பாவாணர் யார்?

தமிழகம் மட்டுமல்ல, தமிழுலகு போற்றும் நுண்மான் நுழை புலம் பெற்றவர் பாவாணர். தனித்தமிழ்   வேர்ச்சொற்களை அமைத்தவர். வித்தக விற்பண்ணர் . இன்றைய இருபதாம் நூற்றாண்டு தொல்காப்பியனார், மொழி ஞாயிறு என்று சிறப்பிக்கப் பெற்றவர். முழுப்பெயர் தேவநேயப் பாவாணர் என்பதாகும்.
தனித்தமிழ் இயக்கம் கண்ட மறைமலை அவர்கள் வரலாறு எழுதப்பட்டது. – “மறைமலை அடிகளார் வரலாறு” மகன் திருநாவுக்கரசு பக்.862 செய்தி.

அதில் அடிகளாருடன் தொடர்பு கொண்ட புலவர்களை எழுதிகின்ற பொழுது மொழி ஞாயிறு பாவாணர் பெயர் இடம் பெறுகிறது:-
“வித்துவான் தேவநேயப் பாவாணர் ஏன்.ஓ.எல். மொழித்துறை வாசகர், அண்ணாமலைப் பல்கலைக்கழகம்”
இவர் பழந்தமிழ் அரிசன மரபினர். திருநெல்வேலி சீமையில் கிருத்தவ சமயம் புக்கவர். வடசொற்கள், தமிழ்ச் சொற்கள் ஆராய்ச்சியால் மாற்றிய அறிஞர்….! அடிகள் பால் அளவிறந்த அன்பும், மதிப்பும் பூண்டவர்” என்று இருக்கிறார்.
சொல்லுகிறார் பாவாணர்:

“நான் சங்கர நயினார் கோயில் (முத்துச்சாமித் தேவர் மகன்) ஞான முத்தனுக்கும், பரிபூரணம் அம்மையாருக்கும் பத்தாம் மகவாகவும் நாலாம் மகனாகவும் 07.02.1902 அன்று வெள்ளி மாலை பிறந்தவன்.
சைவசித்தாந்தக் கழகம் ஆட்சியாளர் வ.சுப்பையா பிள்ளை அவர்களுக்குப் பாவாணர் 02.11.1960 ல் எழுதிய கடிதம். “என்னையும் கேளாது மடைத் திருநாவுக்கரசு என்னை அரிசன் என்று எழுதி இருக்கிறது, நான் புத்தகத்தைப் பாராததினால் இதுவரை தெரியவில்லை. திருநாவுக்கரசு மடைத்தனமாக எழுதினாலும், தாங்கள் எப்படி வெளியிடலாம்? நான் என்றேனும் எங்கேனும் என்னை அரிசன் என்று சொன்னது அல்லது எழுதியதுண்டா? – பாவாணர் கடிதங்கள் – சைவ சித்தாந்த நூற்பதிப்பு – ஒரு பகுதி (தொகுப்பு – இலக்கியச் செல்வர் இரா.இளங்குமரன்)
பாவாணர் மறுப்புரை:
சென்ற நூற்றாண்டில் நடுப்பகுதியில் கோவில்பட்டிக்கும் சங்கரன் கோவிலுக்கும் (சங்கரன் நயினார் கோயில்) இடையில் தூக்கக் (Storkes) என்ற மேனாட்டு கிருத்தவ குரவர் தொண்டாற்றி இருக்கிறார். அவர் வளமனைக் காவற்காரராக இருந்தவர் முத்துச்சாமித் தேவர். அவர் மனைவியார் வள்ளியம்மாள். அவ்விவிருவரையும் கிருத்துவராக்கி இருக்கின்றனர் அத்துரைமகனார். அவ்விருவருக்கும் பிறந்தவர் தான் என தந்தை.
என தந்தை பிறந்த சிறிது நாட்களில் பெற்றோர் இருவரும் இறந்துவிட்டார்கள். அத்துரையே எடுத்து வளர்த்து ஞானமுத்து தோக்கக் எனப் பெயரிடத் சொக்கம்மா என்ற பெண்ணை மரியாள் எனப் பெயர் மாற்றி உரிய பருவத்தில் மணமும் செய்து வைத்திருக்கிறார். அவ்வம்மையார் கூடி வாழாது ஈழத்திற்கு ஒடிவிட்டாள். உண்மைக் கிருத்துவரானதினால் கோவில்பட்டிப் பாண்டவர் மங்கலத்தில் ஓதுவராக (உபதேசியாக)  இருந்த குருபாதம் என்பவற்றின் மகளாகிய என அன்னையாரைப், படிப்பு பற்றியும் குல வேற்றுமை காட்டாமை பொருட்டும் மணந்து கொண்டார்.
7ம்  எட்வர்டு இளவரசராக இருந்த காலத்தில் என அன்னையார் சாரா-டக்கர் கல்லூரியில் 3ம் தரம் படித்தரம்  (III Grade)…… தேறியவர்.
என தந்தையார் சன்கரன் கோயிலில் கணக்காயர் வேலை பார்த்தார். அங்குதான் நான் பிறந்ததாகச் சொல்லப்படுகிறது. என தாயாருக்கு சொந்தமான இராசநாயகத் தேவர் பணவிடலியில் இருந்து அடிக்கடி வந்து போவார். எங்கள் வீட்டில் தங்கி விருந்துன்பார். உள்ளூரிலும் 3கல் தொலைவிலுள்ள களபபாளங்குளத்திலுள்ள குலச்சியரும், இளைஞரும் என தந்தையாரிடம் பயின்றனர். என தந்தையார் கணக்காயராக இருந்த பள்ளி தாழ்த்தப்பட்ட மக்கட்கேண்டு ஏற்பட்டதுதான்.
சங்கரன் கோயில் எனக்கு உறவினர் ஒருவரும் இல்லை. என அன்னையர் வழியை நோக்கி அங்குள்ள பள்ளக்குடிப் பிறந்த என உறவினர் அல்லாத நெடுஞ்செழியன் என்னும் சிறுவன் அல்லது இளைஞன் என தந்தை வழியை அறியாமல் பெருமைக்காக என்னை தன இனமென்று திருநாவுக்கரசிடம் சொல்லி இருக்கிறான். அதை நம்பி….!
தமிழன் என்று தலை நிமிர்ந்து மார்தட்டும் வீரரும் மிடுக்கும் எனக்கு இருக்குமளவு சோ.சு.பாரதியாருக்குக் கூட இருந்தது இல்லையே. அங்ஙனம் இருப்பவும் என்னை அரிசன் என்று எங்ஙனம் குறிப்பிடலாம்? இன்றிருக்கும் தமிழரெல்லேருள்ளும் உயர்ந்தவனாகக் என்னைக் கருதிகிறேன். தாழ்த்தப்பட்டவன் என்று தமிழ்ச் சொல்லால் குறிப்பதே தவறு.
அதிலும் வடவர் ஒருவர் (காந்தி) புணர்ந்த அரிசன் (ஹரிஜன்). மலல்மகன் என்னும் வரசொல்லாற் குறிப்பது. தந்தையார் வரலாற்றைத் தவிர வேறெதையும் எழுதத் தெரியாத மடைத் திருநாவுக்கரசை உடனி அழைத்து இம்முடங்கலைக் காட்டுக. மறைமலை அடிகளார் வரலாற்றிலும் என்னைப் பற்றிய பகுதியைக் கிழித்தெறிக. … …   …  … மடைத் திருநாவுக்கரசால் எனக்கொரு புகழும் வேண்டியதில்லை.
என் தொண்டை இரண்டொரு ஆண்டில் உலகறியும். என்னைப் பற்றிய பகுதியைக் கிழித்தெறிய இயலாவிடில் அரிசன் என்று குறிப்பிட்டுள்ள தொடர் முழுவதையும் காரச்சு மையலால் மறைத்துவிடுக.

என் தந்தையார் 1906ம் ஆண்டிலும், என அன்னையார் அதன் பின்பும் இறந்து போயினர். என தந்தையார் உயிரோடிருந்த போதே தம் தெய்வப் பற்றில் தந்தையார் குலத்தை மறந்துவிட்டதானாலும், அவர் இறந்து அரை நூற்றாண்டிற்கும் மேலாகிவிட்டதினாலும், அவர் முன்னோரைப் பற்றி இன்று பலருக்குத் தெரியாது.
எனவே, ஒருவர் வாழ்நாளிலேயே அவர்தம் மரபு பெருமைகளை அழிக்கப்பட்டு வரும் போது, மறைந்த தமது முன்னோர்கள் வரலாறு முழுமையாக மாற்றப்பட்டு வருகிறது என்றால்…….. வியப்புடையத்தன்று.
மான மறக்குல மக்கள், தமிழ் மொழி, தமிழ்நாடு உரிமைப் போராட்டத்துக்காக அருஞ்செயலாற்றி, உயிர் நீத்த தியாக வீரர்கள் வரலாற்றையும், அவர்கள் முழங்கிய தாரக மந்திர மொழிகளும் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய வைர மணிகள் எடுத்துக்காட்டப்பட்டுள்ளது தெளிவான விளக்கங்களுடன். நீண்ட நாட்களாக எமது நெஞ்சில் அலைமோதிக் கொண்டிருந்த பணி ஒருவாறு நிறைவேறியது.
என்றாலும் கூட இன்னும் ஏராளமான வரலாறுகள், பழம் பாடல்கள் கும்மிகள் இருந்தும் பலருக்கும் தெரிந்தும் ஏனோ எடுத்துக்காட்ட முன்வரவில்லை. எனவே தான் உமையான வரலாறுகள், நிகழ்ச்சிகள் மறைக்கப்பட்டு வருகின்றது. விரைவில் புகழ் தேடிக் கொள்ள வேண்டும் என்று வரலாற்று பெருமைகளை சிதைத்துவிட துணிவு கொண்டுள்ளது துரோகச் செயல்.
மாவீரர்களேல்லாம் நினைவோ, நினைவு மண்டபன்களோ இல்லை. எழுப்பவும் எவரும் முன் வரவும் இல்லை. என்றாலும் கூட காற்றும் மண்ணும் அவர்கள் வாழ்ந்த நிலத்தையே நினைவுச் சின்னமாக நம் மனக்கண் முன்னாள் காட்சியளிக்கின்றன. பேசுகின்றன. இனியாகினும் வீரர்கள் வாழ்வை எண்ணித் தலைவணங்கி அஞ்சலி செய்ய ஆணை செய்வோமாக.  தவறினால் ஈவிரக்கமற்று தண்டித்து விடும் எதிர்காலம்.

…..

Share
This entry was posted in பாவாணர் and tagged . Bookmark the permalink.

2 Responses to பாவாணர் யார்?

 1. rajesh says:

  If you want to know the community of pavanar, go to the monument of pavanar in madurai which is maintained by Pavanar’s relatives.Ask them about the community of Pavanar.You will know the truth.

 2. rajesh says:

  Can you please prove that before 18th century ‘thevar’ was the title of maravar,kallar and agamudaiyar?
  how can you say that thevar is a caste in tamilnadu? have you any proof that in muvendar’s period ‘thevar’ was a caste?
  Are there no blood relations of pavanar, today?
  Go to pirankadaiyaanpatti which is the pavanar’s native place and findout the real caste of pavanar asking his relatives in pirankadaiyaanpatti.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *