சிவகிரி ஜமீனை வன்னியர்(பள்ளி) இனத்தவர்கள் கோர காரணம் என்ன?

சிவகிரி ஜமீனை வன்னியர்(பள்ளி) இனத்தவர்கள் கோர காரணம் என்ன?

வன்னியர்-பட்டம் பற்றிய சில தெளிவுகள்:

வன்னியர் எனற பெயரின் விளக்கதில்

வன்னி =கிளி,தீ, குதிரை, மர வகை,தலைவன், சிங்கம் என்று பல பொருள் தருகிறது எனவே இவை அனைத்தும் ஒரு சாதிக்கு மட்டுமே பொருந்தும் என ஏற்கலாகாது.

 

வன்னியன் என்னும் சொல்லின் பொருள் வன்மை என்ற வேர் சொல்லின் பொருளுடையது  என்பதே உண்மை.

திண்ணிமையான நெஞ்சம் உள்ளவன் திண்ணியன். வன்மையுடைய நெஞ்சம் உள்ளவன் வன்னியன்.

வன்னியர் என்பது ஜாதி பெயரல்ல என்று தெளிவாக தெரிகிறது பட்டமே.

வன்னியர் என்ற பட்டம் எந்த எந்த ஜாதியினர்க்கு உள்ளது என்று பார்போம்.

1.ஈசனாட்டு கள்ளர்(மத்திய அமைச்சர் பழனி மாணிக்கம் வன்னியர்)

2.வலைய முத்தரையர்(முத்தரையர் வன்னியர்)

3.வன்னிக்கொத்து மறவர்(வன்னியர்,வன்னியடி மறவர்)

4.ஆர்க்காடு அகமுடையர்(வன்னிய முதலியார்)

5.துளுவ,கொங்கு வெள்ளாளர்(வன்னியர் கவுண்டர்)

6.பார்க்கவ குலத்தார்(வன்னிய மூப்பனார்)

7.பரவர்,கரையர்(வன்னியர்)

என பல்வேறு சமூகதினருக்கு இருக்கிறது. அப்போது இவர்கள் மட்டுமே வன்னியர் என கோர காரணம்.



நீண்ட நெடிய ஆய்விக்கு பின்னே நாம் கூறுவது இது தான். வன்னியர் என்பது பட்டமோ சாதியோ அல்லது அரசரால் வழங்கும் விருதோ கிடையாது. இது ஒரு காடு சூழ்ந்த  பகுதியை குறிக்கும் காரண பெயராகும். எடுத்துகாட்டாக கொங்கு என எடுத்து கொள்வோம். கொங்கு மண்டலத்தில் உள்ள அனைத்து சாதியினருக்கும் கொங்கு என பெயர் இருக்கும். சோழிய என எடுத்து கொள்வோம் அது சோழநாட்டில் வாழும் சகல் பிரிவினருக்கும் ஏன் இசுலாமியருக்கும் மறாட்டியருக்கும் உள்ள பகுதி பேராகும். கொங்கு,சோழிய,பாண்டிய,நாஞ்சில்,கேரள,தொண்டை என்பது போல தான் வன்னி என்னும்  பகுதியை குறிக்கும் பெயர். அதே போலத்தான் வன்னியர் என்பது தொண்டை மண்டலத்தில் உள்ள அனைத்து சாதியினரையும்  குறிக்கும்.


தொண்டை மண்டலத்தை கச்சி வன நாடு (அ) வன்னிய நாடு என கூறுவர். இதில் குடியிருக்கும் இறைவனை கச்சி வனராசர் இறைவியை கச்சி வனத்தில் தவமிருக்கும் காமாச்சி என கூறுவர். காமாட்சி கோவில் தொண்டை மண்டல உட்பட எல்லா இடங்களிலும் காடுகளில் தான் அமைந்திருக்கும். காமாட்சியை வனக்காமாட்சி,வனப்பேச்சி அல்லது வன்னிய பேச்சி என கூறுவர். எனவே தொண்டை மண்டலத்தை பொருத்தவரை வன்னியராஜன் மற்றும் வன்னிய பேச்சி என்பது தொண்டை மண்டலத்தை ஆளும் ஏகாம்பரேஸ்வரர்-காமாட்சி அம்மனையே குறிக்கும். 

எனவே தொண்டை மண்டலம் மட்டுமல்ல காடுகள் எங்கல்லாம் உள்ளதோ அந்த பகுதியில் வாழும் அனைவருக்கும் உள்ள காரண பெயரே வன்னியர் (அ) காடுவாழ்னர்.



வன்னி செய் நிலம் தெளிவா வந்த கல்வெட்டு வன்னி செய் நிலமே வன்னி நிலம் ஆதாவது காட்டு நிலமே ஒழிய வன்னியர்களின் நிலமல்ல 



இச்சாதிப்பட்டம் இலங்கையில் முக்குவர்களுக்கும், அகம்படிய, மறவர்களுக்கும் வழங்கப்பட்டது உண்டு.

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடிப் பகுதியில் முத்தரையர் சமூகத்தவர்கள் சின்ன வன்னியனார் என்றும், வழுவாடித் தேவர் என்றும் பட்டம் புனைந்திருந்தனர். தேவகோட்டை அருகிலுள்ள சூரைக்குடியில் மறவர் குலத்தைச் சேர்ந்த விசயாலத் தேவன் என்பவருக்கு வன்னியர் என்ற சாதிப்பட்டம் உண்டு. 

இதோ அத்ற்க்கும் பதில்  13-ஆம் நூற்றாண்டு.


15 ஆம் நூற்றாண்டுக்கு முன் வன்னியபட்டம் ?


அதலையூர் நாடாள்வான் = விஜயாலத்தேவன் = வன்னியநார் அடைக்கலம் காத்த சூரைக்குடி அரையன்.

நாடாள்வான் விஜயாலயத்தேவன்

ஆதளையூர் நாடாள்வான் பொன்னனான விஜாயலயத்தேவர் கி.பி(1219) 


I.P.S.(505) குளத்தூர் தாலுகா அரியூர் ஈஸ்வரன் கோவில் வாசற்படிக்கு தென்புறம் 


ஸ்வஸ்தி ஸ்ரீ சோனாடு கொண்ட சுந்தரபாண்டியத் தேவர்க்கு யாண்டு…….திருவகந்தீஸ்வரமுடைய நாயனர் திருக்கோவில் மகாதேவரையும் நாச்சியாரையும் எழுந்தருவித்தால் மாங்குடி மறவன் அவையன் சாத்தன் நாட்டானான அதளையூர் நாட்டுப்பேரரையன்………………………. 



கி.பி.1424



“வன்னிநார் அடைக்கலம் காத்த விஜயாலத்தேவன்”

திருநெல்வேலி பெருமாள் கல்வெட்டில் மறவரின் வன்னிய பட்டம்

க.என்:35

ஆட்சி ஆண்டு:கி.பி.1547

இடம்:இளவேலங்கால்

குறிப்பு: போரில் இறந்துபட்ட மறவர்க்கு கல்

அரசன்: திருநெல்வேலி பெருமால்

கல்வெட்டு:

சகாத்தம் துல் கில வருசம் மாதம் ..

திருநெல்வேலி பெருமாளாம்

வெட்டும் பெருமாள் இளவேலங்காலிருண்

தருளி போது…….வெங்கல ராச வடுக படை…..

வெட்டிய கோனாடு வகை பொது வேலங்காலிருக்கும்

குண்டையன் கோட்டை மறவரில் லிங்க தேவ வன்னியனை

…பட்டான் வென்று முடிகொண்ட விசயாலய தேவன்

இதிலிருந்து கல்வெட்டில் வன்னியர் பட்டம் 15- ஆம் நூற்றாண்டு முன்னாலிருந்து வழக்கில் உள்ளது.

undefined

சூட்டத்தேவன் வன்னிமிண்ட்ன்:
கல்வெட்டு என்: 33:34
“இப்பாக்கல்லு இவ்வூர் மறவரில் சூட்டத்தேவன் வன்னிமிண்டன் தன்மம்”

பனையூர் மறவரில் இக்கோவிலுக்கு பாற்கல்லு செய்து கொடுத்தவன் சூட்டத்தேவன் வன்னிமிண்டன் ஆகும்.
வன்னிய பெயர் கொண்ட மறவர் இருந்தவைக்கு இது ஒன்று ஆதாரமாகும்.


கொல்லம்கொண்டான்,கங்கைகொண்டான் மற்றும் சேத்தூர் முதலிய மூன்று பாளையங்களும் வணங்காமுடி பண்டார மறவர்
. சிவகிரி போன்ற நான்கு பாளையப்பட்டுக்கள் வன்னியர் பட்டம் கொண்ட வன்னிக்கொத்து மறவர்கள் இவர்க்ள் வன்னியர்(பள்ளி) அல்ல என்ற துல்லியமான தகவலைக்கூட பேட் தருகிறார்.[TIRUNELVELI GAZETTIE H.R PATE AND NELSON]. 

 

வன்னிய மறவர் என்ற சாதி இருந்ததற்க்கு ஆதாரம்:

ஏழாயிரம் பண்ணை ஜமீன் சிவகிரி ஜமீன் ஆகிய இருவரும் வன்னிய மறவர் சாதியை சேர்ந்தவர்கள். இதில் ஏழாயிரம் பன்னையை பூர்வீகமாக கொண்டு இன்று பழனியில் வசிக்கும் சந்தன துரை என்னும் பெரியவரிடம் உள்ள இருபத்திரத்தில் 1898 மற்றும் 1920 ஆகிய பத்திரங்களில் வன்னிய மறவர் சாதி என வந்துள்ளது.

1898 ஆம் ஆண்டில் ஆதாவது சுதந்திரத்திற்கு முன் ஆங்கிலேயர் ஆட்சியில் பழனியில் இருந்த மறவர் மடம் ஒன்றின் தலைவர் அப்போதைய 5 ரூபாய் பத்திரத்தில் நன்கு கவனிக்கவும் விக்டோரியா மகாரானி உருவம் பொரித்த பத்திரத்தில் இந்த வாசகம் வருகிறது.

“பழனியாண்டித் தேவர் மகன் வன்னிய மறவர் சாதி வசமுள்ள வீரயாத்தேவர்”…….. இப்படி செல்கிறது.

இதைப்போல்,
1920 ஆம் ஆண்டில் 1 ரூபாய் பத்திரத்தில் நன்கு கவனிக்கவும் விக்டோரியா மகாரானி உருவம் பொரித்த பத்திரத்தில் இந்த வாசகம் வருகிறது.

“வன்னிய மறவர் சாதி வசமுள்ள மடமொன்றில்”

இந்த மறவர் மடம் இன்று வழக்கில் உள்ளது பழனி பண்டாறம் ஒருவரால் ஆக்கிரமிப்பு செய்யபட்டு அதன் வழக்கு நடைபெற்று வருகிறது.

இப்படி ஒரு ஆதாரம் எவரிடமும் இருக்காது. இன்றைக்கு

 

 

வணங்காமுடி வன்னிய மறவர் ஜாதி! 

~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~•


அன்பு நண்பர்களே! வன்னிய மறவர் சாதி என பழங்கால பத்திரப்பதிவுகளில் {1898-மற்றும்-1928}உள்ளதையும்,அவ்விதம் வருவதையும் ஏற்கனவே நான் பதிவிட்டிருந்தேன். இப்போது மேலும் சில பத்திரங்களையும் பதிவிடுகிறேன்.


பத்திரம்:1

~~~~~~~

“வணங்காமுடி வன்னிய மறவர் ஜாதி”

{1916ம் வருடத்திய பத்திரம்.}


1916ம் வருடம்,அக்டோபர் மாதம்,11ம் தேதி, நள வருடம், புரட்டாசி மாதம் 26ம் தேதி, கஸ்பா பழனியிலிருக்கும், பழனிச்சாமி முதலியார் மகள் “செங்குந்த முதலியார் ஜாதி” விவாசாயம்,  பருவதத்துக்கு ..


மேற்படி ஊரிலிருக்கும் பழணியாண்டித்தேவர் குமாரர், “வணங்காமுடி வன்னியமறவர் ஜாதி” விவாசாயம், வீரய்யாத்தேவர், மேற்படி ஜாதி, மேற்படி ஜீவனம்,ராமசாமித்தேவர்:2,…


பத்திரம் 2.

~~~~~~~


1902 -அக்டோபர் மாதம்-25ம் தேதி, சுபகிருது ஆண்டு, ஐப்பசி மாதம் பழனியூரிலிருக்கும் ….


“வன்னியமறவர் ஜாதி”


பத்திரம்:3

~~~~~~~

“வன்னிய மறவர் ஜாதி” -1907 ம் வருட பத்திரம்.


பத்திரம்:4

~~~~~~~

பழனி டவுண், பொன்னையாத்தேவர் சந்திலிருக்கும், மாரியப்பத் தேவர் அவர்கள் மனைவி “வணங்காமுடி வன்னிய மறவர் ஜாதி ” சுகஜீவனம் சுமார் 52 வயது, இருளாயி அம்மாள் அவர்களுக்கு, மேற்படி டவுண், “சவளக்காரர்” தெருவிலிருக்கும் சுப்பு பண்டாரத்து குமாரர் “துழுவ வேளாளர் ஜாதி” விவாசாயம் -வியாபாரம், சுமார் 48 வயது,பழனியப்பபிள்ளை:1, மேற்படியார் குமாரர் மைனர் சுமார் 16 வயது, சண்முகம் பிள்ளை: 1, …… {தேதி:25•12•1937}


‘சவளைக்காரர் எனும் சாதியார் இப்பத்திரத்தின் வாயிலாக “சவளைக்காரர்” என்றே இக்கால கட்டங்களில் வழங்கப்பட்டனர் என்பதை அறியமுடிகிறது’. மேலும் பழனியில் ‘பண்டாரம்’ எனப்படுவோர் துளுவ வேளாளர் சாதி என தம்மை குறிப்பிட்டுள்ளதையும் அறியமுடிகிறது. இதனால் ‘பண்டாரச்சாதி’ என்போர் பிள்ளை எனும் பட்டத்தோடு உடைய வேளாண் சாதியினர் என்பதும் உறுதியாகிறது.


பத்திரம்:5

~~~~~~~


1951- ஏப்ரல் 18,


…. பழனி டவுண், கருப்பண தேவர் சந்திலிருக்கும், வீ.ராமசாமித்தேவர் அவர்கள் பாரியை “வணங்காமுடி வன்னியமறவர் ஜாதி” சுகஜீவனம், சீதையம்மாளுக்கு….


அன்புடன்.

கி.ச. முனிராஜ் வாணாதிராயன்.

(கி.பி. 18ஆம் நூற்றாண்டைய சிறிய கிருஷ்ணாபுரம் செப்பேடு.) மலையமான் திருமுடிக்காரியின் நேரடி மரபு வழி வந்தோர் பாரியின் வம்சமான பார்க்கவ குலத்தார் மற்றும் வன்னிய பட்டம்(பார்கவ கோத்திரம்)உள்ள சிலரும் தஞ்சைக்கள்ளர்களும் மட்டுமே.பார்கவ குலத்தோர் சோழனுக்கு பெண் கொடுக்கும் உயர் நிலையில் இருந்த அரச குடும்பத்தார்.

சோழ பாண்டியபுரம் என்ற ஊரில் ஆண்டிமலை என்ற இடத்தில் உள்ள பாறையில் கி.பி.953 ஆம் ஆண்டு பொறிக்கப்பட்ட கல்வெட்டில் உள்ள செய்தி.பார்கவ குலத்தோர் பாரி,மலையமானின் வாரிசுகளாக உறுதிப்படுத்துகிறது.இவர்களுக்கு வன்னிய பட்டம் உண்டு.

1891க்கு பிறகு சென்னை கோர்டில் பள்ளி இனத்தோர் ஒரு வழக்கு தொடுத்தனர்,அதில் பள்ளி என்ற பெயரை வன்னியர்(அ) வன்னியர் குல சத்திரியர் என மாற்ற கோரிக்கை வைத்தனர். அதில்

after Mr. T. Varadappa Nayakar, the only High Court Vakil (pleader) among the Palli community practising in Madras, brought out a Tamil book on the history of the their connection of the caste with the ancient Pallava kings for Chidambaram temple, by name Sweta Varman, subsequently known as Hiranya Varman (sixth century A.D.) was a Pallava king. At Pichavaram, four miles east of Chidambaram,lives a Palli family,they say, ruled over Mylapore during the time of the visit of St. Thomas. [PALLI OR VANNIYAN by caste and tribes of south india by edgar Thurston)

.அப்போது வன்னியர் என்று தற்காலத்தில் உள்ள சாதியர் யார்?

இதற்கு ஆதாரப்பூர்வமாக மிரஸ் ரேட் கல்வெட்டு தொண்டை மண்டலத்தின்  குடிமக்களை கூறும் செய்தி:

வெள்ளாளரின் 18 சூத்திர சாதியினர்:

“தொண்டைமண்டல வரிசை மூவாறு குடிமக்கள் சுருதிநாள் முதலாகவே துங்கமிகு நாவிதன், குயவன்,வண்ணான், ஓலை சொன்னபடி எழுதும் ஒச்சன், கண்டகம் மாளர்வகை ஐவர், வாணியர் மூவர், கந்தமலர் மாலைக்காரர் கலைமீது சரடோட்டும் பாணன், தலைக்கடைக் காவல்புரி பள்ளி,வலையன், பண்டுமுதல் ஊரான் மறிக்கும் இடையன், விருது பலகூறு வீரமுடையான் பதினெண் குடிமக்கள் அனைவரும்……………………………………”

இதில் இன்று தொண்டை மண்டலதில் பெரும்பான்மையாக இருக்கும் வன்னியர் என்ற ஜாதி பற்றி குறிப்பிடவில்லை.(இக்குடிகளே பெரும்பாலும் வன்னியப் பட்டம் கொண்டோர்.)

இவர்களை இங்கு பள்ளி(சூத்திர சாதியினர்) என்ற ஜாதியாகத்தான்  குறிப்பிடுகின்றர்.

இப்ப்ள்ளி என்ற இவ்வினமே பிற்காலத்தில் வன்னியர் என்று 1891 தமிழ்நாடில் கெஜட்டில் மாற்றம் செய்து கொண்டார்கள்.

பள்ளி  என்ற வார்தைக்கு அர்த்தம் பாட சாலை,கோயில்,குறும்பர் என்ற அர்த்தம்(சுராவின் தமிழ் அகராதி). ஆம் குறும்பர் என்ற இனத்தின் வேறு பெயரே பள்ளி.

குறும்பர் முல்லை நிலத்தில் வாழ்ந்த குடி மக்கள் ஆவர்.ஆதனால் காடவர் குறும்பர் என்று கூறுவர்.

குறும்பர் அல்லது குறுமனர் அல்லது குறுபாரு (Kurumbar or Kurumans or Kurubaru) தென்னிந்தியாவில் வாழும் ஆடு மேய்ப்பவர்களாவர். இந்தியாவின் பழங்குடியினர் ஆவர். இவர்கள் பல பெயர்களில் அறியப்பட்டாலும் அவை ஒரே பொருளைக் குறிப்பவை. இவர்களது மொழி குருமன் பழங்குடி கன்னடம் ஆகும். இவர்களது கடவுளாக வீரபத்திரரை (பீரா தேவரு) வழிபடுகின்றனர். தங்களது தலையில் தேங்காய் உடைத்து கடவுளை வழிபடுகின்றனர். இவர்களது சாதிப்பெயர்கள் கவுண்டர், கௌடர், ஹெக்கடே, நாய்க்கர் என்பன ஆகும்.இந்தியாவின் பிற பகுதிகளில் இவர்கள் தங்கர் என அறியப்படுகின்றனர். குறும்பர்களின் தெய்வமான் வீரபத்திரரை தான் “அக்னி வீர பத்திரர்” என்றும் கூறுவர்.வன்னியர்(பள்ளி)களின் மூதாதையரக “ருத்திர வீர வன்னியர்” என்கிறர்கள்.

வன்னியர்-அக்னி

பத்திரர்-ருத்திரர்.

இரண்டும் ஒன்றே. “அக்னி வீர பத்திரர்” என்ற சொற்றொடரின் எதிர் சொற்றொடரே “ருத்திர வீர வன்னியர்”.குறும்பர் இனமே வன்னியர்(பள்ளி) ஆகும்.அக்னி வீரபத்திரரை வழிபடுவதால் தம்மை அக்னி குலத்தவர் என்று கூறுகிறர்.அக்னி வீரபத்திரர் வழிபாடு செய்யம் வன்னியர்(பள்ளி)  தர்மபுரி,சேலம் மாவட்டங்களில் காணப்படுகின்றனர்.

குறும்பர் முல்லை நிலத்தில் வாழ்ந்த குடி மக்கள் ஆவர்.ஆதனால் காடவர் குறும்பர் என்று கூறுவர்தொண்டை மண்டலமே குரும்பர் நாடு என்ற அழைக்கப்பட்டுள்ள்து. பின்பு.கார்வேள் என்ற கன்னட நாட்டை சேர்ந்த வெள்ளாளரால் வெல்லப்பட்டு அதிகாரத்தை இழந்தனர்.

காடவ குறும்பர்——>வனப்பள்ளி—–>பள்ளி——>வனயர்————>வன்யர்—–>வன்னியர்

காடவர் என்ற காரண பெயர்தான் வனயரகி பின்பு வன்னியர் என்று திரிந்துள்ளது.

எகிப்திய குரும்ப ஆடு மேக்கும் மன்னர்கள் தான் வன்னியர்(பள்ளி)

வன்னியர்(பள்ளி) தம்மை எகிப்திய குறும்ப ஆடு மாடு மேய்க்கும் மன்னர்கள் தான் பள்ளிகள் என வன்னியர் குல நூலில் குறிப்பிட்டுள்ள தாக எட்கர் தர்ஸ்டன் தம் நூலில் கூறுகிறார். இதில் இருந்து குறும்பர்கள் தான் வன்னியர்(பள்ளி) ஆகும்

that the Pallis (Pullies or Vanniar) of the south are descendants of the fire races (Agnikulas) of native to pretend show the Kshatriyas, and that the

Tamil Pullies (palli)were at one time the shepherd kings of Egypt.”

At the time of the census, 1871, a petition was submitted to Government by representatives of the caste, praying that they might be and twenty years later, in connection with the census, 1891, a book entitled Vannikula Vilakkam a treatise on the Vanniya caste, was compiled classified as Kshatriyas, [PALLI OR VANNIYA BY CASTE AND TRIBES OF EDGAR THURSTON] ‘ ‘ . The specification by Ptolemy of the inhabitants of this part of the Peninsula as a Nomadic tribe seems also to indicate the existence of the Kurumbas, ps an independant people in hia day^ for the colonists whose descendants still occu- py the country are Vellalas an agricultural not a pastoral people. It is therefore probable that this transaction belongs to a more modern date^ and that the Tonda country was not settled untill after the separation of the Chola from the Pandyan principality.

எனவே, கேசவன்.கி.பி. 1500 வரை வரலாற்று ரீதியாகத்  கி.பி. 9 ஆம் நூற்றாண்டின் இறுதியில் தொண்டை மண்டலத்தை வேளாளர்கள் தாக்கி அங்கே குடியமர்ந்த போது பல்லவர்~ களை ஒடுக்கினர். அந்நேரத்தில் வேளாளர்களின் மேலாதிக்கத்தை ஏற்றுக்கொண்ட உயர்வகுப்புப் பல்லவர்கள் சோழர் படையில் சேர்ந்து படையாச்சி என்றழைக்கப் பட்டனர் என்றும், தாழ்நிலைப் பல்லவர்கள் அடிமையாக மாறி உருமாறினர் என்றும் இவர் கருத்துத் தெரிவிக்கிறார். ஆனால்  இது உணமையாக தோன்ற வில்லை.

சூத்திர சாதியினர்

KURUBAS

The Pallavas are believed to be identical with the Kurumbas, of whom the Kurumbar of the Tamil country and the Kurubas of the Kanarese districts and of the Mysore State may be taken as the living representatives. The kings of the Vijayanagara dynasty are also supposed to have been Kurubas. According to this school, the Pallavas were a northern tribe of Parthian origin constituting a clan of the nomads having come to India from Persia. Unable to settle down in northern India they continued their movements southward until they reached Kanchipuram. Parthians seems to be the Pardhis of North India, who are related to Kakatiya Erukalas. The Pardhis and Kuruvas are also one and the same people.

இக்குலத்தவர்கள் 16ஆம் நூற்றாண்டுக்குப் பிறகு பொதுவாக வன்னியர்கள் என்ற சாதிப் பெயரால் அழைக்கப்படலாயினர்.

இவர்களுக்கும் வன்னியர் என்ற சாதிப்பட்டம் புனையும் கள்ளர் குலப் பிரிவினருக்கும் அதுவரை தொடர்பு ஏதுமில்லை.

ஆனால் ஜாதி வகைப்படுத்தலின் போது வன்னியப் பட்டம் கொண்ட சிலரும் வன்னிய ஜாதியாக அடையாளப்படுத்தப் பட்டுள்ளனர்.பட்டத்திற்கும் சாதிக்கும் உள்ள வித்தியாசம் புரியாமலே இவ்விதம் நடந்துள்ளது.அதனால் தான் கள்ளர்களின் பட்டங்கள் வன்னியர் குலமாக தற்போது உள்ளவர்களிலும் காணப்படும்.

திருநெல்வேலியில் 20-ஆம் நூற்றாண்டில் எடுத்த சாதிக் கனக்கெடுப்பில் வெள்ளாளர் (அ) பிள்ளை 33,975

வன்னியர் (அ) மறவர் 47,945 சாணார் 13,313 கோனார் 12,395 பிராமின் 10,791 பறையர் 13,456 என கனக்கெடுத்துள்ளனர்.

திருநெல்வேலி ஜாதிய அறிக்கை இது.இதில் “பள்ளி” என்னும் சாதி கிடையாது.

பேராசையே பெரும் காரணம்:

பிப்ரவரி குமுதம் ரிபோர்டர் இதழலில் வன்னிய சமூதாயத்தை சேர்ந்தவர்கள் சிவகிரி எங்கள் ஜமீன்,,அதற்கு நாங்களே உரியவர்கள் என தெரிவித்தனர்.ஏன்? அவர்கள் தம்மையே சேர,சோழ,பாண்டிய,பல்லவ,சாளுக்கிய ,வேளிர்,ராஷ்டிரகூட இனமாக அடையாளப் படுத்த விரும்புகின்றர். அதற்கு வன்னியர் என பெயரில் வரும் அனைவரையும் கோருகின்றனர்.அவர்கள் சிவகிரியையும் தம்முடையது என கோரும் ஆதாரங்களில் ஒன்று “வன்னியர்” என்ற பெயரையும்

மற்றொன்று பழனியில்

///உள்ள ஸ்ரீ வீரமாத்தி ஸ்ரீ அங்காளம்மன் கோயிலில் கிடைத்த அறிக்கை மடல் 1944 ஆம் ஆண்டு மே திங்கள் முத்திரையிட பெற்றுள்ளது . இவ்வறிக்கை ஏட்டில் ரிஷிஸ்வர சுவாமி என்றும் லோக குருசாமி என்றும் குறிப்பிடப்படுபவர் வன்னிய குல மரபினர் என்பதை அறிக என்று ‘வன்னிய பெருங்குலம்’ நூலாசிரியர் திரு. காவிரி நாடன், அந்நூலில் பக்கம் 36 இல் குறிப்பிட்டிருக்கிறார்.

அவரின் கூற்று:

அங்கு கிடைத்த இரண்டாம் அறிக்கையில் அந்த “லோக குருசாமி” 255 வது பட்டம் ஏற்றவர் என்றும் சிவகிரி பிரம்ம க்ஷத்ரிய அக்கினி வன்னிய ராஜ அரசர் பழனிமலை பரம அருட்… மகா பண்டார சந்நிதானம் சிவகிரி பாண்டிய மகாராஜா என்று பரம்பரை பட்டத்து பெயர் வைத்து விளங்கி வருகின்ற சிவபெருமான் திருவருள் பழனிமலை தண்டாயுதபாணி பொன்னம்பல கைலாச போகனாத ஞானதேசிகேஸ்வர மஹா மஹேஸ்வர சுவாமி அவர்களாகிய 133 வயதுள்ள மஹா கையிலாச தெண்டாயுத பாணி மஹா ராஜா குரு மஹா ராஜ ரிஷிஸ்வர சுவாமி அவர்கள் என்று எழுதப்பட்டிருகிறது.

இவ்வறிக்கை மூலம் கி பி 1944 வாக்கில் சிவகிரி சமீனை சேர்ந்த அரச பரம்பரையினரில் ஒருவர் பழனிமலை மஹா பண்டார சந்நிதானமாக பட்டம் ஏற்றிருக்கிறார் என்று தெரிகிறது.

இவ்வாறு கூறிக்கொள்கிறார்.////////

இதில் இருந்து இது எவ்வளவு பிழையான புரிதல் என்று தெரிகிறது. இதில் சிவகிரி ஜமீனை சேர்ந்த மஹாராஜ ஒருவர் பண்டாரமாக உள்ளார் என கூறுகிறார்கள்.முதலில் அவர்களுக்கு பழனி மலை வரலாறு தெரியாது என்று தோன்றுகிறது.இடும்பன் என்ற அரக்கன் 2 மலைகளை காவடியாக கொண்டு வருகையில் முருகன் அவனை வென்று பழனி மலை காவலனாக்கினர்.கோயில் இருக்கும் இடம் பழனிமலை(சிவகிரி) அருகில் இருக்கும் இடும்பமலை(சக்திகிரி).பழனிமலை குன்றின் பழைய பெயர்(சிவகிரி)-பழனி தல வரலாறு.அவர் பள்ளி இனத்தவர்தான் ஆனால் சிவகிரி ஜமீன் அல்ல பொதுவாக பண்டார மடாதிபதிகளும்,ஆதீன சாமியார்களும் மஹராஜ் என்ற பட்டம் போட்டு கொள்வார்கள் அதற்காக அவர்கள் ராஜா அல்ல.இதில் வரும் உண்மை செய்தி இது தான் ” பழனி மலைகுன்று(சிவகிரி) பண்டாரம்” ஆவர்.(சிவகிரி -பழனிமலை குன்று)மற்றபடி சிவகிரி ஜமீந்தாருக்கும் அவருக்கும் எந்த தொடர்பும் கிடையது /////// “இன்னொரு ஆதாரத்தில் கருப்பாயி நாச்சியார் என்ற “சின்ன தம்பியார்” மேல அரண்மனை சத்திரிய வன்னியர் அரன்மனையை சார்ந்தது”. இதுவும் தவ்றுதலான புரிதலே.அரண்மனை “சத்திரிய வன்னியர்” என்பது “வன்னியனார்”(அ)”வன்னிய ராஜன்” என்ற பட்டத்தை குறிக்குமே தவிர “பள்ளி” (அ) “வன்னிய குல சத்திரியர்” என்ற இனத்தை குறிக்காது.பொதுவாக அரண்மனையோ நிலமோ பாண்டியனை சார்ந்தது,தொண்டைமானை சார்ந்தது,சேதுபதியை சார்ந்தது என்று பட்டதை குறித்துவருமே தவிர

சமூகத்தை குறிக்காது

இச்சர்சைக்கு முற்றுபுள்ளி வைத்துள்ளார் தற்போதைய வாரிசு ஜெகன்நாதன் அவர் குமுதம் ரிப்போர்டர்-ல் அளித்துள்ள பேட்டியில் “எங்களை வன்னிய குல சத்திரியர்” என்கிறனர்.அது மறவரில் ஒரு பிரிவே அன்றி வேறு(பள்ளி) இனம் அல்ல. எங்கள் சம்பந்தம் அனைத்தும் மறவர் ஜமீன்களுடன் தான்.சில ஜமீந்தார்களுக்கு வாரிசு இல்லாத காரணத்தால் வன்னியர் ஜமீன் என்று கூறுகின்றனர்.உண்மை என்னவெனில் முக்குலத்தோர் இனத்தில் தற்போது தான் 20 வருடமாக ஒருவருக்குள் ஒருவர் சம்பந்தம் செய்கின்றனர்.அதற்கு முன்பு முக்குலத்தோரிலே கிடையாது எனில் மறவர் சமூகம் எனில் இது எப்போதுமே கிடையாது.மறவர்க் குலத்தில் 38 பிரிவுகள் உண்டு அவை.

நாட்டார், மணியக்காரர், காரணர், தோலர், பண்டாரம், வேடங்கொண்டான், செட்டி, குறிச்சி, வேம்பன் கோட்டை, செம்பிநாடு குன்றமான்நாடு, இராமன்நாடு, ஆப்பன் நாடு,

கொங்கணர், அம்பொனேரி, வல்லம்பர், இவுளி, வன்னியர், கிள்ளை, ஏரியூர்,

வெட்சி, கரந்தை, வஞ்சி, உழிகை, தும்பை, உப்புக்காடு, அஞ்சு கொடுத்தது,

கொண்டையன் கோட்டை, தொண்டை நாடு, சிறுதாலி, பெருந்தாலி, பாசி கட்டி, கன்னி கட்டி, கயிறு கட்டி, அணி நிலக்கோட்டை.அதுவும் ஜமீனில் வேறு சமூகம் எனில் நினைத்து கூட பார்க்க முடியாது.

ஆனால் தென் பாளையப்பட்டு(மறவர்கள்) அனைவரும் உறவினர்களே. தற்போதைய வாரிசு ஜெகன்நாதன் அவர்களின் தாயார்(சிங்கம்பட்டி ஜமீனை சார்ந்தவர்). இவர் அண்ணியாரும் தற்போதைய ய ராணியாரான பாலகுமாரி நாச்சியார் சேத்தூர் ஜமீனை சார்ந்தவர். தற்போதைய தலைவன் கோட்டை,சேத்தூர் ராணியார்கள்(சிவகிரி ஜமீனை சார்ந்தவர்களாவர்).

வன்னியர் சங்கத்தினர் “வன்னியர்” என்ற பெயரை மட்டும் வைத்து வன்னியப்பட்டம் உள்ள மன்னர்களை,ஜாதிகளை எல்லாம் உரிமை கோருகிறார்களே இவர்கள் வன்னியரில் நாங்கள் மட்டுமே “பள்ளி என்றும் படையாட்சி” என்று கூறிக்கொள்ளட்டும் பார்ப்போம்.

இன்னும் எத்தனை நாள் இந்த போர்வையில் மறவர்களின் வரலாறையும் சொந்தம் கொண்டாட முடியும்!.

பள்ளி என்றால் குறும்பர் படையாட்சி என்றால் ஒரிசா “பட்நாயக்” என அர்த்தம் இன்னும் சொல்லபோனால் இவர்களுக்கு வன்னியர் என்பது சாதி பெயர் தானே ஒழிய வன்னியர் என்ற பட்டம் இவர்களுக்கே கிடையாது.இவர்களே தங்கர்,படையாட்சி,கவுண்டர்,கவுடா,நாயக்கர்,ரெட்டி,ராவ்,.. என்றுதான் பட்டம் சூடுகிறார்கள்.

இறுதியாக காட்டும் ஆதாரம் ஒன்றே ஒன்று.

(History of tirunelveli by robert caldwell bishop) Most Marava palaiyams were contiguous units at the foot of the Eastern Ghats and were collectively known as the Western Bloc. Nayaka palaiyams (mostly in eastern Tirunelveli, Dindigul, and Coimbatore) constituted the so-called Eastern Bloc.only Marava and Nayaka have the paliyams in Tirunelveli. Each polegar “concentrated in his hands the exchange of money and the traffic of every merchantable article that was produced within the pollam’s limits. He also possessed the sole exercise of judicial authority, both civil and criminal, in the fullest extent.” “In areas of Marava and Vaduga [Telegu-speakers] settlement concentration, specific chiefs were recognized as the official heads of territorial segments of the [Nayaka] state. The largest of these palaiyakkarar domains … were those of Ettaiyapuram, Chokkampatti, Panchalamkurichi and Sivagiri.”

மறவர்கள் பாளையங்கள் அனைத்தும் நெல்லை மேற்கு தொடர்ச்சி மழைத் தொடரில் அமைக்கப்பட்டு இருக்கும் இதன் பெயர்(மேகாடு).நாயக்கர் பாளயங்கள் அனைத்தும் நெல்லை கிழக்கில் அமைக்கப்பட்டு இருக்கும் இதன் பெயர்(கீகாடு).மறவரையும் நாயக்கரையும் தவிர வேறு யாருக்கும் மதுரைக்கு தெற்கு பகுதியிலிருந்து கன்னியாகுமரி வரை யாருக்கும் பாளையங்கள் கிடையாது.

இதற்காக இவர்கள் எடுக்கும் முயற்சிகள் என்ன? 

முதலில் இவர்கள் எந்த வகையில் அக்னி குலம். அக்னி வீரபத்திரரை வணங்கினால் அக்னி குல சத்திரியரா?. காலத்துக்கு ஏற்றார் போல் ஜாதிப்பெயரை குறும்பர்———->பள்ளி—––>வன்யர்——>வன்னிய குல சத்திரியர் என்று மாற்றி கொண்டே செல்லும் இவர்கள் தைரியமாய் பள்ளி என்று கூற முடியுமா? ஏதோ வட தமிழகத்தில் உட்கார்ந்து கொண்டு மூவேந்தரையும்,பல்லவரையும்,சளுக்கரையும் ,வேளிர்களையும் கோர முடியும்.பல்லவரை கோர பள்ளி என்ற இனப்பெயரையும்,சோழரைக் கோர சோழனார் எனக் கூறியும்[உண்மையில் சோழனாரே தம்மை இரண்யவர்ம பல்லவன் வழியினர் என்று கூறுகிறார்.] ஆனால் அவரை ராஜராஜனின் வாரிசு ஆக்குகிறிர்கள்.அப்போது 2 இன்ஷியலா.இதற்கு ஆதாரங்களுக்கு நடன காசிநாதன் போன்ற வன்னிய ஜாதியை சார்ந்த ஆய்வாளர்கள் வேறு.அவர் வன்னியர் வரலாறு மட்டுமே எழுது கிறார்.அவரை வைத்து வன்னியர் என்று பெயரில் வரும் அனைத்தையும் உரிமை கோர அனுப்புகிறிர். பாண்டியனுக்கும் வன்னியனுக்கும் என்ன சம்பந்தம் 72 பாளையப்பட்டுகளில் அரியலுரை தவிர (அவர்களும் பள்ளி இன வன்னியரா?அல்லது வன்னிய பட்டம் கொண்டவரா? என்று ஆராய வேண்டியுள்ளது).எந்த பள்ளி இனத்தவர் ஜமீனாவது உள்ளதா?. அது எப்படி ஒரே இனம் சேர,சோழ பாண்டிய,பல்லவ,சளுக்க,ராஷ்டிரகூட இனமாக ஆகும்?. அது வன்னியர் பட்டம் உள்ள மறவர் இனம் என்று எத்தனை தடவை சொல்வது? எங்களால் ஆயிரம் ஆதாரம் காட்ட இயலும் இதற்கப்புறமாவது திருந்துங்கள்.

This entry was posted in சிவகிரி ஜமீன் and tagged , , . Bookmark the permalink.

One Response to சிவகிரி ஜமீனை வன்னியர்(பள்ளி) இனத்தவர்கள் கோர காரணம் என்ன?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *