மகாதேவர்சிவனின் காவலர் நந்திதேவர்.

காளையர் உருவில் சிவனின் காவலரான நந்திதேவரே
தமிழ் மூவேந்தர்களின் அரண்காக்கும் மறவரில்
அகமுடையார் தேவரில் மூத்தவராகவும்
போற்ற படுகிறார்.

அங்கணன் கயிலைகாக்கும்
அகம்படித் தொழின்மை பூண்டு
நம்குரு மரபிற்கெல்லாம்
முதற்குரு நாதனாகி
பங்கயம் துலபநாடும் வேத்திரப்படை பொறுத்த செங்கயமும்
பெருமாள் நந்தி சீரடி கமலம் போற்றி…

பெரிய தேவர்களுக்கெல்லாம்
காவலனாகிநின்ற மறவரில்…
உடையார் திருவகம்படியில்
யோகினிகள்
அறுமுக த்திரிபுர பயிரவி யகம்படியரே…

திரையிறந் தளவிறந் துளபரங் கடவுளே
செறிதரு வடிவருத் திருவகம்படியரே…

பிறவி றந்தக்க வாரிதி யழுந்திடுவரே
பிரியம் வந்து பலியங் கையினற யின்றமையரே
யறிவிந்துரை யிறந்திட முணர்ந்திடுவரே
யமலை யம்பிகை யணங்குடை யகம்படியரே…

மகாதேவருக்கு சேர்வையாக நின்ற நந்திதேவரின்
காவலர் வம்சத்தில்
தமிழ்மூவேந்தர்களில்
சேரர்மன்னர்களாய் ஆண்ட
எங்கள் தேவர்களின்
சேரநாடு
பன்னிரெண்டு குறுநிலநாடுகளாய் பிரிக்கபட்டு
அதன்பின்
கொச்சின்
திருவிதாங்கூர் போன்ற சமஸ்தானங்களாக
வளர்ச்சிகண்ட
தமிழ்தேவர்களின் சேரநாட்டில்

கொச்சின் சமஸ்தானம்
முழுமையாகவும்
முகமதியர்களின் கை ஓங்கிநிற்க

சேரநாடுயெனும்
கொடுந்தமிழ் நாட்டைவிட்டு
செந்தமிழ்நாட்டின்
விருதுபட்டி
சிவகாசி
சிவகங்கை ராமநாதபுரம் வந்தனர்
சேரர் ராஜகுலத்தவரான
சேர்வை யெனும் தமிழ்பாரம்பரியமிக்க பட்டமுடைய அகமுடையார்தேவர்கள்.

சங்ககாலத்தில்
கானப்பேரெயில் யெனும்
குறுநில நாட்டைஆண்ட
மன்னன்
வேங்கைமார்பனை வென்ற
பாண்டியன்
உக்கிர பெருவழுதிதேவர்
கானப்பேரெயில் கடந்த பாண்டியனென்ற
பெரும்புகழ்பெற்றார்..

மகாதேவர் சிவனின் காவலர்
காளையர்தேவனின்
வழியாய் வாழ்ந்து
பெரியதேவர்களின்
சேவகன் என்று பெருமையுடன் கூறிய
மா மன்னர்கள் மருதுபாண்டியர்களால் கட்டுவிக்கபட்டதே
காளையர்கோவில்
நந்திதேவரின் வீரவம்சம்
சேரர் ராஜகுலத்தின் தேவர்களே
எங்கள் அகமுடையார்தேவர்கள்.

This entry was posted in அகமுடையார் and tagged . Bookmark the permalink.

One Response to மகாதேவர்சிவனின் காவலர் நந்திதேவர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *