நாடார்கள் மூவேந்தர்கள் வழித்தோன்றல்களா?

நாடார்கள் மூவேந்தர்கள் என்று பொய்யான வரலாற்றுக்கு அடித்தளமிட்ட தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்களின் அறிக்கை தமிழகத்தில் சர்ச்சைக்குள்ளாகி உள்ளது.

இது குறித்து தமிழ்நாடு தேவர் பேரவை பொதுச்செயலாளர் திரு முத்தையாத்தேவர் வெளியிட்ட அறிக்கை :-
“மத்திய பாடத் திட்டமான சிபிஎஸ்இ 9ம் வகுப்புப் பாடத்தில் நாடார்கள் குறித்து அவதூறாக கூறப்பட்டுள்ளதை உடனே நீக்க வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதா பிரதமர் மன்மோகன் சிங்குக்கு கோரிக்கை விடுத்துள்ள கடிதத்தில் ” நாடார்கள் சேர சோழ பாண்டியர்களின் வழித்தோன்றல்கள் ” என்ற வார்த்தையை நாகூசாமல் பயன்படுத்தயுள்ளார்.

சேர சோழ பாண்டியர்கள் என்று அழைக்கப்பட்ட தேவர்களாகிய நாங்கள் ஆண்டதற்கான சான்றும், அதன் வாரிசுகள் என்று எங்கள் போரில் தோல்வியுற்று ஓடிய மேலைநாடுகளின் குறிப்புகளும் கூறும்பொழுது தமிழக முதல்வர் வரலாறு புரியாமல் இப்படியொரு வாசகத்தை கூறியிருப்பது மிகவும் வருந்த தக்கதாகவும் , கண்டிக்கத் தக்கதாகவும் உள்ளது போஸ்டரில் படம்போட, வீர வசன வாசகம்போட ஆளில்லாததால் சேர சோழ பாண்டியர்களை பயன்படுத்தும் சிலர்களை கண்டுகொள்ளாது தமிழர் வரலாற்றை சிதைக்கும் இந்த அரசு இப்போது நேரடியாக தானும் களமிறங்கி இருப்பதை வன்மையாக கண்டிக்கின்றோம்.

எங்கள் இனத்திற்கு தமிழக அரசு செய்துவரும் துரோகங்கள் இன்னும் தொடருமானால் செல்வி ஜெயலலிதா அவர்கள் விளைவுகளை விரைவில் அனுபவிப்பார்கள்” என்று கூறியுள்ளார்.

This entry was posted in இணையம் and tagged , . Bookmark the permalink.

One Response to நாடார்கள் மூவேந்தர்கள் வழித்தோன்றல்களா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *