செம்பி வளநாடன் ரவிகுலசேகர ரகுநாத சேதுபதிகள் செப்பேடுகள்

“போரெனிற் புகலும் புனைகழல் மறவர்”

“பூட்பகைக்கே வாளகலிற் சாவோம் யாமென நீங்கா மறவர்”

 

போரில் ஈடுபட்டுத் தம் வீரத்தை காட்டியும்,போர்க்களத்தில் இறத்தலையும் உயர்வாக கொண்டவர்கள் மறவர்கள் .போர்த் தொழிலையே குலத் தொழிலாக கொண்டதால் “மறவர்கள்” என அழைக்கபட்டனர்.

 

 

மறவர்களைத் “தேவர்” என்று அழைப்பது சங்க காலத்திலிருந்து வழக்கமாக இருந்துள்ளது. அதன்படி சோழநாட்டின் அரசர்களுள் இராசராசசோழத் தேவர்,இராசேந்திர சோழத் தேவர் என பெயர் வைக்கப்பட்டு இருந்தன.

 

அத்துடன் இராமநாதபுரம் மறவர்களுக்கு ‘செம்பியன்’ என்ற பெயரும் உண்டு. ‘செம்பியன்’ என்றால் ‘சோழன்’ என்பது பொருள்.அதனாலேயே இச் செம்பிநாட்டு மறவர்கள் ஆதியில் சோழநாட்டை சேர்ந்தவர்கள் என்று ‘அபிதான சிந்தாமணி’ கூறுகின்றது.

 

சோழநாட்டிலிருந்து பாண்டிய நாட்டுக்கு வந்து குடியேறிய மறவர்கள் ‘செம்பிய நாட்டு மறவர்கள்’. என்று அழைக்கப்பட்டனர்.

 


இவர்களில் சேதுபதி மன்னர்கள் செம்பி நாட்டு பிரிவை சார்ந்தவர்கள். இவர்களின் நாடு ‘கீழ் செம்பி நாடு’ என்றும் ‘வடதலை செம்பி நாடு’ என்றும் கல்வெட்டுகளில் குறிக்கபட்டுள்ளனர்.


இராமநாதபுரம் வரும் முன் சேதுபதிகளின் முன்னோர் துகவூர் கூற்றத்துக் காத்தூரான குலோத்துங்க சோழ நல்லூர் கீழ்ப்பால் விரையாத கண்டனில் இருந்தனர் எனச் செப்பேடுகள் கூறுகின்றன.

 

 

 

 

சாத்தாங்குடிச் செப்பேடு:

 

1. ஸ்வஸ்திஸ்ரீ சாலி வாகன சகாப்தம் 1637 இதன்மேல்ச் செல்ல நின்ற ஜெய நாம சம்வத்சரத்து

2. உத்தராயணமும் ஹேமந்தரிதுவம் மகா மாசமும் கிருஷனபஷத்து அமாவாசை ஆதித்த

3. வாரமும் உத்திராட பஷத்து சுபயோக சுபரணமும் பெற்ற மஹா உதைய புன்ய கால்த்தில்

4.தேவைநகராதிபன் சேது மூலாரஷா துரந்திரன் ராமநாதசுவாமி காரிய துரந்திரன்

5. சிவபூசாதுரந்திரன் பரராசசேகரன் பரராச கஜ சிம்மம் ஸ்வஸ்தி ஸ்ரீமன் மகா

6. மண்டலேசுவரன் கண்டநாடு கொண்டு கொண்ட நாடு கொடாதான்

7. ரவி வர்ம ரவி மார்த்தாண்டன் ரவிகுலசேகரன் ஈழமும் கொங்கும்

 

8.யாழ்பாணமும் கெசவேட்டை கண்டு அருளிய ராசாதிராசன் ராச பரமேசுரன் ராசமார்த்தாண்ட

 

9.ராசம்கா கொம்பீரன் உரிகோல் சுரதாணன் புவனேகவீரன் வீரகஞ்சுகன் சொரிமுத்து வந்நியன் அரச

10. ராவண வத ராமனின் வேளக்காரன் வீர வெண்பாமாலை இளஞ்சிங்கம் தளசிங்கம்

11.பகைமன்னர் சிங்கம் ஆற்றுபாச்சி கடலிற்பாச்சி மதப்புலி அடைக்கலங்காத்தான் மேவலர்கள்

12.கோளரி மேவலர்கள் வணங்குமிரு தாளினன் கீர்த்தி பிறதாபன் கொட்டமடக்கி

13. வையாளி நாராயணன் காவிக் குடையான் கருணா கடாஷ காமினி காந்தற்பன் கலை தெரியும்

14. விற்பன்னன் சந்திய பாஷா அரிசந்திரன் கொடைக்கு கர்ணன் வில்லுக்கு விஜயன்

15. பரிக்கு நகுலன் குன்றினுயர் மேருவிற் குண்றா வளைகுணில் பொறித்தவன்

16. திலதநுதல் மடவார்கள் மடலெழுத வருகமுன் துஷ்டநிற்கிரஹ சிஷ்ட பரிபாலன் வீரதண்டை

17. சேமத்தலை விழங்குமிருதாளினன் அனுமகேதன் சகலகுணாபி ராமன் சங்கீத சாயுத்திய

18. வித்தியா வினோதன் அஸ்டதிக்கு மனோபயங்கரன் மதுரையார் மானங்ககாத்தான்

19. தொண்டியந்துறை காவலன் துர்கரேபந்தன் வைகை வளநாடன் வன்னியராட்டந்தவிர்த்தான்

20.அந்தம்பர கண்டன் சாடிக்காறர்கள் மிண்டன் ஸ்வாமிதுரோகிகள

கண்டன் பஞ்சவன்ன ராய ராவுத்தன்

21.பனுவார் கண்டன் இவுளிபாவடி மிதிதேறுவார் கண்டன் தளங்கொண்டு தத்தளீய்ப்பார் மிண்டன்

22.பட்டர்மாணங்காத்தான் துஸ்டாயிர கண்டன் தாலிக்கு வேலி சத்துருவாதியள் மிண்டன் வேதியர்

23. காவலன் சித்தித்த காரியம் ஜெயம்பன்னும் மனோகரன் வீரலட்சுமி காந்தன் விசையலட்சுமி

24.சம்பன்ன ஸ்கல சாம்ராஜ்ஜிய லட்சுமி நிவாசன் துகவூர் கூற்றத்து காத்த ஊரான குலோத்துங்க

24.சோழநல்லூர் கீழ்பால் விரையாத கண்டனலிருக்கும் சேதுபதி வங்கிஷாதிபனான

25.ஸ்ரீஹிரண்ய கர்ப்பயா ரவி குலசேகர குனாத சேதுபதி காத்த தேவர்கள் தம் முகவைபுரியான

26.ராமநாதபுரத்தில் ஸ்ரீ கோதண்டராமநாத சுவாமிக்கு தாமிற சாசன பட்டயங் கொடுத்த படி நாம் இப்போது

27.கோதண்ட ராம சுவாமிக்கு தாமிற பட்டயங்கொடுத்தாவது நித்தீயியக் கட்டளை அபிசேக நெய்வேத்தியம் திருமாலை திருவிளக்கு கட்டளை முதலானதுக்கு நிலவரம் பண்ணி……………………………..

 

சிவகங்கை செப்பேடு:

 

 

1.ஸ்ரீ சுபமஸ்து சாலிவாகன சகாப்தம் 1655 கலியுக சகாப்தம் 4834 இதின் செல்ல நின்ற பிரமாதீச ஸ்ரீ

2. சித்திரை 21ந் தேதி புதன் கிழமையும் பவுர்ணமியும் சுவாதி நட்சத்திரமும் விருச

3. பலக்கினமும் கூடிய சுபயோக சுபதினத்தில் ஸ்ரீமன் மகா மண்டலேஸ்வரன் தள்விபாட

4. தப்புவராய கண்டன் மூவராய கண்டன் கண்டநாடு கொண்டு கொண்ட நாடு கொடாதான்

பாண்டிய 5.மண்டல ஸ்தாபனாசிரியன் சோழ மண்டல சண்டபிரசண்டன்

ஈழமும் கொங்கும் யாழ்பானராயன்

6. பட்டனமும் கெசவேட்டை கண்டருளிய ராசதிராசன் ராச பரமேஸ்வரன் ராச மார்தாண்டன் ராசாக்கள்

7.தம்பிரான் ரவிகுலசேகரன் தொட்டியர் தளவிபாடன் ஒட்டியர் மோகம் தவிர்த்தான் துலுக்க தளவிபாடன்

8.சம்மட்டிராயன் இவுளி பாவடி மிதித் தேருவார் கண்டன் அசுபதி கெஜபதி நரபதி

 

பிரித்திவராஜ்ஜியம்

9. அருளா நின்ற சேதுகாவலன் சேது மூல துரந்திரன் ராமநாத சாமி காரிய துரந்திரன் இளம் சிங்கம்

10.தளசிங்கம் சொரிமுத்து வன்னியன் தொண்டியன் துறைகாவலன்

வைகை வளநாடன் தாலிக்கு வேலி

11.குறும்பர் கொட்டமடக்கி அரசராவனவத ராமனை எதிர்ப்பவர்கள் மார்பில் ஆணி சிவபூசை

 

துரந்திரன் 12.செம்பி வளநாடன் காத்தூரான குலோத்துங்க சோழ நல்லூர் கீழ்பால் விரையாத

கண்டனிலிருக்கும்

13. ஹிரண்யகர்ப்ப அரசுபதி ரகுநாத சேதுபதி புத்திரன் விஜய ரகுநாத சேதுபதி அவர்கள் மருமன்

குளந்தை

14.நகராதிபதியின் பெரிய உடையார் தேவரவர்கள் புத்திரன் ஸ்ரீமது அரசுநிலையிட்ட முத்து விஜய

ரகுநாத 15.சசிவர்ண பெரிய உடையார் தேவரவர்கள் நாலு கோட்டையிலிருக்கும் வேட்டைக்கு வந்த இடத்தில் 16.கோவனூர் அகம்பாடிய தாரான வீரப்பன் சேருவை மகன் சாத்தப்ப ஞானி வெள்ள

நாவலடி……………………..

 

இளையாங்குடிசெப்பேடு:

 

1.”பாண்டிய மண்டல ஸ்தாபனாசிரியன் சோழ மண்டல ஸ்தாபனாசிரியன் தொண்டைமண்டல

2.பிரசண்டன் ஈழமும் கொங்கும் யாளபான பட்டனமும் கேயு மண்டலமும் அளித்து

3.கெஜவேட்டை கண்டருளிய ராசாதிராசன் ராசபரமேசுபரன் ராசகெம்பீரன் ராசகுலசேகரன் இவுடி

4.பாவடி மிதித்தேறுவார் கண்டன் சாவக்காற மிண்டன் சாமித்துரோகி மிண்டன் பஞ்சவர்ன ராய

5.ராவுத்த பனுகுவார் கண்டன் சொரிமுத்து வந்நியன் திலதனுதல் மடல் மாதர்

6.மடலெழுதும் வருசுகன் காமிகா கந்தப்பன் சங்கீத சாயுத்திய வித்தியா வினோதன்

7. வீரதண்டை சேமத்தலை விளங்கு மிறுதாளினான் வில்லுக்கு வீமர் பரிக்கு நகுலன்

8.பரதநாடகப் பிறவீணன் வலியச்சருவி வளியிடக்கால் நீட்டி தாலிக்கு வேலி தத்துராதியள்

9.மிண்டன் இளஞ்ச்சிங்கம் தளசிங்கம் ஆத்துபாச்சி கடல்பாச்சி மதப்புலி

10.அடைக்கலங்காத்தான் துலுக்கர் மோகந்தவிர்த்தான் துலுக்கர் தளவிபாடன் ஒட்டியர்

11.தளவிபாடன் ஒட்டியர் மோகந்தவர்த்தான் வீரலட்சுமி விசைய லெட்சுமி காந்தன்

12.அனுமக்கொடி கெருடக் கொடி விளக்கும் விருதாளினான் செங்காவி குடையோன் கயனாத

13.சுவாமி காரியர் துரந்தரன் காளை நாயகர் துரந்திரீகன் சேது மூலதராதரீகாரன் சேது லட்ச

14.துரந்தரீகன் துஸ்ட நிக்க் சிஷ்ட பர்பாலகன் அறிவுக்கு அகத்தியன் பொறுமைக்கு தர்மர்

வில்லுக்கு விஜயன் பகை மன்னர் கேசரி இரணியகர்ப்பயாஜி சேது வம்ச துரந்தரீகறன்

பிரித்திவிராஜ்ஜியம் பரிபாலன்ம் பன்னியருளிய ஸ்வஸ்தி ஸ்ரீ………..

 

இயமனீஸ்வரம் செப்பேடு:

 

1.”பாண்டிய மண்டல ஸ்தாபனாசிரியன் சோழ மண்டல ஸ்தாபனாசிரியன் தொண்டைமண்டல

2.சண்ட பிரசண்டன் ஈழமும் கொங்கும் யாழ்பாண ராயன் பட்டனம் எட்டு திசையும்

3.வேட்டை கண்டுருளிய ராச ராசன் ராச ப்ரமேஸ்வரன் ராச மார்தாண்டன் ராச

4.கம்பீரன் எம்மண்டலம் கொண்டருளியவன் ஒட்டியர் தளவிபாடன் ஒட்டியர் மோகம் தவிர்த்தான்

5.மலைகலங்கினும் மனங்கலங்காதான் மறைபுத்திரர் காவலன்

6.குறும்பர் கொட்டமடக்கிய ராச குலதிலகன் ராசாக்கள் தம்பிரான்

7.அரசாரவண ராமன் அதம பிரகண்டன் தாலிக்கு வேலி தரியலர்கள் சிங்கம்

8.வடகரைப்புலி வைகை வளநாடன் தேவை நகராதிபன் சேதுகாவலன்

9.சேது ராச்சிய துரந்திரன் சேமத்தலை விளங்குந்தாளினன். செங்காவிக்கொடி செங்காவிக்குடை

10.செங்காவி சிவிகை யாளிக்கொடி அன்னக்கொடி கருடக்கொடி புலிக்கொடி மகரக்கோடி

11.சிங்கக் கொடியுடையோன் இவுளிபாவடி மிதிதேறுவார் கண்டன் மும்முரசு அதிரும்

12.விருதுடையான் முல்லை மாளிகையியானான ரவிகுலசேகரன் பஞ்சகால பயங்கரன்

13.பரதேசிகாவலன் தடாதகைநாட்டில் செம்பிவள கரதலநகராதிபதிபன் சிவபூசை குருபூசை

மகேசுவர பூசை மறவாத சாதிபன் அசுபதி கெஜபதி நரபதி இரனியகெற்ப விஜய ரகுநாத சேதுபதி….”

 

பெருவயள் செப்பேடு:

 

1. “பாண்டிய மண்டல ஸ்தாபனாசிரியன் சோழ மண்டல ஸ்தாபனாசிரியன் தொண்டைமண்டல

2. சண்ட பிரசண்டன் ஈழமும் கொங்கும் யாழ்பாண ராயன் பட்டனம் எட்டு திசையும்

கஜ வேட்டை கண்டுருளிய ராச ராசன் ராச ப்ரமேஸ்வரன் ராச மார்தாண்டன் ராச கம்பீரன் எம்மண்டலம் கொண்டருளியவன் சொரிமுத்து வந்நியன் கொடைக்கு கர்ணன் பரிக்கு

நகுலன் வில்லுக்கு

3. விஜையன் இவுளி பாவடி மிதித்து ஏறுவார் கண்டன் குறும்பர் கொட்டமடக்கி

வையாளி

4. நாராயணன் உருகோல் சுரதான்பகை. மன்னர்சிங்கம் பகைமன்னர் கேசரி துஷ்டநிக்கரக

சிஷ்ட பரிபாலன் வீரகஞ்சுகன் வீரவளநாடன் சிவபூசாதுரந்திரன் மன்னரில் மன்னன் மறுமன்னர்

5. காவலன் வேதியர் காவலன் அரசராவண ராமன் அடியார் வேலைக்காரன் பாதளவிபாடன்

6. சாடிக்காரர் கண்டன் சாமித்துரோகியார் மிண்டான் பஞ்சவர்ண ராய ராவுத்தன்

7. வீரவென்பாமாலை இளஞ்சிங்கம் தளசிங்கம் பகைமன்னர் சிங்கம் மதப்புலி

8. அடைக்கலங்காத்தான் தாலிக்கு வேலி மனுகுல வங்கிசாபதி சத்திராதியள் மிண்டன்

9. வன்னியர் ஆட்டம் தவிர்த்தான் மேவலர் கோளரி வணங்கும் இருதாளினான் துரகபந்தன்

10. அனுமகேதன் கருடகேதனன் பரதநாடக பிரவீனன் கருணாகடாட்சகம்

11. குண்றுயர் மேருவில் குன்றார் வளை பொரித்தவன்

12. திலக நுதல் மடமாதர் மடல் எழுத வருசுமுகன் விஜயலெட்சுமி காந்தன்

13. கலை தெரியம் விற்பனன் காமின்”………….

 

சேதுபதிகளின் ஆட்சியில் இருந்த குடிகள்:

 

சேதுபதிகளின் ஆட்சியில் பிள்ளைமார்கள் அமைச்சர்களாகவும் சேருவைகாரர்கள் தளபதிகளாகவும் பண்டாற நில உடைமை அதிகாரத்தில் இவ்விருவர்களும் இருந்தனர்.

 

இவர்கள் போக…

சாக்காங்குடி செப்பேடு:

 

நம்முடைய இராச்சியத்தில் இருக்கிற பிரம்ம சத்திரிய வைசியருக்கு முதலான இராசாக்கள் ராசபுத்திறாள் குரு சூத்திரர் கருனாடகத்தார் கவரைகள் வெலமா,துழுவர்,மல்லக செட்டியர் எழு கூற்றம் பதினெட்டு நாடு அஞ்சு நத்த முதலான கிராமத்து வெள்ளாள கெட்டியளில் மதுரை செட்டிகளில் மஞ்சப்புத்தூர் செட்டியாள் கோமுட்டி பட்டுனூல் செட்டியார் சலூப்ப இடையர் வலசை இடையர் சிவியார் இடையர் போயிண்டமார் தொட்டிய கம்பளத்தார் நாட்டு இடையர் வடுககுசவர் நம் நகரில் உள்ள பேற்கேல்லாம் வருஷக் கட்டளை வருஷக் கட்டளைக்கு மகமை ஒரு பனமும் கோபால கட்டளை இடையர் பெண்கோண்ட பனமும் இதுபோம் நம் நகரில்……. பள்ளுபறை சகலமும் சர்வமானியாக இராமநாத பண்டார பாரிசமாக கட்டளை.


பிரம்ம சத்திரிய வைசிய செட்டியார்,இராசாக்கள் இராசபுத்திரர்(ராஜூஸ்),குரு சூத்திர கருனாடகத்தார்(லிங்காயத்துகள்),(கவரைகள்,வெலமா,துழுவர்,மல்லு) செட்டியார்,வெள்ளாள கட்டியர்களான ஆயிரவைசிய செட்டியார்,கோமுட்டி பட்னூல் செட்டியார்,சலுப்ப இடையர்,வலசை இடையர்,சிவிகை இடையர்(கோவிலில் சிவிகை தூக்குபவர்),போயர்,தொட்டிய கம்பளத்தார்,நாட்டு இடையர்,வடுக குசவர்,பள்ளர்,பறையர்…..……….முதலான குடிகள்.

 

சேதுபதிகளின் செப்பு பட்டயங்களில் வரும் சில விருதுகள் நாயக்க மன்னர்களின் விருதுகளை உனர்த்தும் (எ-டு)ஸ்வஸ்திஸரீ ஸரீமன் மகாமண்டலேசுவரன் அரிராய விபாடன் பாஷைக்குத் தப்புவ ராய கண்டன் முவராயர கண்டன் கண்டநாடு கொண்டு கொண்டநாடு விடாதான் நாயக்கர் மன்னர்களுக்கு மட்டுமே உரியது.

 

இது போக

 

தொண்டை மண்டில சண்ட பிரசண்டன் சோழ மண்டில சண்டபிரசண்டன் பாண்டி மண்டிலத்துப் பதுமனா சாரியன்

 

பாண்டியருக்கும் சேதுபதிகளுக்கும் உரியதாக இருந்து பிற்பாடு நாயக்க மன்னர்களும் சூடிய பட்டங்கள்.

வன்னியராட்டம் தவிர்த்தான்(இந்த பட்டம் நாயக்க மன்னர்களின் பட்டம் தொண்டை மண்டல குடிகள் வனப்பகுதிகளில் வாழ்வதால் வன்னிமைக் குடிகள் என பெயர் பெற்ற 18 வகை தொண்டை மண்டல சாதியினருக்கும் இருந்துள்ள காரனப் பெயராகும். மேலும் நாயக்க மன்னர்கள் கச்சி தேவ மகாராய திருமலேந்திரன் என பட்டம் பெற்றவர்கள் ஆதனால் இந்த 18 வகை சாதியினர்களை வீழ்த்தியதால் நாயக்க மன்னர்களும்(18 வன்னியரை புறம் கண்டான் என பெயர் பெற்றனர்) அவர்களின் ஆட்சிக்குட்பட்ட குறுநில மன்னர்களான சேதுபதி,அறந்தாங்கி தொண்டைமான்,பல்லவராயர்,நரசிங்க தேவர்,வானாதிராயர் முதலான மன்னர்கள் சூடிய பட்டமாகும்)

 

இது போக சேதுபதிகளுக்க் மட்டுமே உரிய பட்டங்கள்:

 

 


சேதுபதிகளின் பட்டங்களும் விளக்கங்களும்:


1.செம்பி வளநாடன் – இந்த பட்டம் சேதுபதிகளுக்கு மட்டுமே உடையது.”தடாதகை நாட்டில் செம்பிவள கரதல நகரதிபன்” மீனாட்சி ஆளும் பாண்டிய நாட்டின் செம்பியர் தளத்தின் தலைவன்.

விக்கிரமசோழனுலா வில் திருப்புல்லானி [ஆதி ஜெகநாதபெருமாளுக்கும்] சோழ மன்னர்களையும் சேது காத்த தேவர்களையும் செம்பி நாட்டான் என கூறுகின்றது.

2.ஈழமும் கொங்கும் யாழ்பானராயன் பட்டனமும் கேயு மண்டலமும் அளித்து கஜவேட்டை அருளியவன்” இதற்க்கு ஈழத்தையும் கொங்கையும் யாழாபான பட்டனத்தையும் யானை படையுடன் சென்று வென்று அவர்களுக்கே அளித்தவன் என பொருள் கொல்லலாம்.

3.சாவக்காற கண்டன்

4.இவுளி பாவடி மிதித்தேறுவார் கண்டன்(குதிரை ஏறும் கண்டன்)

5.சாமி துரோகிகள் மிண்டன்

6.மதுரையார் மானங்ககாத்தான்

7.ஒட்டியர் மோகந்தவிர்தான்(ஒட்டியர் என்னும் ஒரிசாவின் படை தலைவர்களினை வீழ்த்தியதால் வந்தது)

8.அரசு ராவன வத ராமனின் வேலைக்காரன்

9.வீர வென்பாமாலை

10.ரவி மார்தாண்டன்

11.ரவி குலசேகரன்( சூரிய குலத்தை சார்ந்தவன்).

12.வேதியர் காவலன்

13.இரன்ய கர்பயாஜி(ஹிரன்ப கர்ப்பயாகம் செய்தவன்)[சோழர்கள்,திருவிதாங்கூர் மன்னருக்கு பின் சேதுபதிகள் மட்டுமே செய்யக்கூடிய யாகம்].

14.வீரலட்சுமி காந்தன்

15.விசையலெட்சும் சாம்ராச்சிய லட்சுமி நிவாசன்

16.குலோத்துங்க சோழநல்லூரில் விரையாத கண்டனில் வாசம் செய்பவன்

17.வைகை வளாநாடன்

18.குறும்பர் கொட்டமடக்கி( குறும்பர் கொட்டமடக்கியைதான் வைகைவளநாடன் கொட்டமடக்கி என பலர் திரித்து வருகின்றனர்)

19.அதி ஜெகநாத ரகுநாத வங்கிசாதிபதி

20.இளசிங்கம் தளசிங்கம் பகைமன்னர் சிங்கம்

21.ஆத்துபாச்சி கடல்பாச்சி மதப்புலி

22.துளுக்கர் தளவிபாடன்

23.சேதுமூல துரதாரீகன் சேது வம்மிசன்

24.வடகரை புலி

25.மலை கலங்கினும் மனங்கலங்காத கண்டன்

26.தேவை நகராதிபன்

27.கோளரி மேவலர்கள் வனங்கும் இருதாளிநன்(மேலுலகத்தினர் வனங்கும் இருதாள் உடையவன் )

28.அடைக்கலம் காத்தான்

29.குன்றுயர் மேருவில் குன்றா வளை பொரித்தவன்( இமயமலையான மேருவில் வளை(வளரி) பொரித்தவன்).

30.தாலிக்கு வேலி

31.ராசாக்கள் தம்பிரான்(அரசர்களின் கடவுள் (அ) சக்கரவர்த்தி).

32.கஜபதி,நரபதி,செம்பிவள நாட்டுடை சேதுபதி.

சேதுபதிகளுக்கு உரிய விருது அனிகலன்:

 

வீரதண்டை சேமத்தலை விளங்கும் இருதாளினன்,செங்காவி குடையன்,செங்காவி சிவிகை,முல்லை மாளிகையுடையான்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

சேதுபதிகளுக்கு உரிய கொடிகள்:

 

அனுமக் கொடி,கருடக்கொடி,புலிக்கொடி,மகரக்கொடி,யாளிக்கொடி,அன்னக்கொடி,சிங்கக் கொடி,செங்காவிக்கொடி,. என பல கொடிகளை விருதுகளாக கொண்டவர். இதைக் காட்டிலும் திருவிதாங்கூர் மன்னர் இராமேஸ்வரம் வருகையில் திருவிதாங்கூர் மன்னரே வணங்கும் “திருவுடைய மன்னரை கண்டால் திருமாலை கண்டோம்” என திருமாலாக கருதும் புகழும் பெருமைக்கும் உரியவர் சேதுபதி.

This entry was posted in சேதுபதிகள், மறவர் and tagged . Bookmark the permalink.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *