பரமக்குடி கலவரம் – சாவு பற்றி…

அடிப்படை ஞானம் இல்லாமல் புலம்புவதற்கு என்றுமே முடிவில்லை தான். நமது நாட்டின் விடுதலைக்கு முன் நிலப்பிரபுத்துவ அடிப்படையில் இருந்த போது ஆண்டான் அடிமை முறை இருந்ததை யாரும் இல்லை என்று சொல்லவில்லை. ஆனால் இன்று ஜனநாயக அடிப்படையில் எல்லா மக்களுக்குமான் கல்வி, பொருளாதார, வேலைவாய்ப்புக்கள் அளிக்கப்பட்டு வருகிறது. மக்களாட்சி முறை இருக்கும் நாட்டில் இன்று யாரும் யாரையும் அடிமையாக வைத்திருந்து ஆதிக்கம் செலுத்த முடியாது. காலத்திற்கேற்ற மாற்றங்கள் உலகம் முழுவதும் நிகழ்ந்தவை, நிகழ்கின்றவை. ஆனால் இன்று என்ன நடக்கிறது. ஒட்டு மொத்த தேசத்தையும், இலக்கியத்தையும், மக்களின் பண்பாட்டு வீரியங்களையும், தாழ்த்தப்பட்ட மக்களை ஒடுக்குவதற்காகவே உருவாக்கப்பட்டது போன்ற விசவிதை தூவப்படுகிறது. அது நீச நீர் ஊற்றி வளர்க்கவும் படுகிறது. எதற்கெடுத்தாலும் ஒரு அடிமை புராணம், கோபம், எல்லாவற்றிக்கும் சாதி, எதற்கும் சாதி, எதிலும் சாதி என்ற மொன்னையான ஒற்றைப்பார்வை. அன்கில்யனின் பிரித்தாளும் கொள்கையும், மண் சாராத நாத்திகமும் இவர்களுக்கு செய்த இந்த மூளைச்சலவையை சரி செய்வது மிகக்கடினம்.

நல்ல கல்வி, நல்ல வேலை, நல்ல வாழ்க்கை தரம் என்று கிடைத்தாலும் தனது தாழ்வு மனப்பானமையை போக்கிக் கொள்வதற்காக பிறரை குறை சொல்லும், தான் பிறந்த மண்ணை தூற்றும் குணம், இன்னும் இந்த மடையர்களுக்கு போகவில்லை. எதிலும் துவேசம் கொள்வது அழிவுக்கும் பூசலுக்கும் மட்டும் தான் வழிவகுக்கும். இங்கே அன்பு உண்டு, அறிவு உண்டு, மகிழ்ச்சி உண்டு. மானம் உண்டு. மரியாதை உண்டு. எல்லாவற்றையும் கற்பனையின் திறன் கொண்டோ, அல்லது எங்கயோ ஒரு மூலையில் நடப்பதை ஒட்டு மொத்த சமூக அநியாயமாக பரப்புரை செய்வதோ முட்டாள் தனம் தான். அது சமூகப் புரட்சியாக இவர்களுக்குப் படுவது தான் இன்றைய மிகப் பெரிய பிரச்னை.

இவர்களின் இன்றைய ஒட்டு மொத்த சமூக பங்களிப்பிற்கு முன்னேற்றத்திற்கு தனிமனித வளர்ச்சிக்கு உள்ள நடவடிக்கைகள் என்ன என்ற பார்த்தல் ஏனைய சமூகங்களை போல் மிகக் குறைவு தான். அதை சரி செய்ய எல்லோரும் முன்னெடுக்க வேண்டும்.
யாரும் இங்கே மற்றோருவர்களை குறை சொல்வதற்கோ, சண்டை இடுவதற்கோ, உயிரை கொல்வதற்கோ பிறக்கவில்லை.
இங்கே ஏன் இந்த சண்டை என்பதற்கு காரணம் ஒருவரின் கைது. அதனை ஒட்டிய போராட்டங்கள, வன்முறை, அடிதடி, கண்ணீர் புகை, சாவுகள் எல்லாமே.
குருபூஜைகள் ஞானிகளுக்கும், பிறருக்காக வாழ்ந்தவர்களுக்காக கொண்டாடப்படுவது.
விடுதலை காலகட்டத்தில் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினராகவும், தேசியக் கட்சியின் தலைவராகவும், நாடு கடந்த மக்களின் விருப்பமிகு தலைவராகவும், ஆன்மீகத்தில் தூய்மை பெற்று ஆசைகள் துறந்து பிறருக்காக வாழ்ந்து தன்னுடைய வாழ்வையே பலருக்கும் முன்னோடியாக வாழ்ந்து மறைந்த ஒரு மகத்தான தலைவரை சாதி என்ற ஒற்றை வார்த்தையை மட்டும் அடிப்படையைக் கொண்டு தூற்றுவது எந்த விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது. காமராசரின், காங்கிரஸ்-பார்வர்ட் பிளாக் கட்சியின், ஆளும் கட்சியின் குறைகளை வீரியமாக எடுத்துவைக்கும் உண்மையை உரக்கக் கூறும் ஒரே காரணத்திற்காக முதுகுளத்தூரில் கலவரம் ஏற்படுத்தப்பட்டு, மறவர், சேர்வைக்காரர், இவர்களுக்கு உதவி செய்த ஒரு பள்ளர் என அரசியல் பழி வாங்கப்பட்டு கொல்லப்பட்டனர் என்ற ஒற்றைசார்புடையை அன்றைய அரசியலை புரிந்து கொள்ளக் கூட முடியாத அளவுக்கு அறிவுத் தளம் இன்றும் ஆங்கிலே அரசியல் சார்ந்து இருக்கிறது. என்ற இவ்வளவு பெரிய விளக்கமும் இது ஒன்றுக்காகவே. தென்னாட்டவர்கள் வீரியம் மிக்கவர்கள், வங்காளிகள் தீரம் மிக்கவர்கள் என முதன் முதலில் தன கோட்டைகளை அமைந்த சென்னையிலும், கல்கத்தாவிலும் நமது நாட்டின் தலைநகரை வைக்காமல் அவனுக்கு என்றென்றும் விசுவாசமாக இருக்கும் மக்கள் கூட்டம் இருக்கும் இடத்தில நமது நாட்டின் தலைநகரை வடநாட்டில் வைத்தான். பன்மொழி வித்தகர் அப்பாதுரையார் அன்றே தனது நூலில் இதை பதிந்துள்ளார். இது போல பல செய்திகள் நமது வரலாற்றில் புதைந்து இருக்கிறது.

நல்லதுவும் அல்லதுவும் தான் இந்த உலகம். இந்த தமிழ் சமூகத்திற்கு முக்குலத்தோர் காவலர்களாகவும், தமிழ் வளர்த்த சான்றோர்களாகவும், இன்றும் ஏனைய மதத்தினரை மதித்தாலும் மதம் மாறமால் எம் மண்ணின் பண்பாடு காக்கும் மைந்தர்களாகவும், இன்றும் பலரின் ஜாதி துவேசத்திற்கு பலியாகாமல் கட்டுப்பாட்டோடு நிகழ்கால பிரச்சனைகளை எதிர்கொண்டு மேலும் முன்னேறும் விதத்தை யோசிக்கும் பலரை கொண்டும் இருப்பது மட்டுமே எனக்கு எனது சமூகத்தின் மேல் என்னை பெருமை கொள்ள வைக்கிறது. அதற்காகத் தான் என்னால் இவ்வளவு தூரம் விளக்கம் கொடுக்கவும் முடிகிறது. பிற சக சமூத்தினரை தூற்றும் எண்ணம் பசும்பொன் தேவர் ஐயாவின் வாழ்க்கையினை படித்த பிறகு என்னிடம் முற்றிலும் நீங்கியது உண்மை. அவரது வாழ்வு தூயதுறவியின், வேர் கொண்ட கூட்டத்தின் வீரியமான்அரசியலுக்குச் சொந்தமானது. எனக்கு அவரது வாழ்வு தெளிவு தான் கொடுத்திருக்கிறது. துவேசத்தை அல்ல. ஒரு தூய தமிழரின், பசும்பொன் ஐயா அவர்களின் வாழ்வினை போற்றுவோம். சிலருக்கு போற்ற முடியாவிட்டாலும் தூற்றாமல் இருக்கலாம்.

நல்லவை போற்றுவோம். நல்லவை செய்வோம். நல்லவை தானாய் நடக்கும்.

வாழ்க வளமுடன்!

உணர்வுடன்,
தனியன்.

This entry was posted in கலவரம் and tagged . Bookmark the permalink.

6 Responses to பரமக்குடி கலவரம் – சாவு பற்றி…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *