முதுகுளத்தூர் கலவரம் (1957) – 2

மதுரை சிறையில் அடைக்கப்பட்ட தேவர் மீது சுமத்தப்பட்ட குற்றச் சாட்டுக்கள் பின்வருமாறு : –

உ . முத்துராமலிங்கத் தேவர் எம்.பி. கடந்த பல வருடங்களாக ஆட்சேபகரமான பிரசங்கங்கள் மூலமும் வகுப்பு உணர்ச்சியை கிளறி வருவதோடு, மக்களைப் பலாத்கார சம்பவங்களுக்குத் துண்டி விட்டு வந்திருக்கிறார். கீழே கண்ட சம்பவங்கள் அதற்கான ஆதாரங்களாகும்

1. 12-5-1956-ல் மதுரையில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில், ஸ்ரீதேவர் பேசிய போது, இன்னும் ஆறு மாதங்களுக்குள் இந்தியா, பிரிட்டன் காமன் வெல்த் உறவிலிருந்து விலகிவிட வேண்டும். தவறினால் காங்கிரஸ் கட்சியை இந்தியாவின் ஆட்சி பீடத்திலிருந்து வெளியேற்ற அகில இந்திய ரீதியில் ஒரு போராட்டம் ஆரம்பிக்கப்படும் என்று பார்வர்ட் பிளாக் சார்பில் இந்தியப் பிரதமருக்கு அறிவிப்பாகக் குறிப்பிட்டார். பார்வர்ட் பிளாக் கட்சிக்கு அவர் ஸ்தல தலைவர்.

2. 17-4-1957-ல்அவர் சாயல்குடியில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பேசிய போது, நெறிதவறிய வியாபாரத்தின் மூலம் நாடார்கள் பெரும் பணக்காரர்கள் ஆகிவிட்டார்கள். பொது மக்கள் யாரும் நாடார்களோடு எவ்வித வர்த்தக தொடர்பும் வைத்துக் கொள்ள வேண்டாம். அவர்களது கடைகளில் சாமான்கள் வாங்குவதையும் நிறுத்தி விடுங்கள். கடந்த ஜூலை மாதக் கடைசியில் விருதுநகரில் ஒரு சதி உருவாகி இருக்கிறது. நாடார் இனத் தலைவர்கள் இரகசியமாகத் கூடி, அக் கூட்டத்தில் அரிஜனங்களின் ஒரு பகுதியினனைரைக் கூட்டிப் போய் அவர்களை மறவர்களோடு மோதும்படி போதித்திருக்கிறார்கள் என்று குறிப்பிட்டார்.

3. 1957 ஆம் ஆண் ஜூன் 14-ல் அபிராமம் பொதுக்கூட்டத்தில் பேசுகையில், தவறான முறைகள் மூலம் எனக்கு எதிராகப் போலிஸ் எதுவும் செய்தால், போலிசார் செய்யும் முறைகளின் படியே அவர்களுக்குப் பதில் அளிக்கப்படும் என்று போலிஸ் அதிகாரிகளை எச்சரித்தார்.

4. 1957 ஆம் ஆண்டு ஜூன்மாதம் 10ஆம் தேதி திருப்புவனம் புதூரில் நடந்த ஒரு பொக்கூட்டத்தில் பேசும் போது, எனது தொகுதியில் எனக்குச் செல்வாக்கு இல்லை என்று காட்டுவாற்காகக் காங்கிரஸ்காரர்கள் பொறுக்க முடியாத பல அக்கிரம வழிகளைக் கையாளுகிறார்கள். அந்த அக்கிரமங்கள் அளவுக்கு மீறி வருமானால், காஷ்மீருக்குப் பதிலாக முதுகுளத்தூரிலே ஒரு மூன்றாவது உலகப்போரைத் தொடங்க நான் தயாராக நேரும் என்று பயமுறுத்திப் பேசினார்.

சமீபத்தில் முதுகுளத்தூர் தாலுகாவில் ஹரிஜனங்களுக்கும் மறவர்களுக்குமிடையே வளர்ந்தோங்கி வரும் வகுப்பு வளர்ச்சிக்கு அவரின் நடவடிக்கைகளே பொறுப்புகள் என்பதற்கான ஆதாரங்கள் பின்வருமாறு:-

1. 1957 செப்டம்பர் 10-ல் இராமநாதபுரம் கலெக்டரால் முதுகுளத்தூரில் ஒரு சமாதான மாநாடு கூட்டப்பட்டது. அக்கூட்டத்தில் அரிஜனங்கள் சார்பில் ஸ்ரீ இமானுவேல் பேசினார். தமக்குச் சமமாக இமானுவேல் என்பவர், அரிஜனங்களுக்காகப் பேசுவது கேவலம் என்ற முறையில் குறிப்பிட்ட தேவர், மாநாடு முடிந்து வெளியே வந்து, ” இமானுவேலை இவ்வளவு முக்கியத்துவம் பெற எப்படி அனுமதித்தீர்கள்? ” என்றும் எனக்கு ஏற்பட்ட இந்த அவமானத்திற்கு என்ன செய்யப் போகிறீர்கள்? என்றும் தம்மைப் பின்பற்றுவோரைப் பார்த்துக் கேட்டார்.

மறுநாள், அவரைப் பின்பற்றும் ஒரு பகுதி தேவர்களால் திரு இமானுவேல் கொலை செய்யப்பட்டு விட்டார். கொலை செய்தவர்களில் ஒருவர், கொலை செய்யும்போது, தேவரை எப்படி எதிர்த்துப் பேசலாம்? என்று கேட்டுக் கொண்டே கொன்றார்.

2. செப்டம்பர் 16-,ல வடக்கம்பட்டியில், ஒரு பொதுக்கூட்டம் நடந்தது. அதில் பேசிய திரு. தேவர், முதுகுளத்தூர், பரமக்குடி பகுதிகளில் வகுப்புக்கலவரம் மூளுவதற்கான உணர்ச்சிகள் வேகப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டதோடு, காங்கிரஸ்காரர்கள் சண்டையிடுவதற்குத் தவறான இடத்தைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள் என்றும், அப்பகுதி மக்கள் மாவீரம் கொண்டவர்கள். பிரிட்டன் ஆட்சியின் ஆரம்ப காலத்திலேயே, அவ்வாட்சியின் துப்பாக்கிக் குண்டுகளுக்குப் பயப்படாமல் எதிர்த்து நின்றவர்களென்றும், அப்பகுதி மக்கள் போலீசுக்கோ, விசேடப் போலீசுக்காங்கிரஸ்காரர்கள் , இராணுவத்திற்கோ பயப்படத் தேவையில்லை என்றும், நிலைமையை அடக்கப் பலாத்காரம் மூலமே சர்க்காருக்கு பதில் அளிக்கப்படும் என்றும், இந்த நாட்டில் தர்மத்தை நிலைநாட்டுவதற்காக, மக்கள் ஆயுதம் ஏந்தத் தயங்க வேண்டாமென்றும், உள்நாட்டுப் போரை நடத்தும்படியும் பேசினார்.

3. செப்டம்பர் 16-ல் வடக்கம்பட்டியில், கொலை ஆயுதப் போராட்டம், வேல் கம்பு தாக்குதல் போன்ற நடவடிக்கைகள் பெருத்த அளவில் நடைபெற்றன.

முதுகுளத்தூர், பரமக்குடி, கிவகங்கை, அருப்புக்கோட்டைத் தாலுகாவைச் சேர்ந்த கீழ்க்காணும் கிராமங்களில் நடந்த சம்பவங்கள் வருமாறு :-

1. செப்டம்பர் 17-ல் ஆயிரம் பேர் கொண்ட ஆயுதம் தாங்கிய மறவர் கூட்டம் ஒன்று, புத்தம்பல் கிராம அரிஜன வீடுகளுக்குத் தீயிட்டு விட்டு வீராம்பல் கிராமத்துக்கு அணி வகுத்துப் போய், அங்கே பாதுகாப்புக்காக இருந்த ஒரு எஸ்.ஏ. பி. போலிசைத் தாக்கியது. போலிசார் தற்காப்புத் துப்பாக்கிப் பிரயோகம் செய்ததில் மறவர்கள் இருவருக்குக் காயம். சிலர் மடிந்தனர். 72 பேர் கைது செய்யப்பட்டு, ஏராளமான ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன.

2. செப்டம்பர் 18-ல் மாலை 4 மணி சுமாருக்கு, மறவர் கூட்டம் ஒன்று, தாத்தாக்குடி கிராமம் அரிஜனங்களின் வீடுகளுக்குத் தீயிட்டது.

3. செப்டம்பர் 19-ல் அருப்புக் கோட்டை தாலுhகா நரிக்குடி போலிஸ் சரகத்தை சேர்ந்த நாலுhர் கிராமத்தில் மறவர்கள், அஜனங்களின் வீடுகளுக்கத் தீ வைத்தனர்.

4. அன்று மாலை மார் 500 மறவர்கள் சிவகங்கைத் தாலுhகாவைச் சேர்ந்த திருப்பாச்சேத்தி அரிஜன வீடுகளுக்கத் தீயிட்டனர்.

5. அதே நாள் இரவு 10 மணி சுமாருக்கு, முன்னணிப் போலிசுப் படையினர், பெரும்பச்சேரி கிராம அரிஜன வீடுகள் எரிந்து கொண்டிருந்ததையும். 100 பேர் கொண்ட மறவர் கூட்டத்தால், அரிஜனங்கள் தாக்கப்படுவதையும் பார்த்து, தற்காப்புக்காக ஒன்பது ரவுண்டு சுட்டனர்.

6. அதே இரவு ஆயுதம் தாங்கிய மறவர் கூட்டம் ஒன்று, நரிக்குடி போலிஸ் சரகத்தைச் சேர்ந்த கிராமங்களில் தீயிடச் சென்ற செய்தி கிடைத்தது. கமுயீத போலிஸ் இன்ஸ்பெக்டர் உளுத்திமடை கிராமத்திற்குச் சென்று, ஆயுதஙகளைக் கீழே போடும்படி மறவர்களுக்குக் கட்டளையிட்டார். மறவர்கள் போலிசாரைத் தாக்கினர். போலிசார் கூட்டத்தில் நான்கு பேர் செத்தனர். பதினைது மறவர்கள் கைது செய்யப்பட்டு, ஏராளமான ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

7. செப்டம்பர் 20-ல் காலை 6 மணிக்கு இளம்செம்பூரைச் சேர்ந்த கிட்டதட்ட 200 மறவர்கள் பயங்கர ஆயுதங்களுடனும், நாட்டுத் துப்பாக்கிகளுடனும் ஒரு மைல் தொலைவில் உள்ள வீராம்பல் கிராமத்திற்குச் சென்று, அரிஜனவீடுகளுக்குத் தீ வைத்து, அவர்களை வேட்டையாட ஆரம்பித்தனர். அரிஜனங்கள் அங்கு இருந்த மாதா கோவிலுக்குள் அடைக்கலம் புந்தனர். மறவர்கள் மாதா கோயில் ஜன்னல்களை உடைத்து, தீ வைத்து மூவரைக் கொன்று, முப்பத்தாறு பேர்களைக் காயப்படுத்தி விட்டனர்

8. அதே நாள் 500 பேர் கொண்ட மறவர் கூட்டம் ஒன்று, திருப்பாச்சேத்தி போலிஸ் சரகத்தைச் சேர்ந்த கிராமங்களுக்குச் சென்று, அரிஜனவீடுகளுக்குத் தீயிட்டு, உணவுப் பொருள்களையும், இதர பொருள்களையும் கொள்ளையிட்டனர். மானாமதுரை போலீஸ் இன்ஸ்பெக்டர் விசேஷப் போலீஸ் படையுடனும் சென்று, மறவர்களை மழவராயனேந்தலில் சந்தித்து, ஆயுதங்களைக் கீழே போடும்படி உத்தரவிட்டனர். கட்டுப்பட மறுத்த மறவர்கள் போலீசைத் தாக்க முனைந்தபோது, போலீசார் ஆறு ரவுண்டு சுட்டனர். அதன் பயனாய் ஒரு மறவர் சூடுபட்டு ஆஸ்பத்திரிக்குப் போகும் வழியில் இறந்து விட்டார்.

9. இம்மாதிரி குற்றச் செயல்களால், முதுகுளத்தூர் போலீசார் அடுத்துள்ள பல கிராமங்களைச் சேர்ந்த மறவர்கள் பலரைச் சந்தேகத்தின் பேரில் பல குற்றங்களுக்காகவும், சட்ட ஒழுங்கைக் காப்பதற்காகவும், கைது செய்தனர்.

இவைகளை அறிந்த திரு.தேவர், தமிழ்நாடு பத்திரிகை பிரதிநிதிகளிடம், தேவமார்களைக் கைது செய்து, குறிப்பாக எனது சொந்தக் கிராமமான பசும்பொன்னில் எனது சொந்த வீட்டிலிருந்த சமையல்காரனையும் உறவினர்களையும் கூடக் கைது செய்வதின் மூலம் சர்க்கார் என்னைச் சண்டைக்கு இழுக்கிறது’ என்று கூறியிருக்கிறார். அவர் கூறியதில், அவர் சவாலை ஏற்கத் தயாராகும் எண்ணம் உள்ளடங்கி இருக்கிறது.

10. கீழ்த்தூவலில் நடந்த துப்பாக்கிப் பிரயோகம் சம்பந்தமாய் எஸ்.வெங்கடராமன் ஐ.சி.எஸ். விசாரணை நடத்தினார். இவ்விசாரணையைத் தாமோ, தமது கட்சியோ ஏற்கப் போவதில்லை என்று திரு தேவர் வாய்மொழியாகக் கூறியிருந்தும், விசாரணை நடந்த கட்டிடத்தின் வாயிலருகே ஒரு காரில் விசாரணையின்போது உட்கார்ந்திருந்தார். இதனால் அரிஜனங்கள் தைரியமாக கமிஷனிடம் வந்து தேவருக்கு எதிராகச் சாட்சியம் அளிக்க இயலாமல் போனது சாத்தியமாயிற்று. முதுகுளத்தூர் தாலுகாவிலும் அதை அடுத்த பகுதிகளிலும் உள்ள மறவர்கள் திரு தேவரின் சொல்லுக்குக் கட்டுப்பட்டவர்கள் என்பது கண்கூடு, மேலும் இவ்வித சம்பவங்களிலிருந்து, திரு தேவர் தமது ஜனங்களைப் பலாத்கார நடவடிக்கைகளிலிருந்து தடுப்பதற்குப் பதிலாக பின்னணியில் இருந்து கொண்டு அரிஜனங்களுக்கு எதிராக தூண்டிவிட்டார் என்பது தெரிகிறது.

உ. முத்துராமலிங்கத் தேவர் தமது பகிரங்கப் பேச்சுக்களின் மூலமும், தம்மைப் பின்பற்றுவோருடன் இரகசிய ஏற்பாடுகள் செய்வதன் மூலமும், வகுப்புணர்ச்சியைக் கிளறிவிட்டு வருகிறார் என்பது தெரிகிறது. இதை இப்படியே தொடரவிட்டால், மேலும் பல வகுப்புக் கலவரங்கள் சட்ட விரோத செயல்களுக்கும் அவர் தமது சுதந்திரத்தைப் பயன்படுத்தக்கூடும். அந்த நிலைமை ராஜ்யத்தின் பாதுகாப்பிற்கும், அமைதிக்கும் பாதகமாக முடியும் என்பதால், அவர் தடுப்புக் காவல் சட்டப்படி காவலில் வைக்கப்பட்டுள்ளனர். மேற்குறித்த குற்றச்சாட்டுக்களை மறுத்து, திரு தேவர் எழுத்து மூலம் விவரிக்க உரிமையுண்டு. அவ்வாறு அவர் இந்தக் குற்றச்சாட்டுக்களை மறுக்க அவர் விரும்பினால், அவர் காவலில் வைக்கப்பட்டுள்ள சென்னை சிறை சூப்பிரண்டட் மூலம் சென்னை சர்க்கார் காரியதரிசியிடம் அனுமதி கோரலாம். திரு. தேவர் மூலம் அனுப்பப்படும் எவ்வித பிரதிநிதித்துவத்தையும் சர்க்கார் உடனே அட்வைசரி போர்டு முன் வைக்கும். அட்வைசரி போர்டு முன் நேரடியாக வந்து விபரம் சொல்ல திரு. தேவர் விரும்பினால், அதன்படியும் செய்யலாம். தாம் அட்வைசரி போர்டு முன் ஆஜராகி, விளக்கமளிக்கத் தேவர் நிச்சயித்திருந்தால், அரசாங்கத்தின் தலைமைக் காரியதரிசிக்கு முன்கூட்டியே எழுதும்படி திரு தேவர் கேட்டுக்கொள்ளப்படுகிறார்.
_

This entry was posted in கலவரம் and tagged . Bookmark the permalink.

2 Responses to முதுகுளத்தூர் கலவரம் (1957) – 2

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *