மீனாட்சி ஆண்டாளாக மாறிய கொற்றவை கோவில்கள்

கிளியும் கொற்றவையும்

சங்ககாலத்திற்கும் முன்னும் சங்கம் மறுவிய காலத்தில் பின்னும் கொற்றவையே முதன்மையான தெய்வமாக தமிழ் கூறும் நல்லுலகத்தில் மன்னர்களாலும் மறவர்களாலும்

வழிபடப்பட்டுள்ளது.

இதன் பின்பு சைவ,வைணவ பக்தி எழுச்சியினால் நிறைய கொற்றவை தெய்வம் சங்கு,சக்கரம் ஏந்திய திருமாலாகவும்,சிவனின் மனைவியாக மாற்றபட்டுள்ளது. இதற்காக போலியான பல கதைகள் சொல்லபட்டு வைதீக சடங்குகள் பின்பற்றபட்டுள்ளது. Continue reading

Posted in தேவர், மறவர் | Leave a comment

சாணார் அகிலதிரட்டும் தினத்தந்தி புரட்டும்

இந்த பதிவு மறவர்களை தினத்தந்தியிலும் அகிலதிரட்டு அம்மானையில்

தேவையில்லாமல் பொய்யான வதந்தி செய்தியாக போட்ட நாடார்களுக்கு ஒரு பதில் கட்டுரையாகும். Continue reading

Posted in நாடார், பள்ளர் | Leave a comment

திரையன் தேவர்கள்-who are thirayyars?

திரையர் என்பார் இன்னொரு பழந் தமிழ் வகுப்பார். திரை கடலின்

வழியாக வந்தவராதலின் அவர் அப்பெயர் பெற்றார் என்பர். தொண்டை

நாட்டை யாண்ட பண்டை யரசன் ஒருவன் இளந்திரையன் என்று பெயர்

பெற்றான். காஞ்சி மாநகரத்தில் தொண்டைமான் என்னும் பட்டமெய்தி

அரசாண்ட இளந் திரையைனைத் தலைவனாக வைத்து உருத்திரங்

கண்ணனார் பெரும் பாணாற்றுப் படையினைப் பாடியுள்ளார்.

Continue reading

Posted in கள்ளர், தேவர்கள், மறவர் | Leave a comment

சேத்தூர் ஜமீன்தார்கள் 

பாரம்பரிய சிறப்பு மிகுந்தவர்கள் சேத்தூர் ஜமீன்தார்கள். சேத்தூர் மற்றும் அவர்கள் ஆட்சிக்குட்பட்ட தேவதானம் பகுதியில் மிக அதிகமாக கோயில்கள் அவர்கள் அரவணைப்பில் தற்போதும் பொலிகின்றன. அந்த கோயில்களுக்கான திருவிழாக்கள் மற்றும் பூஜைகளை அவர்களது வாரிசுகள் முன்னின்று செம்மையாக நடத்தி வருகிறார்கள்.

Continue reading

Posted in சேத்துர் ஜமீன் | Leave a comment

கொல்லங்கொண்டான் ஜமீன்தார்கள் 

-முத்தாலங்குறிச்சி காமராசு

ஜமீன் கோயில்கள் 

கொல்லங் கொண்டான், விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே அமைந்திருந்த ஜமீன்.  இயற்கை வனப்புடன், மேற்குத்தொடர்ச்சி மலையடிவாரத்தில் அமைந்துள்ள சிற்றூர். தற்போதும் காணப்படும் பிரமாண்டமான அரண்மனை, சிறந்து விளங்கிய ஜமீனுக்குச் சான்றாக நிற்கிறது. மேற்குகடற்கரைப் பகுதியில் பிரசித்திபெற்ற நகரம் கொல்லம். இவ்விடத்தினை தலைமையிடமாகக் கொண்டு ஆட்சி செய்தவன் கேரள சிற்றரசன் மாறவர்மன். இவன் போர்புரிந்து பல பகுதிகளில் தன் ஆட்சியை விஸ்தரித்தான். 

இவனால் பாதிக்கப்பட்டவர்கள், ராஜபாளையத்தின் அடுத்தப் பகுதியை ஆண்ட வாண்டையத்தேவன் என்ற சிற்றரசனிடம் வந்து முறையிட்டார்கள். வாண்ைடயத்தேவன் பெரும்  படை திரட்டி கொல்லத்துக்கு சென்று போரிட்டு வென்றான்; இதனால் ‘கொல்லங்கொண்டான்’ என்றழைக்கப்பட்டான். கொல்லத்து அரசனிடமிருந்து மீட்ட நிலங்களை, அந்தந்த சிற்றரசர்களிடமே ஒப்படைத்தான். Continue reading

Posted in வாண்டாயத் தேவன் | Leave a comment

ஊத்துமலை ஜமீன்தார்கள்

தங்கக் கொடிமரம் நிறுவிமங்காத புகழ் பெற்றவர்

சிங்கம்பட்டி – நெல்லை மாவட்டம்

ஊத்துமலை ஜமீன்தார்கள் கோயில்களை பராமரிப்பதில் ஆர்வம் கொண்டவர்களாக திகழ்ந்தனர். தமிழுக்கும் சிறந்த தொண்டாற்றிய அவர்கள்  தாங்கள் வழிபடும் ஆலயத்தில் தங்கக் கொடிமரத்தை நிறுவி வணங்கி வருகின்றனர். கோயில்களை புனரமைப்பதிலும் திருவிழா  நடத்துவதிலும் முன்னணியில் நிற்பர். கோமதி அம்மனை தங்களது வீட்டில் பிறந்த மகளாக எண்ணி அவரது திருமணத்தை தங்கள் இல்லத்  திருமணம்போல் விமர்சையாக நடத்தி வருகின்றனர். 

ஜமீன்தார்கள் தென்பகுதிகளில் ஒரு குறுநில மன்னர்கள்போல ஆண்டு வந்தனர். அவர்கள் பாளையக்காரர்கள் என்று அழைக்கப்பட்டார்கள்.  ஒருங்கிணைந்த நெல்லை மாவட்டத்தின் மேற்குப் பகுதியில் மறவர் பாளையமும், கிழக்குப் பகுதியில் நாயக்கர் பாளையமும் சிறப்புற்று  விளங்கின. 

  Continue reading

Posted in ஊற்றுமலை ஜமீன் | Leave a comment

கடம்பூர் ஜமீன்தார்கள்

கடம்பூர், தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள வானம் பார்த்த பூமி. மிகப்பெரிய கரிசல் காடு. ஒருகாலத்தில் கடம்ப மரங்கள் அடர்ந்த காடாக காணப்பட்டது இவ்வூர். இம்மரங்களை அழித்து உருவாக்கப்பட்ட ஊரே, (கடம்ப + ஊர்) கடம்பூர் என்றழைக்கப்படுகிறது. தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகில் உள்ள நகரம் இது. நெல்லை-சென்னை ரயில்பாதையில் அமைந்துள்ளது. அனைத்து ரயில்களும் இங்கே நின்று செல்கின்றன.

Continue reading

Posted in கடம்பூர் ஜமீன் | Leave a comment

சுரண்டை ஜமீன்தார்கள்

குற்றால மலையில் இருந்து ஓடி வரும் சிற்றாறும், சொக்கம்பட்டி வழியாக ஓடி வரும் கருப்ப நதியும் சங்கமிக்கும் அற்புத பூமி, சுரண்டை. இங்கு விவசாய விளைச்சலுக்குப் பஞ்சமில்லை; பக்தி விளைச்சலுக்கும் குறைவில்லை. சுரண்டை ஜமீன்தார்கள் கோயில் கட்ட இடம்கொடுத்தனர். மண்டகப்படி திருவிழாவை ஏற்படுத்தினர். கஷ்டம் பல வந்தாலும், ஆங்கிலேயர் காலத்தில் தங்களால் பலமுறை கப்பம் கட்ட முடியாமல் தங்கள் ஜமீன் ஏலத்துக்கு சென்றபோதும் தாங்கள் உருவாக்கிய கோயில்களை மறக்கவில்லை. தாங்கள் செய்யும் பணிவிடைகளை இன்றளவும் அவர்களுடைய வாரிசுகள் செய்து கொண்டுதான் இருக்கிறார்கள். 

Continue reading

Posted in சுரண்டை ஜமீன் | Leave a comment

சங்க இலக்கியத்தில் மறவர்கள்

சங்க இலக்கியத்தில் பல இடத்தில் போர்மரபினராகவும்

வேந்தர் மரபினராக காட்சியளிக்கும் மறவர்களை பற்றிய

குறிப்புகள்.

சங்க இலக்கியத்தில் மறவர்கள்

Continue reading

Posted in மறவர் | Leave a comment

மணியாச்சி ஜமீன்

இதுவரை வணக்கம் மும்பை என்னும் மும்பையில் இருந்து வெளிவரும் வார இதழலில் 146 வாரம் நட்டாத்தி, சாத்தான்குளம், குளத்தூர், சேத்தூர், இளையரசனேந்தல் ஜமீன்தார்கள் குறித்த வரலாறு எழுதி வந்தேன். தற்போது மணியாச்சி ஜமீன்தார் குறித்து எழுதப்போகிறேன். அந்த வரலாற்றை எனது வெப்சைட் மூலமாக உங்களோடு வாரம் வாரம் பகிர்ந்து கொள்ளப்போகிறேன். ஆதரவு தாருங்கள். நன்றி.

147. மறைந்த ஜமீன்களும் மறையாத நினைவுகளும்

&முத்தாலங்குறிச்சி காமராசு

மணியாச்சி ஜமீன்தார்

நான் பல ஆண்டுகளாகவே மணியாச்சி ஜமீன் வரலாற்றை பற்றி அறிவதற்காக பல முயற்சிகள் எடுத்து வந்தேன். வசந்த் தொலைக்காட்சியில் மணியாச்சி ஜமீன் வரலாறு படமெடுக்கும் போது நெல்லையில் வைத்து மணியாச்சி ஜமீன்தாரை சந்தித்தார்கள் நமது குழுவினர்.

அவர் நெல்லை மாவட்ட ஆட்சி தலைவர் அலுவலகத்தில் தான் ஜமீன்தார் வாரிசுதாரர் பணியாற்றுகிறார் என்ற தகவல் கிடைத்தது. நான் ஒருமுறை சென்ற போது அவரை நான் சந்திக்க முடியவில்லை Continue reading

Posted in மணியாச்சி ஜமீன் | Leave a comment