தேவனின் வீரம்

தேவன் என்பவன் தன்னுடைய தகுதியை புரிந்தவன்.
தலையில் உள்ள அறிவை உண்ர்ந்தவன்.
வீரமென்ற சொல்லை விவேகம் என்ற சொல்லுக்குள்
அடக்கி வெற்றி பெற்றவன் .
கத்தி, வாளை தூக்கியவர்கள் இன்று புத்தியை மட்டும் தூக்கிப்பிடிக்கிறோம்..
மறுபடி அரிவாளை பிடிக்க எவ்வளவு நேரம் ஆகும் ???

கரிகாலசோழன் ;
சோழ அரசன் (கிமு 5ம் நூற்றாண்டு) கரிகாற்பெருவளத்தான் வட இந்திய மன்னர்கள் அத்தனை பேரையும் வென்று வரிசையாக வென்ற நாடுகளையும் தன்னுடைய ஆளுமைகக்குள் கொண்டு வந்தவன். இறுதியாக இமயத்தில் தமிழர் சின்னத்தை பொறித்து கண்ட வெற்றிகளை சிலப்பதிகாரம், பட்டினப்பாலை, கலிங்கத்துப்பரணி போன்ற இலக்கியங்கள் விரிவாக எடுத்துரைக்கின்றன. இவர் தான் உலகத்தின் முதல் அணையை உருவாக்கி கல்லணையை காவிரிக்குக் குறுக்கே கட்டியவர்.

பூலித்தேவர் ;
பூலித்தேவன் வெள்ளையருக்கு கப்பம் கட்ட மறுத்து எதிர்த்து நின்ற போது அவரை அழித்தே தீருவதென்று வெள்ளை அதிகாரி ஹெரான், பெரும்படைகளுடன் வந்தான். அவனுடன் மற்ற தளபதிகள், கும்பனி படைகள் , தளபதி கான்சாகிப் என்கிற மருதநாயகம், நவாப் முகமதலியின் படைகள், மாபூஸ்கான் போன்ற கூட்டணி படைகளும் ஒன்று சேர்ந்து முற்றுகையிட்டது… ஆனால் அவர்கள் அத்தனை பேரும் வைத்திருந்த அத்தனை நவீன ரக ஆயுதங்கள், பெரும்படை பலம் என அத்தனையும் தன்னுடைய மன உறுதியால் தன்னுடைய சுத்தமான வீரத்தால் விரட்டி அடித்தார் பூலித்தேவர் ..கடைசியில் வெள்ளையர் நீ கப்பம் தரவேண்டாம். தருவதாக மட்டும் ஒத்துக்கொள்ளுங்கள் ..காரணம் நீங்கள் மறுப்பதாக தெரிந்தால் மற்ற அனைவரும் அதேபோல் மற்றவர்களும் மறுப்பார்கள் என்றார்கள் ….
வெள்ளையர்கள் பூலித்தேவரை கண்டு இவ்வளவு பயந்ததன் காரணம் இப்போது புரியுமே
குறைந்த வீரர்கள்.
அவர்களிடம் நிறைந்த வீரம்.
மற்றவரை கதறடித்த கட்டுறுதி.

மருது பாண்டியர்;

தஞ்சமென்று வந்தவர்களுக்கு அஞ்சேல் என ஆதரவு கொடுத்து, அவரின் உயிர் காக்கப்பட தன்னையே அழித்துக் கொண்ட பார் வேந்தர் மருதுபாண்டியர்கள் “மருது உன்னைப் பகைத்துக் கொள்ள விரும்பவில்லை நாங்கள். நீ தஞ்சம் அளித்துள்ள ஊமைத்துரையை மட்டும் என்னிடம் ஒப்படைத்துவிடு. இந்த நாட்டையே உனக்கு உரிமையாக்குவேன்” என்று தளபதி வேல்சு வேண்டினானே ஏன்????

தேவனின் வீரம் என்பது எவருடனும் ஓப்பிட முடியாது.
எதையும் சாதிக்கும் மன உறுதி உடையது. மற்ற எந்த இனத்தையும் விட அதிகமாக இருந்தது தேவர் இனத்தில் மட்டுமே. வரலாற்று சான்றுகள் அத்தனையும் இவ்வாறு தான் நமக்கு இன்று வரையிலும் பாடமாக, பட்டயமாக காட்சியளித்துக்கொண்டு இருக்கிறது.
ஒவ்வொரு காலத்திலும் நம் இனத்தை சேர்ந்த மாமன்னர்கள்
அந்த அளவிற்கு ஆளுமை செய்து இருக்கிறார்கள்.
ஆனால் ஒற்றுமை என்பது மற்ற இனத்தை விட நம்மவர்களின் பெரிய குறைபாடு என்பதை அன்று முதல் இன்று வரையிலும் நாம் உணர்ந்து கொண்டு தானே இருக்கிறோம்????
அதை மாற்றி அமைப்போம் சொந்தங்களே
உணர்வுடன்
தேவர் இனத்தின் போராளி

This entry was posted in மேகநாதன் தேவர் பதிவுகள் and tagged , . Bookmark the permalink.

One Response to தேவனின் வீரம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *