வளமுடன் நாட்டு மக்கள் வாழ்ந்து வந்தனர். வேலு நாச்சியாரோ சிறந்த பக்தை, போர் பயிற்சி பெற்றவர். பலமொழிகளைக் கற்றவர். இலக்கிய … Continue reading

Posted in சிவகங்கைச் சீமையின் மன்னர் | Tagged , | Leave a comment

பெண்கள் கூந்தல் மேல் நடக்க மறுத்த பசும்பொன் தேவர்

.தேவர் திருமகனார் பர்மாவுக்கு சென்றபோது, புத்த துறவிகள் அவருக்கு கறுப்பு கம்பள வரவேற்பு கொடுத்தார்கள். அதாவது, பெண்கள் தரையில் படுத்துக்கொள்ள, அவர்கள் தங்கள் கூந்தலை கம்பளமாய் விரிக்க, அதன் மீது நடந்து வருமாறு, தேவர் கேட்டுக்கொள்ளப்பட்டார். இதைக்கண்டு பதறிப்போன திருமகனார், “பெண்களை கடவுள் போன்று கும்பிடுகிற தமிழகத்தில் இருந்து வந்தவன் நான்” என்று சொல்லி மறுத்து … Continue reading

Posted in முத்துராமலிங்க தேவர் | Tagged , | Leave a comment