செம்பிநாட்டு மறவன் சீற்றமன் கிளைக்காரண் பண்டாற வன்னியன்

அடங்காபற்றை ஆண்ட மறவர் குல அரியேறு

 

குகன் வம்சத்து வன்னியரில் இவன் முறண்டன் குடியாம்

 

மலைநாட்டு  கொடி வழியிலே குலசேகரன் என பெயர் எடுத்த  இவன் அயோத்திராஜன் குடியாம்

 

 

செம்பிநாட்டு மறவரிலே இவன் சீற்றமன் கிளைக்காரணாம்

 

பாயும் புலி குலசேகர வைரமுத்து சேது குல விஜயரகுநாத பண்டாற  வன்னியன்

 

“மறப்புலி உடலிலே மான்கணம் உளதோ”(புறம்)

 

Ref:http://thevar-mukkulator.blogspot.in/2015/02/blog-post.html

ஒல்லாந்தா் ஆட்சிக்காலத்தின் பிற்பகுதியிலும் ஆங்கிலேயா் ஆட்சிகாலத்தின் முற்பகுதியிலும். வன்னிராச்சியத்தை ஆண்ட மன்னன் குலசேகரம் வைரமுத்து பண்டாரவன்னியனின் 210 ஆவது நினைவு நாள் இன்றாகும்.

வெள்ளையரிற்கு அடிபணியாது வன்னிராச்சியத்தை ஆண்டு வந்தான். முல்லைத்தீவு கோட்டையில் வெள்ளையர்களிடம் இருந்து மீட்டு பீரங்கிகளை கைப்பற்றிய முதல் மன்னன் கற்பூரபுல் வெளியில் ஒரே வாள்வீச்சில் 60 பேரை கொன்ற வரலாற்று நாயகன்தான் பண்டாரவன்னியன்.

வன்னிராச்சியத்தில் தோற்கடிக்கப்படாத மன்னாக திகழ்ந்த பண்டார வன்னியன், காக்கை வன்னியனின் காட்டிக் கொடுப்பினால் ஆங்கிலேய தளபதி கப்டன் றிபேக்கினால் தேற்கடிக்கப்பட்டதன் நினைவுநாள் இன்றாகும்.

வன்னியில் ஒட்டிசுட்டானில் உள்ள கைச்சிலைமடு என்னும் இடத்தில் வைத்து பண்டாரவன்னியன் வெள்ளையர்களினால் தோற்கடிக்கப்பட்டான். இதன் நினைவாக கற்சிலைமடுப் பகுதியில் பண்டார வன்னியனிற்கு நினைவுச்சிலை அமைக்கப்பட்டது. பின்னர் அது ஸ்ரீலங்காப் படையினரால் அழிக்கப்பட்டுள்ளது.

 

கொடி வழி இதுவே:



முக்குகர் வன்னிமை

 

சீர்தங்கு வில்லவரும் பணிக்கனாரும் சிறந்த சட்டிலான்தனஞ்சயன்றான்

கார்தங்கு மாளவன் சங்குபயத்தன கச்சிலாகுடி முற்குகரினமேழேகான்

வார்தங்குகுகன் வாளரசகண்டன் வளர்மாசுகரத்தவன் போர்வீர கண்டன்

பார்தங்கு தண்டவாணமுண்டன் பழமைசெறி


மறவர் குடி:

சங்குபத்தன் குடி, கோப்பிகுடி,கச்சிலாகுடி,சட்டிகுடி,மாளவண்குடி,முண்டன் குடி,முரண்டன் குடி.


மறவரில் முண்டன் குடி,முரண்டங்குடி,கச்சிலாங்குடி,மாளவன் குடி சட்டிகுடி,சங்குபயத்தங்குடி இருக்கும் முற்குகரில் முண்ட வன்னியன் முறண்ட வன்னியன், கிளைகாத்தவன்னியன் என மறவரின் தலைவர்கள் இருப்பார்கள்.

மறவரில் இருப்பது பெருங்குடி வீரர்கள்முற்குகரில் இருப்பது தலைவன், அரையன்,பெருமாண்,அரசன் என  முற்குக வன்னிமைகள் மறவரே.

 

செம்பி நாட்டு மறவர்கள் கிளைகள்

Sketch of the Dynasties of South India, t Numismata Orient. Ancient Coins and Measures of Ceylon. Among the Sembanattus (or Sembanadus), the following septs or khilais have been recorded : Marikka. Piccha. Tondaman. Sitrama. Thanicha. Karuputhra. Katra. (15) Edgard Thurstan, K.Rangachari: Castes and Tribes of South India, vol.V, 1909, Govt.Press, Madras, 

 


செம்பி நாட்டு மறவரின் கிளைகள்

1.மரிக்கார் கிளை = சங்கு பயத்தன் குடி(சோழ பாண்டியன்)

2.பிச்சையன் கிளை = சட்டி குடி(சோழ  கங்கன்)

3.தொண்டமான் கிளை = கச்சிலான் குடி(சோழ வல்லபன்)

4.கட்ரா கிளை = முண்டன் குடி(சோழ கேரளன்)

5.கற்பகத்தார் கிளை = மாளவன் குடி(சோழ கன்னங்குச்சிராயர்)(மாளவம்=குஜராத்)

6.சீற்றமன்(ஸ்ரீ ராமன்) கிளை = முறண்டன் குடி(சோழ அயோத்திராஜன்) 

7.தனிச்சன் கிளை = தனஞ்சயன்[கோப்பி] குடி(சோழ கனகராஜன்)


சோழர் படையில் இருந்த கத்திரியர்,கொற்றவாளர்,எறிவீரர்,முனைவீரர்,இளஞ்சிங்க வீரர்களுடன் கலிங்க மாகனால் கச்சி தொண்டையாண்ட திரையரையும் சேரர் வம்ச வில்லவரையும் கலிங்கத்தின்  காலிங்கர்களையும் ஒன்றினைந்த மறவர் சேனையே இந்த முற்குக வன்னியர்கள்.

இவர்கள் யார் என தற்போது கூற தேவையில்லை.


இராஜேந்திர சோழரின் 1055- ஆம் ஆண்டில் எழுதபட்ட இராஜேந்திர சோழரின் மெய்கீர்த்தியில் சோழபாண்டியன்,சோழகங்கன்,சோழகேரளன்,சோழ அயோத்திராஜன்,சோழ கனகராஜன்,சோழ கன்னங்குச்சிராஜன்,சோழ வல்லபன்

அதனாலேயே அவர்களுக்கு வன்னிபங்கள் கிடைத்துள்ளன. என தோன்றுவதால் சில ஆதாரங்களையும் முன் வைக்கின்றோம்.


1)சோழபாண்டியன் 2)சோழகங்கன் 3)சோழகேரளன் 4)சோழ அயோத்திராஜன்

5)சோழ கனகராஜன் 6) சோழ கன்னங்குச்சிராஜன் 7)சோழ வல்லபன்

 

நாடு(மட்டகளப்பு)

 

 

 

நாடதிகம் புவிதனிலே புகழிலங்கை

 

நன்னாட்டின் பெருமைதனை நாடிக்கூற

 

தேடரியதிருச்சபைக்கு முன்னேவந்து வரிசைமுட்டி

 

தீண்டமுன்னுன் பேரூருஞ் சிறந்தநாடும்

 

மாடமுயர் மண்டபமும் மரபும் நீங்கள்

 

வந்தவரலாறு முற்றும் வழுத்துவீராய்

 

ஏடலரும் வரிசைமுட்டி எடுப்பீரல்லாலிச்

 

சபையை விட்டகன்றே குவீரே.

 

சபையோரே மானிலத்திலதிகம் நாடுசங்கை

 

பெறுமெண்ணாட்டுள்ராமனோடு

 

எவையோரில் மறவர்குலத் தேழுமாதரிலங்கை

 

செல்ல மணமகனுஞ்சிறைகள் சூழ

 

அவையமென வெங்கள் குலத்தைந்துகுடி

 

யனைவருக்கும் பூசகரா யழைத்துமட்டச்

 

சுவைகளப்பில் குடியேற்றி யாவருக்கும்

 

குருக்களெனத் தோன்றும் நானே.

 

நன்றி:மட்டகளப்பு மான்மியம்

 

அமரசேனன் கலிபிறந்து மூவாயிரத்து நானூற்றறுபத்தாறாம் வருஷம் அரசுபுரியும் போது தனது உடன்பிறந்தாருக்கு இலங்கை பலதிக்கிலும் வதுவை செய்து வைத்து அரசு புரிந்து வருங்காலம் இராமநாட்டு மறவர்குலத்து இராசவம்சத்தைச்சார்ந்த ஏழுபெண்கள் தங்கள் தங்கள் மணமகனுடனும், சிறைதளங்களுடனும் வவனியர்குலத்துக் குருகக் குடும்பம் ஐந்தும் சேர்ந்து மட்டக்களப்பின் பரிசுத்தங்களை அறியும் படியும், வைதூலிய சமயத்தை மாற்றி அரிநமோ என்னும்நாமத்தைப் போதித்து வைக்கவேண்டுமென்றும் கம்பர் இயற்றிய இதிகாசப்பிரதியை எடுத்து இராமநாடுவிட்டுச் சேதுதனில் ஸ்னானம் செய்து இராமேஸ்வர தெரிசனைகண்டு ஒரு ஓடத்தில் ஏறி மண்ணால் இறங்கி திருக்கேதீஸ்வரம், கோணேஸ்வரம் தெரிசனைகண்டு கொட்;டியன் புரத்தில் வந்து மட்டக்களப்பில் அமரசேன அரசனைக்கண்டு தங்கள் வரலாற்றைக் கூறி,வன்னிச்சிமாரென விருதுபெற்று கலைவஞ்சி ஓர் ஊரிலும், மங்கி அம்மை ஒரு ஊரிலும், இராசம்மை ஒரு ஊரிலும், வீரமுத்து ஒரு ஊரிலும், பாலம்மை ஒரு ஊரிலும், தங்கள் தங்கள் மணமகனுடனிருந்து வந்த சிறைகளைக் கொண்டு கமத்தொழில் செய்து வாழ்ந்தனர்.

 

 

 

 

 

 

 

 

 

 

மறவர் இனத்தில் செம்பி நாட்டு பெண்கள் மறுமனம் செய்வதில்லை என்றும். சதி என்னும் உடன்கட்டை ஏறும் பழக்கம் கொண்டவர்கள் என்பதும் வெள்ளையரின் ஆவனமே.


1.மரிக்கார் கிளை = சங்கு பயத்தன் குடி = சோழ பாண்டியன்

2.பிச்சையன் கிளை = சட்டி குடி= சோழ கங்கன் =  சோழ கலிங்க ராஜன்

3.தொண்டமான் கிளை = கச்சிலான் குடி= கத்திரியர்  = சோழ வல்லபன்

4.கட்ரா கிளை = முண்டன் குடி= சோழ கேரளன்  = வில்லவராயர் 

5.கருபுத்திரன் கிளை = மாளவன் குடி= சோழ கன்னங்குச்சியார்  = குச்சிராயர்(மாளவம்=குஜராத்)

6.சீற்றமன்(ஸ்ரீ ராமன்) கிளை = முறண்டன் குடி  = சோழ அயோத்திராஜன்

7.தனிச்சன் கிளை = தனஞ்சயன் குடி= கனகராயர்  = சோழ கனகராஜன்

 

வரலாறு-

குலசேகரம் வைரமுத்து பண்டார வன்னியன் என்பதே அவனது முழுப்பெயர். பெரிய மெய்யனார், கயலா வன்னியன் என்று இரண்டு சகோதரர்கள் அவனுக்கு இருந்தனர்.

பண்டார வன்னியன், யாழ்ப்பாண வைபவ மாலைப் பதிவுகளின்படி சோழப் பேரரசின் காலத்தில் இலங்கையை ஆட்சிபுரிய அனுப்பப்பட்ட  தமிழகத்து  குகன் வம்சத்து மறவர் குல வன்னிய குல தளபதியர்களின் வழி வந்தவன்.



நீண்ட நெடிய ஆய்விக்கு பின்னே நாம் கூறுவது இது தான். வன்னியர் என்பது பட்டமோ சாதியோ அல்லது அரசரால் வழங்கும் விருதோ கிடையாது. இது ஒரு காடு சூழ்ந்த  பகுதியை குறிக்கும் காரண பெயராகும். எடுத்துகாட்டாக கொங்கு என எடுத்து கொள்வோம். கொங்கு மண்டலத்தில் உள்ள அனைத்து சாதியினருக்கும் கொங்கு என பெயர் இருக்கும். சோழிய என எடுத்து கொள்வோம் அது சோழநாட்டில் வாழும் சகல் பிரிவினருக்கும் ஏன் இசுலாமியருக்கும் மறாட்டியருக்கும் உள்ள பகுதி பேராகும். கொங்கு,சோழிய,பாண்டிய,நாஞ்சில்,கேரள,தொண்டை என்பது போல தான் வன்னி என்னும்  பகுதியை குறிக்கும் பெயர். அதே போலத்தான் வன்னியர் என்பது தொண்டை மண்டலத்தில் உள்ள அனைத்து சாதியினரையும்  குறிக்கும்.


தொண்டை மண்டலத்தை கச்சி வன நாடு (அ) வன்னிய நாடு என கூறுவர். இதில் குடியிருக்கும் இறைவனை கச்சி வனராசர் இறைவியை கச்சி வனத்தில் தவமிருக்கும் காமாச்சி என கூறுவர். காமாட்சி கோவில் தொண்டை மண்டல உட்பட எல்லா இடங்களிலும் காடுகளில் தான் அமைந்திருக்கும். காமாட்சியை வனக்காமாட்சி,வனப்பேச்சி அல்லது வன்னிய பேச்சி என கூறுவர். எனவே தொண்டை மண்டலத்தை பொருத்தவரை வன்னியராஜன் மற்றும் வன்னிய பேச்சி என்பது தொண்டை மண்டலத்தை ஆளும் ஏகாம்பரேஸ்வரர்-காமாட்சி அம்மனையே குறிக்கும். 


எனவே தொண்டை மண்டலம் மட்டுமல்ல காடுகள் எங்கல்லாம் உள்ளதோ அந்த பகுதியில் வாழும் அனைவருக்கும் உள்ள காரண பெயரே வன்னியர் (அ) காடுவாழ்னர்.

வன்னியர் என்பதற்கு வலிமையுடையோர் எனப் பொருள் கொள்ளலாம். 1621-ம் ஆண்டு போர்த்துக்கீசியர்கள் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றிய போதும்கூட வன்னிப் பகுதிக்குள் கால்பதிக்க முடியவில்லை.

சேதுபதிகள் மகள் நீலகேசியை மணந்த வெடியரசன் விஷ்னுபுத்திரன்:

 

சேதுபதிகளுக்கும் நெடுந்தீவு நயினாத்தீவு முற்குக தேசத்தலைவர் விஷ்னுபுத்திர வெடியரசருக்கும் இடையே மண உறவுகள் இருந்துள்ளது. சேதுபதி மகளை மணந்த வெடியரசன் கதை பற்றிய கோட்டை கொத்தலங்கள் நெடுந்தீவில் காணலாம்.

 

 

 

 

 

 

சேதுபதி மகராஜவின் வழியில் வந்த குளக்கோட்டன்:

 

குளக்கோட்டன் என்னும் மகாராஜன் சேதுபதி ராசர் பரம்பரையில் வந்தவன் என வெடியரசன் கதை கூறுகிறது.

 

 

 

 

 

 

 

கடைசிவரை வன்னிக்குள் காலூன்ற முடியாமலேயே இலங்கையில் போர்த்துக்கீசிய அதிகாரம் முடிவுக்கு வந்தது. உண்மையில் வன்னி வணங்கா மண்தான், வன்னியர்கள் செம்பி நாட்டு  வீர மறவர்கள்தான்.

வன்னிக்குள் முதலில் வெற்றிகரமாக நுழைந்தவர்கள் டச்சுக்காரர்கள் என நாம் குறிப்பிடும் ஒல்லாந்தர்கள். 1782-ல் வன்னியை கைப்பற்ற அவர்கள் நடத்திய போர் பற்றி எழுதும் லூயி என்ற வரலாற்று ஆசிரியர் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்.

“ஒல்லாந்தர்கள் எத்தனையோ நாடுகளில் போர் நடத்தியிருக்கிறார்கள். ஆனால் இப்படி வீரத்துடன் போரிட்டவர்களை உலகில் எங்கும் அவர்கள் காணவில்லை” என்று. ஒல்லாந்தர் காலத்திலும் பின்னர் ஆங்கிலேயர் ஆட்சியை எதிர்த்தும் மன்னார், திருகோணமலை, வன்னிக்காடுகள் என வன்னியர்கள் இடைவிடா கொரில்லா போர் நடத்தி வந்தனர். அவர்களில் ஒளிவிடும் மாணிக்கமாய் வந்த மாவீரன்தான் பண்டார வன்னியன்.

முல்லைத்தீவில் நின்று பண்டார வன்னியனின் வரலாற்றுத் தோளுரசியதில் மேலும் ஓர் முக்கிய செய்தியுண்டு. ஆங்கிலேய மேலாதிக்கத்திற்கெதிராய் பண்டார வன்னியன் நடத்திய கலகத்தின் உச்சம் எதுவென்றால் ஆங்கில வெள்ளையர்களின் முல்லைத்தீவு கோட்டையை அவன் முற்றாகத் தாக்கியழித்து நிர்மூலம் செய்ததுதான் அது. அதே முல்லைத்தீவில் முப்பதாண்டு கால போராட்டம் சாதித்த தமிழருக்கான இராணுவ வளங்கள் யாவும் தகர்ந்துபோய்க் கிடந்த ஓர் தருணத்தில் பண்டார வன்னியனின் வீரத்தை சமகாலத் தோழமைக்கு குறியீடாய் நிறுத்த நிச்சயம் காரணம் இல்லாமல் இருந்திருக்காது.

பண்டாரவன்னியன் முல்லைத்தீவிலிருந்து வற்றாப்பளை அம்மன் கோயில் வரையிலுள்ள 2000 சதுரமைல் நிலப்பரப்பை ஆட்சி செய்து வந்தான். அமைச்சராக தனது தம்பி கயிலாய வன்னியனையும், தளபதியாக கடைசி சகோதரன் பெரிய மைனரையும் கொண்ட குழுவையும் அமைத்து அரசமைப்பை பேணி வந்தான்.

அவனது ஒரே சகோதரி பெயர் நல்ல நாச்சாள். அவளுக்கு கலைகள் கற்பிக்கும் அவை புலவன் மீது காதல் கொண்டான். அதே நேரத்தில் வன்னிநிலத்தில் ஆண்டு வந்த இன்னொரு குறுநில மன்னாக காக்கை வன்னியன் அவளை மணம் புரிய ஆசைப்பட்டான். அதற்காக பலமுறை பண்டார வன்னியனிடம் ஓலை அனுப்பிய போதும் அவன் அதற்கு சம்மதிக்கவில்லை.

ஒரு முறை நந்தவனத்தில் நாச்சியாள் புலவரிடம் காதல் கொண்டிருக்க கண்ட காக்கை வன்னியன் புலவரிடம் சண்டைக்கு போக புலவர் வாள் சண்டையிட்டு நையப்புடைத்து அனுப்புகிறான். இந்த சம்பவத்தால் புலவன் அரச பரம்பரையில் வந்தவனென்பதை அறிந்து கொள்கிறான். இதனால் அவர்களின் காதலுக்கு பச்சை கொடி காட்டுகிறான்.

இது ஒரு புறமிருக்க.. வன்னி நிலப்பரப்பில் பண்டார வன்னியன் திறை செலுத்தமறுத்த காரணத்தினால் படையெடுத்து வந்து வெற்றி காண முடியாமால் வெள்ளையர்கள் புறமுதுகாட்டி பின் வாங்கினர்.

தனிப்பட்ட காரணத்தினால் பண்டரவன்னியன் மேல் ஆத்திரம் கொண்ட காக்கை வன்னியன் வெள்ளை தேசாதிபதியுடன் கூட்டு சேர்கிறான். பல முறை படையெடுத்து வெள்ளையர் தோல்வி அடைகின்றனர். அத்தருணத்தில் காக்கை வன்னியன் பண்டார வன்னியனை தந்திரமாகத்தான் வெல்லலாமென்று ஆலோசனை கூறுகிறான்.

அந்த திட்டத்தின் ஒரு அங்கமாக தான் தவறை திருந்தி விட்டதாக நாடகமாடி பண்டார வன்னியனிடம் வருகிறான். தம்பிமார்களான மந்திரியும் தளபதியும் காக்கை வன்னியனை சேர்க்க வேண்டாமென்ற ஆலோசனையையும்மீறி, மறப்போம் மன்னிப்போம் என்ற அடிப்படையில் அவனை சேர்த்துக் கொள்கிறான். ஆனால் தருணங்களை காத்திருந்து தருணங்கள் வர நம்பவைத்து தனிய கூட்டிவந்து ஒட்டு சுட்டான் என்னுமிடத்தில் வைத்து வெள்ளையரின் படைகளிடம் தந்திரமாக அகப்படவைக்கிறான் இந்த காக்கை வன்னியன்.

இன்றும் நம்பி ஏமாற்றுவர்களை நீ காக்கை வன்னியன் பரம்பரையோ என்று ஈழத்தில் கேட்கும் வழக்கு உள்ளது.

 

undefined

This entry was posted in சேதுபதிகள், மறவர் and tagged , , . Bookmark the permalink.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *