ஏழூர் நாட்டார்(கோவனூர்) மறமாணிக்கர்

புதுகை பகுதிகளில் ராங்கியம்,குழிபிறை,ஆத்தூர்,கொவனூர்,செவலூர்,பொன்னமராவதி,பூலாங்குறிச்சி இந்த பகுதிகளுக்கு அம்பலம் எனும் நாட்டார்கள் கோனாட்டு மறவர்கள். இவர்களின் ஆளுகைக்கு உட்பட்ட படைப்பற்றில் பாண்டியர் காலத்திலும் சோழர் காலத்திலும் கானப்பட்ட கல்வெட்டு செய்திகள்.

 

பூவாலைக்குடி புஸ்பவனேஸ்வரர்கோவில்
அரசு:பாண்டியன்
ஆண்டு:12-ஆம் நூற்றாண்டு
செய்தி :
செவ்வலூர் நாட்டவர் தங்கள் பூவாலைக்குடி கோவிலில் மறமாணிக்கன் சந்நிதியை நிறுவியது இதை நிறுவியவர் செவ்வலூர் மறவரான கலிகடிந்த பாண்டிய தேவர்.
“எம்மண்டலமும் கொண்டருளிய குலசேகரதேவர்க்கு யாண்டு……….கூடலூர் நாட்டு செவ்வலூர் நாட்டவரோம்…பூவாலைக்குடி நாயனார்க்கு மறமாணிக்கன் சந்நிதி………..அமுது படைக்க கொவனூர் பற்றான நிலத்தில் நாங்களும் கலிகடிந்த பாண்டிய தேவரும் விட்ட பூபாலைக்குடி……….மறமாணிக்கன் பேரரையன் குடிகாட்டுக்கு…………
கூடலூர் நாட்டு செவலூர் வடபற்று  குழிபிறை,செம்பூதி,தேனூர்,அரசர்மிகனிலை பற்று……. இப்படிக்கு செவலூர் ஊரவரோம்…….

கீழே  குறிப்பிடப்பட்ட திருமண பலகை பூவாலைக்குடி முற்பாடு கொடாதார் சூரிய தேவரின் வம்சத்தினர்.

இவர்கள் ஏழூர் செம்ம நாட்டு மறவர்கள் கோவனூரை சார்ந்தவர்கள். இவர்களுக்கு சொந்தமாக பழனி தண்டாயுதபாணி கோவிலில் மேடம் உள்ளது 

ஏழூர் நாட்டார் செம்மநாட்டு மறவர்களின் குலதெய்வங்களில் ஒன்றே அரசுமகன்:

 

அரசுமகன்-குலதெய்வம் -கோவனூர்.

 

 

ஏழூர் செம்ம நாட்டு மறவர்களின் குலதெய்வங்களில் ஒன்றே அரசுமகன். இதுவே கல்வெட்டுகளில் வரும் அரசுமக்கள் என்னும் அரையர்களாகும். அரசமகன் என்பதுவே வட மொழியில் “ராஜ்புட்” என்பதாகும்.

எனவே இங்கு வாழும் அரையர்,பேரரையர்,நாடாழ்வார்,நாட்டார் இவர் யாவரும் அரச மக்களின் வழி வந்தோரின் வம்சாவளிகளே ஆகும். இது இன்னும் கல்வெட்டுகளில் உறுதிப்படுத்தப்படுகின்றது.

அரசு:
ஆண்டு:14-ஆம் நூற்றாண்டு
செய்தி :
ஸ்வஸ்திஸ்ரீ பூபாலகுடி மறவன் பெரியநாசி சதிராண்டி தன்மம்……..

அரசு:
ஆண்டு:15-ஆம் நூற்றாண்டு
செய்தி :
இந்த முகவனையும் திருநிலைகாலும் கொவனூர் மறவரில் சூரியதேவர் பூவாலைகுடி ஆண்டார் முற்பாடு கொடாதார் தன்மம்..……

பரிசை கிழான் செம்பியன் ஆற்காட்டு வேளாண் மறவன்

Marvan_Nakkan
“கோவனூர் மறவன் தர்மன் குரலான மூவாயிர பேரரையன் தன்மம்”

“கோவரகுணமாராயர்க்கு யாண்டு ….நந்தா விளக்கு எரிய முத்தூர் கூற்றத்து 

பெருமாத்தூர் மறவன் அணுக்க பேரரையன் கடம்ப வேளாண் 

வைத்த பழங்காசு பதினைந்து 

 

 

பூவாலைக்குடி புஸ்பவனேஸ்வரர்கோவில்
அரசு:வாணாதிராயர்
ஆண்டு:14-ஆம் நூற்றாண்டு
செய்தி :
செம்மயிர் பாடிகாவல் சண்டையில் நரசிங்க தேவர்,சோழகோன்,பல்லவராயர்,பஞ்சவராயர்……….

கல்வெட்டு:
மாவலி வானாதிராயர் காரியத்திர்க்கு……….செவ்வலூர் உரவரும் வடபற்று நாட்டவரான  செவ்வலூரு பஞ்சவராயர் நரசிங்க தேவர் உள்ளிட்டோர்க்கும் சோழ்கோனார் பல்லவராயர் உள்ளிட்டார்க்கும் விரோதமான  செம்மயிர் விரோதமாய் வெட்டி…….

பொன்னமராவதி ஆலயம்
அரசு:பாண்டியர்
ஆண்டு:12-ஆம் நூற்றாண்டு
செய்தி :
தஞ்சையும் உறந்தையும் செந்தழல் கொளுத்திய மறமாணிக்கர் பெருவஞ்சி
மறசக்கரவர்த்தி:
சொனாடு கொண்டருளிய சுந்தரபாண்டிய தேவர்க்கு யாண்டு புறமலைனாட்டு பொன்னமராவதி முதலான ஊர்களில் உள்ள மறமாணிக்கரோம். பெர் வஞ்சி பாடிய திருவரங்குலமுடையானுக்கு “மறசக்கரவர்த்தி பிள்ளை என பெர் கொடுத்து”

வெள்ளந்தாங்கினான்:

இடம்:குளத்தூர்,புல்வயல்
ஆண்டு:13ஆம் நூற்றாண்டு
அரசு:சோழர்

செய்தி:
ஸ்வஸ்தி ஸ்ரீ காந்தூர் வெள்ளந்தாங்கினான் ……….வயல் பாதியும் புல்வயல் மறவன் காடவராயன் மகன் சுந்தரபாண்டியனுக்கு ஆசிரியம்.

பூவாலைக்குடி புஸ்பவனேஸ்வரர்கோவில்
அரசு:பாண்டியர்
ஆண்டு:13-ஆம் நூற்றாண்டு
செய்தி :
கோவில் பிரமாணம்..

செய்தி:
கூடலூர் நாட்டு செவ்வலூர் உள்ளிட்ட பொன்னமராவதி நாட்டு கோயிற் ப்ரமானம்………
பூவாலைக்குடி புஸ்பவனேஸ்வரர்கோவில்
அரசு:துலுக்கர் கலகம்
ஆண்டு:14-ஆம் நூற்றாண்டு
செய்தி :
இசுலாமிய படையெடுப்புக்கு பின் வந்த உடன்பாடு……….

கல்வெட்டு:
பொன்னமராவதி நாட்டு வடபற்று நாட்டவரோம் திருபூபாலக்குடி உடையார்……துலுக்கர் கலகமான அழிவுகளில்
செவ்வலூர் மேநிலை குழிபிறை செம்பூதி மதியானி இந்த நாட்டு பூபாலக்குடி நாட்டில் ஏற்பட்ட மெலிவுகளில்…14639720_1694163197568063_6184877443620908800_n

பூவாலைக்குடி புஸ்பவனேஸ்வரர்கோவில்
அரசு:பாண்டியர்
ஆண்டு:12-ஆம் நூற்றாண்டு
செய்தி :
கோவனூர் அரசு சுவந்திரம் பெற அரையர் மோதிகொண்டது……….

செய்தி:

 கொவனூர் கூட்டத்து விசய நாராயன பெருமான அரசு நாராயன பெருமான் ………அரசு பெற சிலந்தி வன பெருமாள் பாதம்

செவலூர்  கரேஸ்வரர் ஆலயம்
அரசு:பாண்டியர்
ஆண்டு:12-ஆம் நூற்றாண்டு
செய்தி :
கொவனூர் மறவன் குடுத்த தன்மம்.

செய்தி:
திருபுவன சக்கரவர்த்தி வீரபாண்டிய தேவர்க்கு யாண்டு……..கர்ப்பகிருகம் தளம் இசைப்பித்த இவ்வூர் மறவரில் கொவனூர் கூட்டத்து மாத்தன் நாட்டானான பொன்னம்பலம் காட்டிய கங்கன் தன்மம்.

செவலூர்  கரேஸ்வரர் ஆலயம்
அரசு:சோழர்
ஆண்டு:10-ஆம் நூற்றாண்டு
செய்தி :
செவலூர் பெண் கொடுத்த  தன்மம்.

செய்தி:
ஸ்ரீ கோப்பரகேசரி யாண்டு……..ஒரு பிடி தயிர் நாழி செவ்வலூர் பட்டம் பிடாரியான பாண்டிய தரசி………….

வாழைகுறிச்சி ஆலயம்
அரசு:பாண்டியர்
ஆண்டு:13-ஆம் நூற்றாண்டு
செய்தி :

செவ்வலூர் மறவன் சொக்கன் எடுத்த தோண்டிய ஊரணி.

செய்தி:
ஸ்வஸ்தி ஸ்ரீ  கூடலூர் நாட்டு செவ்வலூர் மறவன் சொக்கன் கொளித்த ஊரணி.

I.P.S.888) குளத்தூர் தாலுகா பெருமாநாடு கிராமத்துக்கு அருகாமையில் ரஸ்தாவில் பக்கமாக நடப்பட்ட கல்லில்

பகரவாளெடுத்த வெற்றிமாலையிட்டான்,வெத்திவாளெடுத்த வெற்றிமாலையிட்டான்
வெற்றிமாலையிட்டன் கதை புறநாநூறில் வரும் தந்தையும்,கனவனையும்,மகனையும் இழந்த மறக்குடி மாதரின் பாடலான ஒக்கூர் மாசாத்தியார் பாடலை ஒத்தது.
சாலிவாகன கன சார்த்தம் 17 74 கலியுக ஸ்காத்தம் 4993………………… வயல கானாடு புல்வயலில் யிருக்கும் மறவரில் மொதலாவது பகரவாளெடுத்த மாலையிட்டான் அம்பலக்காரன் வெத்தி வாளெடுத்த வென்று மாலையிட்டன் பெரிய வெள்ளைதேவன் அம்பலக்காரன் தெண்காசிப் பாளையத்தில் பட்டவன் பூசை மாலையிட்டான் அம்பலக்காரன் போறத்துக் கோட்டையில் பட்டவன் மேல்படி மகன் உலகப்ப மாலையிட்டான் கீழாநெல்லி பாளையத்தின் பட்டவன் மகன் பழனின்றி மாலையிட்டான் மகன் துரைச்சாமி மாலையிட்டன் பன்னி வச்ச விநாயக……………..


பூவாலைக்குடி புஸ்பவனேஸ்வரர்கோவில்
அரசு:
ஆண்டு:14-ஆம் நூற்றாண்டு
செய்தி :
ஸ்வஸ்திஸ்ரீ பனைந்தலை மறவன் சோழைஉடையான்  முப்பேருடையான் தன்மம்……..

ஜூன்-29

பொன்னமராவதி அருகே கோவணிக்கடன் அய்யனார் கோவிலில் திருப்பணி செய்த போது அதில் எழுத்துக்கள் இருப்பதாக தெரியவந்தது. இது குறித்து திருப்பணி குழு தெரிவித்த செய்தியை தொடர்ந்து மேலப்பனைய்யூர்  தொல்லியல் ஆய்வாளர் ராஜேந்தித்திறன் கள ஆய்வில் இறக்கின்றார்
துக்கோட்டை மாவட்டம் திருமையம் வட்டம் ,அகிலாண்டேஸ்வரி கோவில் அர்த்தமண்டபம்,பாக்கற்கல்,தூன்கள் நிலைப்படி உள்ள கல்வெட்டுகள்.

காலம்: பாண்டியராட்சி 13 ஆம் நூற்றாண்டு

செய்தி:
இம்மண்டபத்தில் அர்த்தமண்டபம்,பாக்கற்கல்,தூன்கள் நிலைப்படிகள் செய்து கொடுத்தவர்களின் விபரம் கிழே:

1.குன்றாண்டார்.
2.தேசி மாதாக்கள்

மாதன் மக்கள்:

கல்வெட்டு என்: 33:2
“இப்பாக்கல் பனையூர் மறவரில் மாதன் மக்கள் தன்மம்”

“மாதன் மக்கள் என்பது  மாத்தாண்டன்(சூரியன்) மக்கள் அல்லது கொற்றவை மாதாவின்(அகிலாண்டேஸ்வரி) மக்கள் என்ற கூட்டம் கொண்ட மறவர்கள்  பாற்கல் செய்து கொத்துள்ளனர்.

சுந்தரபாண்டிய பேரரையன்:
கல்வெட்டு என்: 33:12
“”இக்கால் பனையூர் மறவரில் எட்டி பொன்னனான சுந்தர பாண்டிய பேரரையன் தன்மம்”

பனையூர் மறவரில் பேரரையன் ஒருவன் கொடுத்த தூன் கால் ஒன்று கோவிலுக்கு செய்து கொடுத்தமை.

கோனாட்டு பேரரையன்:
கல்வெட்டு என்: 33:13
“”இத்திருநிலைக்கால் இவ்வூர் மறவரில் கோனாட்டு பேரரையர் ஆதனமான சோழகோன் தன்மம்”

பனையூர் மறவரில் கோனாட்டு பேரரையன் சோழகோன் ஒருவன் கொடுத்த நிலைக் கால் ஒன்று கோவிலுக்கு செய்து கொடுத்தமை.

சூட்டத்தேவன் வன்னிமிண்ட்ன்:
கல்வெட்டு என்: 33:34
“இப்பாக்கல்லு இவ்வூர் மறவரில் சூட்டத்தேவன் வன்னிமிண்டன் தன்மம்”

பனையூர் மறவரில் இக்கோவிலுக்கு பாற்கல்லு செய்து கொடுத்தவன் சூட்டத்தேவன் வன்னிமிண்டன் ஆகும்.
வன்னிய பெயர் கொண்ட மறவர் இருந்தவைக்கு இது ஒன்று ஆதாரமாகும்.

சாமந்தார்:
கல்வெட்டு என்: 33:27
“”இப்பாக்கல்லு இவ்வூர் மறவரில் சாமந்தார் கருத்தாண்டானான ஒற்றையில் வெட்டி தன்மம்”

சாமந்தார் என்பது தளபதி என்னும் பதவி. கருத்தாண்டான் என்னும் சாமந்தார் செய்த பாக்கல்லு செய்து கொடுத்தமை.

வாள்வீசிகாட்டினான்:
கல்வெட்டு என்: 33:32
“”இந்த உத்திரம் மேற்படி கலத்து மறவரில் அடைக்கலங்காத்தனான வாள்வீசி காட்டினான் தன்மம்”

குலமங்கலத்து மறவரில் கோவிலுக்கு உத்திரம் கட்டியவன் அடைக்கலங்காத்தனான வாள்வீசி காட்டினான் குடுத்த தன்மம்..

சோழசிங்கபேரரையன்,மழவராயன்,மாளுவசக்கரவர்த்தி:

கல்வெட்டு என்: 33:34
“இந்த உத்திரம் மேற்படி குலமங்கலத்து மறவரில் அவையன் சோழசிங்க பேரரையன் உள்ளிட்டாரும் இரங்கல்மீட்ட மழவராயன் உள்ளிட்டாரும் பாதிமேற்படி வளத்தான் மாளுவசக்கரவர்த்தி பாதி ஆக தன்மம்”

குலமங்கலத்து மறவரில் கோவிலுக்கு உத்திரம் கட்டியவன் அவையன் சோழ சிங்க பேரரையனும் இரங்கல்மீட்ட மழவராயனும் மேற்படி பாதியை கட்டி கொடுத்தவன் வளத்தான் மாளுவசக்கரவர்த்தி என்னும் மறவனும் குடுத்த தன்மம்.

இந்த கல்வெட்டுகள் யாவும் ஆவணம் 19 என்னும் கல்வெட்டு இதழில் 2008 ஆம் ஆண்டு வெளி வந்தவை ஆகும்.
இந்த கல்வெட்டுகள் யாவும் A.R.E இல் பதிவு செய்யபட்டும் புதுக்கோட்டை கல்வெட்டுகளின்(P.I) பதிவு செய்யபட்ட என்கள் கொண்டவை. இது இன்றும் பனையூர் அகிலாண்டேஸ்வரி அம்மன்
அப்போது அய்யனார் சிலையடியில்
“இச் சிலை கோவனூர் மறவன் தர்மன் குரலான மூவாயிர பேரரையன் தன்மம்”

என பொறிக்கப்பட்டிருந்தது சோழர் கால கலைவடிவில் இது 900 ஆண்டு பழைமையான ஒன்றாக
கருதப்படுகிறது என தெரிவித்துள்ளனர்.

நன்றி: தினதந்தி

நன்றி:
தமிழ்நாடு தொல்லியல் துறை
புதுக்கோட்டை மாவட்டம்

கோவிலில் உள்ளது.நன்றி:
திரு.கார்த்திக் தேவர் அவர்கள்.
ஆவணம் 19,2008 இதழ்
புதுக்கோட்டை மாவட்ட கல்வெட்டுகள்
Share
This entry was posted in கல்வெட்டு, மறவர். Bookmark the permalink.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *