அரிய மறவர் கல்வெட்டுகள் சில….

அரிய மறவர் கல்வெட்டுகள் சில….

எண்: 1972/16
ஆண்டு: 8- ஆம் நூற்றாண்டு
அரசு மண்ணன் : கொங்கணி சிவமாறன்
இடம்: தர்மபுரி ஊத்தங்கரை

செய்தி:
மாவலி வாணராயரான மறவனார் சேவகன்
கமியதழுமன் போரில் இறந்தது.

கல்வெட்டு:
சிவமாறவர்மருக்கு யாண்டு
மாவலி வாணராயர் கங்கநாடாள
இந்திரன் தகடூர் மேல் வந்து மறவனார்
சேவகன் ………



எண்: 41
ஆண்டு: 13- ஆம் நூற்றாண்டு
அரசு மண்ணன் : பாண்டியன்
இடம்: ஆறகளூர் சேலம்.

செய்தி:
சோழீஸ்வரமுடையார் சிவன் கோவிலுக்கு மறவன் ஏந்தல் என்னும் ஊரை தானம்…
கல்வெட்டு:
ஸ்வஸ்தி ஸ்ரீ இலாடராயர்…
..கீழ்மகனூரும் மறவனேந்தலும்…….

 

கல்வெட்டின் பாடம்:
1     ஸ்வஸ்திஸ்ரீ  கோவிராஜராஜ
2     கேசரி பன்மற்கி யாண்டு 7 ஆவ
3     து வாணகோப்பாடிப் பெண்
4     ணைத் தென்கரை இராஜகண்ட பு
5     ரத்தில் காந நங்கைய்க்கு ஸ்ரீமன்மு
6     ம்முடிச் சோழ வாணகோவரை
7     யனாகிய தொங்கல மறவன் வை

8    ய்த்த திருநொந்தா விளக்கு ஒன்று
9    ஒன்றிநால் ஆடு … இது  பந்மா
10                          ஹேச்வர ரக்ஷை

குறிப்பு:   சிவப்பு எழுத்துகள் கிரந்தம்.

விளக்கம்:    செய்திக்கட்டுரையில், அரசனின் ஆட்சியாண்டு குறிப்பிடப்பெறவில்லை. ஆனால், இரண்டாம் வரியில்,  அரசனின் ஆட்சியாண்டு குறிப்பிடப்பெறும் பகுதியில்,   ஏழாம் ஆண்டைக் குறிக்கும் …எண் குறியீடு  “எ”   என்பது தெளிவாகப் புலப்படுகிறது.  எனவே இக்கல்வெட்டின் காலம் கி.பி. 992 எனலாம்.  கொற்றவையைக் குறிக்கும் …  “காந நங்கை”  என்னும் சொல்  கல்வெட்டுகளில் மிகுந்த புழக்கத்தில் இல்லை எனத்தெரிகிறது. “காடு கிழாள்”   என்னும் சொல்லுக்கு ஒப்பான ஒரு சொல்லாக இதைக் கருதலாம்.  ”நங்கை”  என்னும் சொல் இக்கல்வெட்டில் சொல்லின் இறுதியில் கூடுதலாக “ய்”  என்னும் மெய் சேர்ந்து “நங்கைய்”  என எழுதப்பட்டுள்ளது. இந்த எழுத்து முறையைத் தமிழ் பிராமிக் கல்வெட்டுகளில் காணலாம். அவற்றில் (பிராமிக் கல்வெட்டுகளில்), “ப(ள்)ளிய்” என்றும், “கணிய்” என்றும்  ”அந்தைய்”  என்றும்  பல இடங்களில் வருவதைக் காணலாம்.  5-ஆவது வரியின் இறுதியிலும், 6-ஆவது வரியின் தொடக்கத்திலும் சேர்ந்து “மும்முடிச்சோழன்”  என்னும் சிறப்புப் பெயர் காணப்படுகிறது.  இப்பெயருக்கு முன்னொட்டாக  “ஸ்ரீமன்”  என்னும் வடசொல் கிரந்தத்தில் எழுதப்பட்டுள்ளது வியப்புக்குரியது.  ஏனெனில், 10-நூற்றாண்டில் இராசராசன் காலத்துக் கல்வெட்டுகளில் “ஸ்ரீமன்”   என்னும் சொல் பயின்று வரக்காணோம்.  இச்சொல்,  விஜயநகரர், நாயக்கர்  காலத்துப் பயன்பாடு.  கொடையாகக் கொடுக்கப்பட்ட ஆடுகளின் எண்ணிக்கை 96 என்று செய்திக்கட்டுரை கூறுகிறது.

கல்வெட்டு:
வாண மன்னன் மறவன் வர்மனான வாணகோவரையன்

மறவர் பற்றிய குலோத்துங்கன் கல்வெட்டு:

மறவனேரி……

மறமாணிக்கர்…….

நன்றி:
தமிழ்நாடு கல்வெட்டு துறை

 

This entry was posted in கல்வெட்டு, மறவர். Bookmark the permalink.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *