கள்ளர் இனம்தன்னை பற்றி: சிலபகுதிகள்:

 

‘… கள்ளர் என்றொரு இனமுண்டு, அதற்கென்று ஒரு தனித்தன்மை உண்டு, நன்றி மறவாதவர்கள். கொடுத்த வாக்கினை காப்பாற்றுபவர்கள். முதன்முதலில் தென்னிந்தியாவில் குடியேறிய பழங்குடியினர். சோழ மன்னர்கள் வழிவந்தோர். எனவே கள்ளர் இனத்தவர் ஆட்சி பொறுப்பிலும், போர்ப்படையிளும், சோழ மன்னர்களுக்கு பணிபுரிந்தவர்கள்.காலப்போக்கில் ஆட்சி மாறி-

முகமதியர் ஆட்சி,
விஜய நகர ஆட்சி,
பாமினி சுல்தான் ஆட்சி,
முகலாயர் ஆட்சி, மராட்டியர் ஆட்சி,
நாயக்கர் ஆட்சி,
தக்காண சுல்தான் ஆட்சி கடைசியாக
ஆங்கிலேயர் ஆட்சி என மாறி மாறி ஆட்சிகள் ஏற்பட்டதினால்,

இவர்கள் தங்கள் தொழிலாகிய நிர்வாகம், போர்படை தொழில் முதலிய தொழில் நிலைகளை இழக்கும்படிநேறிட்டது. மற்ற வகைத் தொழில் முறையை அறியாததால், வாழ்கையில் பல எதிர்மாறான நிலையை சந்திக்கும் சூழ்நிலை ஏற்பட்டது. வளமான நீர் வசதியுள்ள பகுதிகளில் வாழ்ந்தோர் விவசாயத்தை ேற்கொண்டனர். மற்ற வறட்சியான பகுதிகளில் வாழ்ந்தோர் சூழ்நிலைக்கு ஏற்ப தங்கள் வாழ்க்கை நிலையை மாற்றிக் கொண்டனர்.

ஆங்கிலேயர்களையும் அவர்களது ஆட்சியையும் எதிர்த்து சுதந்திரத்திற்காக போரிட்டு, தென்னிந்திய அரசர்கள் தங்களது ஆட்சியை இழந்ததினால், தங்களது படைகளை கலைத்து விட்டனர். தென்னிந்திய அரசர்களின் படையில் போர் வீரர்களாகவும், படை தளபதிகளாகவும், பணிபுரிந்த கள்ளர் குலத்தினர் தங்கள் தொழிலை இழந்தனர். போரையே தங்கள் தொழிலாக கொண்ட கள்ளர் குல மக்கள் தங்கள் தொழிலை இழந்ததினால் பிழைக்க வழியின்றி, வயிற்று பிழைப்பிற்காக பலவிதமானதிருட்டு, கொலை, கொள்ளை முதலிய சமுதாய விரோத செயல்களில் ஈடுபட்டு, நெறிமுறை அற்ற வாழ்க்கையை மேற்கொள்ள நேரிட்டு, குற்றப்பரம்பரை சட்டத் (கைரேகை சட்டம்) தினால் கடுமையாக தண்டிக்கப்பட்டனர்.

இவற்றில் மிகக் கடுமையானவை குற்றப்பரம்பரை சட்டம் 1911 (Criminal Tribes Act, 1911). குற்றப்பரம்பரை சட்டம், (திருத்தியது), 1924(Criminal Tribes Act, Amended, 1924) 1911 வரை ஒன்றுபட்ட சென்னை ராஜதானியில் (Composite Madras presidency – parts of Kerala, Karanataka, Andhra and the present Tamil Nadu) இருந்து அனைத்து கள்ளர் குலத்தவர் (ஜாதி) ஒன்றாக கருதப்பட்டு, குற்றப்பரம்பரை சட்டத்திற்கு உட்படுத்தப்பட்டனர்.

தஞ்சாவூர் மாவட்டம், அரித்துவாரமங்கலம் என்ற ஊரில் தோன்றிய தமிழ்ப்பேரறிஞரும், கொடை வள்ளலும், மூதறிஞருமான மதிப்பிற்குரிய திரு. V. கோபாலசாமி ரெகுநாத ராஜாளியார் தன் குல மக்கள் குற்றப்பரம்பரை சட்டம், 1911 ஆல் வார்த்தையால் விவரிக்க முடியாத துன்பத்தை அனுபவித்து வருவதைக் கண்டு கொதித்தெழுந்து, 1911ல் டிசம்பர் திங்களில் மேதகு ஐந்தாம் ஜியார்ஜ் மன்னர் இந்தியாவில் பேரரசராக புது டில்லியில் முடி சூட்டிக் கொள்ள வந்தபொழுது ஒரு மகஜரை அளித்து ஒன்றுபட்ட தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் இருந்த கள்ளர்களுக்கு குற்றப்பரம்பரை சட்டத்திலிருந்து தீவிர நடவடிக்கை தளர்த்தப்பட்டது.

இம்மாவட்டங்களில் இருந்த கள்ளர்களே குற்றப்பரம்பரை சட்டத்திலிருந்து விடுபட்ட சீர் பழங்குடியினர் Denotified Kallar Tribe என்பதற்கு பதிலாக ஈசநாட்டுக் கள்ளர்கள் என்று (Esanattu Kallars) அழைக்கப்பட்டனர். அரசு ஆவணங்களிலும் அவ்வாறே ஈசநாட்டு கள்ளர்கள் என்றே குறிக்கப்பட்டனர். தஞ்சை, மதுரை மாவட்டங்களில், ஆங்கிலேயர் ஆட்சிகாலத்தில் 1930 வரை CT Act.   பிரகாரம் கள்ளர் இன மக்களை கைது செய்து சித்ரவதைக்கு உள்ளாகினார்கள் என்று அப்பொழுது இருந்த மாவட்ட ஆட்சியர் Block Burn என்பவர் குறிப்பிட்டுள்ளார். 1939 வரை கள்ளர் சீரமைப்பு பள்ளிகள் தஞ்சை, திருச்சி, மாவட்டங்களில் செயல்பட்டு வந்திருக்கிறது.

எஞ்சியிருந்த மாவட்டங்களில் இருந்த கள்ளர்கள் 15.08.1947 ல் இந்தியா சுதந்திரம் அடைந்தபின்னர் ஒரு பெரிய போராட்டத்திற்கு பிறகு குற்றப்பரம்பரை சட்டப் (Criminal Tribes Act, 1911) பிடியிலிருந்து படிப்படியாக விடுவிக்கப்பட்டனர். இவர்கள் சீர்பழங்குடி கள்ளர் (Denotified Kallar Tribe) என்று அழைக்கப்பட்டனர்.

இவ்வாறு இரத்த உறவு முறைகொண்ட (Kinship) கள்ளர் குல மக்கள் ஈசநாட்டுகள்ளர்கள் (Esanattu) என்றும் சீர்பழங்குடி கள்ளர் (Denotified Kallar Tribe) என்று இருபிரிவினர்களாக்கப்பட்டானர். பெரும்பான்மையான விபரமறியாதோறும், தங்களை மேட்டுகுடி மக்கள் (Upper Caste) என்றும் ஜாதிபாகுபாட்டில் மற்ற இனத்தவர்கள் நடுவில் காட்டிகொண்ட ஒரு சிலர் சூழ்ச்சியினாலும், இப்பெயர்கள் அரசு ஆவணங்களில் நிலைபெற்றுவிட்டன.

மேலும் தமிழ்நாடு அரசால் நியமிக்கப்பட்ட முதலாவது (1972) மற்றும் இரண்டாவது (1985) பிற்படுத்தப்பட்டோர் ஆணையங்களால் (First and Second Backward Classes Commissions) கள்ளர் இனம் G.O.No.437 S.W.D. Dated 15.05.1972, G.O.No.1564,1566, 1567 Dated 30.07.1985, G.O.No.242 B.C.W. N.M.P and S.W.D Dated 28.03.1989 -ன்படி கீழ்க்கண்டவாறு, ஒன்றாக இருந்த , கள்ளர் ஜாதியினர் சிதறடிக்கப்பட்டனர்.

ஈசநாட்டு கள்ளர்

கள்ளர் குலத் தொண்டைமான்

பிற்பட்ட வகுப்பினர்

(Backward Class)

தொண்டமான்

மிகவும் பிற்பட்ட வகுப்பினர்

(Most Backward Class)

கந்தர்வகோட்டை கள்ளர்
கூத்தபார் கள்ளர்
(கூத்தபால் கள்ளர் அல்ல)

பெரியசூரியூர் கள்ளர் பிறமலைக் கள்ளர்

சீர் மரபினர்

(Denotified Communities)ெட்டில்மெண்ட் கள்ளர்கள்

எந்தபிரிவிலும் சேர்க்கபடாதவர்கள்

செட்டில்மென்ட் கள்ளர்கள் நான்குவகையாகப் பிரிக்கபட்டுள்ளனர்.

i. அசீஸ் நகர் செட்டில்மெண்ட் (Aziz Nagar Settlement) விழுப்புரம் மாவட்டம்.

ii. பம்மல் செட்டில்மெண்ட் (Pammal Settlement)பல்லாவரம், தாம்பரம் வட்டம், காஞ்சிபுரம் மாவட்டம், இது பசும்பொன் நகர் செட்டில்மெண்ட் என்று இப்பொழுது அழைக்கப்படுகிறது.

iii. பிரிஸ்லி நகர் செட்டில்மெண்ட் (Brezlee Nagar Settlement)பெரம்பூர், ஓட்டேரி, சென்னை மாவட்டம்.

iv. அந்தமான் செட்டில்மெண்ட் (Andaman Settlement)
இது மத்திய அரசு நிர்வாகத்தில் உள்ளது.
இவர்கள் எந்த தொகுப்பிலும் வராமல் நட்டாற்றில் விடப்பட்டுள்ளனர்.

4. 1979 -ல் சீர் பழங்குடியினர் (Denotified Tribe) என்று இருந்த கள்ளர் வகுப்பினரை G.O.No.1310 S.W.D. Dated 30.07.1979 -ன் படி சீர்மரபினர் (Denotified Community) என்று மத்திய அரசின் பரிந்துரைப்படி தமிழக அரசு மாற்றிவிட்டது.
இவையாவும் கள்ளர் ஜாதி மக்களை ஜாதி மக்களை கலந்து ஆலோசிக்காமல் இழைக்கப்பட்ட அநீதியாகும்.

5. கள்ளர் ஜாதியினரை திருத்தி நல்வழிப்படுத்தி முன்னேற்றம் அடையச் செய்ய வேண்டும் என ஆங்கில அரசு இந்திய சுதந்திரத்துக்கு முன்- இந்திய அரசுச்சட்டம், 1919 (Government of india Act, 1919) -ன்படி கள்ளர் சீர்திருத்த திட்டத்தை (Kallar Reclamation Scheme, 1920)-ல் அமல்படுத்தியது அதன்படி தஞ்சாவூரிலிருந்து ஆரம்பித்து , ஆழிவாய்க்கால், ஒரத்தநாடு, பாப்பாநாடு, கோணக நாடு, (கோனூர் நாடு) , ஆதனகோட்டை, கந்தர்வகோட்டை பகுதிகளின் வழியே புதுக்கோட்டை, விராலிமலை (புதுகை மாவட்டம்) சென்று கொட்டாம்பட்டி, நத்தம், சிறுமலை, செம்பட்டி, திண்டுக்கல், அழகர் கோவில், அலங்காநல்லூர், நிலக்கோட்டை, சோழவந்தான் மற்றும் உசிலம்பட்டி, வாடிபட்டி, திருமங்கலம், ஆண்டிபட்டி, சேடப்பட்டி, கம்பம், உத்தமபாளையம் ஆகிய பிரமலை கள்ளர் பகுதிகள் மற்றும் திருநெல்வேலி பகுதிகளில் அமுல்படுத்தப்பட்டது. காலபோக்கில் கள்ளர் இனத்தில் வசதிபடைத்தஒரு சில குடும்பங்கள், மற்ற பெரும்பாலான கள்ளர் இன ஏழை மக்களை தங்களின் விவசாய கூலியாகவும், கொத்தடிமைகளாகவும் வைத்திருக்க எண்ணி, தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கள்ளர் சீர்திருத்த பள்ளிகளையும் கடன் வழங்கும் சங்கங்களையும், மாணவ விடுதிகளையும், மாவட்ட உயர்நிலை பள்ளிகளுடன் (District Board High Schools) இணைக்க ஏற்பாடு செய்தனர். பிறகு அவைகள் அரசினர் உயர்நிலைபள்ளிகளாக (Goverment High Schools) மாற்றப்பட்டன. எஞ்சியிருப்பது தஞ்சாவூரில் உள்ள செல்வராஜ் உயர்நிலைப்பள்ளி (Selvaraj High School) கணபதி நகர் மட்டுமே. இதுவும் இப்பொழுது தனியார் பள்ளியாக மாறிவிட்டது. இந்த வசதிபடைத்த ஒரு சில கள்ளர் நிலச்சுவான்தார் குடும்பங்களின் இவ்வகை செயல்களினால் பெரும்பாலான கிராமங்களில் உள்ள ஏழை கள்ளர்கள் சுதந்திரத்துக்கு முன்பும், பின்னும் அடையக்குடிய அரசு கல்வி சலுகைகளையும், மற்ற முன்னேற்ற சலுகைகளையும் இழக்க நேரிட்டது. ஆனால் (Kallar Reclamation Scheme, 1920) -ன் படி ஆரம்பிக்கப்பட்ட பள்ளிகள், பிரமலைப்பகுதிகளான மதுரை, தேனி, திண்டுக்கல், மாவட்டங்களில் உள்ள உசிலம்பட்டி, ஆண்டிப்பட்டி, சேடப்பட்டி, வத்தலக்குண்டு பகுதிகளிலும் உள்ளன. அவை இன்று அரசின் உதவியினை பெறுகின்றன….

மேற்படி கூறுபவர்:

டாக்டர் அ. சீனிவாசன் வன்னியர் M.D.D.C.H
தலைவர்
தமிழ்நாடு கள்ளர் சங்கம்.

ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக ஆய்வை செய்தவரின் பெயர்: டாக்டர் பாண்டியன். அதை பற்றி, பிறகு தான் எழுதவேண்டும். இதே மாதிரி பிரமலை கள்ளர்களின் மேன்மை கலாச்சாரங்களை பற்றி ஒரு ஸ்வீடன் நாட்டு ஆய்வாளர் எழுதிய ஆய்வு நூல் ஒன்று படிக்கக் கிடைத்தது. தற்பொழுது காணவில்லை.

நான் சிறு வயதில் கவனித்து, கணித்து எழுதியதற்கும், அந்த இனத்தலைவர் ஒருவர் இன்று சொல்வதற்கும் ஒப்புமை உள்ளதாக எனக்கு தென்படுகிறது. அப்படியானால், படிப்பினை என்னவென்று நீங்களே சொல்லலாம்.

இன்னம்பூரான்

12 10 2011

உசாத்துணை:

http://www.kallarsangam.com/history.html

நன்றி – மின்தமிழ் குழுமத்திற்காக ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி திரு இன்னம்பூரான் அவர்கள் எழுதியது

This entry was posted in தேவர் and tagged , , . Bookmark the permalink.

One Response to கள்ளர் இனம்தன்னை பற்றி: சிலபகுதிகள்:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *