வாட்டாக்குடி இரணியன் தேவர்

“1950 ம் ஆண்டு மே மாதம் ஐந்தாம் தேதி, உலகம் முழுவதும் கார்ல் மார்க்ஸின் பிறந்த தினத்தைக் கொண்டாடும் போது நாம் வாட்டாக்குடி இரணியன் அவர்களை நினைவுக் கூறுகிறோம் ..

தமிழகத்தில் முதன் முதலாய்
விவசாயத் தொழிலாளர்கள் தங்கள் வாழ் வுக்காகவும் வர்க்கச் சுரண்டலை எதிர்த்தும் சங்கமாகச் சேர்ந்த தஞ்சையில் உதித்திட்ட இரு பெருஞ்சுடர்களான ‘வாட்டாக் குடி இரணியன்-சாம்பவான் ஓடைச் சிவராமன்’ [ இறப்பு ;மே மாதம் மூன்றாம் தேதி]

1947 இல் இந்திய விடுத லைக்குப் பின் பண்ணையார்கள் காங்கிரசில் சேர, ஆளுங்கட்சி யின்
ஆதரவோடு பண்ணை அடிமை முறை வளர்த்தெடுக்கப் படுகிறது. மக்களைக் காக்க வேண்டிய காவல்துறையும் பண் ணையாருக்கு ஏவல் துறையாய் துணை நிற்க, விவசாயக் கூலிகளின் சொல்லொண்ணாத் துயரமோ வரலாறாய் நிற்கிறது.

இந்தச் சூழலில் கம்யூனிஸ்ட் கட்சி தடைகள் பல கடந்து தலித்-பாட்டாளி மக்களுக்கு ஆதரவாய் ஆக்ரோஷமாய் போராடுகிறது. அந்தப் போராட்டச் சூழலில் உதித்த சூரியர்கள் தான் இரணியனும் சிவராமனும். இருவரது பிரவேசமும் உச்ச கட்டமாய் 1940ல் துவங்குகிறது. 1950 மே மாதத் துவக்கத்தில் நிறைவடைகிறது. இடைப்பட்ட பத்து ஆண்டுகள் தஞ்சை மாவட்ட கிராமங்களில் குறிப்பாக தென் பரை, ஆம்பலாம்பட்டு முதலிய ஊர்களில் கட்சி கால்கோல் நாட்டப்பட்டு இயக்கமாய் வளர்ந்து, பலருக்கு வெளிச்சத்தையும் சிலருக்கு அச்சத்தையும் தெரிவிக்கிறது

சாதிய இயக்கங்கள் பெருகி வரும் இந்த நாளில் இரணியனும்,
சிவராமனும் பிறப்பால் தேவர் இனத்தவர்கள். அவர்கள் ஏற்றுக் கொண்ட பணியோ தாழ்த்தப்பட்ட மக்களின் விடியலுக்கான வீரஞ்செறிந்த போர்…
சொந்தச் சாதியினை சேர்ந்த சில சுரண்டல்க்காரர்களையும் , வேற சமூகத்தை சேர்ந்த பண முதலைகளையும் எதிர்த்து மிக இளவயதில் தன் சுகம் மறுத்து வர்க்கப் போராட்டத்தின் வாசலைத் திறந்து வைத்த இருவரும் 1950 மே 3 மற்றும் 5ம் நாள் ஒருவர் பின் ஒருவராய் காவல் துறையினரால்
சுட்டுக் கொல்லப்படுகிறார்கள்

’வாட்டாக்குடி இரணியன், ஜாம்பவனோடை சிவராமன்,
ஆம்பலாபட்டு ஆறுமுகம் ஆகியோரின் உடல்கள் பட்டுக்கோட்டை ரயில் நிலையம் அருகேயுள்ள மயானத்தில் எரியூட்டப்பட்டதால், அந்த இடத்தில் மக்கள் நினைவுச் சின்னம் ஒன்றை கட்டி மரியாதை செலுத்தி வந்தனர்.

ஆனால், அந்த நினைவுச் சின்னத்தை இரண்டுவருடதிர்க்கு முன்னாள் அரசாங்கத்தால் இடிக்கப்பட்டுவிட்டது நம் குலத்தில்
பிறந்த போர் வீரர்களை நினைவு கூறுவோம்
வீர வணக்கம்

This entry was posted in வாட்டாக்குடி இரணியன் தேவர் and tagged , , . Bookmark the permalink.

One Response to வாட்டாக்குடி இரணியன் தேவர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *