“சிவகிரி” ஒரு தீர்வு!

வன்னிய படையாச்சி இனத்தை சேர்ந்த திரு. நடன.காசிநாதன் அவர்கள் சிவகிரி உள்ளிட்ட மூன்று பாளையங்களை ஆராய்ந்ததில் கடிகை முத்து புலவரின் திக்கு விஜயம் என்ற நூலின் பங்கே அதிகம். இந்த நூலை அவர் எந்த வகையில் ஆராய்ந்து வன்னியர் என்று கூறினார் என இப்போது பார்ப்போம்.

சிவகிரி “வரகுணராமேந்திரன்” என்று கடிகை முத்து புலவர் தனது திக்கு விஷயத்தில் குறிப்பிடுகிறார். இந்த இந்திரன் எனும் சிறப்பு பெயரை சிவகிரி மட்டுமின்றி சொக்கம்பட்டி அரசர்க்கு “சின்னனேந்திரன்”

ஊத்துமலை அரசரக்கு “மருதப்பேந்திரன்” என்று பொதுவாக வழங்கி வந்துள்ளது. இதை நடன.காசிநாதன் அவர்கள் கணக்கில் எடுக்கவில்லை. மேலும்

கடிகை முத்து புலவர் திக்கு விஜயத்தில் “சங்கு வரகுண வாண்டாயத்தேவன் “வழியினராக சிவகிரி ஜமீனை குறிப்பிடுகிறார். இந்த “வாண்டாயார்” என்ற பட்டம் கொண்டு தென் பாண்டி நாட்டில் அறியப்பட்ட ஜமீன் எதுவென்றால் அது கொல்லங்கொண்டான் மறவர் ஜமீனே ஆகும். ஆக இங்கும் மறவருடைய வழியில் வந்ததாகத்தானே பொருள் கொள்ள வேண்டும்? ஆனால் திரு. நடன.காசிநாதனுக்கு கொல்லங்கொண்டான் ஜமீன் வாண்டையார் பட்டம் கொண்டவர்கள் என்பதை இங்கு வசதியாக மறந்து விடுகிறார்.

இது அவரின் ஆய்வுதான். ஆனால் அதில் பெரிய ஓட்டைகள் உள்ளன என்று இதைக் கொண்டு அறியலாம்.

வடகரை- ஊற்றுமலை- சிவகிரி மூன்றும் ஒரே ஜமீனைப் போல ஒன்றாக இருந்தவர்கள், ஒருவருக்கு வரும் இன்பமோ துன்பமோ அனைவருக்கும் வந்ததாக எண்ணிக் கொள்வர்.

“வடகரை அரசர் பெரியசாமித் தேவரின் மனதுக்கினியவரும் அவரை “மைத்துனன்” என்று அன்போடு அழைக்கும் வரகுணராமனும் தனக்கு துணையாக ஊத்துமலை மருதப்பதேவரை படை உதவியாக கூட்டிக்கொண்டு செல்வதாக திக்கு விஜயம் சொல்கிறது.

இங்கே மாமன் மைத்துனனாக உறவுமுறையில் சிவகிரியும்- சொக்கம்பட்டியும் இருந்துள்ளது நன்றாக புலப்படுகிறதா?

நீங்கள் இல்லை இது வெறும் பாச வார்த்தை கொண்டு அழைப்பது என்று கூறினால்,…

அதற்கும் கீழேயே பதில் இருக்கிறது.

வரகுணராம பாண்டியன் தனது “மாமன்” என்று அன்போடு அழைக்கும் ஆகிய செந்தட்டி காளை பூபதியை கூட்டிக்கொண்டு செல்வதாக இதே நூல் சொல்கிறது.

முன்னது பாச வார்த்தை என்று நீங்கள் கருதினால் பின்னதும் பாச வார்த்தையே என்றுதான் நீங்கள் கருதவேண்டும். ஆனால் அது உண்மை உறவுமுறையே என்பதே இங்கு நிதர்சனம்.

தொடரும்…

அன்பு வாசக நண்பர்களே!, சிவகிரி பாளையக்காரர் யார்? என்று விளக்கும் இரண்டாவது பதிவிற்கு உங்களை வரவேற்கிறேன். எனது முதலாவது பதிவை மீண்டும் ஒருமுறை வாசித்து விடுங்கள். வாசிக்காதவர்கள் கீழுள்ள “லிங்க்” கில் கிளிக் செய்து வாசியுங்கள். அப்பொழுதுதான் இந்த பதிவு உங்களுக்கு புரியும்.

•முதல் சான்றும், அதன் மீதான இவர்கள் புரிதலும்•

வரலாற்றில் அமைதியான முறையில் தெளிந்த நீரோடை போல சென்று கொண்டிருந்த மறவர்கள் வரலாற்றில் பெருங் குழப்பத்தை ஏற்படுத்திய வன்னிய படையாச்சி பட்டம் கொண்ட முன்னாள் தொல்லியல் துறை தலைவர் நடன.காசிநாதனின் தென்பகுதி பாளையக்காரர்கள் நூல். இது இச் சமீன் உறவுகளில் பலருக்கு ஒரு தலைமுறை ஜாதிச்சான்றிதழையே மாற்றி அமைத்துள்ளது வேதனைக் குரிய விஷயமாகும். இதிலும் கூட “கருப்பாயி நாச்சியார் ” என்று வரும் இந்த ஜமீன் பெண்மணியின் பட்டம் முக்குலத்து மறத்திகளுக்கு உரியது என்பதை சாவகாசமாக மறந்து போயுள்ளார் அந்த பெரியவர். இல்லை இவர்கள் பள்ளி என்கிற வன்னியர் ஜாதி, சவளக்காரர்கள் என்கிற படையாச்சி ஜாதி என்று அவர் கூறினால், அதற்கு இப் பகுதியில் அம் மக்களின் பெண்மணிகளுக்கு “நாச்சியார் ” என்கிற பட்டம் உண்டு என்பதை நிரூபிக்க வேண்டும்..அப்படி முடியுமா? என்றால்… ஒருக்காலும் அது முடியாது என்பதுதான் உண்மை.

•இரண்டாம் சான்றும் அதன் மீதான

இவர்கள் புரிதலும்•

இந்த காகிதத் துணுக்கிலும், “வன்னியன்” என்று வெறுமனேதான் வந்துள்ளதே தவிர, பள்ளி- வன்னியன் என்றோ, சவளக்கார படையாச்சி- வன்னியன் என்றோ, வரவில்லை. இது ஒரு தொல்லியல் துறை தலைவருக்கே தெரியவில்லை என்பதுதான் “ஹைலைட்”

இதில்…

“கங்குல் வைத்ததோர் கன்னட ராணுவச்

‘சங்கு வன்னியன் பெற்ற வரகுணன்’

தெங்கு தெங்கெனத் தெங்கெனத் தெங்கியே

தொங்கு தொங்கெனத் தொங்கனத் தொங்கினான்”

– என்ற வரிகள் வருகிறது. இது கடிகை முத்து புலவரின் சிவகிரி திக்கு விஜயம் என்ற நூலின் பாடலாகும். இந்த பாடலில் வரும் சங்கு வன்னியன் யார் என்று இவர் விளக்கும் இடத்தில் சிவகிரி வரகுணனின் தகப்பன் என்று சொல்ல வருகிறார். ஆனால் “சங்கு வரகுண வாண்டாயார்” என்று வழங்கப்பட்டவர்கள் கொல்லங்கொண்டான் மறவ அரசர் ஆவார். இதிலிருந்து கொல்லங்கொண்டானே இவர்களின் தந்தை வழி என்பது இதன்படி நன்றாகவே விளங்கும். இவர்கள் கூற்றுப்படி, மகன் வன்னிய ஜாதி, அப்பன் மறவர் ஜாதி என்று வருமா? -ஆனால் இதிலும் அவர் “வன்னியன்” என்கிற வார்த்தையை மட்டும் ஆலமரத்து விழுதைப் போல பிடித்துக் கொண்டு “தொங்கு தொங்கெனத் தொங்குகிறார்”

உண்மையில் மிகவும் இதில் அவர் ‘தொங்கித்தான்’ ‘பின்தங்கித்தான்’ போய்விட்டார்.

•மூன்றாம் சான்றும் அதன் மீதான இவர்கள் புரிதலும் •

அடுத்ததாக ஆழ்வார் குறிச்சியின் செப்பேடு ஒன்றை இங்கே தூக்கிப் போட்டு இதில் “வன்னியன்” என்றும், “வன்னிய குல தீபன்” என்றும், வந்துள்ளது. ஆகவே இவன் வன்னியர் ஜாதி என்று ஒரு உலக மகா உருட்டை இவர் உருட்டியுள்ளார். ஆனால் இவை அத்தனையும் புரட்டு என்று நம்மால் நிரூபிக்க முடியும்.

இந்த பட்டயத்தில் முதல் வரிகளிலேயே, (படம்: 7) •”தேவர் குல வங்கிஷத்தான்”• என்று வந்து விட்டது. ஆனால் அதை பற்றி அவர் எதுவும் விளக்கவில்லை!, அதை அவர் வெகு சாவகாசமாக கடந்து செல்கிறார். ஆனால் வன்னியன் என்று வருவதை மட்டும் கெட்டியாக பிடித்துக் கொண்டார். மேலும் “வன்னியன்”- வன்னிய குல தீபன்” வரகுணராம வன்னியன்” என வருவதை அழுத்தமாகப் பெரிதாகத் தெரியும் வகையில் அச்சிட்டு, தேவர் குல வங்கிஷத்தான் -தேவ சம்பந்தமுடையோன்- முதலானவற்றை இயல்பான வகையில் அப்படி ஒன்று இருப்பது போலவே காட்டாதது போல பாவலா காட்டிச் செல்கிறார்.

திருநெல்வேலி மாவட்டத்தில் பதினைந்தாவது நூற்றாண்டில் {பட்டயம் குறிப்பிட்ட படி}

“கரந்தை தேவர் குல வங்கிஷத்தான்” – என குறிப்பிடப்படும் தொடர் யாரைக் குறிக்கும்?

இப்பகுதியில் “தேவர் குல வங்கிஷத்தான்” என்ற செப்பேட்டு சாசனத் தொடர் எந்த ஜாதியினருக்குரியது? தேவர் குல வங்கிஷத்தான் எனறால் “தேவர் குலத்து வம்சத்தவன்” என்பது பொருளாகும்.

மறவரைத்தவிர வேறு எந்த ஜாதிகளெல்லாம் இங்கு தேவர் குல வம்சத்தவர் என்ற தொடரால் குறிப்பிடப்பட்டார்கள்?

எந்த நெல்லைப் படையாச்சியாவது தேவர் என்றோ- தேவர் குல வங்கிஷத்தான் என்றோ வழங்கப்பட்டார்களா? என்பதே நமது நியாயமான கேள்வி.

மேலும் இந்த செப்பேட்டில்,..

“தேவ சம்பந்தமுடையோன்” – {பட்டங்கட்டி மறவர்களின் நீற்றரசன் செப்பேடும் தேவ சம்பந்த முடையோன் என்கிறது}

“தேவலோகம் விட்டு பூலோகம் வந்தோன்” {மணியாச்சி மறத் தலைவர்களுக்கு “பூலோகப் பாண்டியனார் என்று வருவதை இங்கே கவனத்தில் கொள்ள வேண்டும், ~தவிர மேற்சொன்ன பட்டங்கட்டி மறவர்களின் நீற்றரசன் செப்பேடும் தேவலோகம் விட்டு பூலோகம் வருவதை சொல்கிறது}

“பதினோரு கோட்டைக்குத் தலைவன் அவுகுத் தேவன்” { கோட்டை முறை என்பது கிளைவழி திருநெல்வேலி மறவர்களாகிய கொண்டையன் கோட்டையார்- ஆப்பநாட்டு கொண்டையன் கோட்டை மறவர்கள் -அணில் கோட்டை மறவர்கள்- அஞ்சு கோட்டை மறவர்கள் முதலியோரிடம் மட்டுமே உண்டு}

இதெல்லாம் என்ன? என்று அவரிடம்தான் கேட்கவேண்டும்.

ஆனால் இவை அனைத்திலும் தேவ சம்பந்தமும் உண்டு! தேவனும் உண்டு! இதுவே “தேவர் குலத்தவன்” என்று இங்கே பறைசாற்றவில்லையா? முன்னாள் தொல்லியல் துறை தலைவரே?

•நான்காம் சான்றும் அதன் மீதான இவர்கள் புரிதலும்• (படம்:4)

“வன்னியகுல ஒளிவிளக்கே”

“வன்னியராசனே” -என சிவகிரி காதல் எனும் நூல் சொல்கிறது. ஆனால் அது “வன்னிய மறவ குல ஒளிவிளக்கே” என்றோ, வன்னிக்குட்டி மறவ ஒளிவிளக்கே ” என்றோ, “வன்னிய மறவ அரசனே ” என்றோ சொல்லவில்லை, என்று கூறி முடிக்கிறார். ஆனால் அவரே வாகாக,

“பள்ளி வன்னியகுல ஒளி விளக்கே”- என்றோ,

“சவளக்கார படையாச்சி வன்னிய குல விளக்கே” -என்றோ,

“பள்ளி வன்னிய அரசனே”-என்றோ,

“சவளக்கார படையாச்சி வன்னிய அரசனே”

என்றோ உள்ளதா? என நடன.காசிநாதன் அவர்கள் விளக்காதது ஏன்? ஏனெனில் முதலில் நடன.காசிநாதனுக்கு தனது ஜாதியே ஒரு செயற்கையான ஜாதி என்று தெரியாது.

தேவர் என்று இவர்கள் கூறப்படவில்லை என்று கூறும் இதே நடன. காசிநாதன்தான் “பதினோரு கோட்டைக்குத் தலைவன் “அவுகுத் தேவன்” இவர்களில் முதன்மை பெற்ற வன்னிய கோத்திரத்தான், வன்னிய வரகுண பாண்டியன் என்று சொன்னதை மறந்து இப்படி எழுதியுள்ளார். ஆனால் கரிவலம்வந்த நல்லூர் கல்வெட்டுகள் மற்றும் சங்கரன்கோவில் கல்வெட்டுகள் சிவகிரி ஜமீனை “தேவ வன்னியனார்” என்று குறிப்பிட்டதை அறிந்திருந்தும் மறைத்தது ஏனோ? அந்த கடவுளுக்கே வெளிச்சம்.

•படம்5ல்•சிவகிரி ஜமீன் உறவுகள் என்று கூறிக்கொள்ளும் சிலர் அடிக்கடி பதிவிடும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட சான்றில்.. வன்னியனார் ஜாதி என்று உள்ளதாம். தமிழகத்தில் அப்படி ஒரு ஜாதி உண்டா?

அதிலும் கூட வன்னியனார் ஜாதி என்று உள்ளது. வன்னியர் என்று கூட இல்லை! இதுவும் கூட பட்டத்தை ஜாதியாக்கியதே தவிர தென்பகுதியிலோ, அரசு வகைப் படுத்தப்பட்ட ஜாதிகளிலோ “வன்னியனார்” என்று எந்த ஜாதியும் கிடையாது.

வன்னியனார் என்பது, தென்பகுதி மறவர்களுக்கு வழங்கப்படும் தலைவனார்- பாண்டியனார்- தேவ நந்தனார்- தேவனார்- வாணாதிராயத் தேவர்- மழவராயர்- பண்டாரத்தார்- சேவுக பாண்டியனார்- பூலோகப் பாண்டியனார்- இரட்டைக் குடையார்-இந்திரனார்- சேதுராயர்-சின்னத் தம்பியார்- நல்லகுட்டியார்- என்பதைப் போல ஒரு பட்டமே! சிவகிரி ஜமீன்களுக்கு “சின்னத் தம்பியார்” என்பதும் இப்போது ஒரு பட்டம். அதையும் ஜாதியாக்கிவிடலாமா? என்றால் நிச்சயமாக அதற்கு அவர்கள் பதிலளிக்க முடியாது.

படம்: 6ல் மேலிருந்து 15 வது வரிசையில் உள்ள…

“சிவகிரித் தலைவராகிய வன்னியனாரும், தலைவன் கோட்டை மற்றும் வன்னியத் தலைவர்கள்” என்று உள்ளதை நோக்கினால், தலைவன் கோட்டை வன்னியனாகிய கொண்டையன் கோட்டை மறத்தலைவனார்களை இன்றைய ‘வன்னிய ஜாதி ” என்று கூறிவிடலாமா? பாவம்.. இந்த காகிதத் துணுக்கையும் இவர்கள் “சிவகிரி வன்னியர்கள்” என்று அவர்கள் பிளாக்கில் எழுதி கிறுக்கியுள்ளனர்.

அக்னி குலம் என்பது கள்ளர் மறவர் உள்ளிட்ட எட்டு ஜாதிகளுக்கும் உண்டு.(படம்.8) என்று இடங்கை வலங்கையர் வரலாறு (புராணம்) சொல்கிறது. இதை பதிப்பித்தவரும் ஐயா. நடன.காசிநாதன் அவர்கள்தான்.

இன்னும் தொடரும்,…

•சிவகிரியும்-கொல்லங்கொண்டானும்.•

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

முந்தைய பதிவுகளிலேயே கொல்லங்கொண்டான் -சிவகிரி தொடர்புகளை நாம் ஓரளவிற்குஉணர்த்தினோம். இதில் இன்னும் சற்றே விரிவாக அவற்றைக் காண்போம். 18ம் நூற்றாண்டில் கடிகைமுத்துப் புலவரால் இயற்றப்பட்ட சிவகிரி திக்கு விஜயம் எனும் நூல் சிவகிரி வன்னியனாரை..

“சங்கு சின்னத்தம்பி வரகுண வாண்டாயர்”

என்கிறதை நோக்கும் பொழுது எவருக்குமே எளிதாக இவர்கள் கொல்லங்கொண்டான் மறவ அரசாகிய வாண்டாயர் வழிவந்தவர்கள் என்பது நன்றாக விளங்கும். ஆனால் இந்த கடிகைமுத்துப் புலவரால் இயற்றப்பட்ட சிவகிரி திக்கு விஜயம் தவிர வேறென்ன ஆவணங்கள் கொல்லங்கொண்டான் -சிவகிரி தொடர்புகளைச் சொல்கிறது? என்று நாம் தேடியதில் கிடைத்ததுதான் “வாண்டையத்தேவன் கதைப்பாடல்” .

இந்த கதைப்பாடல் வரலாற்று சான்றுகளை தன்னகத்தே கொண்டதாகும். இது ஒரு வரலாற்றுக் கதைப்பாடலாகும். மருதநாயகமாகிய கான் சாகிப் மற்றும் டொனால்டு கேம்பலுடனான கொல்லங்கொண்டான் போரில் தோல்வியுற்ற பின்னர், வாண்டையத்தேவர்கள் வணங்கி வந்த ஆலயங்களும், அவற்றிலிருந்த முக்கிய ஆவணங்களும், ஏட்டுச் சுவடிகளும் ஆங்கிலேயர்களால் தீயிட்டுக் கொளுத்தப்பட்டன என்று சொல்லப்படுகிறது. வாண்டையத்தேவன் கதைப்பாடலிலும் அவ்வாறே பல பகுதிகள் அழிக்கப்பட்டிருக்கின்றன. இதில் ஒரு பகுதி மட்டுமே கிடைத்துள்ளது. அதுவும் இன்னும் அச்சிடப்படவில்லை!, இந்த கதைப்பாடல் சுவடியாக கேரள மாநிலம் திருவனந்தபுரத்திலுள்ள Kerala university oriental manuscript library யில் வைத்துப் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இந்த சுவடியில் கொல்லங்கொண்டான் அரசர் 20000 படை வீரர்களோடு வெள்ளையர்களோடு சண்டையிட்டார் என்றும், பூலித்தேவருடனான அவரின் உறவு, சிவகிரி வரகுணருடனான அவரது உறவு-பகைமைகளும் சொல்லப்பட்டுள்ளன.

•”புயலை அடக்கிய பூந்தென்றல்”•

~~~~~~~~~~~~~~~~~~~~~~~

வாண்டையாத்தேவன் கதைப்பாடல் சுவடியில் எஞ்சியுள்ள பகுதியின் தொகுப்பில் உள்ளதுதான் “புயலை அடக்கிய பூந்தென்றல்” எனும் தலைப்பில் உள்ளதாகும். இது சிவகிரி ஜமீன் இளவரசியை கொல்லங்கொண்டான் ஜமீன் இளவரசர் மணந்ததை விவரிக்கிறது.

வாண்டையாத்தேவர் உள்ளிட்ட அனைத்து மறவர் பாளையக்காரர்களும் பூலித்தேவரோடு இணைந்து வெள்ளையரை ஒருமித்து நின்று எதிர்த்த காலத்தில், சிவகிரியார் மட்டும் வெள்ளையருக்கு ஆதரவாக இருந்தார். இதனால் அவர் மற்ற மறவர் பாளையக்காரர்களுக்கு எதிரியாகிவிட்டார். மேலும் அவர் பூலித்தேவருடைய பாளையத்தில் நுழைந்து ஆநிரைகளைக் கவர்ந்து மேலும் அவருடைய பகையை அதிகப்படுத்திக்கொண்டார், இதை “பூலித்தேவன் சிந்து” விவரிக்கிறது.

பூலித்தேவனுக்கு உற்ற துணையாக கொல்லங்கொண்டான் வாண்டையாத்தேவர் இருந்ததால் அவர் சிவகிரிக்குப் பகையானார். அதற்கு முன்பாக வாண்டையத்தேவனின் முந்தைய தலைமுறைகள் அவ்விதம் பகையாயிருந்ததற்கான ஆதாரங்கள் இல்லை.

•சிவகிரி-கொல்லங்கொண்டான் மண உறவு.•

வெள்ளையருடனான போரில் கொல்லங்கொண்டான் ஈடுபட்டிருந்த பொழுதில், வாண்டையாத்தேவர் மனைவியும் கொல்லங்கொண்டான் அரசியாருமான திருமதி. ராமலெக்ஷ்மி {முனைவர்.மு.ஞானத்தாய் ராஜலெக்ஷ்மி என்று பிழையாகக் குறித்துள்ளார். அவரின் பெயர் ராமலக்ஷ்மி என்று கொல்லங்கொண்டான் மூத்த நாச்சியார்களில் ஒருவராகிய ஸ்ரீமதி.Balarajeswari Nachiyar அவர்களால் உறுதி செய்யப்பட்டது} நாச்சியார் அவர்கள் நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். அவரைப் பாதுகாக்க எண்ணிய வாண்டையாத்தேவர், சிவகிரி பகுதிக்குட்பட்ட பஞ்சம்பட்டி எனும் ஊரில் யாரும் அறியாதவாறு அவரைக் குடி வைத்தார். திரு.ராமலெக்ஷ்மி நாச்சியார் அவர்கள் ஒரு அழகான ஆண்மகவை ஈன்றெடுத்தார். அவருக்கு திருமலை வாண்டையாத்தேவன் எனும் திருநாமம் சூட்டப்பட்டது. இளவரசரான திருமலை வாண்டையாத்தேவன் இளமையிலேயே மிகுந்த பண்புடனும் வீரத்துடனும் திகழ்ந்து வந்தார். இவ்வாறு இவர்கள் வாழ்ந்திருக்கும் நாளையில், சிவகிரி பாளையத்தில் ஒரு புலி நுழைந்து அங்குள்ள பலரைக் கொன்று ஆடு மாடுகளை இழுத்துச் சென்றுவிடுவது வழக்கமாக இருந்ததுள்ளது. சிவகிரி அரசோ, அதன் படைகளோ இந்த விஷயத்தில் ஒன்றும் செய்ய இயலாமல் கையைப் பிசைந்து கொண்டிருந்தது. இச் சமயத்தில் பஞ்சம்பட்டியில் வாழ்ந்து வந்த கொல்லங்கொண்டான் இளவரசர் திருமலை வாண்டையாத்தேவன் தனது துப்பாக்கியுடன் காட்டிற்குச் சென்று அந்தப் புலியைச் சுட்டுக் கொன்றுவிட்டார். சுட்டுக் கொன்றதும் பெருமிதத்துடன் ” ஹா..ஹா.. சும்மா விடுவானா திருமலை வாண்டையான்?” என்று உரக்கக் கூறியுள்ளார். மேலும் மக்களைக் காக்காத சிவகிரியார் செயலையும் இகழ்ந்துள்ளார். இவர் இவ்விதம் சொன்னதை கேட்ட சிவகிரி அரசின் வேட்டைக்காரர்கள் அதை அப்படியே சென்று வரகுணரிடம் ஒப்புவித்து விட்டனர். இதனால் வெகுண்ட சிவகிரியார் “கொல்லங்கொண்டானுக்கு வாரிசே இல்லாமல் செய்து விட வேண்டும்” என்று சீறிப் பாய்ந்தார். அதற்கு கும்பினியாரின் உதவியையும் நாடினார்.

•சிவகிரி இளவரசியுடன் நெற்கட்டான் செவ்வல் அரண்மனையில் திருமணம்•

சிவகிரியாரின் இத்தகைய கெடுமதியை அறிந்த திருமலை வாண்டையாத்தேவன் தக்க தருணத்தில் சிவகிரியைப் பழிக்குப்பழி வாங்க முடிவு செய்தார். தன்னுடன் சில இளைஞர்களைச் சேர்த்துக்கொண்டு சிவகிரி அரண்மனையில் வேலைக்குச் சேர்ந்தார். அங்கே சிவகிரியாரின் ஒரே மகளான இளவரசி பூங்கொடி நாச்சியாரைச் சந்திக்கிறார். இருவரும் காதல் வயப்பட்டனர். இருவரும் அரண்மனையை விட்டு வெளியேறி நெற்கட்டான் செவ்வல் பூலித்தேவர் அரண்மணையில் தஞ்சம் புகுந்தனர். ஏற்கனவே அங்கே திருமலை வாண்டையாத்தேவனின் தகப்பனாராகிய கொல்லங்கொண்டான் அரசரும் பூலித்தேவரோடுதான் இருந்தார். பஞ்சம்பட்டியிலிருந்து மகாராணி. ராமலெக்ஷ்மி நாச்சியார் அவர்களும் நெற்கட்டான் செவ்வல் அரண்மனைக்கு வரவழைக்கப்பட்டார்.

இருவருக்கும் விரைந்து திருமணத்தை நடத்த எண்ணி, ஒரு நல்ல நாளில் நெற்கட்டான் செவ்வல் அரண்மனையில் பூலித்தேவர் முன்னிலையில் விமரிசையாக இனிதே விவாஹம் நடந்து நிறைவுற்றது. தனது மகளை மீட்க படையுடன் புறப்பட்டு வந்த சிவகிரி வரகுணன் முன்பு, அவரது மகளான இளவரசி பூங்கொடி நாச்சியார் தன்னை ஆசீர்வதிக்க வேண்டி தலைகுனிந்து நின்றார். புயலைப் போல புறப்பட்டு வந்த சிவகிரியார் தனது ஒரே அன்பு மகளிடம் பூந்தென்றாலாக அடங்கிப்போனார். பூக்களைத் தூவி வாழ்த்தினார். மேலும் தனது பரம எதிரிகளான பூலித்தேவர் முன்பும் வாண்டையாத்தேவர் முன்பும் நிமிர்ந்து பார்க்கவும் அவர் இயலாதவரானார்.

-இவ்வாறு விவரிக்கிறது வாண்டையாத்தேவன் கதைப்பாடலின் ஒரு பகுதியான புயலை அடக்கிய பூந்தென்றல் உரைநடைப் பகுதி. இக் கதைப்பாடலின் கிளைக் கதைகளாக சில கையெழுத்துப் பிரதிகளும் கிடைத்துள்ளதாக இவற்றை “மறவர் கதைப்பாடல்கள்” என்று தொகுத்த திருமதி. முனைவர். மு.ஞானத்தாய் அவர்கள் சொல்கிறார்கள்.

அவை,..

1.தலை இருக்க வால் ஆடலாமா?

2.அறுத்துக் கட்டும் சாதியல்ல நாங்கள்.

3.சுந்தர நாச்சியாரம்மாள் கதை

4.அங்களா பரமேஸ்வரி கதை.

இவற்றை வாசிக்கும் பணியையும் விரைந்து செய்வோம் என்று கூறிக்கொள்கிறேன். மேலும்

பூலித்தேவர் காலகட்டமான 1750 களிலேயே சிறுதாலிகட்டி மறவர் பாளையமான கொல்லங்கொண்டானுடன் சிவகிரி வன்னிய மறவர் பாளையம் மண உறவு கொண்டிருந்தது என்பதும் இங்கு உறுதியாகிறது. சிவகிரி திக்கு விஜயம் எனும் கடிகைமுத்துப் புலவரால் இயற்றப்பட்ட செய்யுட்களும் சிவகிரி வரகுணன், வாண்டாயர் வழிவந்தவன் என்கிறது. ஆகவே சிவகிரி ஜமீன், மறவர் ஜமீனே என்பது மீண்டும் மீண்டும் இங்கு நிரூபணம் ஆகிறது.

அடுத்தடுத்த பகுதிகளில், இன்னும் விரிவாக சிவகிரி ஜமீன் பற்றிய செய்திகளையும், அதன் மீதான போலியாக உருவகம் செய்யப்பட்ட சித்திரங்களையும் சிதைத்து உண்மைகளை மட்டுமே வெளிக் கொணர்ந்து, சத்தியமான வரலாற்றையே வாசிப்போம் என்றும் அதுவே நிச்சயமானது என்றும் தெரிவித்துக் கொள்கிறேன்.

தொடரும்!..

அன்பன்.கி.ச.முனிராஜ் வாணாதிராயன்.

படம் இதைக் கொண்டிருக்கலாம்: உரை

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 1 நபர்

படம் இதைக் கொண்டிருக்கலாம்: உரை

படத்தைப் பற்றிய குறிப்பு இல்லை.

படம் இதைக் கொண்டிருக்கலாம்: உரை

+5

அன்பன். கி.ச.முனிராஜ் வாணாதிராயன்

படம் இதைக் கொண்டிருக்கலாம்: உரைபடத்தைப் பற்றிய குறிப்பு இல்லை.படம் இதைக் கொண்டிருக்கலாம்: உரைபடத்தைப் பற்றிய குறிப்பு இல்லை.

படம் இதைக் கொண்டிருக்கலாம்: உரை

படத்தைப் பற்றிய குறிப்பு இல்லை.படம் இதைக் கொண்டிருக்கலாம்: உரைபடம் இதைக் கொண்டிருக்கலாம்: உரைபடம் இதைக் கொண்டிருக்கலாம்: உரைபடம் இதைக் கொண்டிருக்கலாம்: 2 பேர்

படத்தைப் பற்றிய குறிப்பு இல்லை.படத்தைப் பற்றிய குறிப்பு இல்லை.படத்தைப் பற்றிய குறிப்பு இல்லை.படம் இதைக் கொண்டிருக்கலாம்: உரை

Share
This entry was posted in சிவகிரி ஜமீன், சிவகிரி ஜாமீன். Bookmark the permalink.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *