பூலித்தேவர் பூழியன்(பூழித்தேவர்) என்ற பாண்டிய மரபினரே

இந்தியாவிலேயே முதன் முதலில் கிழக்கிந்தியக் கம்பெனிப் படையை எதிர்த்துப் போர் செய்தவர் பூலித்தேவன்.வரி வசூலிக்க வந்த அலெக்சாண்டர் கெரான் என்பவனோடு 1755-ம் ஆண்டு பூலித்தேவன் செய்த போரே இந்தியாவில் கம்பெனிப் படையை எதிர்த்த ஒரு இந்தியனின் முதல் போராகும்.

பூலித்தேவர் பற்றிய பூர்வீகம்: 

பூலித்தேவர் பற்றிய பூர்வீகம் பற்றிய பல ஆய்வாளர்கள் முன்னுக்கும் பின்னுக்கும் முரனாக பல வரலாற்று ஆய்வாளர்கள் கூறிவருகின்றனர்.பூழி நாடு என்பது பாண்டிய நாட்டில் அமைந்த ஒன்று. 1378ஆம் ஆண்டு சேர நாட்டில் இருந்த ஒரு மன்னனால் ‘வரகுண ராமன் சிந்தாமணி காத்தப்ப பூழித்தேவர்’ என்ற தளபதிக்குத் தானமாக வழங்கப்பட்ட நாடே இந்த பூழிநாடு. ஆரம்ப காலத்தில் இதன் தலைநகரம் ஆவுடையார் புரம். ஆனால் ஆங்கிலேய வரலாற்று ஆய்வாளர் ஸ்வெல்ஸ் ஆதாரப்பூர்வமான தனது கூற்றில்

தலைமுறை பெயர் ஆட்சியாண்டுகள்
1 வரகுண சிந்தாமணி பூலித்தேவன் 1378 – 1424
2 வடக்காத்தான் பூலித்தேவன் 1424 – 1458
3 வரகுண சிந்தாமணி வடக்காத்தான் பூலித்தேவன் 1513 -1548
4 சமசதி பூலித்தேவன் 1548 – 1572
5 முதலாம் காத்தப்ப பூலித்தேவன் 1572 – 1600
6 இரண்டாம் காத்தப்ப பூலித்தேவன் 1600 – 1610
7 முதலாம் சித்திரபுத்திரத்தேவன் 1610 – 1638
8 மூன்றாம் காத்தப்ப பூலித்தேவன் 1638 – 1663
9 இரண்டாம் சித்திரபுத்திரத்தேவன் 1663 – 1726
10 நான்காம் காத்தப்ப பூலித்தேவன் 1726 – 1767

“காத்தப்ப பூலிதுரை தேவர்”.இவரது முழு அபிஷேக பெயராக “வரகுனராம சிந்தாமனி ஆபத்துகாத்த பூலித்துரைப்பாண்டியன்”என்பது தான். இந்த 10-வது பூலித்தேவர் தான் நாம் கொண்டாடும் சுதந்திர முழக்கமிட்ட மாவீரன்.

பூலித்தேவனது முன்னோர்கள் பற்றிய முரனான தகவள்கள்: 

புலவர் ந.இராசையா முதல் வடகரையாதிக்கம் நூல் எழுதி செந்தூர்பாண்டியன் முதலாக தெரிவிக்கும் செய்தி இது தான்.பூலித்தேவர் முன்னோர் இராமநாதபுரம் பகுதியில் இருந்து வந்தவர்கள் என்றும்.இவர்கள் மூதாதயர்கள் தென்காசிப்பாண்டியனிடம் பாதுகாவலராக பனியாற்றியவர்கள் என்றும் அதன் பின்பு பாண்டியனால் தரப்பட்ட பகுதியான ஆவுடையாபுரம் பாளையத்தை திசைக்காவலராக ஆண்டார்கள் என்றும் கூறுகிறார்கள்.
ஆனால் வெள்ளையரின் ஆதாரப்பூர்வமான குற்றாலம் சிவன் கோயில் கல்வெட்டின் படி பூலித்தேவர்கள் 1374-ல் ஆட்சி அமைக்கபட்டிருந்தது என கூறுகிறார்.சிறிது நாளிலே திசைக்காவலனாக அதுவும் ஒரு முறை ஒரு புலியை வீழ்த்தி மன்னை காப்பாற்றியதால் ‘பூலித்தேவர்’ என்று பட்டமளித்து திசைக்காவல் வழங்கியதாக கூறும் செய்தி வாய்மொழிக்கதையாகவே உள்ளது.ஆனால் இவர் ஆண்ட பகுதி‘பூழிநாடு'[ஆவுடையாபுரம்(நெற்கட்டான் செவ்வல்) முதலிய மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி] என்பது இத்தனை வரலாற்று அய்வாளர்கள் கருத்துக்கு ஏன் தெரியவில்லை என்பது கேள்விக்குறியே. No. 483 (Page No 318)
(A. R. No. 460 of 1909.)
Suttamalli, Tirunelveli Taluk, Tirunelveli District Same wall. Tribh Konerimenkondan : Year 7, day [510 ?]
This inscription records a gift of land, 10 ma in extent, as tax-free devadana, made by the king, for worship and offerings in the temple of the god Bagavatisvaramudaiyar of Suttamalli alias Viravinodach-chaturvvedimangalam in Mel-Vemba-nadu. It is stated that the land belonged as jivitam to a certain Srivallava Savanadarayar, an Angavayijya for Rajaraja-Chaturvvedimangalam in Mulli-nadu and that it was taken over from him and was assigned to the temple.
The signatories were Arayan Kuvalayachandiran alias [Puli]yan devan of Koluvanur in Kilkurru in Milalaik-kurram, Araiyan Sri . . . devan alias Vinnadudaiyan of the same place.
ஆனால் சடையவர்ம சுந்தரபாண்டியன்(கோனேரி மேல் கொண்டான்) சுட்டமலை கல்வெட்டில் “அரையன் ‘குவாளைய சந்திரன்’ என்ற பூழிதேவன் என பூலித்தேவன் முன்னோர்கள் சாட்ச்சி கையொப்பம் இட்டுள்ள ஆதாரமான கல்வெட்டு உள்ளது. 
இந்த ‘பூழிநாடு’ பகுதியே ஆண்டதால் தான் இவர்கள் குடும்பத்தின் பாரம்பர்யமான பட்டம் தான்

‘பூழியன்’ என்ற பாண்டியர்களின் திருநாமத்தின் பெயர்தான் பூழித்தேவன்

என்ற பெயர்தான் காலப்போக்கில் பூலித்தேவர் என்று மறுவியது என்று ஆதாரப்பூர்வமான் செப்பேட்டில் கூறும் செய்தியை பார்ப்போம்.இவர்தான் பாண்டியரின் நேரடி வழித்தோன்றல்

செப்பேட்டில் கண்டுபிடிக்கப்பட்ட செய்தி: 

விடுதலைப் போரை முதலில் தொடங்கிய புலித்தேவனைப் பற்றிய அரிய தகவல்களைக் கூறும் செப்பேடு, திருச்செங்கோட்டில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பூலித்தேவன் அளித்த கொடைச் செய்தி எழுதப்பட்ட செப்பேடு ஒன்றை, திருச்செங்கோடு நாணயவியல் ஆய்வாளர் விஜயகுமார் கண்டுபிடித்துள்ளார்.அச்செப்பேடு 27 செ.மீட்டர் நீளம், 15 செ.மீட்டர் அகலம் உடையது. ஒரு கிலோ எடையுள்ள அச்செப்பேட்டில், ஒரு பக்கத்தில் மட்டும் 40 வரிகள் எழுதப்பட்டுள்ளன. இந்த செப்பேட்டை ஆய்வு செய்த ஈரோடு கொங்கு ஆய்வு மைய ஆய்வாளர் புலவர் செ.ராசு பின்வரும் தகவல்களைக் கூறினார்.

பூழித்தேவனா? புலித்தேவனா?நிஜப்பெயர் என்ன?

சேரநாட்டின் ஒரு பகுதியான பூழிநாட்டை ஆண்ட பாண்டியனுக்கு உட்பட்டு ஆட்சி புரிந்ததால் பூழித்தேவன் என்ற பெயர், பூலித்தேவன் என அழைக்கப்பட்டது என்றும், அவரது முழுப்பெயர் “காத்தப்ப பூழித்தேவன்’ எனவும் ஆய்வாளர் நா.ராசையா கூறியுள்ளார்.

ஆனால், 1748ம் ஆண்டு எழுதப்பட்ட இச்செப்பேட்டில்,“ஆவுடையார்புரம் ஜமீன்தார் ஆபத்துக் காத்தார் பூழித்தேவன்” என்று எழுதப்பட்டுள்ளது.

நெற்கட்டுஞ் செவ்வல்: 

கடந்த 1755ம் ஆண்டு வரி வசூலிக்க வந்த “அலெக்சாண்டர் கெரானிடம், ஒரு நெல்மணி கூட வரியாகக் கட்ட மாட்டேன்’ எனக் கூறியதால் ஊர்ப்பெயர், “நெற்கட்டான் செவ்வல்’ என அழைக்கப்பட்டதாகவும், மக்கள் ஆங்கிலேயர்களுக்குப் பயந்து, “நெற்கட்டுஞ் செவ்வல்’ என அழைத்ததாகவும் ராசையா கூறியுள்ளார். ஆனால், 1748ம் ஆண்டு வெட்டப்பட்ட இச்செப்பேட்டில், “கசுப்பா நெற்கட்டுஞ் செவ்வல்’ என்றே எழுதப்பட்டுள்ளது.

செப்பேட்டுச் செய்தி:

தன் முன்னோர் தலைநகரான ஆவுடையார்புரம் தலைநகரை மாற்றி, நெற்கட்டுஞ் செவ்வலில் கோட்டைக் கட்டி அவ்வூரைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்தவர் புலித்தேவன்.

நெற்கட்டுஞ் செவ்வலில் ராமகோவிந்தப்பேரி என்ற பெயரில் பெரிய குளம் இருந்தது. அக்குளம் உடைந்து சிதைந்து பல ஆண்டுகள் பாசனம் இல்லாமல் இருந்தது.

தலைநகர்ப் பகுதி வளம் பெற அக்குளத்தைப் புதுக்குளமாகக் கட்டிப் பாசனம் செய்து பயிரிட புலித்தேவன் கேட்டுக்கொண்டதனால், நெற்கட்டுஞ் செவ்வலில் உள்ள பிறக்குடையாக் குடும்பன் என்பவர், தன் செலவில் ராமகோவிந்தப்பேரிக் குளத்தைப் புதுக்குளமாக அமைத்தார்.

விப வருடம் ஆடி மாதம் 25ம் நாள் பூழித்தேவன், பிறக்குடையாக் குடும்பனுக்கு மானிய பூமி நன்செய் நிலம் வழங்கியதோடு அவர் நிலங்களுக்குச் சில ஆண்டுகள் வரிச் சலுகையும் அளித்த விவரம் செப்பேட்டில் கூறப்பட்டுள்ளது.

குளம் பராமரிப்பு:

குளத்தில் உள்ள மீன்களைப் பிடிப்பதன் மூலம் வருகின்ற வருவாயிலிருந்து குளம் பராமரிப்பும், தூர் வாருதலும் நடைபெற வேண்டும் என்றும், இவற்றுக்குக் கணக்கெழுதி ஒப்பிக்க வேண்டும் என்றும் செப்பேட்டில் எழுதப்பட்டுள்ளது.

நிலங்கள் அளக்கப்பட்டு அடையாளமாக அவற்றிற்கு எண்கள் இடப்பட்டிருந்தது. 85, 86, 87, 88ம் எண் நிலங்கள் செப்பேட்டில் குறிக்கப்பட்டுள்ளன. நெல் கோட்டை, பாட்டம் என்ற அளவில் குறிக்கப்பட்டுள்ளது.

விதை நெல் விரை என்று கூறப்பட்டுள்ளது. பொதுவாக அக்காலச் செப்பேட்டில் வழக்கமாகப் பயின்று வரும் வடமொழிச் சொற்கள் இன்றித் தனித் தமிழில் செப்பேடு எழுதப்பட்டுள்ளது.

குளம், மடை விருத்திக்குத் தனி மானியமும் விடப்பட்டிருந்தது. புலித்தேவன் “நம்மிட மனோ ராசியில்’ இச்செப்பேட்டை எழுதிக் கொடுத்ததாகக் கூறியுள்ளார்.

பூலித்தேவர் பற்றிய பல ஆச்சர்யமான தகவல்கள்:

பூலித்தேவர்தான் தென்பாளையப்பட்டுகளின் படைகளின் தலைவராக இருந்துள்ளார்.இவரது சொல்வருதிக்கே மேற்கு நாட்டின் மறவர் பாளையங்களும் திருநெல்வேலியின் இதர பாளையங்களும் இருந்துள்ளது. திருநெல்வேலி சரித்திரம் எழுதிய கால்டுவெல் பாளையக்காரர்கள் அனைவரும் மதிக்கும் மிக மரியாதைக்குரியவராகவும் சர்வதிகாரம் பெற்ற சுதேச தலைவராக இருந்துள்ளார் எனவும் கூறுகிறார்.இன்றை பல வரலாற்று ஆய்வாளர்கள் தெண்காசியின் ஆளுமை பாண்டிய மன்னனுக்கு பிறகு பூலித்தேவர்களிடமே இருந்து வந்தது என கூறுகின்றனர்.இத்தனையும் கூறும் ஆய்வாளர்கள் பூலித்தேவர் என்பது “பூழியன்” என்ற பூழித்தேவர் என்ற பாண்டியரின் கிளை வழியினர் என்பதும் பாண்டியர்களின் வழித்தோன்றல் என கூற மறுப்பது ஏனோ? பூழியன் என்பது பாண்டியரின் வழித்தோன்றல்களான பாண்டியர்களேயாகும்.

கவுரியன்:

இதுவும் பாண்டியனின் திருநாமங்களில் ஒன்றுதான்.இவர்களை கவுரியர் என்று கூறுவர்.அதுவும் கவுரி சீவல்லப பாண்டியன் சடையவர்ம பாண்டியனுக்கு பின் ஆண்டுள்ளனர்.
சிவகங்கை அரசர் “கவுரி வல்லபர்” என்றும் “பாண்டிய மண்டல ஸ்தாபனாசிரியன்” என்ற பட்டம் பெற்றவர் தம்மை சந்திர வம்சம் என கூறுகிறார்.
சசிவர்ணத்தேவர் முதல் வெள்ளையர் ஆட்சிவரை சிவகங்கை ஆண்டவர்களின் பட்டியல் பின்வருமாறு, 1. 1728 – 1749 – முத்து வீஜயரகுநாதகெளரி வல்லப உ. சசிவர்ணத்தேவர்
2. 1749 – 1772 – சசிவர்ண விஜயரகுநாத கெளரி வல்லப முத்துவடுகநாதப்பெரிய உடையத்தேவர்
3. 1780 – 1783 – கெளரி வல்லப வீரமங்கை ராணி வேலு நாச்சியார் முத்துவடுகநாத பெரிய உடையாத்தேவர்
4. 1841 – 1848 – கெளரி வல்லப உடையணத்தேவர்
5. 1801 – 1829 – கெளரி வல்லப உடையணத்தேவர் மன்னர் முத்துவடுகநாத பெரிய உடையணத்தேவரின் உடன் பங்காளி ராணி வேலு நாச்சியாரின் தத்து மைந்தன்
6. 1829 – 1831 – கெளரி வல்லப உ.முத்துவடுகநாதத்வேர்
7. 1831 – 1841 – கெளரி வல்லப மு. போதகுருசாமித்தேவர்
8. 1841 – 1848 – கெளரி வல்லப போ. உடையணத்தேவர்
9. 1848 – 1863 -கெளரி வல்லப மு.போதகுருசாமித்தேவர்
10. 1863 – 1877 – ராணி காதம நாச்சியார் போதகுருசாமி
11. 1877 – கெளரி வல்லபமுத்துவடுகநாதத்தேவர்
12. 1878 – 1883 – கெளரி வல்லப துரைசிங்கராஜா
13. 1883 – 1898 – கெளரி வல்லப து. உடையணராஜா
எனவே கவுரியர் என்ற பட்டத்துக்கு ஏற்ப சிவங்கங்கை ஆண்ட மன்னரும் பாண்டிய வழித்தோன்றல்கள் தான்.

மாறன்:

இதுவும் பாண்டியனின் திருநாமங்களில் ஒன்றுதான்.
(இலங்கையில் உள்ள நெடுந்தீவு மறவர்களின் திருநாமங்களில்)
இவர்களுக்கு வழங்கியுள்ள பழங்கால நாமங்களைக் கொண்டும் ருசுப்படுத்தலாம். வல்லைத் தேவன், வலங்கை மறான், புலிமாறன், விலங்குத் தேவன், கோரமாறன், கொம்புத்தேவன், நீலமாறன் முதலாம் பெயர்கள் இவர்களுக்கு வழங்கப்பட்டிருக்கின்றன. தேவன் மாறன் என்ற நாமங்கள் மறவருக்கு உரித்தான பெயர்களாகும். இன்னும் இவர்கள் கத்தோலிக்கரான பின் ஞானஸ்நானப் பெயரோடும் இவர்களின் குலப்பெயர்கள் இணைக்கப்பட்டிருப்பதை ஞானஸ்நானப் பதிவு நூலில் பரக்கக் காணலாம். விலங்குப் பாவுலு (இவர் விலங்குத் தேவன் சந்ததி) கொம்பன் அந்தோனி (இவர் கொம்புத் தேவன் சந்ததி) நீலன் குருசான் (இவர் நீலமாறன் சந்ததி) இவ்வண்ணம் எத்தனையோ பெயர்களுண்டு. இன்னும் இக் குலத்தவர்கள் வணங்கிய சூலியம்மாள் என்னும் தேவதையின் பெயரைக் கொண்டும் ஒரு பெண்மணிக்கு சூலாயி ஆனாள் என்ற பெயரும் ஞானஸ்நான டாப்பில் இருப்பதையும் அறியலாம்.

விடுதலைப் போரை முதலில் தொடங்கிய புலித்தேவனைப் பற்றிய அரிய தகவல்களைக் கூறும் இச்செப்பேடு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. இவ்வாறு புலவர் ராசு கூறினார். தினமலர், ஜூலை 12, 2008.
இரா. மணிகண்டன் (மே 2011). “சிவகங்கைச் சிங்கம் முத்துவடுகநாதர்”. குங்குமம் .
. யாழ்ப்பாண சரித்திரம்(1933)- முதலியார் செ.இராசநாயகம
ஈழநாடு, யாழ்ப்பாணம் – 05.03.1986 அன்று வெளியான இதழ

This entry was posted in பாண்டியன், பூலித்தேவன், மறவர் and tagged . Bookmark the permalink.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *