மறவர் என்பது இனப்பெயர் பன்பு பெயரல்ல!!

வடமொழியில் தமிழன் என்றால் திரமிளன் டமிலா
அதே போல் மழவன் என்றால்= மாளவா
மறவன் என்றால் மர்த்தான்= அழிப்பவன்.

“கல் தோன்றி மன் தோன்றாக் காலத்தே வாளோடு முன் தோன்றிய மூத்த குடி” என புறப்பொருள்
வென்பாமாலை வாளோடு தோன்றிய போர்க்குடி என மறவருக்கு புகழ் சேர்த்த வரிகளை தமிழர்களுக்கான
வரிகள் என பலர் கூறிக்கொள்கின்றனர் பரவாயில்லை புறப்பொருள் வென்பாமாலை படித்தாவது தெரிந்து
கொள்ளட்டும்.

மூவாயிரம் வருடங்களாக எங்களது குலப்பெயர் மறவர் இது கல்வெட்டு தோன்றாத காலமான
சங்ககாலம் தொடங்கி. கல்வெட்டு தோன்றிய காலத்திலும் இது எங்களது பெயர் தான் இன்றும் எங்களுக்கு
இந்த பெயர் தான். இது மாறாது மாற்றவும் முடியாது. மறவர் குலத்தை சங்க இலக்கியம்,திருக்குறள்,தொல்காப்பியம் என தமிழ் சான்று கூறினால் அதற்க்கு இந்த ஒரு கட்டுரை போதாது.

திரைப்படத்திலே ஒரு படத்தில் ஒரு வசனம் வரும் “இன்றுமுதல் எங்களை பிச்சைக்காரர் என அழைக்க கூடாது உதவி கேட்போர் என்று தான் அழைக்க வேண்டும்”.

இப்படி பிச்சைக்காரன் உதவிகேட்போர் என மாற்றம் செய்யவேண்டும் என்பது போல சாதிக்கு நாளோரு பெயரும் பொழுது ஒரு பெயரும் இது தான் பெயர் என முடிவு செய்யாது. காலத்துக்கு ஒரு பெயரை வைத்துகொண்டு திரியும் அறிவிலிகள் கூட்டம் என்ன சொல்கிறது என்றால்.

முதலில் கள்ளர்,மறவர்களுக்கு கல்வெட்டு உண்டா நீங்கள் இந்த நிலத்தவரா என்றனர்?
கல்வெட்டை காட்டினால்………உங்களுக்கு சங்க இலக்கியத்தில் குறிப்பு உண்டா என்றனர்……. அதையும் காட்டினால்………நீங்கள் தான் மறவர் என பத்தாம் நூற்றாண்டுக்கு முன் ஆதாரம் இருக்கிறதா……..
ஏனெனில் மறவர் என்பது பன்பு  பெயராம் இனப்பெயர் கிடையாதாம்.மறவன் என சில மன்னர்கள் கல்வெட்டு கூறினாலும் அது பன்பு பெயராம். சொல்லும் அந்த ஆய்ய்ய்ய்ய்ய்வாளர்கள் மட்டும் எந்த சாதிக்காரராம் அதையும் சொல்லுங்கள்.

இது தான் சாதிப்பெயர் என முடிவு செய்யாது பல பெயரை கூறும் கூட்டத்தினர்.

தமிழனில் ஒருவன் ஆளக்கூடாதா என்கின்றனர்.
தமிழரில் சிலர் அதிகாரத்துக்கு சென்றவர்கள் அவர் அவர் சாதிக்கு சாதகமாகவே செயல் பட்டுகொள்கிறார்கள். பின் ஏன் இந்த ஆதங்கம்.

கல்வெட்டு தலைமைக்கு சென்ற ஒரு நபர் எந்த எந்த கல்வெட்டெல்லாம் தன் சாதிக்கு பாதகமாக இருக்கிறதோ அதை அழித்து சாதகமாக் ஒரு இரு சொல்லை சேர்த்து புகழ் தேடிய நையாண்டி கூட்டத்தை  பார்க்கையிலே இனி ஒரு தமிழனை கல்வெட்டு தலைவராக கூட நியமிக்க கூடாது என தோன்றுகின்றது.

இருந்தாலும் உன்மையை  முழுமையாக புதைக்க முடியாது. பல பக்கங்களிலிருந்து அது வெளியே வந்தே தீரும்.

மறவர் 10-ஆம்நூற்றாண்டுக்கு முன் இன அமைப்பில் குடியாக இருந்தனரா என கேட்டுள்ளனர்.
அதற்க்கு பதில் கூறுவோம்.

10-ஆம் நூற்றாண்டு அல்ல 7-ஆம்நூற்றாண்டிலே “கூன் பாண்டியன் செப்பேடு” கூறும் மறவர் தலைவன்:
இளையான்புத்தூர் செப்பேடு
காலம்: கி.பி.676 செப்பேட்டின் அரசன்: நெடுமாற பாண்டியன்

செப்பேட்டு செய்தி:
கழுகுமலை கயத்தாறு செல்லும் வழியில் உள்ள நிலத்தை தேவதனமாக பிராமணருக்கு கொடுப்பதை ஏற்காமல் அந்த செப்பேட்டை அழித்த மறவர் குல வீரன் கம்பலை என்பவன்  பற்றிய செய்தி.

காரணம்:
பிராமணர்களுக்கு நிலதானம் எடுக்கப்பட்டால் அவர்கள் மாற்று இடம் தருவதில்லை. நிலம் வாங்கும் பிராமணர்கள் வெளியூர்காரர்களாகவே இருப்பர். உள்ளூர் நிலத்தை இழந்த மக்கள் கிளர்ச்சியில் ஈடுபட்டு தன் அரசனின் செப்பேட்டை  அழித்து விடுவார்கள். இதை “மறக்கேடு” என்று பெயர். இதை விரும்பாத பாண்டியநாட்டின் மறவர் தலைவனும் மக்களும் கிளர்ச்சியில் ஈடுபட்டனர். இது 6-ஆம் நூற்றாண்டு செப்பேடு.

பாண்டிய நாட்டின் பூர்வீகமான குடிகள் மறவர்கள்,பரதவர்கள். பரதவரை பாண்டியன் வென்ற செய்தி “பரவரை பாழ்படுத்தி தென்பரதவர் மிடல் சாய” அதேபோல் மறவர்களும் மறக்குல பாண்டியர்களுக்கு எதிராக போராடியுள்ளனர். மறவனுடன் போரிடுபவன் மறவனாகத்தானே இருக்க  முடியும்.

பாண்டியன் தன்னை பொதியமலையுடைய “திருவீழ் மார்பன் தென்னவன் மறவன்” என்றும் பாண்டியன் நெடுஞ்செழியன் “தென்பரதவர் போர் ஏறு” என்றும் போற்றப்படுகின்றான்.

ஆக மறவர் என்பது குடிப்பெயரே. பின்பு 9-ஆம்நூற்றாண்டு பத்தாம் நூற்றாண்டில் மறவன் என   பெயர் பொரித்தவர்கள் யாராக இருப்பர்?? மறவராகத்தான் இருப்பார்கள்.

ஒரு வலைதளத்தில் கேட்ட கேள்வி போல் ஒரு தனிப்பட்ட சாதியின் இரு பெயர்கள் பத்தாம் நூற்றாண்டுக்கு முன் இலக்கியத்திலோ கல்வெட்டிலோ வந்ததில்லை. அப்படி இருக்கையில் 10-ஆம் நூற்றாண்டுக்கு முன் சேர,சோழ,பாண்டியர்,பல்லவர்கள் தமிழ்நாட்டிலே கிடையாதா? 
என்பதே கேள்வி.

மூவேந்தர்கள் வேளிரா?

வேளிர் பற்றி பலர் தங்களது கருத்தை வெளியிட்டுள்ளனர். ஆனால்பெரும்பான்மையாக எழுதியவர்கள் பிராமனர்கள். இவர்களது குறிப்புகளில் வேளிர்கள் வந்தேரிகள் என்றும் பிழைக்க வந்தனர் என்று பிராமணர்கள் வேளிர்களை பற்றி கூறிய செய்தியை இங்கு கூறுவோம்.இவர்கள் கன்னன் மரபினர் என்றும் கூறியுள்ளனர். வேளிரை பற்றி கூறுகையில் “18 பதினென்குடி வேளிர்” என்று கூறியுள்ளனர்.பதினெட்டு தொழில்களை செய்தனர் என்றும் அப்படி என்றால் 18 என்ற என்னே இதை உறுதி செய்யும். ஆதாவது இவர்கள் மேய்ச்சல் போக உழவு,மன்பாண்டம்,ஆசாரிவேலை,இசைக்கலை முதலிய பல தொழில்கள் செய்தனர். ஆதாவது பதிநெட்டுசாதியும் வேளிர்களாம். அப்புரம் இவர்கள் மகட்கொடையினர் என்றனர்.(மு.இராகவ அய்யங்கார் வேளிர் வரலாறு) மகட்கொடையினர் என்றால் மூவேந்தருக்கும் பெண்கொடுக்கும் மரபினர் என்று நாகரீகமாக கூறினார். ஆனால் உன்மையில் இறைவனுக்கும் அரசனுக்கும் பெண்னை அர்ப்பனிப்பவர்கள் என மறைமுகமாக சாடினர். மகட்கொடையினர்  மூவேந்தர் வழியினராக ஆக முடியாது என்பது பிராமனர் வாதம். இதையெல்லாம் விட முக்கியமான ஒன்று இங்கு வேளிர் என்னும் மக்களை இங்கு உள்ளவர் யாரும் கோரமுடியாது என்றும் இவ்வளவு முக்கியமாக இவர்களை பற்றி பிரமனர்கள் ஏன் எழுதவேண்டும்.

இங்கு வேளிர்கள் என குறிப்பது ஆயரை. பிராமனர் ஆயரில் தோன்றியர்கள் என பலர் கூறுகின்றனர். ஆயர் என்றால் இடையரல்ல. ஆயர்(ஐயர்) என்னும் பிராமணன் தான் என்பதே பிராமணர்கள் என்பதே அவர்களின் மறைமுக வாதம் இது இங்குள்ள எவருக்கும் தெரியவில்லை. ஆயர்(ஆரியர்) என வேளிராக தம்மை மறைமுகமாக காட்டி கொள்வதற்க்கே நெருப்பில் பிறந்ததாகவும் கன்னன் மரபினனாகவும் கூறுகின்றனர். அப்போது கன்னன் நெருப்பில் பிறந்தவனா? என்பதே நம் கேள்வி???????? கன்னன் யசோதைக்கு பிறந்தவன். அதனாலே வேளிரை பற்றி பிராமணர்கள் அதிகமாக ஆராய்கிறார்கள். ஒரு கல்வெட்டு “துவரை வழிவந்த பிராம்ம் செட்டி” என ஒரு பிராமன்ர் உள்ளனர்.

யது சந்திரகுலமாம் அதனால் பாண்டியர் சந்திரகுலமாம்.பாண்டியர் சந்திரகுலமானால் சேரரும் சந்திரகுலமாம்.யது வேள்வியில் தோன்றியதால் மூவரும் அக்கினி குலமாம். சோழர் சூரியகுலம் அவர்களும் யதுவுக்கு சொந்தமானதால் அவனும் யதுகுலமாம்.தீர்வாகிவிட்டதா???

முனிவர்களால் வேள்வி தீயில் அரசனை தோற்றுவிக்க முடியுமா? ஆனால் டாவின்சி கோட் போன்ற திரைப்படங்களில் ஒரு முனிவர்(குருமார்) தீபந்தங்கள் சூழ ஒரு மங்கையை புனர்வார் புனர்ச்சியும் வேள்வி தான். இதை தான் வேள்வி தோற்றம் என கூறுகிறார்கள்(கோசம்பி ஆய்வுகள்:”வேள்வி என்னும் விவசாயம்”)

ஆக தமிழ்நாட்டிலே அரசர்களே இல்லை இந்த வேளிர் என்னும் ஆயர்கள் வந்து தான் அரசர்கள் ஆனார்கள். அதற்க்கு முன்னே காட்டுவாசிகளும் அரக்கர்களுமே இருந்தனராம். கேக்குறவன் கேனையன்ன கேப்பையில நெய்யு மட்டுமா வடியும். கண்டதும் தான் சேத்து வடியும்.

மூவேந்தர்  யார்?

அப்படி யது வம்சமானால் பாண்டியன் மீனவன்,கடல்வழுதி,பழையோன் என்றும் சோழன் செம்பியன்,திரையன்,வளவன் என்றும் சேரன் வெற்பன்,மலையன்,வாணவன் என கடல்,நிலம்,மலையை சார்ந்தவன் எப்படி யதுவானான். சரி செப்பேடும் கல்வெட்டும் இவர்களை எப்படி கூறியுள்ளது.

பாண்டியன்:
செப்பேடு கல்வெட்டில் பாண்டியன் பிரம்மா,அத்திரி,சந்திரன்,புதன்,பூரூரவஸ் வழிவந்த பாண்டியன் என்றும்
சோழன்:
பிரம்மா காசிபர் சூரியன் மனு இஷவாகு சிபி வழி வந்த சோழன்
சேரன்:
சேரன் குல்சேகர ஆழவார் தம்மை இஷவாகு சூரியன் வழிவந்த சூரியவம்சத்தவன் என்றும் அல்லது சந்திரவம்சமாக சில இடத்தில் கூறியுள்ளனர்

மகாபாரத யுத்ததில் பாண்டியனும் சேரனும் முசுகுந்த சோழனும் பங்கேற்றுள்ளன்ர் என்ற குறிப்பு உடு. ஆக மூவரும் யது வம்சமல்ல. மூவேந்தரும் கன்னனையும் சந்தித்துள்ளனர் ஆக மூவரும் கன்னன் வம்சமும் அல்ல.

வேளிர் கல்வெட்டில் செப்பேட்டில் என்ன கூறியுள்ளனர்:

வேளிர் என்போர் யது வம்சமாக கூறினாலும் வேளிர்கள் மூவேந்தருக்கு சார்புக்குடியாகவே இருந்துள்ளன்ர்.
ஆய்வேளிர் ஒரு செப்பேட்டில் தன்னை சூரிய வழிவந்த சேர வம்சம் என்றும்.சந்திர வழி
வந்த  பாண்டிய வம்சம் என்றும். இருவேறான காலகட்டத்தில் கூறியுள்ளனர்.
இருக்குவேளிர் தம்மை யது வழி வந்த சோழரின் சூரிய வம்சம் என்றும்.
மலையமான் சுக்கிரனை குருவாக கொண்ட பார்க்கவர் வழிவந்த சூரிய வம்சம் என கூறுகின்றனர்.
ஆக வேளிர் பற்றிய செய்திகள் முற்றிலும் முரணானவை.

இராக்வ அய்யங்கார் தொண்டைமானை பல்லவரோடு பொருத்தி நாககன்னிகை மனந்த சோழனை
துரோனர் என எழுதுகிறார்.  தொண்டைமானை அசுவத்தாமன் என எழுதிகிறார் தொண்டைமான் பிராமனருக்கு பிறந்ததாக   பெரும்பானாற்றுபடையில் குறிப்புகள் இல்லை. அப்போது சோழன் துரோனரா?

இது முழுக்க பிராமணர்களால் எழுதப்படுகின்ற புனைவுகள். இது உன்மையல்ல.

பிராமணர்கள் பலரையும் யாதவன் என கூறுவார்கள் காரணம் யாதவன் என்றால் இங்கு இடையர் அல்ல அது பிராமனரை மறைமுகமாக சுட்டும் வார்த்தை. சந்திர குபத மௌரியன் ‘மூரா’ என்ற இனத்தினன் ஆனால் யாதவன் என எழுதியுள்ளனர். சம்ஸ்கிருதம் என்னும் மொழி. 10-ஆம்னூற்றாண்டுக்கு முன் இந்தியாவிலே கிடையாது. பின்பு இவர்கள் யார்.

வேளிர் கன்னன் வழியினரானால் ஏன் மலைகலில் நாடுகள் அமைத்து இருந்தனர் என விளக்கமுடியுமா?
மலையமான் கன்னன் மரபினன் என்றால் சுக்கிரனை குருவாக கொண்ட அசுரர் யார்?
மகாபலிக்கு சுக்கிரன் குருவானதுபோல் கன்னனுக்கு சுக்கிரன் குருவான வரலாறு  உண்டா?

சுக்கிரனின் பெயரான் பார்க்கவனை குல குருவாக மலையமான் பெயர் வரக்காரன்ம் என்ன
மலைய அரசன் வேள் என கூறக்காரன்ம் என்ன. முருகனை வேள் என அழைக்க காரணம் யாது.

 

வேளிர் என்போர் யார்:
வேளிர் என்போர் கன்னன் மரபினரோ அல்லது வந்தேரிகளோ கிடையாது. சேரர்களை மாவலி வந்த தானவர்கள் என்று கூறுவர். தானவர்கள் என்றால் பொன் உடையர்கள். சேரர்களின் ஒரு மன்னனின் பெயர்
“ஸ்தானு ரவி” அதற்க்கு தானவன் என்று அர்த்தம். தானவன் செல்வந்தன் ஆதலில் தானம் தருபவன் எனப்பொருள்.வேளிர் என்போன் வள்ளல் ஆதலின் தானம் தருபவன் ஆகிறான். இவர்களே பிற்காலத்தில் கன்னன் மரபினர் என்று கூறிக்கொண்டன்ர். வேளிர்கள் யதுவம்சமல்ல. யது மூவேந்தர் வமசமுமல்ல.



அப்படி கன்னன் மரபினன் என்றால் கன்னன் மேய்ப்பனா?
இதற்க்கு பாரதியார் கூறும் கருத்து.காவியங்கள் : கற்பனையும் கதையும்
கண்ணன் பாட்டு
கண்ணன் — என் தந்தை
நாவு துணிகுவதில்லை — உண்மை
நாமத்தை வெளிப்பட உரைப்பதற்கே;
யாவருந் தெரிந்திடவே — எங்கள்
ஈசனென்றும் கண்ணனென்றும் சொல்லுவதுண்டு;
மூவகைப் பெயர்புனைந்தே — அவன்
முகமறி யாதவர் சண்டைகள் செய்வார்;
தேவர் குலத்தவன் என்றே — அவன்
செய்தி தெரியாதவர் சிலருரைப்பார்.
பிறந்தது மறக்குலத்தில்; — அவன்
பேதமற வளர்ந்ததும் இடைக்குலத்தில்;
சிறந்தது பார்ப்பனருள்ளே; — சில
செட்டிமக்க ளோடுமிகப் பழக்கமுண்டு;
நிறந்தனிற் கருமைகொண்டான்; — அவன
நேயமுறக் களிப்பது பொன்னிறப்பெண்கள்;
துறந்த நடைகளுடையான்; — உங்கள்
சூனியப்பொய்ச் சாத்திரங்கள் கண்டு நகைப்பான்.

வசுதேவர் கன்னனை ஆயர் மக்களிடம் விட காரணம் கம்சனுக்காக ஏனெனில் ஒரு அரசன் ஆயர்
வாழும் பகுதிக்கு உள்ளே செல்ல மாட்டான் என்பதால்

இருக்கு வேளிர்:

மழவரை வென்ற மறவன்



நுழைநுதி நெடுவேல், குறும்படை மழவர்
முனைஆத் தந்து முரம்பின் வீழ்த்த 5
வில்ஏர் வாழ்க்கை விழுத்தொடை மறவர்
வல்ஆண் பதுக்கைக் கடவுட் பேண்மார்;
நடுகல் பீலி சூட்டித்; துடிப்படுத்துத்,
தோப்பிக் கள்ளொடு துரூஉப்பலி கொடுக்கும்
 இதில் வெட்சி மழவர் ஆனிரை கவர வரும் போது கரந்தை மறவர் தாக்கி இறந்து நடு கல் ஆனார்கள் என கூறுகிறது.
மகிஷாசுர மர்த்தினி =மகிஷனை அழித்த மறத்தி
திரிபுர மர்தான் =திரிபுரத்தை எரித்த மறவன்
மர்தான் =ஆன்பால் = மறவன்
மர்த்தினி= பென்பால் =மறத்தி

இருக்கு வேளிர் தம்மை மளவஜித்=மளவரை வென்றான் துர்க்க மர்த்தான்=கோட்டைகளை அழித்த மறவன் என கூறியுள்ளார். திருப்பனந்தால் கல்வெட்டு  இருக்குவேளிரை கள்ளர் என்னும் வெட்சி மறவர் என்கின்றது. இருக்கு வேளிர் கல்வெட்டு 20  இடங்களுக்கு மேலே மறவர் என வந்துள்ளது. 6- ஆம் நூற்றாண்டுகளிலே மறவர் என்பது குடி அமைப்பானால் ஆதரம் உள்ளதென்றால் இருக்குவேளிரும் மறவர் மற்றும் கள்ளரே ஆவர்.சுருதிமான் இருங்கோளர் திருச்சி ஊட்டத்தூரை ஆண்ட் முத்தரையரே

மலையாள நம்பூதிரி  பிராமணர்கள் தம்மை 6-ஆயிரம் வருடத்துக்கு முன் வந்த பரசுராமருடன் வந்தவர்கள் என கூறுவர் ஆனால் இவர்கள் நாகமச்சி பிராமன்ர் என்னும் துளு,கேரள பகுதியில் வாழ்ந்த மீனவர்கள். யூதர்கள் இவர்களிருந்து சென்றவர்கள் என்பது ஒரு ஆய்வு.
ஆதாரம்:
நம்பூதிரிப் பிராமணர்கள் திருவிதாங்கூர் கடலோர மீனவர்கள் என்ற கீழ்ச்சாதி மக்களினின்று உற்பத்தியானவர்கள் என்று W.W. Hunter கூறுகிறார். (Dr. W.W. Hunter-Orissa-Vol.I-Page : 254). மலையாள பிராமணர்களான நம்பூதிரிகளில் ஒரு பிரிவினர் திருமணத்தில் ஒரு முக்கிய சடங்காக “மாப்பிள்ளை
மீன் பிடிப்பதில் வல்லவன்” என்று பறைசாற்றுவதாகும் என தலித் பந்து என். கே. ஜோஸ் ‘குட்ட நாட்டின் இதிகாசம்’ என்ற மலையாள நூலில் கூறுகிறார். (பக்கம் 148). இவைகளினால் கேரளத்து நம்பூதிரிப் பிராமணர்களின் பண்பாடுகள் மற்றும் குலப்பெருமைகள் எவையென அறிகிறோம்.


வேளிர்கள் துவாரகையிலிருந்து வந்தவர்கள் என்பது பெரிய பித்தலாட்டம்.
ஆய்வேளிர் புருடா:
ஆய்வேளிர்(கிருஷனன் வகையினர்):
கிருஷ்ணன் வகையினர் துவாரகையில் இருந்து வந்து இங்கு குடியேறியவர்கள் என்ற புராணம் ஒரு புழுகுக் கதை என்று வரலாற்று ஆசிரியர் மாஸ்டேர்லிமைந்தன், ‘யார் இந்த கிருஷ்ணன் வகையினர்’ என்ற நூலில்
நிறுவியுள்ளார். தவிரவும் இவர்கள் மன்னர் மார்த்தாண்ட வர்மாவின் ஆட்சிக் காலத்தில், எஞ்சிய மறவர் படையாளிகளுக்கும் உள்ளூர் நாயர் பெண்களுக்கும் உருவான ஒரு சங்கரச்சாதி என்றும் அவர் எழுதுகிறார். ஆகையால் இவர்களின் பூர்வீகம் யாது, அவர்களது பண்பாடுகள் அனைத்தும் மறவர் வழிக் குருதி குணங்களேஎன்பதையும் அறிந்து கொண்டேன்.

இருக்குவேளிரிலும் இதே கதையே.

நான் கண்ட வரலாறு திரிபுகளும் பின் கண்ட உன்மைகளும்:

பழுவேட்டரையரை முதன் முதலில் வலைதளத்தில் பார்க்கும் போது மழவர்குடியினர் என்றும்
கண்டன் மழவன்,குமரன் மழவன் என்றனர். ஆனால் இராசமாணிக்கர் ஆய்வகம் பதிந்தது கண்டன் மறவன்,குமரன் மறவன் வேறு விதமாக இருந்தது.மலையமானையும் சூரியம் மலையன் என்றும் சந்திர மழவன் என்றும் பதிந்தது பின்பு வாட்ஸ் அப் இண்டியாவில் சூரிய மறவன்  என்று வந்துள்ளது

இன்றைக்கு கேட்டால் பழுவேட்டரையுனுக்கு மாமன் “மழவன் கொங்கினி” என்று ஒருவன்  இருந்தானாம். அப்போ இந்திராகாந்தியும் சோனியாகாந்தியும் ஏற்கனவே சொந்தக்காரர்கள்தானா. இல்லை பெண்ணை கொடுத்தால் அது சொந்த இனமா. சுந்தர சோழன் தாயர் வைதும்பர் அப்போது சோழர் வைதும்பரா? எங்கிட்டாவது எதாவது கிடைக்காதா?

பென் இருந்தால் போதுமானது.

இதைப்போல் பல வரலாற்று ஆய்வுக்ள் நமக்கு எதிராக இருந்துள்ளனர்.

 

இருக்குவேளிர்,பழுவேட்டரையர் மறவரே. இருக்குவேளிரே கொங்கு சோழரானார்கள். அவர்களே கன்ணட நாட்டை ஆண்ட கொய்சாளர் ஆனார்கள். 

இருக்குவேளிர் கொண்டையங்கோட்டை மறவர் பிரிவில் தொடர்பு  உடையவர்கள். நெல்லையில் உள்ள கடம்பூர் ஜமீன் ஸ்ரீ வல்லாள சொக்க தலைவருடன் வல்லாள தேவர் என்ற பட்டம் உடையவர்.
பிற்கால 13-ஆம் நூற்றாண்டில் உள்ள திருமையம் கல்வெட்டில் வாழ்ந்த மறவன் ஒருவனுக்கு  ” உய்யவந்த துவராபதி பேரரையன்” என ஒரு ஆதாரம் உள்ளது.

 

வாணர் என்னும் மதுரை ஆண்ட வானகோவரையர்கள் மறவரில் ஒரு பிரிவினரான சிறுதாலிகட்டி மறவர்கள் என ஸ்ரீவில்லிபுத்தூரை ஸ்தாபித்து ஆண்டவர்கள்.
மூவரையன் அகலங்க நாடாள்வான் வாணகோவரையன் என பெயர் உள்ளது. வத்திராயிருப்பு பகுதியில் உள்ள முருக்கநாட்டை ஆண்ட என்பதை “திருமலைய மூவரைய தேவன்” பற்றி திருமலை நாயக்கர் “புலியை கொன்ற செப்பேட்டில் குறிப்பிட படுகின்றது.

கல்வெட்டு ஆய்வாளர் என்னும் பித்தலாட்டக்காரர்கள் முதலில் மறவர் என்பது பன்பு பெயர் என்கின்றனர்.இவர்கள் சிறு வார்த்தையை மாத்துகினறனர். பின்பு மறைக்கின்றனர். ஆனால் ஒன்று கவனிக்க நமது ஆவனங்கள் கலிபோர்னியா போன்ற பல இடத்தில் ஏற்கனவே சென்றுவிட்டது..

கல்வெட்டிலே “பெ” எனும் ஒற்றைக்கொம்பு தமிழுக்கு உரியது “பே” இரட்டை கொம்பு கடந்த 150 வருடங்கலாக பயன்பாட்டில் உள்ளது. இது போல் பல வார்த்தைகளை மாற்றி இன்றைக்கு கேலிக்கு பொருளாகி உள்ளனர்..

தனது சொந்த சாதிப்பெயரை சொல்ல வகையில்லாத கூட்டத்தினர் அடுத்தவரது பட்டபெயரை கோரினாலும் பரவாயில்லை இனப்பெயரை கோருவது வேடிக்கை குறியது. இதில் கண்ட இடத்தில் சென்று வலை தளங்கள் தோறும் சென்று பரப்புரை செய்கின்றனர்.

முல்லை நிலத்து குடிமக்கள் யார் உவச்சர்,கைகோள் என்ன பெயரில் வாழ்ந்ததாக கல்வெட்டு கோயில் மக்கள் என்றும் பட்டர் என்னும் உவச்சர் யார்  இன்று என்ன பெயரில் வாழ்கின்றனர் என்றும்,நெசவு செய்தவர்கள்,கம்பிளி நெயதவர்கள்,கர்நாடக கோலியர்களின் உட்பிரிவினர்கள்,அர்தநாளிஸ்வர திருக்கோள திருவிழாவில் பாரம்பர்யமாக காலம் காலமாக கனவன் மனைவியாக அமர்ந்து திருமனம் செய்யும் இனத்தவர்கள் யார் யார். ‘தீண்டா’ ‘தொடற’ மக்களுக்கும் என்ன வித்தியாசம் என்ன. சங்கு இசையர் யார். இந்து பெண் கடவுளாக மாற்றம் பட்ட சாக்கிய பெண் தெய்வம் எது. பௌத்த மதத்தின் எச்சங்களான சாக்கிய சாம்ப சாம்பவீ அரசர்கள் யார். நெசவு கோளருக்கு இவர்களுக்கும் பொதுவான சாதிப்பிள்ளைகள் யார் தொண்டைமான் பாடல்கள் என முல்லை நிலத்தவர்களின் கல்வெட்டு ஆதாரம் முதல் வாழ்க்கைமுறையும் ஆங்கிலேயரின் குறிப்புகளும் தெளிவாக ஆவணங்களக இருக்கின்றன.
எது மாறினாலும் இயற்க்கை தந்த பெயர் மாறாது மாற்றவும் முடியாது.கல்வெட்டு ஆவணங்களும் எல்லோரிடமும் உள்ளது.

நால்வகை நிலத்தவர் அரசராக முடியாதாம் சாணார்கள் கூறினர். ஆனால் சாணார் பற்றிய கல்வெட்டு திருப்புல்லானி கம்பன்ன உடையார் கல்வெட்டு சங்கரங்கோவில்  பராக்கிறம பாண்டியன் கல்வெட்டு தெளிவாக கூறிகின்றது பின்ன எப்படி தப்பிக்க இயலும் அது போலத்தான் தங்கள் அடையாளம் கிடையாது நாங்கள் மன்னர் வம்சம் என்ற இன்றைக்கு கூறிக்கொண்டாலும் ஆங்கிலேயர் முதல் பலர் அவர்களை பற்றி அக்குவேறு ஆனிவேறாக ஆராய்ந்து மறுமனம் புரிவதிலிருந்து எந்த வர்ணத்தில் எந்த எந்த தொழில்களை செய்தனர் என சேர்க்கபட்ட வரிசை வரை ஆங்கிலேயர் தெளிவாக பதிந்துள்ளனர்.
மாற்ற இயலாது.

மறவர்கள் பெயர் வந்த கல்வெட்டு அது அன்றும் இன்றும் என்றும் மறவர்கள் என்ற நாமம்  பொரித்தவர்களுக்கே சாரும். இதை எந்த நாட்டு புலையாடியோ அல்லது நாயாடியோ  கோரமுடியாது.

ஆதாரமில்லாமல் எதையும் நாங்கள் கோறுவதில்லை
மறவன் என்பது மறக்குடியினருக்கு உரிய குடிப்பெயரே அன்றி பலரும் கோறும் பன்பு பெயர் அல்ல

This entry was posted in மறவர் and tagged . Bookmark the permalink.

5 Responses to மறவர் என்பது இனப்பெயர் பன்பு பெயரல்ல!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *