சின்னனேந்திர “நளச்சக்கரவர்த்தி” பாண்டியன் செப்பேடு

~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~

வாசக நண்பர்கள் மற்றும் உறவினர்கள் அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்!

பாண்டிய வம்சத்தவர் யார் என்பதை உரைக்கும் வண்ணம்

இந்த செப்பேட்டில் தகவல்கள் அடங்கியுள்ளன.

இந்த செப்பேட்டின் காலம் சாலிவாகன சகாப்தம் 1171 -என குறிக்கப்பட்டுள்ளது அதன்படி ஆங்கில ஆண்டு 1246 ஆகும். கொல்லம் ஆண்டு 421 என்று கணித்தாலும் சரியாக பொருந்திவருகிறது.

ஆயினும் செப்பேடு காட்டும் செய்தியில் “ஸ்ரீபெருமாள் அழகம் இருந்தகாலம்” என வருவதால் இதனை 16ம் நூற்றாண்டாகவே கணிக்க இயலுகிறது. செப்பேடு தமிழிலும் கிரந்தத்திலும் அமைந்துள்ளது. பராக்கிரம பாண்டியன் பெயருக்கு முன்னுள்ள வாக்கியங்கள் முழுவதும் கிரந்தத்தில் உள்ளன.

செப்பேடு

~•~•~•~•~

சொக்கலிங்கம் துணை

அகோர சிவந்த பாதமூருடைய ஆதினம் வடகரை ஆதிக்க சின்னனேந்திரன் அவர்களால் எழுதிய நளச்சக்கரவர்த்தி அம்பொன்னாட்டு தேவர் வம்ச பாரம்பரை தாம்பிர சாசன நகல் பாலர்ய நளச்சக்கரவர்த்தி தேவர் குல கோத்திரம் அம்பொன்னாட்டு டைய மகா ள ஸ்ரீ வடகரை ஆதிக்கம் முடி மன்னன் சின்னனேந்திரன் ராஜாதிராஜன் ராஜகெ ம்பீரன் ராஜ போஜனன் வீரடதகடதட மகுட கோலாகல நாய விதுரன அஷ்டதிக்கு

மனோட் சங்கரன் பாண்டிய மண்டல பிரதிஷ்டா வனாச்சியார் இந்திரன் முடிமேல் இனைவழைஎறிந்தோன் ஆரம் தரித்த சௌந்திரஷ்வரர்

பூதத்தை பணி கொண்ட புகழ் வீர கேரளன் மேகத்தை திரை கொண்டு வீர நாகற்தை கண்ணு வாங்கும் பெருமாள் கண்டநாடு கொண்ட நாடு

ஆப்பநாடு கொண்டநாடு கொடாத புண்டரீக வதனன

கனக சபை அச்சுத சபை சித்திர சபை தாம்பிர சபை மாரதின சபை

சிர்ச்சபை ராஜ சபை நர்த்த சபை தேவ சபைக்குடைய வனாயும் அம்பொன்னாடு ஆப்பநாடு செம்பொன்நாடு

கிழுவை நாடு பொதுநாடு வன்னிவள நாடு ஈசாங்கு நாடு முதலான

நாட்டில் முதன்மை பெற்றவனாம் சண்டப் பிரசண்டன் தண்டுவர்

முண்டன் ஷிவ தயாபரன் நித்ய கல்யாண நிபுணன் திரிபுவன சக்கரவர்திகளில் கோனேரிமை கொண்டவன் வாரி வடிவம்பல

மகா மேருவின் செண்டு கயலும் தரித்த தெய்வப் பெருமாள்

பொற்கை துருகின் தாக மகுட நிகழ்த்தி மகுடந் தரித்த மகராஜன்

தென் பொதிகை மேருவின் குறுமுனி ஏவி வருட் புனல் தன்னை

மின்னும் சென்றதினால் வழிவிட்டருளிய கொற்கை வேந்தன்

ஆரம்பூண்ட வேப்பந்தார் மார்பன் மகாராஜ ராஜாமார்த்தாண்டன் மணிமகுடந் தரித்தோன் முன் வைத்த காலை பின் வாங்காப் புகழ் வீரன் க்ஷத்ரியர்களில் முதன்மை பெற்றோன் அம்புக்கோட்டை கொண்டையங்கோட்டை செம்புக்கோட்டை அணிற்கோட்டை வாள் கோட்டை முதலான கோட்டைக்குக்கோட்டைக்கு

முதன்மை பெற்றோன் அம்பனேர் கலனை முக்குழணி மங்கலம் அரும்படியுத்தம் புரிந்தோன் ஆகையால் அம்ப நறியார் என்று பெயரும் பெற்றோன்

எட்டு கிளையும் எட்டுக்கொத்தும் உடையோன் தேவர் குல வம்சமாகிய பாண்டி நாட்டுக்கு பதி தீர்த்தயாருரை ன் சு வா மி தெரிய வந்தது கண்டு எங்கள் குலகுருவாகிய காஞ்சிபுரம் பிரம அகோர சிவந்த பாதமூருடைய தேசிகரவர்கள் தென்காசி விஸ்வநாதர் சன்னதியில் சன்னதி

மடத்ததிபதியார் வந்திருப்பது தெரிந்து குரு சன்னி தானத்தில் வந்து தெரிசனை செய்தது தெரிந்து திரு நோக்கம் பார்த்து திருவாய் மலர்ந்து அருமை மொழி கூறி தீட்க்ஷய் செய்து திருநீர் ஆசீர்வாதம் பெற்று வாழ்ந்து கொண்டிருக்கும் காலத்தில் ஸ்ரீ பெருமாள் அழகம் இருந்த காலம் சாலி வாகன சகாப்தம்

1171 ன் மேல் கொல்லம் ஆண்டு 421 புத்திர புவன மகேந்திர: மூலப் பிரதீப

மதுர மாகேந்திர மோந்த மங்கல மிரபலாதீப நாரங்க கேரள தாமோதர வந்த்ர சோழ சிந்து ய ட் ஷ்கல நாயக சாயஞ்சய கேரள பௌம மகா ள ஸ்ரீ காசி பராக்கிரம பாண்டிய ராஜா அவர்கள் முன்னிலையில் விஸ்வேஸ்சுர சன்னதியில் எழுதிய தாம்பிர சாசனம்

திருவாலவாய் ஸ்வாமி ஆடி வீதியில் சப்தாபரண மண்டபமும் கோவிச்சடையில் சொக்கலிங்கம் பிரதிஷ்டையும் நம்மால் செய்து அதற்கு அருகே நிலமும் சன்னதி மடம் ஸ்வாமி சொக்கலிங்கம் பூஜைக்கு ஊர் மேல் அழகியான் மூன்று

கோட்டை விரைப்பாடும் தர்ம சாசுவதமாக ஏற்படுத்தி எங்கள் வம்சத்தார் பரம்பரை குரு சன்னிதானத்திற்கு வருஷ காணிக்கை தலைக்கட்டு 1க்கு பணம் இரண்டும் பெண்ணுக்கு பணம் இரண்டும் தீட்க்ஷைக்கு பணம் பத்தும் சுப முதலான காரியத்திற்கு பணம் பத்தும் அவர்களில் வரம்பு தப்பினவர்களுக்கு வாங்கும் கடமையும் கல்யாணத்திக்கு வெற்றிலை 100ம் பாக்கு 20 இருபதும் கொடுத்து வேண்டுமென்கிற பணிவிடைகள் செய்து வருவோமாகவும் இந்த உடை பண்ணினவர்கள் காசிக்கரையில் காராம்பசுவை மாதா பிதா சிசு கொலை செய்த தோஷத்தில் போவோமாகவும் இதை விடுத்து செய்கிறவர்கள் அஷ்ட ஐஸ்வர்யமும் பெற்று புத்திர சம்பத்தும் பெற்று தங்கள் குலம் உள்ளளவும் பேர் பெற்று வாழ்ந்து கொண்டிருப்பார்களாகவும் காசி முதல் கன்னியாகுமரி வரை

இந்தப்படிக்கு

ஒப்பம் -வடகரை சின்னனேந்திரன்

ஒப்பம் – காசி பராக்கிரம பாண்டிய ராஜா

ஒப்பம் -ராமசந்திரமகாராஜா

அகோர சிவந்த

பாதமுடைய வம்ச பரம்பரையில் உதித்த ஸ்ரீ

மகா ள குரு சுவாமி அவர்கள்

….ந்திரன் வம்ச பாரம்பரையில் உதித்த

திரிபுவன சக்கரவர்த்தி மாற.

திரிகூடபுரம் சின்னனேந்திரன்

எழுத்து

மேலுள்ள செப்பேடு ஒரு பாத்திரக்கடையில் இருந்து தொல்லியல் துறை மேனாள் துணை இயக்குனர் திரு. சொ.சந்திரவாணன் அவர்களால் மீட்கப்பட்டு செப்பேட்டுக்கு உரியவர்களின் சம்மதத்தின் பேரில் தொல்லியல் துறையிடம் சமர்ப்பிக்கப்பட்டது. இது தற்போது சென்னை கோட்டையில் உள்ள அலுவலகத்தில் உள்ளதாக அவரால் சொல்லப்படுகிறது.

செப்பேடு காட்டும் செய்திகள்————————————————-

” பாலார்ய நளச்சக்கரவர்த்தி தேவர் குல கோத்திரம் ”

“இந்திரன் முடிமேல் இனைவளையெறிந்தோன்”

“ஆரம் தரித்த சௌந்தரஷ்வரர்”

“திரிபுவனச் சக்கரவர்த்திகளில் கோனேரிமை கொண்டவன்”

“வாரி வடிவம்பல மகாமேருவின் செண்டு கயலும் தரித்த தெய்வப்பெருமாள்”

“கொற்கை வேந்தன்”

“ஆரம் பூண்ட வேப்பந்தார் மார்பன்”

“க்ஷத்ரியர்களில் முதன்மை பெற்றவன்”

“தேவர் குல வம்சமாகிய பாண்டிய நாட்டுக்கு பதி”

முதலான தொடர்களால் வடகரையாதிக்கத்து அரசர் குறிப்பிடப்படுகிறார். இது இவர் பாண்டிய வம்சத்தவர் என்பதற்கு உறுதியான சான்றுகளாக உள்ளது. மேலும் செப்பேடு பாண்டியன் முன்னிலையில் எழுதப்படுவதாகவும் தெரிவிக்கிறது.

செப்பேடு தனது தொடக்கத்திலேயே மதுரை பாண்டியரின் குலதெய்வமாகிய சொக்கநாதரைக் குறிக்கும்வண்ணம் “சொக்கலிங்கம் துணை” என்று தொடங்கப்பெறுகிறது. வடகரையாதிக்க பாண்டிய தேவ நந்தனார்களாகிய சொக்கம்பட்டி அரசர்களது பிற்காலத் தலைநகரும் “சொக்கன் பட்டி” என்று சொக்கநாதரை நினைந்து உருவாக்கப்பட்ட ஊரேயாகும்.

மேலும் சொக்கம்பட்டியிலிருந்து மேற்குத் தொடர்ச்சி மலைக்கு செல்லும் பாதையில் கருப்பாநதி ஓரத்தில் பெரியநாதன் கோயில் என வழங்கப்படும் பெரியசாமி ஐயன் கோயில் உள்ளது. இக்கோயில் சொக்கம்பட்டி அரசர் பெரியசாமித் தேவர் அவர்களின் பள்ளிப்படையே என்று கருதப்படுகிறது. அக்கோயிலில் இரண்டு கல்வெட்டுகள் சொக்கம்பட்டி அரசர்கள் இருவரைக் குறிக்கின்றன. கோயிலின் முன் மண்டப மேற்புறத்தில் பாண்டிய சின்னமாகிய மீன் மற்றும் செண்டு பொறிக்கப்பட்டு அதன் கீழே பெரியசாமி செம்புலி வேள் கல்வெட்டு பொறிக்கப்பட்டுள்ளது. அதன் விபரங்களை அடுத்த பதிவில் காண்போம்.

நன்றி!

உயர்திரு. சொ.சந்திரவாணன் அவர்கள். {மேனாள் இயக்குனர் தமிழக தொல்லியல் துறை }

தென்கரை மகாராஜ பாண்டியன் அவர்கள் {கடம்பூர் -சொக்கம்பட்டி ஜமீன் வாரிசுதாரர்}

அன்பன்:

கி.ச.முனிராஜ் வாணாதிராயன்.

செம்புலி வேள் ‘முத்துசுவாமி’

○~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~○

அன்பு வாசக நண்பர்களே! -உறவினர்களே!!, வடகரையாதிக்கமாகிய சொக்கம்பட்டி பாண்டியர்களுடைய வரலாறு என்பது நாம் நினைப்பது போல மிகவும் குறுகியதொன்றல்ல! ,அவர்கள் ஆண்டபகுதிகளை உள்ளடக்கிய தென்பொதிகைச் சாரலிலும்,தென்றல் தவழுகின்ற ஆலயங்களிலும், அன்னச்சத்திரங்களிலும், இளைப்பாறுதல் தருகின்ற கல்மண்டபங்களிலும் இன்னும் எண்ணற்ற இடங்களில் படித்தும் படிக்காமலும் -படியெடுத்தும் அச்சில் ஏற்றியும்- ஏற்றாமலும் இருக்கின்ற கல்வெட்டுகளும்- செப்பேடுகளும்- ஓலைசாசனங்களும் – பிறகுறிப்புகளும் ஏராளமான அளவிலே உள்ளன.வரலாற்றை மீண்டும் மீளாய்வுக்குட்படுத்தி நடுநிலை தவறாத ஆய்றிஞர்களைக் கொண்டு, தமிழகத் தொல்லியல் துறையானது அங்கே முறையான ஆய்வுகளை நடத்தி “உள்ளது உள்ளபடி” சொல்ல முற்பட்டால், இன்றைய வரலாற்று திரிபுகள் அத்தனையும் மொத்தமாக காணாமல் போய்விடும். ஏன் தமிழக வரலாற்றிற்கே ஒரு பெரும் வெளிச்சம் இதனால் கிடைக்கும் என்று கூறிக்கொண்டு எனது தென்காசிப் பாண்டிய வம்சத்தின் தேடலைத் தொடர்கின்றேன். நீங்கள் இப்போது வாசிக்க இருப்பது இதுவரை அச்சில் ஏறாத புதிய கல்வெட்டுகளாகும்.

பெரியசுவாமி ஐயன் கோயில்

 • ••••••••••••••••••••••••••••••••••••••••

சொக்கம்பட்டி ஊரிலிருந்து சுமார் 5 கி.மீ தொலைவில் மேற்குத்தொடர்ச்சி மலையடிவாரத்தில் அமைந்துள்ள ஆலயம்தான் ஸ்ரீபெரியசுவாமி ஐயன் கோயில். இதனை சொக்கம்பட்டி மற்றும் சுற்றுப்புற மக்கள் “பெரியநாதன்” கோயில் என்றே அழைக்கின்றனர். இக்கோயிலின் அமைவிடம் மிகவும் ரம்மியமான எழில் கொஞ்சும் பிரதேசத்தில் அமைந்துள்ளது. கோயிலின் படிக்கட்டுகளை தினந்தோறும் ஆற்றுநீரானது அலையடித்துக் கழுவிக்கொண்டிருக்க நாமும் இறங்கி கருப்பாநதியாகிய இந்த தெளிவான நீரோட்டத்தில் நடந்துதான் நாம் ஆலயத்திற்குள் நுழைய முடியும். நுழைவாயிலில் சாஸ்தா நம்மை வரவேற்கிறார். இரண்டு பெரிய குதிரை சிலைகளின் மீது பெரியசுவாமி ஐயன் அருகில் பூரணபுஷ்கலையுடன் கம்பீரமாக அருள்கொஞ்சும் முகத்துடன் காட்சியளிக்கிறார். அதைக்கடந்து உட் செல்கையில் நேர்த்தியான கற்கோயில் தென்படுகிறது. கட்டிட அமைப்புகள் பிற்காலப் பாண்டியர் காலத்தவை என்பதை பறைசாற்றுகின்றன. பெரிய கருவறை மற்றும் முன் மண்டபம் கொண்டு அதற்கு முன்பாக சிறு மண்டபத்துடன் அழகாகக் காட்சியளிக்கிறது ஆலயம். மூன்று லிங்கங்கள் கருவறையில் காட்சியளிக்கின்றன. நடுவில் உள்ளதுதான் கருஞ்சிவலிங்கம் என்று சொல்லப்படுகின்ற பெரியசுவாமி ஐயனாவார். இடமும் வலமும் முறையே பூரண புஷ்கலா தேவியர் லிங்க வடிவில் காட்சிதருகின்றனர்.

கல்வெட்டுகள் .

 • •••••••••••••••••••

இங்கே நான் அறிந்தவரை மூன்று கல்வெட்டுகள் இருக்கின்றன. ஒன்று செம்புலி சின்னணஞ்சாத் தேவர் காலத்தியது இக்கல்வெட்டு இக்கோயிலின் முன் மண்டபத்தின் உட்புறத்தில் அமைந்துள்ள மேற்கூரையில் பொறிக்கப்பட்டுள்ளது.

மற்றொன்று அதே மண்டபத்தில் கீழே படுக்க வைக்கப்பட்ட நிலையில் உடைந்து காணப்படுகின்றது. மற்றொன்று அதே மண்டபத்தில் கோயிலின் பிரதான வாசலின் வலது ஓரத்தில் நின்ற நிலையில் நிறுத்தப்பட்டுள்ளது.

செம்புலி சின்னணஞ்சாத் தேவர் கல்வெட்டு.

1.திரு பணியுஞ் செய்து விண்னோர் முன்வர பொற்.சூயதாவினகும்பாபி செதானென் உ

 1. {பிரி}யமுடன் கருஞ்சவனப் பெரியசுவாமி வெள் விடையோன் டனக்கு அந்தமெல்படிலசனத்தில்
 2. . .ருப்பிலுவர் மாணிக்க வரையான் வெள் செம்புலிதுரைச் சின்னணஞ்சான் சோலமுத்து சுவாமி
 3. . . . .ருத. . . .ன். . .மை . . ங்கி தெக்கல்லக நன்னாடன் வடகரைக்கு வேங்கன்
 4. {சின்ன}ணஞ்சான் செம்புலி வேள் முத்து சுவாமி செய்தானே கும்பாபிசேகந்தானே உ
 5. . .ன வனாங் கருஞ்சை வனப் பெரிய சுவாமி முக்கண்ணன் றிருப்பணியு முடித்தே எங்
 6. . . னயஞ்செ ஆதித்தவாரம் நன்னாள் துலங்கு சதுர்த்தெசி அத்தமார்சித வேளையிலே
 7. . . என்னு துளாயிரத்திருபத்தாராம் ஆண்டு வசந்தத்து சித்திரை நன்மாஷம் எட்டாந் தேதி….

– என முடிகிறது. இக்கல்வெட்டின் கீழே சாசனத்திற்கு முத்திரை போன்று பாண்டிய சின்னமாகிய மீன் மற்றும் செண்டு புடைப்புச் சிற்பமாக பொறிக்கப்பட்டுள்ளது. கல்வெட்டு மற்றும் அதன் படங்களை கீழே பதிந்துள்ளேன். மூன்று கல்வெட்டுகளில் இரண்டை நானும், ஒன்றை மேலப்பனையூர் திரு.ஐயா. கரு.ராஜேந்திரன் அவர்களும் வாசித்தோம் அவற்றை நாங்கள் வாசிக்கும்போது எங்களுடன் கடம்பூர் -சொக்கம்பட்டி வாரிசுதாரர்கள் திரு. Ra Ja @ தென்கரை மகாராஜ பாண்டியன் திரு. பராக்கிரம பாண்டியன். திரு. விவேக் பாண்டியன் அவர்கள் உடனிருந்தனர்.

கல்வெட்டு செய்தியும், விளக்கமும்

 • • • • • • • • • • • • • • • • • • • • • • • • • • • •

மேற்கண்ட கல்வெட்டில்,வடகரை அரசராகிய சின்னணஞ்சாத் தேவரவர்கள்,…

“முத்து சுவாமி”

“செம்புலி வேள் முத்துசுவாமி”

“வேள் செம்புலி துரை”

“பொருப்பிலுவர் மாணிக்க வரையான் சோல முத்து சுவாமி ”

“தெக் கல்லக நன்னாடன்”

“வடகரைக்கு வேங்கன்”

– எனும் சாசனத்தொடர்களால் குறிக்கப்பெற்றுள்ளார்.

முத்து சுவாமி எனும் தொடரை நோக்கும்போது நமக்கு பாண்டியனின் ஞாபகம் வராமலிருக்காது.அதற்கேற்ற வண்ணமாக குற்றாலத்தில் வடகரையாதிக்க பதியார்கள் முத்துப்பூணூல் -முத்தாரம் -முத்துக்கடகமணிந்த கோலங்களில் காட்சியளிப்பது போன்றே இங்கும் அவர்கள் வம்சத்து “செம்புலி வேள் முத்துசுவாமி சின்னணஞ்சாத்தேவர்” ஆலயத்தின் முன் மண்டபத்தின் இடதுபக்கத் தூணொன்றில் முத்துப்பூணூல் மற்றும்அதே இதர அணிகளுடன் கரம் கூப்பி வணங்கின காட்சியில் தோற்றமளிக்கிறார்.

அடுத்ததாக “அந்தமேல்படிலசனத்தில் பொருப்பிலுவர் மாணிக்க வரையான் சொல முத்துசுவாமி” எனும் சாசனத்தொடரானது அந்தமிலாத உயர்ந்த சிகரங்களையுடைய மாணிக்க மலையினையும் அதனுடைய சோலை வனங்களையும் உடைய முத்து சுவாமி” என்கிற பொருளைத்தருகிறது. இது பொதிகை மலையே என்பது திண்ணம்.

மேலும் “தெக்கல்லக நன்னாடன்” என்ற குறிப்பை சிலர் நோக்குங்கால் அவர்கட்கு புதுக்கோட்டை அருகிலுள்ள கல்லகநாடு ஞாபகத்திற்கு வந்து செல்லும். ஆனால் தென் பாண்டி நாடாகிய திருநெல்வேலிச் சீமையிலும் ஒரு பகுதி கல்லகநாடு என வழங்கிய விபரங்களை கல்வெட்டுகளில் காணமுடிகிறது. எடுத்துக்காட்டாக, ..

சங்கரநயினார் கோயில் தாலுகா, வீரசிகாமணியிலுள்ள குடைவரைக் கோயிலின் தூண் ஒன்றில், ஜடாவர்மன் சுந்தரசோழ பாண்டியன்{1028-29 AD} காலத்திய கல்வெட்டு {No;40 -AR no;40-1908 -ASI.SII volume xxv }

4………………………இராசராசப்பா

5.ண்டி நாட்டு முடிகொண்ட சோழவளநாட்டு

6.கல்லக நாட்டு பிரஹ்மதேயம் வீரசி{காமணி}யா

7.ன வீரவிநோதச் சருப்பேதி ம {ங்கலம்} – என்று சங்கரன்கோவில் வீரசிகாமணிப்பகுதி கல்லகநாடு என்ற பெயருடன் விளங்கியதை தெளிவாகச் சுட்டுகிறது.

பெரியசுவாமிஐயன் கோயிலின் கல்வெட்டானது அக்கோயிலுக்கு சின்னணஞ்சாத் தேவரவர்கள் கும்பாபிஷேகம் செய்து திருப்பணி செய்ததைக் குறிப்பிடுகிறது. அடுத்ததாக “கருஞ்சவனப்பெரியசாமி” எனும் சாசனத்தொடர் நம்மை ஈர்த்தது . கருஞ்சை -கருஞ்சி என்பது கருநிறச் சிறகுகளையுடைய வண்ணத்துப்பூச்சி இனவகைகளைக் குறிக்கும். அப்படியான வண்ணத்துப்பூச்சிகள் நிறம்பிய வனப்பகுதி என்பது இதற்குப் பொருளாகும். அப்பெயராலேய இக்கோயிலின் இறைவனும் வழங்கப்படுகிறார். சொக்கம்பட்டி அரசர்களின் பள்ளிப்படையாகவே இந்த ஆலயம் விளங்கியிருக்கக்கூடும் என்று கருதத்தோன்றுகிறது. ஏனெனில் பெரியசுவாமி தேவர் என்ற பெயரில் சொக்கம்பட்டி அரசர்கள் வாழ்ந்துள்ளனர். பெரியநாதன் -பெரியசுவாமி போன்றன மக்களால் மன்னர்கள் வழங்கப்படும் போக்கே ஆகும். எடுத்துக்காட்டாக அரண்மனை சுவாமிகள் என்றும், சாமிக்கூட்டத்தார் என்றும் ராஜவழியினர் தெற்கில் வழங்கப்படுகின்றனர். சிவகங்கை -ராமநாதபுரம் போன்ற ராஜ சந்ததியினர் இவ்வாறே இன்றுவரை பொதுமக்களால் அழைக்கப்படுகின்றனர் .

இக்கல்வெட்டின் காலம் அக்கல்வெட்டின் கூற்றுப்படி கொல்லம் ஆண்டு 926 ஆகும். அதன்படி அதன் ஆங்கில ஆண்டு 1751 .

இக்கல்வெட்டின் மூலம் பொதிகை மலைக்கு உரியவன்- முத்துக்குரியவன் -தென் கல்லகநாடுடையவன் என வழங்கிய பாண்டியர்சந்ததியினர் வடகரைக்கு வேங்கனாகிய சொக்கம்பட்டி அரசர்களே என்பது நிரூபணமாகியுள்ளது.

………..மீண்டும் பிறகு சந்திக்கிறேன்!

நன்றி!

1.பாண்டிய நாட்டு வரலாற்று ஆய்வு மைய வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்ற கல்வெட்டாய்வாளர், உயர்திரு. கரு.ராஜேந்திரன் அவர்கள்.

 1. கடம்பூர் -சொக்கம்பட்டி வாரிசுதாரர்கள்

திரு. விவேக் பாண்டியன்

திரு. தென்கரை மகாராஜ பாண்டியன்

திரு. பராக்கிரம பாண்டியன்

புகைப்படங்கள் உதவி:

திரு. செங்கல்வராயன். {வெங்கடேஸ்வர ஐயங்கார் பேக்கரி -காளகஸ்தி}

அன்பன்;

கி.ச.முனிராஜ் வாணாதிராயன்.

கருணாலய வலங்கைப்புலிப் பாண்டியன் கல்வெட்டு●

வடகரையாதிக்கமாகிய சொக்கம்பட்டி அரசின் கடைசி அரசருள் ஒருவரான ஸ்ரீராஜமான்யஸ்ரீ கருணாலய வலங்கைப்புலி பாண்டியன் அவர்கள் பற்றிய செய்திகளும் வரலாற்றுச் சான்றுகளும் மிகவும் குறைவாக இதுவரை கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில் இம்மன்னரைக் குறிப்பிடும் கல்வெட்டு ஒன்று, சில மாதங்களுக்கு முன்பாக நாங்கள் தென்காசிப் பாண்டியர் பற்றிய தேடுதல்களில் ஈடுபட்டிருந்த பொழுது, சொக்கம்பட்டி கருப்பாநதிக்கரை அருகிலுள்ள பெரியநாதன் கோயில் என மக்களால் வணங்கப்பெறும் பெரியசாமி ஐயன் கோயிலின் முன்நுழைவு மண்டபத்தின் இடது ஓரத்தில், கீழே சாய்க்கப்பட்ட நிலையில் கண்டறியப்பட்டது. 27 வரிகள் கொண்ட இக்கல்வெட்டின் இறுதிப்பகுதி உடைந்து காணப்படுகின்றது. இதனை படியெடுக்காமல் நான் படித்து அன்று பதிவு செய்தபின் முறையாகத் தொல்லியல் துறையிடம் தெரிவித்துப் பின்னர் அது, மத்திய தொல்லியல் துறை கல்வெட்டு ஆய்வாளர்களால் முறையாகப் படியெடுக்கப்பட்டது. இனி அச் சாசனத்தொடரை நாம் பார்ப்போம்.

கல்வெட்டு

“”””””””””””””””

 1. ௵௶யஎ௵
 2. பரிதாபி௵
 3. உத்தராயண
 4. மான நிர்ஷ
 5. மாக ஆனி௴
 6. யச ம்தேதி சுக்கிரவா
 7. ரமுஞ் சுக்கில ப
 8. ட்ச நவமியு
 9. மசுத நட்செ

10.த்திர முஞ் சித்த

11.யோகமு பய

12.கரணமும் விரி

13.ச்சிகலக் க

14.னெமு மார்ச்சுதவே

15.ளையுங் கூடின சு

16.ப தினத்தில் பூர

17.ணவல்லி சமே

18.தப் பிரசுதிசுர

19.ரும் பூரணா பு

20.ட்கலா சமேத

21.மகாசாத்தா

22.வுக்குஞ் சொ

23.க்கம்பட்டி ஆதிக்

24.கத்துக்கு அரசராகி

25.ய கருணாலய வ

26.லங்கைப்புலிப்

27.பாண்டி{யன்}

19ம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்த கல்வெட்டில் அது இருக்குமிடமாகிய அக்கோயிலின் கடவுளர் ,

“பூரணவல்லி மற்றும் பிரசுதிசுரர்”- எனவும்,

“பூரணபுட்கலா -மகாசாத்தா” -எனவும்,

வழங்கப்பெறுகின்றனர். சொக்கம்பட்டி ஜமீன் ஸ்ரீராஜமான்யஸ்ரீ கருணாலய வலங்கைப்புலி பாண்டியன் இக்கல்வெட்டில். ..

“சொக்கம்பட்டி ஆதிக்கத்துக்கு ‘அரசராகிய’ கருணாலய வலங்கைப்புலிப் பாண்டியன்”- என்றே வழங்கப்படுவதும் குறிப்பிடத்தக்கது.

 • கருணாலய வலங்கைப்புலி பாண்டியன் பற்றிய செய்திகள்.

இவருக்கு “அனந்த சுந்தர கருணாலய வலங்கைப்புலி பாண்டியன்” என்றும், “சோமசுந்தரபாண்டியன்”-என்றும் வெவ்வேறு பெயர்களும் உண்டு.

இவர் 1859ம் ஆண்டு ஆகஸ்ட் 16ம் தேதி மன்னராகப் பதவியேற்றார். இவர் பற்றிய சில செய்திகளை நாம் இப்போது காண்போம்.

சொக்கம்பட்டி மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் உள்ள ஊர். அதனால் வனவிலங்குகள் ஊருக்குள் வருவதும் போவதுமாக இருந்துள்ளது .இதே போல ஒரு புலி அட்டகாசம் செய்து வந்ததைக் கண்டக் கருணாலய வலங்கைப்புலிப் பாண்டியன் புலியை அடித்துக் கொன்று விடுகிறார் .அதைப் புலவர் இவ்வாறாக பாடுகிறார்,…

“தம்புலியான மடப்புலியே ! தடிக்கம்பால் அடிபட்டாயே ! எங்கள் முப்புலி துரைப்புலி

வீரப்புலி கொண்ட புலி கருணாலய வலங்கைப்புலி கைக்கம்பால் அடிபட்டு இறந்தாயே ”

என்று புகழ்ந்து பாடியுள்ளார் .

இந்த பாடல் வரிகள் சொல்லும் உண்மைக்குச் சான்றாக ஒரு சிலை ஒன்று புலியைக் குத்திக்கொல்வது போன்ற தோற்றத்தில் இதே கோயிலில் ஆற்றடி ஓரமாக அமைந்துள்ளது அச் சிலை கருணாலய வலங்கைப்புலி பாண்டியன் சிலையாகவே இருக்க வேண்டும். அந்த சிலைக்கு தனியாக கோயிலில் அறை எழுப்பப்பட்டு இன்று வணங்கப்பெறும் சிலையாக உருமாறியுள்ளது. அதன்படத்தையும் கீழே பதிவிட்டுள்ளேன்.

கடைசி அரசர் தம் வாழ்நாட்களை அரண்மணையின் ஓரிடத்தில் கழித்துக்கொண்டிருந்தார். அவர் வேதமந்திரங்களை உச்சரித்துக்கொண்டு ஒரு வேதாந்தியைப்போல,..

“வாழ்க்கை நிலையாமையுடைத்து”

எனக்கூறி ஒரு சந்நியாசியைப்போல வாழ்ந்தார் என கலெக்டர் எழுதியுள்ளார். {பேசும் ஆவணங்கள் }

பிற்காலத்தில்சொக்கம்பட்டியின் மிகப்பெரிய அரண்மணைக் கொத்தளங்களில் கற்றாழையும், இண்டும், இசங்கும், ஆமணக்கும் முளைத்துக்கிடந்தன, அங்கே பன்றிகளும், நாய்களும், கழுதைகளும், வாசம் செய்தன, அரண்மணையின் பெரிய வாயிற்படிகளின் அருகே உள்ள கேணியில் பலர் நீர் இறைத்துக் கொண்டிருந்தார்கள், பல ஏக்கர் பரப்பளவுள்ள அந்த அரண்மணையைச் சுற்றிலும் மண்சுவர்கள் இடிபாடுகளுடன் காணப்பட்டன, சில சிலைகள் அங்கே நடுகற்களாகத் தரையில் புதைக்கப்பட்டிருந்தன, என்றும் ஆவணங்கள் தெரிவிக்கின்றன.

அரண்மனை பராமரிப்பின்றி சீர்கேடு அடைந்ததால்

கருணாலய வலங்கைப்புலிப் பாண்டியன் தமது குற்றாலம் பங்களாவாகிய “வலங்கைப்புலி விலாசம்” வசம், வாசம் செய்து, தனது இறுதிநாட்களை கழித்துவிட்டு 1892 ல் மரணமடைந்தார். என தனது பேசும் ஆவணங்கள் நூலில் எஸ்.எஸ்.பாண்டியன் அவர்கள் தெரிவிக்கிறார்.

அன்பன். கி.ச.முனிராஜ்வாணாதிராயன் !

Share
This entry was posted in சொக்கம்பட்டி ஜமீன். Bookmark the permalink.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *