ஜாதியை ஒழிக்க நினைப்பவன் முட்டாள்.

சில தெளிவுகள்….
சாதி அமைப்பால் வளமையோடு இருந்தவர்களுக்கு அது வேண்டும். அதனால் பலன் இருந்தால் இனிமேலும் கண்டிப்பாக வேண்டும்.
சாதி அமைப்பால் தாழ்த்தப்பட்டு, வளம் குன்றி கூனி குறுகி இருந்தவர்களுக்கு அது வேண்டாம். வேண்டவே வேண்டாம்.
இது தான் வெளிப்படையான இன்றைய அனைவரின் நிலைப்பாடு.
இப்பொழுது புரிந்திருக்கும் யாருக்கு சாதி வேண்டும் வேண்டாம் என்று. இதில் காங்கேயன் யார், பிரின்சு யார் என்பது நமக்கு நன்றாகவே புரிகிறது.

சாதி பற்றி அதிகம் விவாதிக்கப்பட வேண்டிய அவசியம் என்ன?
அதைப் பகடி செய்தும், அதன் குறைகளை மட்டும் குன்றின் மேலிட்டு வெட்டவெளிச்சமாக்கும் நடவடிக்களை ஏன் என்றால் அதற்க்கு சில பல காரணங்கள் இருக்கின்றன.

தமிழக வரலாறு சற்று வேறுபட்டது. அண்டை மாநிலங்கள் போல் இந்த மண்ணின் வீரிய குடிகள் இங்கு ஆட்சி அமைக்கவில்லை. வந்தேறிகள்(தமிழகத்தை பூர்விகமாக கொள்ளாதவர்கள்), அண்டை மொழிக்காரர்கள்(திராவிடம் என்ற பெயரில்), சிறுபான்மை எண்ணிக்கை குடிகள்(ஆரியம் என்ற பெயரில்), சாதியில் தாழ்ந்தவர்கள் பெரும்பான்மையாக இங்கு ஆட்சி அமைக்கும் வாய்ப்பு ஏற்பட்ட போது சாதி மிகப் பெரிய பிரச்சனையாகிப் போனது.

தெளிவாக சொல்ல வேண்டுமென்றால் ராமசாமி ரெட்டியார் (தெலுங்கு), காமராசர் ( இம்மண்ணிற்கு மூலமில்லாத பனை மாரத்தோடு வந்த குடி), அண்ணாதுரை முதலியார் (நடராஜன் – பங்காரு அம்மாள் மகன், தெலுங்கு பூர்விகம் கொண்டவர்கள்), எம்.ஜி.ஆர் (கொடுந்தமிழ் நட்டிவின் வேரும், ஈழத்தின் கிளையும் உண்டு), கருணாநிதி (தெலுங்கு மூலம்), ஜெயலலிதா (திருவரங்கதிலிருந்து மாண்டியா அருகில் பிழைப்பு கண்டு திரும்பிய குடி) மற்றும் பலர் இங்கு ஆட்சி செய்துள்ளனர்.

இவர்களுக்கு இங்குள்ள பூர்வ குடிகளை சாதி வைத்து பிரித்து அதற்கான அரசியல் செய்தால் மட்டுமே பிழைக்க முடியும் என்பது தெளிவு. சாதி பற்று அதிகமுள்ள அண்டைய மாநிலங்களில் ரெட்டி, நாயுடு, கவுடா, ஒக்கலிகா, மேனன், நாயர் தான் வர முடிகிறது பெரும்பாலும். ஆனால் தமிழகம் அப்படி இல்லை. இது உண்மை. யாரும் மறுக்க முடியாது.

ஆக சாதியால் பின்தங்கியிருந்தோர் ஜனநாயக, ஒதுக்கீடு, மதமாற்ற அடிப்படையில் முன்னேற்றமடைந்து வரும் போது அவர்கள் சாதியை தூற்றுவதில் வியப்பில்லை. அது தான் அவர்களின் தார்மீக எதிர்ப்பு நிலைப்பாடு, பூர்விக குணம்.
ஆனால் சாதியால் பெருமிதம் கொள்ளும் குடியினர் அதை எதிர்த்து தமது கூட்டத்தின், குடியின், குலத்தின் பெருமையை தக்கவைத்து கொள்ளும் முயற்சிகளை நடவடிக்கைகளை வெளிப்படையாக பறையடிக்காவிட்டாலும் சமூக, பொருளாதார, அரசியல் நடவடிக்கைகளில், திருமணம், காதுகுத்து, திருவிழா, கோயில், கொடை, வாக்களிப்பு போன்ற பல்வேறு தமது அடையாளங்களின் மூலம் நடத்தி கொண்டு தான் இருக்கின்றனர். இதை யாரும் தடை செய்யவோ தடுக்கவோ முடியாது. அது அவர்களின் தனி மனித, குழுக்களுக்கான, குடிகளுக்கான உரிமை.

சாதி என்பது ஒரு கட்டமைப்பு தான். மேலும் அது தொழில் சார்ந்தது. இன்று மாறியிருக்கிறது. நான் வேண்டும், தாய் தந்தை வேண்டும், வீடு,ஊர்தி இருக்கலாம், கல்யாணம், பெயர் சூட்டல்,காதுகுத்து இருக்கலாம்,மொழி இருக்கலாம், மாநிலம்,நாடு இருக்கலாம், கண்டம் எல்லாம் இருக்கலாம். ஆனால் சொந்த பந்தம் என்ற ஒரு இயற்கையான கூட்டிணைவு என்பது மட்டும் இருக்கக் கூடாது என்ற முட்டாள் தனத்தை மூளை சலவையை, சாதி என்ற ஒற்றை சொல்லின் அடிப்படையில் தவறு என சித்தரித்தது, அதை திறம்பட பரப்புரை செய்தது இந்த ஆங்கிலேய அம்மாவிடம் இருந்து பிறந்த திராவிடக் கட்சிகள். இந்தப் பிரிவுககளை புரிந்து கொண்டால் மட்டுமே, பிரிவினைகள் கடந்த மனிதத்தை மலர்விக்க முடியும். ஏனையவை எல்லாம் நாம் எதிர்பார்க்கும் சமூக ஒழுங்கை ஏற்படுத்தாது. பூசல்கள் மட்டும் தான் ஏற்படும்.

ஆனால் இதை கட்டுப்படுத்த மட்டுப்படுத்த உதவும் மிகப் பெரிய ஆயுதமாக நாத்திகம் இங்கு அரசியலில், சமூகத்தில் நடைமுறைப் படுத்தப்படுகிறது. அதற்கெதிரான ஆத்திகமும் வளர்ந்து கொண்டே தான் வருகிறது. எது இலகுவாய் இருக்கிறதோ அது அடிமையாய் போகிறது. எது வீரியாமாய் இருக்கிறது அது அடங்குவதில்லை.

சாதியம் வேண்டுமா வேண்டாமா என்றால் யாருக்கு அதனால் பலனோ அவர்களுக்கு வேண்டும், யாருக்கு தீமையோ அவர்களுக்கு வேண்டாம். அவ்வளவே!!!

நீங்கள் மேற்கூறிய அனைத்திற்கும் என்னால் விளக்கம் கொடுத்துக் கொண்டே இருக்க முடியும். ஆனால் முடிவு தான் கிடைக்காது. நான் ‘அ’ என்று சொன்னால் அவர் ‘ஒள’ என்று சொல்லவில்லை என்று ஒருவரும், அவருக்கு ஆங்கிலம் தெரியவில்லை என்று ஒருவரும், அவர் மேலும் தொடர்ந்து சொல்லவில்லை என்று ஒருவரும், சொல்லுவர். இதற்க்கு முடிவே கிடையாது. இருப்பினும் கடைசியாக ஒருமுறை முயற்சிக்கிறேன்.

///சிலருக்கு நன்மையாக அமையும் இந்த சிஸ்டம் பலருக்கு தீமையையே விளைவிக்கிறது…///
யாரிந்த சிலர், எண்ணிக்கையில் இருபது சதம் கூட இல்லாதவர்கள் தானே! ஒட்டுமொத சமுதாயத்தில் இவர்களும் உண்டு. இவர்கள் மட்டுமே ஒட்டு மொத்த சமுதாயம் இல்லை. ஒட்டு மொத்த சமுதாய நீரோட்டத்தில் இவர்களும் பங்கெடுக்க வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. அதற்காக சாதியை வளர்க்கவே மற்ற எல்லா சமூகமும் இங்கே பிறந்திருக்கின்றது என்பது போன்ற கயமையை பரப்புரையை அனுமதிக்கக் கூடாது என்பதே எனது கருத்து. சிலருக்கு நன்மை என்பதற்காக சமூக கட்டமைப்பின் சில தீயவற்றை எதிர்க்கிறேன் பேர்வழி என்று ஒட்டு மொத்த நடைமுறைகளையும் சமூக பண்பாட்டுக் கூறுகளையும் எதிர்க்கத் தேவையில்லை.

///இப்படி இருக்க எல்லா பைக் ஒட்டியும் ஹெலிமெட் அணியும்படி கட்டாயப்படுத்துவது எதனால்?????/// அனைவருக்குமான உயிர்க்காப்புக்கும் தற்காப்புக்கும் உள்ளதை சில பலரின் காய உணர்வுகளுக்கும் பொருத்தி பார்ப்பது சரியாகத் தெரியவில்லை. சிறிது வேறுபாடு உள்ளது போல் தெரிகிறது.

///அதே மாதிரி ரெண்டு கோடி மக்களுக்கும் மேலானவர்களுக்கு/// இதில் பலரும் இப்பொழுது முன்னேறி வருகிறார்கள். அவர்களில் பலருக்கு சாதி தேவை அவர்கள் முன்னேற்றத்திற்கு மட்டும் (எ.கா. சாணார் இன மக்கள்). பல தாழ்ந்த சாதிகளுக்கு இட ஒதுக்கீடு மட்டும் வேண்டும் அவர்கள் முன்னேற்றத்திற்கு ஆனால் சாதி படிநிலைகள் தேவை இல்லை, அது அவர்களின் ஊக்கத்தை குறைக்கும் என்பதால். மலை வாழ் மக்களுக்கு இது இரண்டும் மிகத்தூரம் என்பதுவும் ஒரு கூறு, அவர்கள் மலைகள் இருப்பதால் கூட இப்படி இருக்கலாம்.

///சாதி தேவையில்லை. சாதியில்லாமலும் குடும்ப உறவுகள், நன்பர்கள், உறவினர்களை உருவாக்க முடியும். /// அப்படி உருவானது தான் சாதி. மறுபடியும் ஒரு புதுக் கூட்டம் உருவாகும். இது இயற்கை. புதிதாய் ஏதோ சொல்வது போல் உள்ளது. கூட்டம் கூடிய வரலாறு வேறு எப்படி இருக்க முடியும், புதிதாய் கண்டது போல் சொல்கிறார்.

///சாதியின் பெயரால் சலுகைகளைப் பெற்று செழிப்பாக கொழிப்பாக இருக்கிறார்கள். அவர்கள் எப்படி சாதி வேண்டாம் என்று சொல்வார்கள்??/// முன்னமே சொன்னது தான். முன்னேறியவர்களுக்கு, சாதியால் வளர்ந்தவர்களுக்கு அது வேண்டும். கீழ்நிலை மாந்தருக்கு முன்னேற்றத்திற்கு (ஒதுக்கீடு) மட்டும் வேண்டும், வேறெதுவுக்கும் அது வேண்டாம்.

///Dont u know that??/// யார் யார் மன்னர் பரம்பரை என்று சொல்வதை தமிழ் கூறும் நல்லுலகமும், மன்னர் குலத்திற்கான் எச்சம் யாரிடம் அதிகம் உள்ளது என்பதுவும் பலருக்கும் தெரியும்.

சிலர் மறைக்கின்றனர்,
சிலர் நிகழ்கால் பிரச்சனைகளில் இது தேவையா என்று குறுக்கிக் கொள்கின்றனர்,
சிலர் இல்லாத வரலாற்றை எழுதி புகழ் கொள்ள விரும்புகின்றனர்.

ஒட்டு மொத்தத்தில் வளர்ந்த நாடுகளினை ஒப்பிடும் போது எல்லா சாதியையும் சமூகமும் பொருளாதரத்தில் இன்னும் பல மடங்கு முன்னேற வேண்டியுள்ளது. ஆக ஒட்டுமொத்த தமிழகமும் பாரதமும் பயணிக்க வேண்டிய உழைக்க வேண்டிய முன்னேற வேண்டிய அவசியம் உள்ளது. இதற்க்கு சாதியம் பேசுவது அதை தூற்றிக் கொண்டிருப்பது எந்த விதத்திலும் உதவாது.

ஒட்டு மொத்த சமூக நலத் திட்டங்கள் மூலம் உதவக்கூடிய கல்வி, உழைப்பு, உலகளாவிய புது கண்டுபிடுப்பு முயற்சிகள், உலக வியாபாரம், தலைமை பண்பு இவை தான் நம்மை நம் நாட்டினை முன்னேற்றும். சாதிய பெருமிதங்கள் கூட சில பல முயற்சிகளுக்கு உதவலாம்.

ஆனால் சாதிய குறைபாடு கூறுகள் பேசுவது நேர விரயத்திற்கும், பூசல்களுக்கும், வெறுமை உணர்விக்கும், இன்றுள்ள தமிழகம் போல சாதியம் பேசாத ஆனால் சாதியத்தை அனைத்திலும் கடைபிடிக்கும் இரண்டு முகங்களை கொண்டிருக்கும். அது கறிக்கு உதவாத ஏட்டு சுரைக்காய் தான்.

நிற்க. முடிக்கிறேன். நன்றி.

உணர்வுடன்,
தனியன்.

….

This entry was posted in தேவர். Bookmark the permalink.

4 Responses to ஜாதியை ஒழிக்க நினைப்பவன் முட்டாள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *